தனிநபர் கடன் வட்டி விகிதங்கள், கட்டணங்கள்

கட்டண வகைகள்

பொருந்தக்கூடிய கட்டணங்கள்

வட்டி விகிதம்

13% முதல்

செயல்முறை கட்டணம்

கடன் தொகையில் 4% வரை (கூடுதலாக பொருந்தக்கூடிய வரிகள்)

ஆவணம்/அறிக்கை கட்டணங்கள்
கணக்கு அறிக்கை/ திருப்பிச்செலுத்தும் அட்டவணை/ முன்கூட்டியே செலுத்தும் கடிதம்/ நிலுவைத் தொகை இல்லா சான்றிதழ்/ வட்டி சான்றிதழ்/ ஆவணங்களின் பட்டியல்

வாடிக்கையாளர் போர்ட்டல் - எக்ஸ்பீரியாவில் உள்நுழைந்து கூடுதல் கட்டணமின்றி உங்கள் மின்-அறிக்கைகள்/ கடிதங்கள் மற்றும் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்யலாம்.
உங்கள் அறிக்கைகள்/கடிதங்கள்/சான்றிதழ்கள்/ஆவணங்களின் பட்டியலின் பிசிக்கல் நகலை எங்கள் கிளைகளில் இருந்து ஒரு அறிக்கை/கடிதம்/சான்றிதழுக்கு ரூ. 50 (பொருந்தக்கூடிய வரிகள் உட்பட) கட்டணத்தில் பெறலாம்.

அபராத கட்டணம்

மாதாந்திர தவணை/ இஎம்ஐ செலுத்துவதில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால், மாதாந்திர தவணை தேதியிலிருந்து நிலுவையில் உள்ள இஎம்ஐ மீது மாதத்திற்கு 2% முதல் 4% வரை அபராத வட்டி விதிக்கப்படும்.

பகுதியளவு-முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்கள்**

2% + பகுதியளவு-பணம் செலுத்தல் தொகையின் மீது பொருந்தும் வரிகள்*

பவுன்ஸ் கட்டணங்கள்

ஒரு பவுன்ஸிற்கு ரூ. 600 – ரூ. 1,200 வரை (பொருந்தக்கூடிய வரிகள் உட்பட)

முத்திரை வரி தற்போதைய நிலவரப்படி. (மாநிலத்தின்படி)

 

*இ-அறிக்கைகளுக்கு பொருந்தும். நீங்கள் எந்தவொரு கிளையிலிருந்தும் ரூ. 50 (வரிகள் உட்பட) செலுத்துவதன் மூலம் பிசிக்கல் நகலை பெறலாம்.

**ஃப்ளெக்ஸி கடன் வசதிக்கு இந்த கட்டணங்கள் பொருந்தாது. மேலும், பகுதியளவு-முன்பணமளிப்பு 1 இஎம்ஐ-க்கும் அதிகமாக இருக்க வேண்டும்.

மேலும் படிக்க குறைவாக படிக்கவும்

ஆண்டு பராமரிப்பு கட்டணங்கள்

கடன் வகை

கட்டணங்கள்

ஃப்ளெக்ஸி டேர்ம் கடன்

அத்தகைய கட்டணங்கள் விதிக்கப்படும் தேதியில் பயன்படுத்தப்பட்டதைப் பொருட்படுத்தாமல் மொத்த வித்ட்ரா தொகையில், 0.25% பொருந்தக்கூடிய வரிகள்

ஃப்ளெக்ஸி ஃஹைப்ரிட் கடன்

அத்தகைய கட்டணங்கள் விதிக்கப்படும் தேதியில் பயன்படுத்தப்பட்டதைப் பொருட்படுத்தாமல் மொத்த வித்ட்ரா தொகையில், 0.25% பொருந்தக்கூடிய வரிகள்

 

முன்கூட்டியே அடைத்தல் கட்டணங்கள்

கடன் வகை

கட்டணங்கள்

டேர்ம் கடன்

அத்தகைய முழு முன்கூட்டியே செலுத்தும் தேதியில் உள்ள அசல் நிலுவைத் தொகையின் மீது 4% பொருந்தக்கூடிய வரிகள்

ஃப்ளெக்ஸி டேர்ம் கடன்

மொத்த வித்ட்ரா செய்யக்கூடிய தொகை மீது 4% பொருந்தக்கூடிய வரிகள்* (*அத்தகைய கட்டணங்கள் விதிக்கப்படும் தேதியில் திருப்பிச் செலுத்தும் அட்டவணையின்படி அவ்வப்போது நீங்கள் ஃப்ளெக்ஸி கடன் கீழ் வித்ட்ரா செய்யக்கூடிய மொத்த கடன் தொகை).

