நிலையான வைப்புத்தொகை என்றால் என்ன?

நிலையான வைப்பு என்பது வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் முதலீட்டு கருவிகள் ஆகும், சேமிப்பு கணக்குகளை விட அதிக வட்டி விகிதத்திற்காக நீங்கள் பணத்தை வைப்பு வைக்கலாம். நீங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒட்டு மொத்த தொகை (லம்ப்சம்) எனும் நிலையான வைப்புகளில் ஒரு மொத்த தொகையை செலுத்தலாம், இது ஒவ்வொரு நிதியாளர்களுக்கும் மாறுபடும்.

ஒரு நம்பகமான நிதி நிறுவனத்தில் நீங்கள் பணத்தை முதலீடு செய்தவுடன் அது வைப்பு காலகட்டத்தின் அடிப்படையில் வட்டி ஈட்ட தொடங்குகிறது. வழக்கமாக FD-க்கான விளக்கம் என்னவென்றால் மெச்சூரிட்டிக்கு முன் தொகையை வித்ட்ரா செய்ய இயலாது. ஆனால் ஒரு அபராத கட்டணத்தை செலுத்தி அவ்வாறு வித்ட்ரா செய்துக்கொள்ள இயலும்.

நிலையான வைப்புகளின் சிறப்பம்சங்கள்

 • நிலையான வைப்புகள் முதலீட்டாளர்களுக்கு தங்கள் உபரி பணத்தின் மீது அதிக வட்டியை ஈட்ட உதவுகின்றன
 • ஒரு நிலையான வைப்பு கணக்கில் நீங்கள் ஒரு முறை மட்டுமே பணம் வைப்பு வைக்க முடியும், ஆனால் அதிக பணம் வைப்பு வைக்க, நீங்கள் மற்றொரு கணக்கை உருவாக்க வேண்டும்
 • நிலையான வைப்பில் பணப்புழக்கம் சிறிது குறைவுதான் என்றாலும் உயர் வட்டி விகிதங்களை நீங்கள் பெறலாம். இவ்விகிதங்கள் நிறுவனங்களின் நிலையான வைப்புகள் என்றால் மேலும் அதிகமாகும்
 • நிலையான வைப்பை சுலபமாக புதுப்பிக்க முடியும்
 • வருமான வரி சட்டம் 1961 இன் கீழ் நிலையான வைப்புக்கான வரி மூலதனத்தில் பிடிக்கப்படும்.

நிலையான வைப்புத்தொகைகளின் நன்மைகள்

நிலையான வைப்புத்தொகை முதலீடுகள் பல நன்மைகளை கொண்டுள்ளன, அவற்றில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 • அவை பாதுகாப்பான முதலீட்டு கருவிகளாக உள்ளன, மேலும் அதிக ஸ்திரத்தன்மையை வழங்குகின்றன
 • நிலையான வைப்பின் மீது உத்தரவாதமான ரிட்டர்ன்கள் கிடைக்கின்றன மற்றும் அசல் இழப்பு ஏற்படும் அபாயமும் கிடையாது
 • உங்கள் மாதாந்திர செலவினங்களை நிர்வகிக்க உதவுவதற்கு அவ்வப்போது வட்டி செலுத்தலை நீங்கள் தேர்வு செய்யலாம்
 • உங்கள் நிலையான வைப்பின் மீது சந்தையில் எந்தவொரு தாக்கமும் இல்லாததால், உங்கள் முதலீட்டு மூலதனம் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்படுகிறது
 • நிறுவனங்களின் நிலையான வைப்புகள் வழங்கும் அதிக வட்டி விகிதங்கள் உங்களுக்கு மிகவும் நன்மை பயக்கும்
 • சில நிதியளிப்பாளர்கள் மூத்த குடிமக்களுக்கு அதிக வருமானத்தை வழங்குகிறார்கள்

நிலையான வைப்புகள் மீதான வரி

நிலையான வைப்புகள் வரிக்கு உட்பட்டவை. FD-கள் மீதான பிடிக்கப்படும் வரியானது முதலீட்டாளரின் வரி வரம்பை பொறுத்து முதல் வரை வேறுபடலாம். நீங்கள் ஈட்டும் வட்டியானது ஒரு வருடத்தில் ரூ. , க்கு அதிகமாக இருந்து உங்கள் PAN விவரங்கள் நிதியாளர்கள் வசமிருந்தால் அவர்கள் TDS-ஐ பிடித்தம் செய்வார்கள். ஆனால் உங்கள் PAN விவரங்கள் அவர்களிடம் இல்லையென்றால் அவர்கள் TDS-ஐ பிடித்தம் செய்வார்கள்.

