செயலியை பதிவிறக்குங்கள் image

பஜாஜ் ஃபின்சர்வ் செயலி

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

தொழிற்துறையில் மற்ற கிரெடிட் கார்டுகளிலிருந்து சூப்பர்கார்டு எவ்வாறு வேறுபடுகிறது?

பெயர் குறிப்பிடுவது போலவே, சூப்பர்கார்டில் சில அம்சங்கள் உள்ளன. இது வழக்கமான கிரெடிட் கார்டு அம்சங்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல் 3 மாதங்கள் வரைக்குமான தொகை வரம்பின் மீது வட்டி-இல்லா-உடனடிக் கடன் மற்றும் 50 நாட்கள் வரைக்கும் குறைவான வட்டிகளுக்கான பணம் எடுத்தல் போன்ற சில கூடுதல் நன்மைகளையும் வழங்குகிறது. பஜாஜ் ஃபின்செர்வ் லிமிடெட் நெட்வொர்க்கில் விருதுகள், கவர்ச்சிகரமான தள்ளுபடிகள் மற்றும் சிறப்புரிமைகளும் இதனுடன் கிடைக்கின்றன*.

சூப்பர்கார்டு ATM ரொக்க வித்டிராவல்கள் வழங்குமா?

ஆம், இது வழங்கும். அதுவும் 50 நாட்கள் வரை வட்டியின்றி வழங்குகிறது. நீங்கள் வெறும் 2.5% செயல்முறை கட்டணம் மட்டும் செலுத்த வேண்டும். நீங்கள் வித்டிரா செய்யும் தொகை வங்கி கொள்கைகள் மற்றும் உங்கள் சூப்பர் கார்டிற்கு வழங்கப்பட்ட வரம்பை பொறுத்தது ஆகும்

சூப்பர்கார்டு எவ்வளவு பாதுகாப்பானது?

முற்றிலும் பாதுகாப்பானது! சூப்பர்கார்டு ‘இன்ஹேண்ட்’ பாதுகாப்பு சிறப்பம்சத்தை கொண்டுள்ளது,இதில் நீங்கள் உங்களின் கிரெடிட் மற்றும் ரொக்கம் வரம்பை கட்டுப்படுத்தலாம் மற்றும் RBL மைகார்டு ஆப் மூலம் சர்வதேச பரிவர்த்தனைகள் மீது வரம்பை அமைக்கலாம்

சூப்பர் கார்டுடன் என்ன வகையான சலுகைகள் எனக்கு கிடைக்கும்?

ஒரு சூப்பர் கார்டு வாடிக்கையாளராக, பஜாஜ் ஃபின்சர்வ் பங்குதாரர் கடைகளிலிருந்து* பிரத்யேக நன்மைகள் மற்றும் ரூ. 3,000 க்கு அதிகமான செலவுகளுக்கான தொகையை தொந்தரவு-இல்லாமல் EMI-களாக மாற்றுதல் போன்றவற்றிற்கு நீங்கள் தகுதி பெறுகிறீர்கள். சூப்பர்கார்டு மீதான சமீபத்திய வணிகர் சலுகைகளுக்காக, தயவுசெய்து பஜாஜ் ஃபின்சர்வின் MobiKwik வாலெட் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

ஒரு வாடிக்கையாளர் ரிவார்டு புள்ளிகளை எப்படி பெற முடியும்?

சேர்ப்பு கட்டணங்களுடன் கார்டுகளின் விண்ணப்பம் வாடிக்கையாளருக்கு வரவேற்பு ரிவார்டு புள்ளிகளை கொடுக்கிறது, ஆனால், உறுப்பினர் அவரின் விண்ணப்பத்தை உறுதிபடுத்த கார்டு வழங்கிய 60 நாட்களுக்குள் ரூ. 2,000 செலவு செய்ய வேண்டும்.

சூப்பர்கார்டிற்கான ஆண்டு கட்டணம் என்ன?

கார்டின் ஆண்டு கட்டணம் ஒவ்வொரு வகையான கார்டிற்கும் மாறுபடும்.

நான் சூப்பர்கார்டு மூலம் வெகுமதி புள்ளிகளை எவ்வாறு பெற முடியும்?

ஒருவர் சூப்பர் கார்டு பயன்படுத்தும் போது செய்யப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனையின் மீதும் வெகுமதி புள்ளிகளை பெறுகிறார். வெகுமதி புள்ளிகள் மாத இறுதியில் வாடிக்கையாளரின் கணக்கிற்கு கிரெடிட் செய்யப்படும் மற்றும் அவற்றை www.rblrewards.com/SuperCard ல் ரெடீம் செய்ய முடியும்

நான் எனது ரொக்க வரம்பை வட்டியில்லா கடனாக எப்படி மாற்றுவது?

நீங்கள் RBL மைகார்டு ஆப்-ஐ பயன்படுத்தி 90 நாட்கள் வரை உங்களிடம் இருக்கக்கூடிய ரொக்க வரம்பை வட்டியில்லா கடனாக மாற்றலாம்

வட்டியில்லா ரொக்கம் வித்ட்ராவல் செய்வதின் வரம்பு என்ன?

நீங்கள் உங்களின் சூப்பர் கார்டை பயன்படுத்தி ATM-யிலிருந்து ரொக்கத்தை வித்ட்ராவல் செய்யலாம். இந்த வித்ட்ராவல் 50 நாட்கள் வரை வட்டி இல்லாதவை, இருப்பினும் இது ஒரு ஃப்ளாட் செயல்முறை கட்டணம் 2.5% உடன் வருகிறது மற்றும் இது ஆபத்து கொள்கைகளை சார்ந்து இருக்கும்.

கேஷ்பேக்கிற்கு யார் கோர முடியும் மற்றும் அதை அவர் எப்போது பெற முடியும்?

தவணை முடிவடைந்து 30 நாட்களுக்கும் மேலான, பூஜ்ஜிய நிலுவைக் கட்டணம் கொண்ட செல்லுபடியான கார்டு வைத்திருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு மட்டுமே கேஷ்பேக் சலுகை செல்லுபடியாகும். நீங்கள் பரிவர்த்தனை செய்த 45 நாட்களுக்குள் கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகிறது.

கேஷ்பேக் தொகை எவ்வளவு?

கார்டு வைத்திருப்பவர்கள் ஒரு பரிவர்த்தனையில் அதிகபட்சம் ரூ. 1,000 வரைக்கும் 5% கேஷ்பேக் பெற முடியும்.

எந்த பரிவர்த்தனை கேஷ்பேக் வழங்குகிறது?

RBL வங்கி பங்குதாரர் கடையில் பஜாஜ் ஃபின்சர்வ் கிரெடிட் கார்டு பயன்படுத்தி செய்யப்பட்ட முன் பணத்தின் மீது மட்டுமே கேஷ்பேக் செல்லுபடியாகும். பணம் செலுத்தல் அல்லது வேறு ஏதேனும் பரிவர்த்தனையின் போது செலுத்தப்பட்ட முழுத்தொகையின் மீது இந்தச் சலுகை செல்லுபடியாகாது.

முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கல்