செயலி பதிவிறக்கம் image

பஜாஜ் ஃபின்சர்வ் செயலி

கிரெடிட் கார்டு என்றால் என்ன?

கிரெடிட் கார்டு என்பது நிதி நிறுவனங்களால் வழங்கப்பட்ட செவ்வக வடிவிலான ஒரு மெல்லிய பிளாஸ்டிக் அல்லது மெட்டல் கார்டாகும், இது உங்கள் வாங்குதல்களுக்கு பணம் செலுத்த முன்-ஒப்புதலளிக்கப்பட்ட வரம்பிலிருந்து கடன் வாங்க உங்களை அனுமதிக்கிறது. உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் மற்றும் வரலாறின் அடிப்படையில் கார்டை வழங்கும் நிறுவனத்தால் கடன் வரம்பு தீர்மானிக்கப்படும். பொதுவாக, அதிக கிரெடிட் ஸ்கோர் மற்றும் சிறந்த கிரெடிட் வரலாறு உங்களுக்கு அதிக வரம்பு கிடைப்பதற்கு உதவும். கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுக்கு இடையிலான வேறுபாடு என்னவென்றால் நீங்கள் டெபிட் கார்டை ஸ்வைப் செய்யும்போது, பணம் உங்கள் வங்கி கணக்கிலிருந்து கழிக்கப்படும், அதே நேரத்தில் கிரெடிட் கார்டுடன் ஸ்வைப் செய்யும்போது உங்கள் முன்-அங்கீகரிக்கப்பட்ட வரம்பிலிருந்து பணம் எடுக்கப்படும்.

பயனர்கள் தங்கள் கிரெடிட் கார்டுகளை ஸ்வைப் செய்யலாம் அல்லது ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு அவற்றை பயன்படுத்தலாம். நீங்கள் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பித்த பிறகு, அபராத கட்டணங்களை தவிர்க்க கடன் வாங்கிய தொகை குறிப்பிட்ட கால வரம்பிற்குள் திருப்பிச் செலுத்தப்படுகிறது என்பதை உறுதிசெய்யவும். உங்கள் கிரெடிட் கார்டு விவரங்கள் எப்போதும் கார்டு வழங்குநருடன் பாதுகாப்பானவை. மோசடியை தவிர்க்க உங்கள் கிரெடிட் கார்டு தகவலை யாருடனும் பகிர்ந்து கொள்ளக்கூடாது.

பஜாஜ் ஃபின்சர்வ் உங்கள் பல்வேறு தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு வகையான கிரெடிட் கார்டுகளை வழங்குகிறது. பஜாஜ் ஃபின்சர்வ் RBL பேங்க் கிரெடிட் கார்டு உங்களுக்கான ஒரு ரிவார்டிங் அனுபவத்தை வழங்குவதற்கு சிறந்த சலுகைகள் மற்றும் நன்மைகளை கொண்டுள்ளது.

விரைவான நடவடிக்கை

உங்களுக்கு தெரியுமா, ஒரு நல்ல சிபில் ஸ்கோர் கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகள் மீது சிறந்த டீல்களை பெற உதவும்?