தனிநபர் கடன்

பஜாஜ் ஃபின்சர்வின் தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் என்ன?

பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் என்ன?

பஜாஜ் ஃபின்சர்வ் 12.99% இலிருந்து தொடங்கும் வட்டி விகிதங்களில் தனிநபர் கடன்களை வழங்குகிறது.
செயல்முறை கட்டணங்கள், EMI பவுன்ஸ் கட்டணங்கள், அபராத வட்டி மற்றும் பாதுகாப்பு கட்டணங்கள் (ஆன்லைனுக்கு மட்டும்) போன்ற கூடுதல் கட்டணங்கள் விண்ணப்பம் செய்யும்போது வசூலிக்கப்படும்.

தனிநபர் கடன் வட்டி விகிதங்களை பற்றி மேலும் படியுங்கள்.

எவ்வாறு வட்டி கணக்கிடப்படுகிறது?
• எந்த தனிநபர் கடனை நீங்கள் பெற்றாலும் அதை வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டும். கடன் தொகை அசல் என்றும் கூடுதல் தொகை வட்டி என்றும் அழைக்கப்படுகின்றன. தனிநபர் கடன் பாதுகாப்பில்லாத கடன் என்ற காரணத்தால் வட்டி விகிதங்கள் சற்றே அதிகமாக இருக்கும் ஏனெனில் இதற்காக நீங்கள் எவ்வித பாதுகாப்போ அல்லது சொத்தையோ பக்கத்துணையாக சமர்பிக்க தேவையில்லை.
• நீங்கள் கடன் தொகையை EMIகளில் அல்லது சம மாத தவணைகளில் 12 இலிருந்து 60 மாதங்கள் வரையிலான உங்கள் தவணைக்காலம் முழுதும் செலுத்த வேண்டும்.
• இந்த தவணையானது அசல் மற்றும் வட்டி பகுதிகளை உள்ளடக்கியது.

தனிநபர் கடன் வட்டி விகிதத்தை பாதிக்கும் காரணிகள்
• உங்கள் கடன் விவரம்
• உங்கள் மாத ஊதியம் அல்லது நிலையான வருமானம்
• கடனாக பெறப்படும் தொகை
• சந்தை நிலவரங்கள்

குறைந்த வட்டி விகிதத்திற்கு எது காரணமாகிறது?
• ஒரு நல்ல கிரெடிட் பின்னணி மற்றும் ஸ்கோரை கொண்டிருத்தல்
• உங்கள் அனைத்து பில்களையும் தவணைகளையும் உரிய நேரத்தில் செலுத்துதல்

உங்கள் பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடன் வட்டி தொகையை கணக்கிடுங்கள்
• ஒவ்வொரு மாதமும் நீங்கள் செலுத்தும் சரியான EMI தொகையை தெரிந்து கொள்ள நீங்கள் தனிநபர் EMI தொகையை கணக்கிட்டு கொள்ளலாம்..