சிறப்பம்சங்கள் & நன்மைகள்

எதிர்பாராத, அதிக மருத்துவச் செலவுகளிலிருந்து உங்களை பாதுகாப்பதன் மூலம் உங்களுடைய உடல்நலம், நோய் மற்று விபத்து செலவுகளுக்கு மருத்துவ காப்பீடு உதவுகிறது.நீங்கள் ஒரு மருத்துவ காப்பீட்டு பாலிசியை எடுக்கும் போது, பிரீமியத்தின் வருடாந்திர பண செலுத்தலின் போது நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள உறுதிசெய்யப்பட்ட தொகைக்கு ஏற்ப மருத்துவ உள்ளிருப்பின் போது ஏற்பட கூடிய உங்கள் மருத்துவ சிகிச்சைக்கான செலவுகள் காப்பீட்டு நிறுவனத்தால் காப்பீடு செய்யப்படும். உங்கள் சிகிச்சைக்கு நீங்கள் முதலில் பணம் செலுத்திவிட்டு பாலிசிக்கான கோருதலை பின்னர் செய்யலாம் அல்லது சிகிச்சையின் ஆரம்பத்தில் இருந்தே உங்கள் செலவுகளை காப்பீடு செய்கின்ற ஒரு நெட்வொர்க் மருத்துவமனைக்கு செல்லலாம். இவற்றோடு, பாலிசிக்காக செலுத்தும் பிரீமியத்தின் மீது வருமான வரி சட்டத்தின் 1961 படி 80D பிரிவின் கீழ் வரி விலக்கு உண்டு ஆகும்.

மருத்துவம் மற்றும் அது தொடர்புடைய மருத்துவ சிகிச்சை செலவுகளைப் பற்றி கவலைப்படுகிறீர்களா? Aditya Birla -குரூப் ஹெல்த் ஆக்டிவ் உடன் உங்களையும் உங்கள் குடும்ப உறுப்பினர்களையும் பாதுகாத்திடுங்கள். மாதத்திற்கு வெறும் 545-இல் தொடங்குகிறது. இப்போதே வாங்குங்கள்.

ஒரு தனிநபர் அல்லது குடும்பத்திற்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை வாங்கலாம். கொடிய நோய்கள் அல்லது மகப்பேறு காலத்தில் நீங்கள் எதிர்கொள்ளக்கூடிய ஏதாவது பிரச்சனைகளுக்கு எதிராக உங்களை பாதுகாப்பதற்காக அவற்றை வாங்கலாம். வாங்குவதற்கு நீங்கள் முடிவு செய்வதற்கு முன்னர் நீங்கள் கருத வேண்டிய மருத்துவ காப்பீட்டு வகைகளை பற்றி பார்ப்போம்.

மருத்துவ காப்பீடு பாலிசியின் வகைகள்

 • தனிநபர் மருத்துவ காப்பீட்டு பாலிசி

  தனிநபர் மருத்துவக் காப்பீடு பாலிசியின் கீழ், தேர்வு செய்த உறுதிசெய்யப்பட்ட தொகையானது பணமில்லா சிகிச்சை மற்றும் பிற சலுகைகளுக்கான ஒரு தனிப்பட்ட அடிப்படைத் தேவை திட்டத்தின் கீழுள்ள ஒரு நபருக்கு பொருந்தும். இந்த பாலிசியில் ஒட்டு மொத்த தொகையையும் ஒவ்வொரு காப்பீடு செய்யப்பட்ட உறுப்பினருக்கும் தனியாக அளிக்கப்படும்.

 • ஃபேமலி ஃப்ளோட்டர் மருத்துவ காப்பீட்டு பாலிசி

  குடும்ப ஃப்ளோட்டர் மருத்துவ காப்பீட்டு பாலிசியில், நீங்கள் தேர்ந்தெடுத்த உறுதிசெய்யப்பட்ட தொகையானது ஒரே காப்பீட்டின் கீழ் அனைத்து குடும்ப உறுப்பினர்களையும் உள்ளடக்கியுள்ளது, அதாவது அனைத்து உறுப்பினர்களுக்குமான ஒரே காப்பீடு. இது முழுவதுமாக ஒரே நபரால் பயன்படுத்த முடியம் அல்லது பல்வேறு கோரல்களுக்கு பல நபர்களால் பயன்படுத்த முடியும்.