உங்கள் மொத்த வருமானம் 10% இன் குறைந்தபட்ச வரி ஸ்லாபிற்குள் குறைவாக இருந்தால், பிடித்தம் செய்யப்பட்ட TDS தொகைக்கான ரீஃபண்ட் நீங்கள் கோரலாம். மேலும் படிவம் 15G-ஐ அல்லது நீங்கள் மூத்த குடிமகனாக இருந்தால் படிவம் 15H-ஐ உங்கள் நிதி நிறுவனத்தில் சமர்ப்பிப்பதன் மூலம் நீங்கள் இந்த பிடித்தத்தை தவிர்க்க முடியும். நீங்கள் அதிக வரி பிராக்கெட்டில் (20% அல்லது 30%) இருந்தால் உங்கள் NBFC-யோ அல்லது வங்கியோ பிடித்தம் செய்த TDS-ஐ தவிர கூடுதலாக வரி செலுத்த வேண்டியிருக்கும்.

மேலும் படிக்கவும்: படிவம் 15G & படிவம் 15H

ஏன் பஜாஜ் ஃபைனான்ஸின் நிலையான வைப்பில் முதலீடு செய்ய வேண்டும்?

கூடுதல் வரி விகிதம் மூலம் அதிக ரிட்டர்ன்கள் கொண்ட பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் ஒரு நிலையான வைப்பை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். மேலும் நீங்கள் வசதியான தவணைக்காலம், சுலப ஆன்லைன் விண்ணப்ப செயல்முறைகள் மற்றும் ரூ. 25,000 முதல் முதலீடு செய்யும் வசதி போன்ற பலன்களை பெறலாம்.

பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிலையான வைப்புகள் பாதுகாப்பிலும் நிலைத்தன்மையிலும் ICRA-இன் MAAA (நிலையான) தரவரிசையையும் மற்றும் CRISIL-இன் FAAA/ நிலையான தரவரிசையையும் பெற்றுள்ளன. எனவே உங்கள் முதலீடுகள் ஒருபோதும் ஆபத்தை சந்திப்பதில்லை. மேலும் உங்களுக்கு உத்தரவாதமான வருவாய்கள் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது. உங்களின் தேவைகளுக்கேற்ப இவைகளை காலக்கிரம செலுத்துதல்களாகவும் மாற்றிக்கொள்ளலாம்.

பஜாஜ் ஃபைனான்ஸ் நிலையான வைப்பை துவங்குவதற்கு தேவையான ஆவணங்கள்

நீங்கள் பஜாஜ் ஃபைனான்ஸின் நிலையான வைப்பில் முதலீடு செய்ய விரும்பினால் பின்வரும் ஆவணங்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்:

 • சமீபத்திய புகைப்படம்
 • சான்றளிக்கப்பட்ட KYC ஆவணங்கள்

பொது அல்லது தனியார் லிமிடெட் நிறுவனம்

 • PAN கார்டு
 • இணைப்பதற்கான சான்றிதழ்
 • குறிப்பாணை மற்றும் அமைப்பு கட்டுரைகள்
 • பங்குரிமை ஒப்பந்தப் பத்திரம்
 • FD கணக்கை திறப்பதற்கான ஆணைய தீர்ப்பு
 • அங்கீகரிக்கப்பட்ட கையெழுத்திட்டவர்களின் அடையாள சான்றுகள்

கூட்டு நிறுவனம்

 • PAN கார்டு
 • நிறுவனத்தின் KYC ஆவணங்கள்
 • பதிவு சான்றிதழ்
 • பங்குரிமை ஒப்பந்தப் பத்திரம்
 • மாதிரி கையெழுத்துக்கள் கொண்ட அங்கீகரிக்கப்பட்ட கையெழுத்திட்டவர்களின் பட்டியல்
 • அங்கீகரிக்கப்பட்ட கையெழுத்திட்டவர்களின் அடையாள சான்றுகள்

இந்து பிரிக்கப்படாத குடும்பம்

 • சான்றளிக்கப்பட்ட KYC ஆவணங்கள்
 • HUF-இன் பெயரை கொண்டுள்ள சுய-சான்றளிக்கப்பட்ட PAN கார்டு
 • HUF-இன் உறுதிப்பாட்டுக்கான ஆவணம்
 • HUF-யின் பெயரில் வங்கி கணக்கு அறிக்கை/டீமேட் அறிக்கை
 • HUF-இன் வயதை அடைந்த அனைத்து உறுப்பினர்களுக்கான KYC ஆவணங்கள்

சட்ட வாரியம் / உள்ளூர் அதிகாரம்

 • PAN கார்டு
 • KYC ஆவணங்கள்
 • மாதிரி கையெழுத்துக்கள் கொண்ட அங்கீகரிக்கப்பட்ட கையெழுத்திட்டவர்களின் பட்டியல்
 • லெட்டர்ஹெடில் சுய சான்றளிப்பு

பதிவு செய்யப்பட்ட சங்கங்கள்

 • PAN கார்டு
 • KYC ஆவணங்கள்
 • சொசைட்டிகள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு சான்றிதழின் நகல்
 • நிர்வாக குழு உறுப்பினர் பட்டியல்
 • அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிடுபவர்களாக செயல்பட அதிகாரமளிக்கும் குழு தீர்மானம் மற்றும் அவர்கள் மாதிரி கையொப்பங்கள்
 • சேர்மன் அல்லது செக்ரட்ரி இவர்களால் சான்றளிக்கப்பட்ட சொசைட்டி சட்டங்கள் மற்றும் உப சட்டங்கள் இவைகளின் உண்மை நகல்