ஃப்ளெக்ஸி ஃஹைப்ரிட் கடன்

மொத்த வித்ட்ரா செய்யக்கூடிய தொகை மீது 4% பொருந்தக்கூடிய வரிகள்* (*அத்தகைய கட்டணங்கள் விதிக்கப்படும் தேதியில் திருப்பிச் செலுத்தும் அட்டவணையின்படி அவ்வப்போது நீங்கள் ஃப்ளெக்ஸி கடன் கீழ் வித்ட்ரா செய்யக்கூடிய மொத்த கடன் தொகை).

 

மேண்டேட் நிராகரிப்பு சேவை கட்டணம்: ரூ. 450 (பொருந்தக்கூடிய வரிகள் உட்பட)

எந்தவொரு காரணங்களுக்காகவும் வாடிக்கையாளரின் வங்கியால் முந்தைய மேண்டேட் படிவத்தை நிராகரித்த தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் புதிய மேண்டேட் படிவம் பதிவு செய்யப்படாவிட்டால் கட்டணங்கள் விதிக்கப்படும்.

மாநில சட்டங்களின்படி குறிப்பிட்ட அனைத்து தயாரிப்புகளுக்கும் கூடுதல் வரி பொருந்தும்.

பஜாஜ் ஃபின்சர்வ் 13% முதல் தொடங்கும் போட்டிகரமான வட்டி விகிதங்களில் ரூ. 25 லட்சம் வரையிலான தனிநபர் கடன்களை வழங்குகிறது. மறைமுக கட்டணங்கள் இல்லை, மற்றும் உங்களுக்கு 100% வெளிப்படைத்தன்மை உறுதியளிக்கப்படுகிறது.

மலிவான வட்டி விகிதத்தைப் பெறுவதன் மூலம், உங்கள் நிதி இலக்குகளை திறம்பட பூர்த்தி செய்ய பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடனைப் பயன்படுத்தலாம். தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது, கடன் தொகையில் 4% வரை செயல்முறை கட்டணத்தை பெறுங்கள் மற்றும் வரிகள் பொருந்தும். இது ஒரு முறை கட்டணமாகும். நீங்கள் 60 மாதங்கள் வரை ஒரு நெகிழ்வான திருப்பிச் செலுத்தும் தவணைக்காலத்தை பெறுவதால் திருப்பிச் செலுத்தலை அதிகபட்சமாக 60 இஎம்ஐ-களாக பிரிக்கலாம். எளிய திட்டமிடலுக்காக, தனிநபர் கடன் இஎம்ஐ கால்குலேட்டரை பயன்படுத்தவும்.

தனிநபர் கடன் பெறும்போது, முன் திட்டமிடல் அவசியம். ஏனெனில் கடன் தவணை கட்ட தவறினால் அபராதங்களும் தண்டனை வட்டியும் வசூலிக்கப்படும்.. பவுன்ஸ் கட்டணங்கள் ரூ. 600 முதல் ரூ. 1,200 வரை, தாமதம் ஏற்பட்ட தேதியிலிருந்து மாதாந்திர தவணை/இஎம்ஐ பெறும் வரை மாதாந்திர தவணை/இஎம்ஐ மீது மாதத்திற்கு 2% முதல் 4% வரை அபராத வட்டி வசூலிக்கப்படும்.

பகுதியளவு-முன்கூட்டியே செலுத்துதல்கள் கடன் திருப்பிச் செலுத்துவதை மலிவானதாக்க உதவுகின்றன, ஏனெனில் அவை நிலுவையிலுள்ள அசலை குறைக்கின்றன. இருப்பினும், செலுத்தப்பட்ட தொகையின் மீது 2% மற்றும் வரிகளை கணக்கிடுவதன் மூலம் பகுதியளவு-முன்கூட்டியே செலுத்துவதன் நன்மையை நிர்ணயிக்கவும். ஃப்ளெக்ஸி கடன் வசதிக்கு பகுதியளவு-முன்கூட்டியே செலுத்தும் கட்டணம் பொருந்தாது.

