கார் காப்பீடு - கண்ணோட்டம்

விபத்து, திருட்டு அல்லது இயற்கை பேரழிவால் ஏற்படக்கூடிய எந்த நிதி இழப்புக்கும் ஒரு கார் காப்பீடானது இழப்பீடு வழங்க முடியும். நீங்கள் தேர்வு செய்த காப்பீட்டை பொறுத்து, மூன்றாம் தரப்பு சொத்து சேதம், தனிப்பட்ட காயங்கள் அல்லது மரணம் ஆகியவற்றிற்காகவும் நீங்கள் காப்பீடு பெறலாம்.

கார் காப்பீட்டின் வகைகள்


இந்தியாவில் இரண்டு வகையான கார் காப்பீடுகள் கிடைக்கின்றன:

 1. விரிவான காப்பீடு

 2. ஒரு மோதல் அல்லது கடும் மழை அல்லது கலவரம் காரணமாக உங்கள் கார் சேதமடைந்தால் என்ன நடக்கும்? இவை அனைத்திற்கும் மற்றும் அதிகமானதை விரிவான கார் காப்பீடு கவர் செய்யும். இது ஒரு விரிவான கார் காப்பீடாகும் உங்களுடைய காருக்கும், மற்றவர்களின் வாகனங்களுக்கும் சொத்துக்கும் ஏற்படும் சேதங்களை கவர் செய்கிறது. திருட்டு, தீ, தீங்கிழைக்கும் செயல்பாடு அல்லது இயற்கை சீற்றங்கள் மூலம் ஏற்படும் இழப்புக்கான இழப்பீட்டையும் நீங்கள் பெறுவீர்கள்.

 3. மூன்றாம் தரப்பினர் காப்பீடு

 4. உங்களின் தவறு காரணமாக விபத்து ஏற்பட்டால், மூன்றாம் தரப்புக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு நீங்கள் தான் பணம் செலுத்த வேண்டும். மூன்றாம் தரப்பினர் காப்பீடு அத்தகைய சூழ்நிலையில் உங்களுக்கு காப்பீடை வழங்கும். மற்றவரின் வாகனங்களுக்கும் சொத்துக்கும் உங்களுடைய காரினால் ஏற்பட்ட இழப்புக்கு ஈடு செய்கிறது. இருப்பினும், நீங்கள் தவறிழைத்திருந்தால், உங்களுடைய காருக்கு அது காப்புறுதித் தொகையை அளிக்காது.

கார் காப்பீடு பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் FAQ-க்கள்

நான் ஆன்லைனில் கார் காப்பீடு வாங்க முடியுமா?

ஆம், ஆன்லைனில் நீங்கள் கார் காப்பீட்டை வாங்க முடியும். உண்மையில், ஆன்லைனில் கார் காப்பீட்டை பெறுவது விரைவானதும் சுலபமானதுமாகும். உங்கள் காரை காப்பீடு செய்வதற்கான விரைவான மேற்கோளை பெறுவதற்கு உங்கள் தனிநபர் விவரங்களையும் கார் குறித்த தகவல்களையும் அளிக்க வேண்டும். கார் காப்பீட்டிற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்

எனது கார் காப்பீட்டு பாலிசியை ஆன்லைனில் புதுப்பிக்க முடியுமா?

ஆம், உங்கள் மோட்டார் பாலிசியை ஆன்லைனில் எளிதாக புதுப்பிக்க முடியும். மேலும், பாலிசியை புதுப்பிப்பதற்கான நோ கிளைம் போனஸ் அல்லது NCB (பொருந்தினால்) மற்றும் பிரத்யேக ஆன்லைன் தள்ளுபடிகள் ஆகியவற்றை நீங்கள் பெறலாம்.

கார் காப்பீட்டில் ஏதேனும் சலுகை உள்ளதா?

ஆம். பஜாஜ் அலையன்ஸ் போன்ற காப்பீட்டாளர்கள் அவ்வப்போது கார் காப்பீட்டில் தள்ளுபடிகளையும் டீல்களையும் தருகின்றன. தற்போது உள்ள சிறந்த சலுகைகளை அறிவதற்கு அவர்களின் இணையதளத்தை சரிபார்க்கவும்.

எனக்கு எதற்காக கார் காப்பீடு தேவைப்படும்?

