ஆப்-ஐ பதிவிறக்குங்கள் படம்

பஜாஜ் ஃபின்சர்வ் ஆப்

தனிநபர் கடன்

தனிநபர் கடன் - ரூ. 10,000க்கும் குறைவான ஊதியம்

கண்ணோட்டம்:

வழக்கமாக நீங்கள் ஒரு அதிகமான CIBIL ஸ்கோரை பெற்றிருக்கவேண்டும் தவிர உங்கள் விண்ணப்பத்தின் மீது ஒப்புதல் பெற உங்கள் கடன் வழங்கும் நிறுவனத்தின் குறைந்தபட்ச தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். இதற்கு நீங்கள் ஒரு கௌரவமான நிறுவனத்தில் போதுமான ஊதியத்தை பெறும் ஊழியராக இருத்தல் வேண்டும்.

ஆனால் நீங்கள் ரூ. 10,000க்கும் குறைவான ஊதியம் பெறுபவராக இருந்தாலும் நீங்கள் உங்கள் கடன் வழங்குபவரிடம் தனிநபர் கடனை திரும்ப செலுத்தும் வகையில் உங்களுக்கு வேறு பல வருமான ஆதாரங்களை சமர்ப்பித்து உங்கள் கடன் தொகையை திரும்பச் செலுத்தும் திறனை பற்றி சமாதானம் செய்யலாம்.

உங்கள் அடிப்படை விவரங்களை உள்ளிடுவதிலிருந்து தொடங்குங்கள். உங்கள் வருமானம் குறைவாக இருந்தாலும் உங்களுக்கான முன்-ஒப்புதல் வழங்கிய சலுகையை கண்டறியுங்கள். பஜாஜ் ஃபின்சர்வ் நீங்கள் ஒரு கடனுக்கு தகுதியானவர் என்று தீர்மானித்ததும் உங்களுக்கு தேவையான தொகைக்கு ஒப்புதல் வழங்கும்.

சிறப்பம்சங்கள் & நன்மைகள்

  • உடனடி ஒப்புதல்

    தேவைப்படும் பணம் உங்களுக்கு எவ்வித தாமதமுமின்றி கிடைக்கும் வகையில் உங்கள் தனிநபர் கடன் உடனடியாக செயல்படுத்தப்பட்டு அதற்கு ஒப்புதல் வழங்கப்படுகிறது.

  • குறைந்தபட்ச ஆவண தேவை

    உங்கள் தனிநபர் கடனை பெற நீங்கள் உங்கள் அடிப்படை ஆவணங்களை பதிவேற்ற வேண்டும் மற்றும் தகுதி வரம்புகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

  • விரைவான பணம் வழங்கல்

    கடன் ஒப்புதலுக்கு பிறகு பஜாஜ் ஃபின்சர்வ் 24 மணி நேரத்திற்குள் வங்கிக் கணக்கில் கடன் தொகையைப் பட்டுவாடா செய்கிறது.

  • நெகிழ்வான தவணைக்காலங்கள்

    உங்கள் தனிநபர் கடனை எளிதாகத் திருப்பிச் செலுத்த 12 மாதங்கள் முதல் 60 மாதங்கள் வரையிலான நெகிழ்வான தவணைக்காலங்களை தேர்ந்தெடுக்கவும் மற்றும் உங்கள் நிதிசார் கடமைகளை எதிர்கொள்ளவும்.

  • முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகை

    முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகை

    பஜாஜ் ஃபின்சர்வ் சுலபமான முன்-ஒப்புதல் வழங்கிய கடன்களை உங்களுக்கு வழங்குகிறது. உங்கள் தொடர்பு விவரங்களை பகிருங்கள். உங்கள் கைப்பேசிக்கு அனுப்பப்பட்ட ஒரு-முறை பயனாகும் கடவுச்சொல்லை (OTP) உள்ளிடுங்கள். உங்கள் முன்-ஒப்புதல் வழங்கிய சலுகையை சோதியுங்கள்.

  • அடமானம் இல்லாத கடன்

    பாதுகாப்பு தேவையற்ற பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடனுக்கு எந்த பக்கத்துணை அல்லது உத்தரவாதம் அளிப்பவரும் இல்லாமல் பெற்றிடுங்கள்.

  • மறைமுகக் கட்டணம் ஏதும் இல்லை

    பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடன்களில் எந்த விதமான மறைமுக கட்டணங்களும் இல்லை தவிர சட்டத்திட்டங்கள் மிகவும் எளிமையானவை. மேலும் உங்கள் தனிநபர் கடனை பற்றி படித்து பார்த்து அறிவார்ந்த முடிவை எடுங்கள்.

  • ஆன்லைன் கடன் கணக்கு

    பயன்படுத்த சுலபமான ஆன்லைன் கணக்கின் உதவி கொண்டு உங்கள் EMI-களை நிர்வகியுங்கள், கணக்கு அறிக்கையை சரிபாருங்கள், மற்றும் திருப்பிச் செலுத்தும் அட்டவணையை கண்காணியுங்கள்.

தனிநபர் கடன் தகுதி

ஒரு முன்-ஒப்புதல் வழங்கிய தனிநபர் கடன் சலுகையை பெற்ற நடப்பு வாடிக்கையாளராக இருந்தால் நீங்கள் சுலபமாக ஒரு தனிநபர் கடனை பெறலாம். தனிநபர் கடன் EMI கால்குலேட்டரின் உதவியால் நீங்கள் உங்கள் மாதாந்திர திரும்ப செலுத்தும் தொகையை முடிவு செய்துகொள்ளலாம். இதன் மூலம் நீங்கள் தவணை செலுத்த தவறுவதிலிருந்து உங்களை தற்காத்துக்கொள்ளலாம்.

மேலும் தெரிந்துகொள்ள நீங்கள் தனிநபர் கடன் தகுதி கால்குலேட்டரை சரிபார்க்கவும்.

ரூ. 10,000-க்கும் குறைவான வருமானம் கொண்டிருந்தால் எவ்வாறு தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்

பின்வரும் 6 எளிய வழிமுறைகளின் உதவியுடன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து உங்கள் முன்-ஒப்புதல் வழங்கிய தனிநபர் கடனை சோதியுங்கள்:

வழிமுறை 1

தயவுசெய்து உங்கள் மொபைல் எண்ணை பகிரவும்.

வழிமுறை 2

உங்கள் இமெயில் ID-ஐ உள்ளிடவும்.

வழிமுறை 3

உங்களுக்கு தேவையான கடன் தொகையை குறிப்பிடுங்கள்.

வழிமுறை 4

'அங்கீகரிக்கிறேன்' என்கிற செக்-பாக்ஸ்-ஐ தேர்ந்தெடுக்கவும்.

வழிமுறை 5

'இப்போது விண்ணப்பியுங்கள்' என்பதை கிளிக் செய்து மேலே தொடரவும்.

வழிமுறை 6

எங்களது வாடிக்கையாளர் சேவை பிரதிநிதி விரைவில் உங்களைத் தொடர்புகொள்வார்.