 • டாப்-அப் மருத்துவ காப்பீட்டு பாலிசி

  டாப்-அப் மருத்துவ காப்பீடு என்பது பணியமர்த்துபவரிடம் இருந்து காப்பீடு அல்லது தற்போதுள்ள தனிநபர் திட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட மருத்துவ காப்பீடு கொண்டவர்களுக்கான கூடுதல் காப்பீடு. தற்போதுள்ள காப்பீட்டு வரம்பு போதாமல் இருந்தால் ஒரே நோயினால் ஏற்படும் செலவுகளை ஈடு செய்ய இது முயற்சிக்கிறது.

 • கடுமையான நோய் சுகாதார காப்பீட்டு திட்டங்கள்

  புற்றுநோய், சிறுநீரக செயலிழப்பு, மாரடைப்பு போன்ற கடுமையான நோய்களுக்கு சிகிச்சையளிக்க ஒரு முழுமையான பாலிசி அல்லது ரைடரை எடுத்துக் கொள்ளலாம். பாலிசிதாரர் ஒரு குறிப்பிட்ட கொடிய நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால், அவருக்கு பெரும்பாலான கொடிய நோய் காப்பீட்டு பாலிசிகள் லம்ப்சம் தொகையை வழங்கும்.

 • குழு/ஊழியர் மருத்துவ காப்பீடு பாலிசி

  குழு/ஊழியர் மருத்து காப்பீடு பாலிசிகள் பொதுவாக நிறுவனங்களால் வாங்கப்படுகின்றன, மற்றும் மருத்துவ செலவினங்களுக்கு எதிராக அந்த நிறுவனத்தின் ஊழியர்களை காப்பீடு செய்கின்றன. குழுவின் மருத்துவ காப்பீட்டு திட்டங்களின் பிரீமியங்கள் பொதுவாக சராசரியை விட குறைவானதாகும், மற்றும் நோய்களுக்கும் மருத்துவ செயல்முறைகளுக்கும் காப்பீடு மிகவும் அதிக அளவில் உள்ளது.

 • தனிநபர் விபத்து காப்பீடுகள்

  ஒரு தனிநபர் விபத்து காப்பீடு உங்கள் விபத்து, இறப்பு, உடல் ஊனம், காயம் மற்றும் பிற எதிர்பாராத சூழல்களின் விளைவாக ஏற்படும் செலவுகளில் இருந்து உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கிறது. தனிநபர் விபத்து காப்பீடு தனியாக கொள்முதல் செய்யலாம் அல்லது ஏற்கனவே இருக்கும் பாலிசியில் ரைடராக செய்யலாம்.

 • Senior Citizen Health Insurance Policy

  மூத்த குடிமகன் மருத்துவ காப்பீட்டு பாலிசி

  மூத்த குடிமக்கள் மருத்துவ காப்பீட்டுத் திட்டங்கள் குறைந்தபட்சம் 60 வயதினர் அல்லது அதைவிட அதிக வயதினரால் வாங்க முடியும். இவை முதியோர்களின் மருத்துவ பராமரிப்புடன் தொடர்புடைய செலவுகளை ஈடுசெய்ய உதவுவதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. திட்டத்தை நீங்கள் பெறுவதற்கு முன்பு அத்தகைய பாலிசிகளில் பொதுவாக நீங்கள் மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். இருப்பினும், அவற்றுக்கான பிரீமியம் செலவுகள் பொதுவாக வழக்கத்தை விட குறைவானதாகும்.

 • மகப்பேறு மருத்துவக் காப்பீடு

  மகப்பேறு மருத்துவ காப்பீடு கர்ப்பிணி பெண்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு பிரத்யேக காப்பீடாகும். தனியாக வாங்கலாம், அல்லது தற்போதைய மருத்துவ பாலிசிக்கு ரைடராக வாங்கலாம். மகப்பேறு மருத்துவ காப்பீடு பிரசவத்திற்கு-முன், பிரசவத்திற்கு-பின், மற்றும் மருத்துவமனை செலவுகள் எதிராக தாய் மற்றும் குழந்தை இருவரையும் உள்ளடக்கியது, கூடுதலாக பிரசவம் காரணமாக ஏற்படும் சிக்கல்கள் உள்ளடங்கும்.