நீங்கள் சாலையில் வாகனம் ஓட்டுகிறீர்கள் என்றால், உங்களிடம் கண்டிப்பாக கார் காப்பீடு இருக்க வேண்டும். எதற்காக என்ற காரணம் இங்கே உள்ளது:

 1. சட்டப்படி அவசியமானது : மோட்டார் வாகனச் சட்டம், 1988-ன்படி, கார் காப்பீடு இல்லாமல் இந்தியச் சாலைகளில் ஓட்டுவது சட்டத்துக்குப் புறம்பானது.

 2. எதிர்பாராத செலவுகள்: கார் விபத்து என்பது பெரும் அளவில் செலவுகளை ஏற்படுத்தக்கூடிய ஓர் எதிர்பாராத நிகழ்வு ஆகும். கார் காப்பீடு இல்லை என்றால் உங்கள் சேமிப்புகளை அது பாதிக்கக்கூடும்.

 3. மூன்றாம் தரப்பு சேதங்கள்: மோதல் காரணமாக வேறு ஒருவருடைய சொத்து அல்லது வாகனத்தை சேதப்படுத்தினால் உங்களுக்கு மோசமான சூழ்நிலை ஏற்படலாம். உங்களிடம் கார் காப்பீடு இருந்தால் நீங்கள் எந்த தொந்தரவும் இல்லாமல் மூன்றாம் தரப்பு சேதங்களுக்கு இழப்பீடு பெற முடியும்.

கார் காப்பீட்டு பாலிசி எதை கவர் செய்யும்?

இது நீங்கள் தேர்வு செய்யும் கார் காப்பீட்டு பாலிசியை பொறுத்தது. விரிவான கார் காப்பீடு உங்களுக்கு பின்வருவனவற்றிலிருந்து காப்பீடு அளிக்கலாம்:

 • விபத்தினால் ஏற்படும் சேதம்
 • வெள்ளம், சூறாவளி, மின்னல், பூகம்பம், நிலச்சரிவு, ஆலங்கட்டி மழை, உறைபனி உருவாக்கம் போன்ற இயற்கை சீற்றங்கள் (கடவுளின் செயல்) காரணமாக ஏற்பட்ட இழப்பு.
 • தீ அல்லது சுய பற்றவைப்பு காரணமாக ஏற்படும் சேதம்
 • திருட்டு, கலவரம் அல்லது எந்த ஒரு கெட்ட அல்லது தீவிரவாத செயல்பாடுகள் காரணமாகவும் ஏற்பட்ட இழப்பு
 • சாலை, இரயில், இன்லேண்ட் வாட்டர்வே, லிஃப்ட், எலிவேட்டர் அல்லது விமானத்தில் பயணிக்கும் போது ஏற்படும் சேதம்
 • காப்பீடு செய்யப்பட்ட காரின் உரிமையாளர் / ஓட்டுநருக்கான விபத்து கவர்
 • மரணம் அல்லது நிரந்தர உடல் குறைபாட்டுக்கான இழப்பீடு

கார் காப்பீடானது மூன்றாம் தரப்புப் பொறுப்புகளையும் உள்ளடக்கியதாகும். இதில் உள்ளடங்குபவை:

 • பொது இடத்தில் உங்களின் காப்பீடு செய்யப்பட்ட கார் ஏற்படுத்தும் வாகன அல்லது சொத்து சேதம்
 • விபத்து காரணமாக மூன்றாம் தரப்பினர் ஓட்டுநருக்கு ஏற்படும் காயங்கள்

கார் காப்பீட்டு பாலிசி கவர் செய்யாதது யாவை?

கார் காப்பீட்டின் கீழ் பின்வருபவை கவர் செய்யப்படுவதில்லை:

 • தொழில்நுட்ப அல்லது மின் கோளாறுகள்
 • காரின் தேய்மானம் அல்லது பொதுவான சேதம்
 • மது/போதை பொருட்கள் உட்கொண்டு வாகனம் ஓட்டும்போது ஏற்படும் சேதம்
 • செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டும்போது ஏற்படும் சேதம்
 • ஒரு காரை வாடகைக்கு அல்லது ரிவார்டிற்கு பயன்படுத்தும்போது, முறைபடுத்தப்பட்ட பந்தயம் அல்லது வேக பரிசோதனை உள்ளிட்டவற்றில் பயன்படுத்தும்போது ஏற்படும் சேதம்.
 • விபத்தின் காரணமாக ஏற்படாத டயர் சேதம்
 • திருட்டினால் காரின் உபகரணங்கள் இழப்பு

ஆன்லைனில் கார் காப்பீட்டை வாங்குவதன் நன்மைகள் யாவை?

