கண்ணோட்டம்

play

நீங்கள் புனிதப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளீர்களா? பஜாஜ் ஃபின்சர்வின் புனித பயணக் காப்பீட்டின் மூலம் உங்கள் பயணத்தை பாதுகாத்திடுங்கள், எனவே நீங்கள் ஏதேனும் பயண அவசர நிலையை எதிர்கொண்டால் இதன் மூலம் போதுமான பாதுகாப்பு கிடைக்கும். நீங்கள் உங்கள் வாலெட்டை இழந்தால் 24/7 கார்டு தடை சேவை, நீங்கள் உங்கள் புனித பயணத்தின் போது சிக்கிக் கொண்டால் அவசர பயணம் மற்றும் ஹோட்டல் உதவி மற்றும் உங்களுக்கு விபத்து ஏற்பட்டால் காம்ப்ளிமென்டரி காப்பீடு உள்ளிட சில நன்மைகளும் கிடைக்கின்றன.

பஜாஜ் ஃபின்சர்வின் புனிதப் பயண காப்பீடு வெறும் ரூ. 599 யில் ரூ. 3 இலட்சம் வரை காப்பீடு வழங்குகிறது.

சிறப்பம்சங்கள் & நன்மைகள்

 • டிராவல் மற்றும் ஹோட்டல் உதவி

  உங்கள் புனிதப் பயணத்தின் போது நீங்கள் சிக்கிக் கொண்டால், எந்தவொரு அவசர செலவுகளுக்கும், இந்தியாவில் ரூ. 50,000 வரையிலும் மற்றும். வெளிநாட்டில் ரூ. 1,00,000 வரையிலும் நீங்கள் பயண மற்றும் ஹோட்டல் உதவியைப் பெறலாம்.

 • 24/7 கார்டு முடக்க சேவை

  உங்கள் புனித பயணத்தின் போது நீங்கள் உங்கள் வாலெட்டை இழந்துவிட்டால், வெறும் ஒரே ஒரு தொலைபேசி அழைப்பில் உங்களின் அனைத்து டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை தடை செய்யுங்கள்.

 • காம்ப்ளிமென்டரி காப்பீடு

  நீங்கள் பயணத்தில் இருக்கும் போது, தனிபட்ட விபத்துக்கள், விபத்து மருத்துவ உள்ளிருப்புச் சிகிச்சை, அவசர மருத்துவமனை வெளியேற்றம் அல்லது உங்கள் வீட்டில் கொள்ளை என ஏதேனும் நிகழ்ந்தால் ரூ. 3,00,000 வரை காம்ப்ளிமென்டரி காப்பீடு பாதுகாப்பு பெறுங்கள்.

 • PAN கார்டு ரீப்ளேஸ்மென்ட்

  புனிதப் பயணத்தின் போது, உங்கள் PAN கார்டு தொலைந்து போனால், ஆவணச் செயல்முறை உதவியுடன் PAN கார்டு ரீப்ளேஸ்மென்டிற்கான உதவியைப் பெறுங்கள்.

பயண பாதுகாப்பு உறுப்பினர் காப்பீடு

பஜாஜ் ஃபின்சர்வின் புனிதப் பயணக் காப்பீட்டில் ஒரு-வருட பயண பாதுகாப்பு உறுப்பினர் அட்டை உள்ளது, இது ஏராளமான நன்மைகளை கொண்டிருக்கிறது. கீழே உள்ள சிலவற்றை பார்வையிடுங்கள்:
 

 • நீங்கள் உங்கள் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டை தொலைத்து விட்டால், அவை தவறாகப் பயன்படுத்தப்படுவதை தடுக்க உடனடியாக அவை அனைத்தையும் தடை செய்யுங்கள். இந்த சேவைக்கான இலவச-அழைப்பு எண்: 1800-419-4000.

 • இழப்பு நேரத்தில் நீங்கள் இந்தியாவில் இருந்தால், உங்கள் ஹோட்டல் பில்கள் மற்றும் விமான பயணங்களை சமாளிப்பதற்கு நீங்கள் ரூ. 50,000 வரை நிதியுதவி பெற முடியும். இழப்பு நேரத்தில் நீங்கள் வெளிநாட்டில் இருந்தால், நீங்கள் ரூ. 1,00,000 வரை முன்பணம் பெறுவீர்கள். இந்த முன்பணம் அதிகபட்சம் 28 நாட்களுக்கு வட்டி இல்லாத முன்பணம் ஆகும். நீங்கள் இந்தத் தொகையை 28 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும்.

 • பிற கார்டுகள் மற்றும் ஆவணங்களுடன் நீங்கள் உங்கள் PAN கார்டை இழந்திருந்தால் அதை மாற்றுவதற்கான காப்பீட்டையும் நீங்கள் பெறலாம்.

 • காம்ப்ளிமென்டரி ஆட்-ஆன் தனிநபர் விபத்து காப்பீடு ரூ. 3,00,000 வரைக்கும் காப்பீடு வழங்குகிறது.

எது காப்பீடு செய்யப்படவில்லை?நீங்கள் போதையில் இருக்கும் போது உங்கள் உடைமைகள் தொலைந்து போனால், அதற்கான இழப்பீடு இந்த பாலிசியில் அடங்காது.
 

தேவையான ஆவணங்கள்

 • KYC ஆவணங்கள்

 • பயண பாதுகாப்பு மெம்பர்ஷிப் கடிதம்

 

எப்படி விண்ணப்பிப்பது

புனிதப் பயண காப்பீட்டிற்கு விண்ணப்பிப்பது சுலபம். பஜாஜ் ஃபின்சர்வ் இணையதளத்தில் உள்நுழைந்து, விண்ணப்ப படிவத்தில் தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்யவும் மற்றும் பிரீமியம் தொகையை ஆன்லைனில் செலுத்தவும். இந்த செயல்முறையை எளிதாக்க, இதை செய்வதற்கு நிறைய பணம் செலுத்தல் விருப்பத் தேர்வுகள் உள்ளன.
 

கோரிக்கை செயல்முறை

 

 

 • உங்கள் டெபிட் அல்லது கிரெடிட் கார்டை நீங்கள் தொலைத்து விட்டால், 24 மணிநேரத்திற்குள் எங்கள் இலவச எண் 1800-419-4000-யில் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

 • அவசர உதவிக்கு உங்கள் தேவைக்கான ஆதாரங்களை நீங்கள் வழங்க வேண்டும்.
   

 

எங்கள் செய்திமடலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்

பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடன் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்