 • மருத்துவ காப்பீடு

  மருத்துவ காப்பீடு என்பது ஒரு விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டமாகும், இது ஒரு குழுவில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் ஒரு முழு பிரீமியம் விலையில் அதிக காப்பீட்டை வழங்குகிறது. பிரீமியங்களின் வரம்பின் அடிப்படையில் பல காப்பீட்டு விருப்பங்களை நீங்கள் பெறுவீர்கள்.

இந்தியாவில் மருத்துவ காப்பீடு பாலிசியின் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்

 • ரூ.2 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை விரிவான மருத்துவ பாதுகாப்பு காப்பீட்டு விருப்பங்கள்

 • ரொக்கமில்லா செட்டில்மெண்ட் - மருத்துவமனைகளின் பரந்த நெட்வொர்க்கில் ஏதாவது ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறும்போது நீங்கள் எந்தத் தொகையையும் செலுத்த தேவையில்லை

 • ஆம்புலன்ஸ் கட்டணங்கள் உள்ளடங்கும்

 • அறை வாடகை வரம்பு இல்லை

 • 10 ஆண்டுகள் வரை தடுப்பூசிக்கான செலவுகளுடன் புதிதாக பிறந்த குழந்தைக்கான காப்பீடு உள்ளிட்ட, மகப்பேறு நன்மைகள்

 • 30 நாட்கள் முன் மற்றும் 60 நாட்கள் பின்-மருத்துவமனை சேர்ப்பு பலன்கள்

 • 130 தினசரி பராமரிப்பு செயல்முறைகளுக்கான செலவுகள் உள்ளடங்கும்

 • உறுப்பு மாற்றம் செய்தலின் போது ஏற்படும் மருத்துவச் செலவுகள்

 • அவசர ஆம்புலன்ஸ் கட்டணங்களுக்கு காப்பீடு வழங்கப்படுகிறது

 • ayush (ஆயுர்வேதா, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி) சிகிச்சைகளுக்கும் காப்பீடு வழங்கப்படுகிறது

 • நோ கிளைம் போனஸ் ஆக இலவச உடல்நல பரிசோதனைகள் மற்றும் தள்ளுபடி வவுச்சர்கள் (முந்தைய ஆண்டில் ஒரு நபர் எந்தவொரு சிகிச்சைக்காகவும் கோரல் தாக்கல் செய்யவில்லை என்றால் NCB நன்மையாக அளிக்கப்படுகிறது.)

 • நுழைவு வயது 60 ஆண்டுகள் வரை

 • பிரிவு 80D-யின் கீழ் வருமான வரி நன்மைகள்

 • கோரிக்கை இல்லாத ஒவ்வொரு ஆண்டுக்கு பின்னரும் பாலிசியை புதுப்பிக்கும்போது நோ கிளைம் போனஸ்

 • குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களை காப்பீட்டாளரின் கீழ் அதே பாலிசிக்கு பரிந்துரைத்த பின்னர் பிரீமியத்தில் லாயல்டி தள்ளுபடிகள்

 • 24/7 கட்டணமில்லா வாடிக்கையாளர் சேவை மையம் உங்கள் பாலிசியை நீங்கள் எந்த நேரத்திலும் அணுகுவதை உறுதிசெய்கிறது

 • பாலிசியை சிக்கலின்றி அமைப்பதற்கு ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் புதுப்பிப்பு

 • முதிர்ச்சி வயது உட்பட, வாழ்நாள் முழுவதும் புதுப்பிக்கப்படும் திறன்

 • ஒரு காப்பீட்டு பாலிசியை உங்கள் விருப்பப்படி வேறு எந்த காப்பீட்டாளருக்கும் மாற்றக்கூடிய திறன்