பல்வேறு காப்பீட்டு நிறுவனங்களிலிருந்து பிசிக்கல் புரோச்சர்களை சேகரித்து கார் காப்பீட்டை வாங்குவதற்கு அவற்றை ஒப்பிட்டு கற்பனை செய்து பாருங்கள். மிகவும் கடினம் அல்லவா? நீங்கள் கார் காப்பீட்டை ஆன்லைனில் வாங்கினால் நீங்கள் அதிகமாக பெறலாம், பின்வருவது போல்:

 • எளிதான ஒப்பீடு: ஆன்லைன் கார் காப்பீடு நீங்கள் தயாரிப்புகள் மற்றும் அவற்றின் விலைகளை ஒப்பிட்டு ஆராய்ச்சி செய்வதை எளிதாக்குகிறது. நீங்கள் வாடிக்கையாளர் விமர்சனங்களை படிக்கலாம், காப்பீட்டு நிறுவனத்திடம் நேரடியாக தகவல்களை பகிர்ந்துகொள்ளலாம் அல்லது கேள்விகளை கேட்கலாம்.
 • வசதி: தற்போதைய நாட்களில் வசதியே மிகப்பெரிய ஆதாயம். கார் காப்பீட்டை ஆன்லைனில் வாங்குவதற்கான வசதி உங்களுக்கு இருக்கும் போது, ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சென்று உங்கள் முயற்சியையும் நேரத்தையும் ஏன் வீண் செய்ய வேண்டும்?
 • எளிய விண்ணப்பம்: ஒரு கார் காப்பீட்டை ஆன்லைனில் வாங்குவதற்கு காப்பீட்டு நிறுவனங்கள் இப்போது எல்லாம் தடையற்ற ஆன்லைன் விண்ணப்ப செயல்முறையை வழங்குகின்றன. ஆன்லைன் விண்ணப்ப படிவங்கள் விரைவானதாகவும், எளிமையானதாகவும் மற்றும் சுய வழிகாட்டுதலாகவும் இருக்கின்றன. பிழைகள் ஏற்படுவதற்கு குறைவான வாய்ப்புகள் உள்ளன மற்றும் எந்த நேரத்திலும் உங்கள் விண்ணப்பத்தை நீங்கள் மதிப்பாய்வு செய்யலாம்.
 • பணம் செலுத்தலை எளிதாக்குங்கள்: நீங்கள் கார் காப்பீட்டை ஆன்லைனில் வாங்கும்பொழுது கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங், ஸ்மார்ட் கார்டு போன்ற பல பணம் செலுத்துதல் விருப்பத்தேர்வுகளை பெறுவீர்கள்.
 • தள்ளுபடிகளும் ஒப்பந்தங்களும்: பல நேரங்களில் ஆன்லைன் கார் காப்பீட்டு விண்ணப்பதாரர்களுக்கு சிறப்பான தள்ளுபடிகள் மற்றும் ஒப்பந்தங்கள் உள்ளன.

உங்கள் காரை விற்கும் போது கார் காப்பீட்டை பரிமாற்றும் செய்வதற்கான செயல்முறை யாவை?

இதில் உள்ள படிநிலைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:

படிநிலை 1: நீங்கள் நோ-கிளைம் போனஸ் (NCB) க்கு தகுதி பெற்றால், கார் காப்பீட்டை டிரான்ஸ்ஃபர் செய்வதற்கு முன்பு கிளைம் செய்யவும். புதிய உரிமையாளர் NCB -ஐக் கோர முடியாது.
படிநிலை 2: கார் பதிவுசெய்தல் மற்றும் காகிதங்கள் மாற்றப்பட்ட உடன், புதிய உரிமையாளருக்கு NOC வழங்கவும்.
படிநிலை 3: கார் மாற்று ஆவணங்கள், NOC சான்றிதழ், மற்றும் புதிய விண்ணப்பப் படிவத்துடன் புதிய கார் உரிமையாளரை காப்பீட்டு நிறுவனத்தை அணுகும் படி கூறுங்கள்.
படிநிலை 4: காப்பீட்டு நிறுவனம் காரை ஆய்வு செய்யும் மற்றும் கார் இன்சூரன்ஸ் பாலிசி புதிதாக வாங்கியவருக்கு மாற்றப்படும்.

கார் காப்பீட்டை பற்றி மேலும் தெரிந்துகொள்ள மேலும் FAQ-க்களை படிக்கவும்