நீங்கள் உங்கள் கடனை முன்கூட்டியே அடைக்க விரும்பினால், நிலுவையிலுள்ள அசல் மீது உங்களுக்கு 4% மற்றும் வரிகள் வசூலிக்கப்படும். ஒரு ஃப்ளெக்ஸி கடனுக்கு, முன்கூட்டியே அடைத்தல்(ஃபோர்குளோசர்) கட்டணம் 4% மற்றும் வரிகள் மற்றும் செஸ் ஆகியவை வித்ட்ரா செய்யக்கூடிய தொகை மீது பொருந்தும்.

உங்கள் கடன் ஆவணங்கள் மற்றும் அறிக்கைகளை காண, வாடிக்கையாளர் போர்ட்டல் – எக்ஸ்பீரியாவை அணுகவும். நீங்கள் எக்ஸ்பீரியாவில் இருந்து இ-அறிக்கைகள், கடிதங்கள், சான்றிதழ்கள் மற்றும் பலவற்றை பதிவிறக்கம் செய்யலாம். பிசிக்கல் நகல்களுக்கு, நீங்கள் அருகிலுள்ள பஜாஜ் ஃபின்சர்வ் கிளையை அணுகலாம் மற்றும் உங்களுக்குத் தேவையான நகலைப் பெறுவதற்கு ரூ. 50 பெயரளவு கட்டணம் செலுத்தலாம்.

மேலும் படிக்க குறைவாக படிக்கவும்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

தனிநபர் கடனுக்கான செயல்முறை கட்டணம் என்றால் என்ன?

பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடனுக்கான செயல்முறை கட்டணம் கடன் தொகையில் 4% வரை மற்றும் வரிகள். இந்த கட்டணம் உங்கள் தகுதி வரம்பு போன்ற கடன் தொகை மற்றும் காரணிகளைப் பொறுத்தது.

பகுதியளவு-முன்கூட்டியே செலுத்துதல்களுக்கு கட்டணம் பொருந்துமா?

பகுதியளவு-முன்கூட்டியே செலுத்தும்போது, செலுத்தப்பட்ட பகுதியளவு-முன்பணமளிப்பு தொகையில் நீங்கள் 2% மற்றும் வரிகளை செலுத்த வேண்டும். இருப்பினும், நீங்கள் ஃப்ளெக்ஸி கடன் வசதியை பெற்றிருந்தால் பகுதியளவு-முன்கூட்டியே செலுத்தும் கட்டணங்கள் உங்களுக்கு பொருந்தாது.

இஎம்ஐ பவுன்ஸ் கட்டணம் என்றால் என்ன?

இஎம்ஐ பவுன்ஸ் கட்டணம் என்பது நீங்கள் இஎம்ஐ பணம்செலுத்தலை தவறவிடும்போது ஏற்படும் அபராதம் ஆகும். பஜாஜ் ஃபின்சர்வ் நீங்கள் தவறவிடும் ஒவ்வொரு இஎம்ஐ-க்கும் ரூ. 600 - ரூ. 600 இடையில் வசூலிக்கும், வரிகள் உட்பட அடங்கும். மேலும், இஎம்ஐ(களின்) தாமதமாக பணம்செலுத்தல் அல்லது செலுத்த தவறுவது, அபராத வட்டி 2% - 4% விகிதத்தில் விதிக்கப்படும்.

தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் என்ன?

நீங்கள் 13% முதல் தொடங்கும் போட்டிகரமான வட்டி விகிதத்தில் பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடனைப் பெறலாம்.

தனிநபர் கடன்களுக்கான முன்கூட்டியே அடைத்தல்(ஃபோர்குளோசர்) கட்டணம் என்ன?

உங்கள் கடனை முன்கூட்டியே அடைக்கும் போது, நீங்கள் ஒரு டேர்ம் கடன் பெற்றிருந்தால், நிலுவையிலுள்ள அசல் மீது 4% மற்றும் வரிகளை முன்கூட்டியே அடைத்தல்(ஃபோர்குளோசர்) கட்டணத்தை நீங்கள் செலுத்த வேண்டும். ஒரு ஃப்ளெக்ஸி டேர்ம் கடன் அல்லது ஃப்ளெக்ஸி ஹைப்ரிட் கடனுக்கு, முன்கூட்டியே அடைத்தல்(ஃபோர்குளோசர்) கட்டணம் மொத்த வித்ட்ரா செய்யக்கூடிய தொகையின் மீது 4% மற்றும் வரி மற்றும் செஸ் பொருந்தும்.

உங்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தை பாதிக்கும் காரணிகள் யாவை?

