பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பற்ற கடன்களுக்கு இடையிலான வேறுபாடுகள் யாவை?

2 நிமிட வாசிப்பு

பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பற்ற கடன்கள் என்பது வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் தங்கள் நிதி தேவைகளை பூர்த்தி செய்ய உதவுவதற்காக வழங்கும் நிதி வகைகள். இரண்டுக்கும் இடையே உள்ள சில முக்கிய வேறுபாடுகளை இங்கே காணுங்கள்:

பாதுகாக்கப்பட்ட கடன்கள்

நீங்கள் ஒரு சொத்தை அடமானமாக வைக்கும்போது கடன் வழங்குநர்கள் ஒரு பாதுகாப்பான கடனிற்கு ஒப்புதல் அளிக்கின்றனர், இது ஒரு பாதுகாப்பாக செயல்படுகிறது. உதாரணமாக, உங்கள் வீடு அல்லது மனை, தங்கம், வாகனம், பத்திரங்கள் அல்லது நிலையான வைப்புகளை அடமானமாக வைக்கலாம்.

பாதுகாப்பான கடன்களில் அடமானக் கடன்கள், தங்கக் கடன்கள், நிலையான வைப்புகள் மீதான கடன்கள், வாகன கடன்கள் மற்றும் பத்திரங்கள் மீதான கடன்கள் ஆகியவை அடங்கும். இருப்பினும், நிலுவையிலுள்ள கடனை மீட்பதற்கு ஒரு பாதுகாப்பான கடன் மீது நீங்கள் சரியாக திருப்பிச் செலுத்தவில்லை என்றால் உங்கள் கடன் வழங்குநர் சொத்தை பயன்படுத்தி அதனை பணமாக மாற்றலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

அடமானமில்லா கடன்கள்

பாதுகாப்பற்ற கடன்களுக்கு நீங்கள் எந்தவொரு அடமானத்தையும் வழங்கத் தேவையில்லை. கடன் வழங்குபவர்கள் உங்கள் கிரெடிட் ஸ்கோரைச் சரிபார்த்து, உங்களிடம் நல்ல திருப்பிச் செலுத்தும் செயல்முறை இருப்பதை உறுதிசெய்கிறார்கள். பாதுகாப்பற்ற கடனைப் பெறுவதற்கு 750 அல்லது அதற்கு மேற்பட்ட கிரெடிட் ஸ்கோரை பராமரிப்பது முக்கியமானது. டிஃபால்ட் ஏற்பட்டால், உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறையும்.

இரண்டு வகையான பிரபலமான பாதுகாப்பற்ற கடன்கள் உள்ளடங்கும்:

  1. தனிநபர் கடன்
  2. தொழில் கடன்

பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்க, ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில் உங்கள் விவரங்களை நிரப்பவும், உங்களுக்கு பொருத்தமான கடன் தொகை மற்றும் தவணைக்காலத்தை தேர்ந்தெடுக்கவும், தொடர்புடைய ஆவணங்களை சமர்ப்பித்து ஒப்புதல் பெற்ற 24 மணிநேரங்களுக்குள் உங்கள் வங்கி கணக்கில் பணத்தைப் பெறுங்கள்.

*நிபந்தனைகள் பொருந்தும்

மேலும் படிக்க குறைவாக படிக்கவும்