ரோடு டிரிப் பாதுகாப்பு

play

நீங்கள் ஒரு சாலை பயணத்தில் இருக்கும் போது, அது எந்தவித இடையூறும் கவலையும் இல்லாத இன்ப அனுபவமாக இருக்க வேண்டும் என நீங்கள் விரும்புவீர்கள். பஜாஜ் ஃபின்சர்வில் இருந்து சாலையோர பயண பாதுகாப்பு பின்வரும் நன்மைகளை வழங்குகிறது, நீங்கள் ஏதேனும் சிக்கலில் இருந்தால் நிதி காப்பீடு உதவும் மற்றும் அவசர ஹோட்டல் அல்லது பயண முன்பதிவுகள் வழங்கும், உங்கள் கார் பழுது ஏற்பட்டால் சாலையோற உதவி மற்றும் உங்கள் வாலெட்டை நீங்கள் இழந்தால் 24/7 கார்டு முடக்க சேவை போன்ற நன்மைகளை வழங்குகிறது.

மேலும், பஜாஜ் ஃபின்சர்விலிருந்து சாலையோர பயண பாதுகாப்புடன் வெறும் ரூ. 599 செலுத்தி ரூ. 3 லட்சம் வரை தனிநபர் விபத்துக்கள் காப்பீட்டை பெறுங்கள்.சிறப்பம்சங்கள் & நன்மைகள்

 • சாலையோர உதவி

  இந்தியா முழுவதும் 700 க்கும் மேற்பட்ட இடங்களில் 24/7 நேரமும் சாலையோர உதவி கிடைப்பதால், உங்கள் கார் பிரேக் டவுன் ஆனாலும் கவலைப்படத் தேவையில்லை.

 • அவசர பயணம் மற்றும் ஹோட்டல் உதவி

  கையில் கார்டுகள் அல்லது பணம் இல்லாமல் சாலை பயணத்தில் சிக்கிக் கொண்டீர்களா? இந்தியாவில் ரூ. 50,000 வரையிலும் மற்றும். வெளிநாட்டில் ரூ. 1,00,000 வரையிலும் உங்கள் ஹோட்டல் பில்கள் மற்றும் திரும்புதல் பயணத்தைக் கவனித்துக்கொள்ள உடனடி நிதியுதவி பெறுங்கள்.

 • ஒரே ஒறு தொலைபேசி அழைப்பின் மூலம் உங்களின் அனைத்து தொலைந்த கார்டுகளையும் தடை செய்யுங்கள்

  சாலை பயணத்தின் போது உங்கள் வாலெட்டை தொலைத்துவிட்டீர்களா? 24/7 நேர கார்டு தடை செய்யும் சேவையைப் பெறுங்கள் மற்றும் உங்கள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்யுங்கள்.

 • காம்ப்ளிமென்டரி காப்பீடு

  தனிநபர் விபத்துகள், விபத்து மருத்துவ உள்ளிருப்புச் சிகிச்சை, மற்றும் மருத்துவ வெளியேற்றம் ஆகியவற்றின் மீதான உங்கள் சாலையோர பயணத்திற்கு ஒரு காம்ப்ளிமென்டரி காப்பீடு ரூ. 3,00,000 வரை பாதுகாப்பு வழங்குகிறது.

பயண பாதுகாப்பு உறுப்பினர் காப்பீடு

பஜாஜ் ஃபின்சர்விலிருந்து சாலைப் பயணப் பாதுகாப்பில் ஒரு வருட பயண பாதுகாப்பு மெம்பர்ஷிப் அடங்கும், இது பின்வரும் நன்மைகளைக் கொண்டுள்ளது:

 • தொலைந்து போன அல்லது திருடப்பட்ட உங்களின் அனைத்து கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதை தவிர்க்க நீங்கள் அவற்றை தடை செய்யலாம். நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், 1800-419-4000 என்ற இலவச எண்ணைத் தொடர்பு கொள்ள வேண்டும்.

 • நீங்கள் இழப்பு நிகழும் போது இந்தியாவில் இருந்தால், எந்தவொரு அவசர பயணத் தேவைகளுக்கும், நீங்கள் ரூ. 50,000 வரைக்கும் நிதி உதவி பெறுவீர்கள். ஒருவேளை நீங்கள் வெளிநாட்டில் இருந்தால், காப்பீட்டுத் தொகை ரூ. 1,00,000 வரை இருக்கும். இது அதிகபட்சமாக 28 நாட்களுக்கு ஒரு வட்டி-இல்லா முன்தொகை. நீங்கள் இந்தத் தொகையை 28 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும்.

 • உங்கள் கார் வழியில் பிரேக் டவுன் ஆகிவிட்டால் அதற்கான சாலையோர-உதவியையும் இந்தக் காப்பீடு வழங்குகிறது. நீங்கள் வாகன பிரேக்டவுன் ஆதரவை தொலைபேசி வாயிலாகப் பெறலாம், டோவிங் உதவி, பேட்டர் ஜம்ப்ஸ்டார்ட் மற்றும் பல உதவிகளையும் பெறலாம்.

 • ஒரு காருக்கு 5 லிட்டர் எரிபொருளுக்கானச் செலவையும் ஒரு இரு-சக்கர வாகனத்திற்கு 2 லிட்டர் எரிபொருளுக்கானச் செலவையும் நீங்கள் பெறலாம்.

 •  மேலும் நீங்கள் ரூ. 3 இலட்சம் வரைக்குமான ஒரு காம்ப்ளிமென்டரி ஆட்-ஆன் தனிநபர் விபத்துக் காப்பீட்டு பாதுகாப்பை பெறுகிறீர்கள்.

எவை உள்ளடங்காது?

 • நீங்கள் போதையில் இருக்கும் போது ஏற்படும் உங்கள் மதிப்பு மிக்க பொருட்களின் இழப்பு.

 • நீங்கள் போக்குவரத்து விதியை மீறியதால் உங்கள் வாகனத்திற்கு ஏற்பட்ட சேதாரம்.

தேவையான ஆவணங்கள்

 • KYC ஆவணங்கள்

 • பயண பாதுகாப்பு மெம்பர்ஷிப் கடிதம்

எப்படி விண்ணப்பிப்பது

சாலையோர பயண காப்பீட்டிற்கு நீங்கள் ஆன்லைனில் நொடியில் விண்ணப்பிக்கலாம். பஜாஜ் ஃபின்சர்வ் இணையதளத்தில் உள்நுழைந்து, விண்ணப்ப படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்பவும் மற்றும் வசதியான பணம்செலுத்தும் முறைகள் வழியாக மெம்பர்ஷிப் கட்டணத்தை செலுத்தவும்.

கோரிக்கை செயல்முறை

 • கார்டுகளை இழக்கும் பட்சத்தில், 24 மணிநேரத்திற்குள் பின்வரும் எங்களது இலவச எண்ணை தொடர்பு கொள்ளவும் 1800-419-4000.

 • அவசர உதவிக்காக உங்கள் தேவையின் ஆதாரத்தை வழங்கவும்.

எங்கள் செய்திமடலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்

பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடன் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்

பயனர்கள் மேலும் இவைகளை பரிசீலிக்கின்றனர்