மருத்துவ காப்பீட்டிற்கு தகுதி மற்றும் தேவையான ஆவணங்கள்

 • குறைந்தபட்சம் 18 முதல் 65 வயது வரை அல்லது காப்பீட்டுத் திட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி தனிநபர்கள் ஒரு மருத்துவ காப்பீட்டு பாலிசியைப் பெறலாம்
 • வயது 90 நாட்கள் மற்றும் 25 ஆண்டுகளுக்கு இடையேயான சார்புடைய குழந்தைகளுக்கு பாலிசியின் கீழ் காப்பீடு அளிக்கப்படலாம்
 • மூத்த குடிமக்கள் 60 வயதில் இருந்து அவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட பாலிசியின் கீழ் பாதுகாக்கப்படலாம்
 • பொதுவாக, மருத்துவ காப்பீட்டு பாலிசிகளுக்கு துல்லியமாக நிரப்பப்பட்டு மற்றும் கையொப்பமிடப்பட்ட விண்ணப்ப படிவத்தை தவிர வேறு ஆவணங்கள் தேவையில்லை. இருப்பினும், உங்களுடைய வயது குறிப்பிட்ட வயதுக்கு மேல் இருந்தால் நீங்கள் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டியிருக்கும்.

மருத்துவ காப்பீட்டுத் திட்டங்களை வாங்குவதற்கு முன் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்


 • தனிநபர் அல்லது குடும்பத்துக்காக, நீங்கள் என்ன வகையான காப்பீட்டு பாலிசியை வாங்க விரும்புகிறீர்கள்?

 • உங்களுக்கு/உங்கள் குடும்பத்தினருக்கு உகந்த காப்பீடு என்ன?

 • நீங்கள் என்ன ஆட்- ஆன் சிறப்பம்சங்களை தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்கள்?

 • பொருந்தும் துணை வரம்புகளை தெரிந்து கொள்ளவும் (அறை வாடகை, மருத்துவர்களின் கட்டணங்கள், மருத்துவப் பரிசோதனை செலவுகள் முதலிய செலவுகளுக்கான தொகை வரம்பு)

 • பாலிசி உள்ளடக்கங்கள் மற்றும் விலக்குகள்.

 • கோரலின் சாத்தியமான நடைமுறைகள் யாவை? (ரொக்கமில்லா,பணம் திரும்பசெலுத்தல்)

 • பாலிசி ஏற்கப்படுவதற்கு முன்னர் மருத்துவப் பரிசோதனை தேவையா?

எப்படி விண்ணப்பிப்பது

மருத்துவ காப்பீட்டிற்காக விண்ணப்பிப்பது எளிதானது. வெறுமனே எங்கள் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை நிரப்பவும், மேலும் எங்கள் பிரதிநிதி உங்களை தொடர்பு கொண்டு, தேவையான செயல்முறைகளை மேற்கொண்டு, உங்கள் தேவைகளுக்கான சிறந்த மருத்துவ காப்பீட்டை தேர்ந்தெடுக்க உங்களுக்கு உதவுவார்.

பொறுப்புத்துறப்பு - * நிபந்தனைகள் பொருந்தும். இந்த தயாரிப்பு குழு காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது, இதில் பஜாஜ் நிதி லிமிடெட் முதன்மை பாலிசிதாரராக உள்ளது. காப்பீட்டுத் தொகை எங்கள் கூட்டாளர் காப்பீட்டு நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் ஆபத்தை ஏற்காது. IRDAI கார்ப்பரேட் ஏஜென்சி பதிவு எண் CA 0101. மேலே குறிப்பிடப்பட்ட நன்மைகள் மற்றும் பிரீமியம் தொகை காப்பீட்டாளரின் வயது, வாழ்க்கை முறை பழக்கம், உடல்நலம் போன்ற பல்வேறு காரணிகளுக்கு உட்பட்டவை (பொருந்தினால்). வழங்கல், தரம், சேவைத்திறன், பராமரிப்பு மற்றும் எந்தவொரு உரிமைகோரல்களுக்கும் பிந்தைய விற்பனைக்கு BFL எந்தப் பொறுப்பையும் கொண்டிருக்கவில்லை. இந்த தயாரிப்பு காப்பீட்டுத் தொகையை வழங்குகிறது. இந்த தயாரிப்பு வாங்குவது முற்றிலும் தன்னார்வமானது. எந்தவொரு மூன்றாம் தரப்பு தயாரிப்புகளையும் கட்டாயமாக வாங்க BFL தனது வாடிக்கையாளர்கள் எவரையும் கட்டாயப்படுத்தவில்லை. ”