தனிநபர் கடனுக்காக எவ்வாறு விண்ணப்பிப்பது

எங்கள் தனிநபர் கடனைப் பெறுவதற்கு சில எளிய படிநிலைகளில் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

தனிநபர் கடனுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது

தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்க படிப்படியான வழிகாட்டி

 1. எங்கள் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை திறக்க இந்த பக்கத்தின் மேலே உள்ள 'விண்ணப்பிக்கவும்' மீது கிளிக் செய்யவும்.
 2. உங்கள் 10-இலக்க மொபைல் எண் மற்றும் உங்கள் போனிற்கு அனுப்பப்பட்ட ஓடிபி-ஐ உள்ளிடவும்.
 3. உங்கள் முழுப் பெயர், பான், பிறந்த தேதி மற்றும் அஞ்சல் குறியீடு போன்ற உங்கள் அடிப்படை விவரங்களுடன் விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்.
 4. இப்போது, கடன் தேர்வு பக்கத்தை அணுக 'தொடரவும்' மீது கிளிக் செய்யவும்.
 5. உங்களுக்குத் தேவையான கடன் தொகையை உள்ளிடவும். எங்கள் மூன்று தனிநபர் கடன் வகைகளிலிருந்து தேர்வு செய்யவும் –டேர்ம், ஃப்ளெக்ஸி டேர்ம் மற்றும் ஃப்ளெக்ஸி ஹைப்ரிட்.
 6. திருப்பிச் செலுத்தும் தவணைக்காலத்தை தேர்வு செய்யவும் – நீங்கள் 6 மாதங்கள் முதல் 96 மாதங்கள் வரையிலான தவணைக்கால விருப்பங்களை தேர்ந்தெடுத்து 'தொடரவும்' என்பதை கிளிக் செய்யவும்’.
 7. உங்கள் கேஒய்சி-ஐ பூர்த்தி செய்து உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

எங்கள் பிரதிநிதி அடுத்த படிநிலைகள் குறித்து உங்களுக்கு வழிகாட்டுவார். உங்கள் ஆவணங்களின் வெற்றிகரமான சரிபார்ப்புக்கு பிறகு கடன் தொகை உங்கள் வங்கி கணக்கிற்கு டிரான்ஸ்ஃபர் செய்யப்படும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

தனிநபர் கடனுக்கு நான் எவ்வாறு விண்ணப்பிப்பது?

தனிநபர் கடன் விண்ணப்ப செயல்முறையை தொடங்க, இந்த பக்கத்தில் உள்ள 'விண்ணப்பிக்கவும்' மீது கிளிக் செய்யவும். இப்போது, உங்கள் தொடர்பு விவரங்களை உள்ளிடவும், மற்றும் உங்கள் போனிற்கு அனுப்பப்பட்ட ஓடிபி-ஐ சரிபார்க்கவும். உங்கள் அடிப்படை விவரங்களுடன் விண்ணப்பத்தை நிரப்பி தொடரவும் மீது கிளிக் செய்யவும். பின்னர், உங்களுக்குத் தேவையான கடன் தொகையை உள்ளிடவும். உங்கள் கேஒய்சி-ஐ நிறைவு செய்து உங்கள் கடன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

எனது தனிநபர் கடன் விண்ணப்பத்திற்கு விரைவான ஒப்புதலை எவ்வாறு பெறுவது?

பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடன் உடன், ஒப்புதல் பெறுவது எளிதானது. நீங்கள் எளிய தகுதி வரம்பை பூர்த்தி செய்ய வேண்டும் மற்றும் தனிநபர் கடன் மீது ஒப்புதல் பெறுவதற்கு தேவையான ஆவணங்களை தயாராக வைத்திருக்க வேண்டும்.

தனிநபர் கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு தேவையான ஆவணங்கள் யாவை?
பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் பின்வருமாறு:
 • கேஒய்சி ஆவணங்கள்: ஆதார்/ பான் கார்டு/ பாஸ்போர்ட்/ வாக்காளர் ஐடி
 • பணியாளர் ID கார்டு
 • கடந்த 2 மாதங்களுக்கான சம்பள இரசீதுகள்
 • முந்தைய 3 மாதங்களுக்கான வங்கி கணக்கு அறிக்கைகள்
ஒரு தனிநபர் கடனில் நான் எவ்வளவு கடன் பெற முடியும்?

பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடன் மூலம் நீங்கள் ரூ. 40 லட்சம் வரை கடன் வாங்கலாம், இதை நீங்கள் 96 மாதங்கள் தவணைக்காலத்தில் திருப்பிச் செலுத்தலாம்.

நான் ஏற்கனவே ஒரு தனிநபர் கடனை கொண்டிருந்தால் மற்றொரு தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்க முடியுமா?

ஆம், உங்களிடம் தற்போதுள்ள கடன் இருந்தாலும் கூட நீங்கள் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் உங்கள் கடன் விண்ணப்பத்தை ஒப்புதல் அளிப்பதற்கு முன்னர் உங்கள் கடன் திருப்பிச் செலுத்தும் திறன் சரிபார்க்கப்படும் என்பதை தயவுசெய்து நினைவில் கொள்ளவும்.

மேலும் காண்பிக்கவும் குறைவாகக் காண்பிக்கவும்