சிபில் ஸ்கோர்: தனிநபர் கடனுக்கு தேவையான குறைந்தபட்ச சிபில் ஸ்கோர் 750 ஆகும். அதிக சிபில் ஸ்கோர்கள் ஒரு சிறந்த நிதி கண்காணிப்பு பதிவை குறிக்கின்றன மற்றும் குறைந்த வட்டி விகிதத்தைப் பெற உங்களுக்கு உதவும். உங்கள் சிபில் ஸ்கோரை இலவசமாக சரிபார்க்க இங்கே கிளிக் செய்க.

தொழில்: ஊதியம் பெறும் மற்றும் சுயதொழில் செய்யும் தனிநபர்களுக்கு தங்கள் வருமானத்தின் தன்மை காரணமாக வெவ்வேறு வட்டி விகிதங்கள் வழங்கப்படலாம். பெரும்பாலும், ஊதியம் பெறும் நபர்கள் குறைந்த ஆபத்தைக் கொண்ட நபர்களாக கருதப்படுகிறார்கள்.

வருமானம்: அதிக வருமானம் உங்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தை பெற உதவுகிறது ஏனெனில் கடன் வழங்குநர்கள் திருப்பிச் செலுத்துதல் மீது உறுதியாக இருக்க முடியும்.

வருமான கடன் விகிதம்: உங்கள் இஎம்ஐ-களைச் செலுத்த உங்களிடம் அதிக நிதி இருப்பதால் இந்த விகிதத்தைக் குறைவாக வைத்திருப்பது நல்லது. வட்டி விகிதம் அதன்படி குறைவாக இருக்கலாம்.

வயது: வேலை ஆண்டுகளில் பல வருடங்கள் மீதமுள்ள இளம் விண்ணப்பதாரர்கள், ஓய்வூதியத்தை அடையும் நபர்களை விட மிகவும் மலிவான விகிதங்களைப் பெறலாம்.

வேலைவாய்ப்பு: ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தில் பணிபுரிவது அதிக வேலை மற்றும் வருமான நிலைத்தன்மை இருப்பதால் சிறந்த விகிதத்தைப் பெற உங்களுக்கு உதவும்.

கடன் வழங்குநருடன் தொடர்பு: தற்போதுள்ள வாடிக்கையாளர்கள் மேலும் சாதகமான வட்டி விகிதங்களைப் பெறலாம்.

அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச திருப்பிச் செலுத்தும் தவணைக்காலம் என்ன?

நீங்கள் உங்கள் கடனை 60 மாதங்கள் வரையிலான தவணைக்காலத்தில் திருப்பிச் செலுத்தலாம். அதாவது, அதிகபட்சமாக 5 ஆண்டுகளுக்கு உங்கள் இஎம்ஐ-களை நீங்கள் செலுத்தலாம்.

ஃப்ளாட் மற்றும் குறைந்த இருப்பு முறைகள் என்றால் என்ன?

ஃப்ளாட்-ரேட் முறையில் தவணைக்காலம் முழுவதும் முழு அசல் மீதும் உங்களுக்கு வட்டி வசூலிக்கப்படும். இது விலையுயர்ந்ததாக இருக்கும். ரெட்யூசிங் பேலன்ஸ் முறையில், நிலுவையிலுள்ள அசல் மீது உங்களுக்கு வட்டி வசூலிக்கப்படும். நீங்கள் செலுத்தும் ஒவ்வொரு இஎம்ஐ-யிலும் நிலுவையிலுள்ள அசல் குறைகிறது. இந்த முறை அதிக செலவு-குறைவானது.

கடன் இஎம்ஐ-ஐ எவ்வாறு கணக்கிடுவது?

குறையும் இருப்பு முறைக்கு, இஎம்ஐ ஃபார்முலா:

EMI = [P x R x (1+R)N ] / [(1+R)N-1]

இங்கே,

P என்பது அசல் அல்லது கடன் தொகை
R என்பது மாதாந்திர கடன் வட்டி விகிதம்
N என்பது மாதங்களில் இஎம்ஐ-களின் எண்ணிக்கை அல்லது தவணைக்கால மாதங்கள் ஆகும்

இருப்பினும், தனிநபர் கடன் இஎம்ஐ கால்குலேட்டரை பயன்படுத்துவது எளிமையானது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் இஎம்ஐ-ஐ உடனடியாக காண அசல், வட்டி விகிதம் மற்றும் தவணைக்காலத்தை உள்ளிடவும்.

மேலும் படிக்க குறைவாக படிக்கவும்