பஜாஜ் ஃபைனான்ஸ் நிலையான வைப்பு வட்டி விகிதங்கள்

பஜாஜ் ஃபைனான்ஸ் இந்தியாவில் அதிக FD விகிதங்களில் ஒன்றை வழங்குகிறது. அவற்றை இங்கே சரிபார்க்கவும்

வருடாந்திர வட்டி விகிதம் ரூ.5 கோடி வரை செல்லுபடியாகும் (04 ஜூலை 2020 முதல்)

தவணைக்காலம் மாதங்களில் குறைந்தபட்ச வைப்புத்தொகை ( ரூ.) ஒட்டுமொத்தம் ஒட்டுமொத்தம் அல்லாத
மாதாந்திரம் ஒவ்வொரு காலாண்டிற்கும் அரையாண்டு வருடாந்திரம்
12 – 23 25,000 6.90% 6.69% 6.73% 6.79% 6.90%
24 – 35 7.00% 6.79% 6.82% 6.88% 7.00%
36 - 60 7.10% 6.88% 6.92% 6.98% 7.10%

வாடிக்கையாளர் வகை அடிப்படையில் விகித நன்மைகள் (w.e.f 04 ஜூலை 2020):

+ மூத்த குடிமக்களுக்கு 0.25%
+ 0.10% ஆன்லைன் வாடிக்கையாளருக்கு

புதுப்பித்தல்:

+0.10% வைப்பு பதிவு செய்யப்பட்ட வட்டி விகிதத்திற்கும் அதிகமாக

பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு திட்டம்

பஜாஜ் ஃபைனான்ஸின் நிலையான வைப்பில் முதலீடு செய்து கிடைக்கப்பெறும் அதிக வட்டி விகிதம் மூலம் மூத்த குடிமக்கள் நன்மையடையலாம். இது அவர்களின் முதலீட்டின் மீது நல்ல ரிட்டர்ன்களை பெற உதவுகிறது

மூத்த குடிமக்களுக்கான பின்வரும் கவர்ச்சிகர வட்டி விகிதங்களை நீங்கள் சோதித்துக்கொள்ளலாம்:

வருடாந்திர வட்டி விகிதம் ரூ.5 கோடி வரை செல்லுபடியாகும் (04 ஜூலை 2020 முதல்)

தவணைக்காலம் மாதங்களில் குறைந்தபட்ச வைப்புத்தொகை ( ரூ.) ஒட்டுமொத்தம் ஒட்டுமொத்தம் அல்லாத
மாதாந்திரம் ஒவ்வொரு காலாண்டிற்கும் அரையாண்டு வருடாந்திரம்
12 – 23 25,000 7.15% 6.93% 6.97% 7.03% 7.15%
24 – 35 7.25% 7.02% 7.06% 7.12% 7.25%
36 - 60 7.35% 7.11% 7.16% 7.22% 7.35%

ஃபிக்ஸ்டு டெபாசிட் கால்குலேட்டர்

பஜாஜ் பைனான்ஸின் நிலையான வைப்பு கால்குலேட்டர் உதவியுடன் உங்கள் ரிட்டர்ன்களையும் நீங்கள் மதிப்பிட்டு மிக அதிக லாபத்தை அடையும் விதத்தில் உங்கள் முதலீடுகளை திட்டமிடலாம். பஜாஜ் பைனான்ஸின் FD கால்குலேட்டர் மிகவும் சுலபம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம்:

 • உங்கள் வாடிக்கையாளர் வகையை தேர்ந்தெடுக்கவும் (அதாவது நீங்கள் புதிய வாடிக்கையாளராக/நடப்பு கடன் வாடிக்கையாளராக/மூத்த குடிமகனாக இருந்தால்)
 • உங்கள் முதலீடு குறிக்கோள்களுடன் அதிகமாக ஒத்துப்போகும் ஒரு நிலையான வைப்பு வகையை தேர்ந்தெடுக்கவும் – ஒட்டுமொத்தம் அல்லது ஒட்டுமொத்தமற்ற
 • நீங்கள் முதலீடு செய்ய விரும்பும் தொகையை உள்ளிடவும்
 • உங்கள் முதலீட்டின் தவணைக்காலத்தை தேர்ந்தெடுக்கவும்

மொத்த வட்டி தொகையும் மெச்சூரிட்டி தொகையும் உங்கள் திரையில் காண்பிக்கப்படும்.

பஜாஜ் பைனான்ஸின் நிலையான வைப்பில் முதலீடு செய்வதில் இன்னமும் ஏதாவது சந்தேகம் உள்ளதா? சரிபாருங்கள் பஜாஜ் ஃபின்சர்வ் வாடிக்கையாளர் போர்ட்டல் முதலீட்டாளர்களின் நடுநிலையான விமர்சனங்களை படிக்க அல்லது இதில் நீங்கள் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் பஜாஜ் ஃபின்செர்வ் வாடிக்கையாளர் சேவை ஏதாவது கேள்விகளிருந்தால்.