படம்

> >

கார் காப்பீடு பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

இந்தியாவில் கார் காப்பீட்டை வாங்குவது அவசியமானதா?

ஆம். கார் காப்பீடு இல்லாமல் இந்திய சாலைகளில் காரில் பயணிப்பது சட்ட விரோதமானது.

தனியார் மற்றும் கமர்ஷியல் வாகனங்கள் இரண்டிற்கும் காப்பீடு தேவைப்படுமா?

ஆம், தனியார் அல்லது கமர்ஷியல் சார்ந்த அனைத்துக் கார்களுக்கும் காப்பீடு தேவை.

எனக்கு கார் விபத்து நிகழ்ந்தால் நான் என்ன செய்ய வேண்டும்?

- காவல் துறைக்கு தெரியப்படுத்துதல், ஆம்புலன்ஸை அழைத்தல் (தேவைப்பட்டால்), மற்றும் எச்சரிக்கை விளக்குகளை ஆன் செய்தல் போன்ற பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

- அனைத்து ஓட்டுனர்கள், பயணர்கள், மற்றும் சாட்சிகள் உள்ளிட்ட விபத்தில் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரின் விவரங்களை சேகரித்தல்.

- உங்கள் காப்பீட்டு நிறுவனத்தை தொடர்பு கொண்டு உங்கள் கோரல் செயல்முறையை தொடங்குங்கள்.

நான் எனது கார் காப்பீடின் பிரீமியத்தை எப்படி குறைப்பது?

பிரீமியத்தை குறைப்பதற்கான சில வழிகள்:

- மாதாந்திர பிரீமியத்திற்குப் பதிலாக ஆண்டு பிரீமியத்தைச் செலுத்துங்கள்

- சந்தையை ஆராய்ந்து ஒரு மலிவான பாலிசியைத் தேர்ந்தெடுங்கள்

- தேவையான ஆட்-ஆன்களை மட்டுமே கொண்டு உங்கள் பாலிசியை தனிப்பயனாக்குங்கள்

எனது கார் காப்பீட்டை நான் எப்பொழுதுப் புதுப்பிக்க முடியும்?

உங்கள் கார் காப்பீட்டை ஆன்லைனில் புதுப்பித்தல் செய்யுங்கள். காலாவதி ஆகும் தேதி உங்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படும், சலுகை காலத்திற்குள் அதை புதுப்பித்தல் செய்யுங்கள்.

எனது காரை நான் எவ்வளவு தொகைக்கு காப்பீடு செய்ய வேண்டும்?

உங்கள் காரின் வகை, மாடல், சம்பந்தப்பட்ட கடன்கள் போன்ற ஒருசில காரணிகளின் அடிப்படையில் காப்பீட்டுத் தொகை கணக்கிடப்படும். உங்கள் தேவைகள் மற்றும் பாலிசி வகையின் அடிப்படையில் காப்பீட்டு நிறுவனங்கள் ஒரு விலையை வடிவமைத்திடும்.

நோ-கிளைம் போனஸ் (NCB) என்றால் என்ன?

ஒரு முழு ஆண்டில் நீங்கள் எந்த கோரலும் செய்யாமல் இருந்தால், நீங்கள் 20% வரை நோ-கிளைம் போனஸ்-ஐ பெறுவீர்கள். உங்கள் கார் காப்பீட்டு பாலிசிக்காக இது அடுத்து வரும் ஆண்டிற்கான பிரீமியத்திலிருந்து குறைக்கப்படுகிறது.

எனக்கு எதற்காக கார் காப்பீடு தேவைப்படும்?

நீங்கள் சாலையில் வாகனம் ஓட்டுகிறீர்கள் என்றால், உங்களிடம் கண்டிப்பாக கார் காப்பீடு இருக்க வேண்டும். எதற்காக என்ற காரணம் இங்கே உள்ளது:

1. சட்டப்படி அவசியமானது: மோட்டார் வாகன சட்டம், 1988-யின் படி, கார் காப்பீடு இல்லாமல் இந்திய சாலைகளில் ஓட்டுவது சட்டத்துக்குப் புறம்பானது.

2. எதிர்பாராத செலவுகள்: கார் விபத்து என்பது பெரும் அளவில் செலவுகளை ஏற்படுத்தக்கூடிய ஓர் எதிர்பாராத நிகழ்வு ஆகும். கார் காப்பீடு இல்லை என்றால் அது உங்கள் சேமிப்புகளை பாதிக்கக்கூடும்.

3. மூன்றாம் தரப்பு சேதங்கள்: மோதல் காரணமாக வேறு ஒருவருடைய சொத்து அல்லது வாகனத்தை சேதப்படுத்தினால் உங்களுக்கு மோசமான சூழ்நிலை ஏற்படலாம். உங்களிடம் கார் காப்பீடு இருந்தால் நீங்கள் எந்த தொந்தரவும் இல்லாமல் மூன்றாம் தரப்பு சேதங்களுக்கு இழப்பீடு பெற முடியும்.

மக்களும் இதையே கருதுகின்றனர்

மருத்துவ காப்பீடு

மேலும் தெரிந்துகொள்ள

மருத்துவக் காப்பீடு - மருத்துவ அவசரநிலைகள் காரணமாக ஏற்படும் செலவுகளுக்கான பாதுகாப்பு

இப்போது விண்ணப்பிக்கவும்
ஆயுள் காப்பீடு

மேலும் தெரிந்துகொள்ள

ஆயுள் காப்பீடு - மருத்துவ அவசரநிலைகள் காரணமாக எழும் செலவுகளுக்கான காப்பீடு

இப்போது விண்ணப்பிக்கவும்
பயணக் காப்பீடு

மேலும் தெரிந்துகொள்ள

பயணக் காப்பீடு - விபத்துக்கள், பொருட்கள் இழப்பு மற்றும் பயணம் இரத்து செய்வது மீதான உங்கள் பயணத்தை காப்பீடு செய்யவும்

இப்போது விண்ணப்பிக்கவும்
இரு சக்கர வாகன காப்பீடு

மேலும் தெரிந்துகொள்ள

இரு சக்கர வாகன காப்பீடு - உங்கள் இரு சக்கர வாகனத்திற்கான விரிவான காப்பீடு

இப்போது விண்ணப்பிக்கவும்