வீட்டுக் காப்பீடு பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளைப் படிக்கவும் | பஜாஜ் ஃபின்சர்வ்
back

விருப்பமான மொழி

விருப்பமான மொழி

image

வீட்டுக் காப்பீடு FAQ-கள்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எனக்கு ஏன் வீட்டு காப்பீடு தேவை?

எனக்கு ஏன் வீட்டு காப்பீடு தேவைப்படுகிறது? ஒரு கனவு இல்லத்தை உருவாக்க நீங்கள் எப்போதுமே விரும்புவீர்கள். ஒவ்வொரு காசையும் சேமித்தல், கடினமாக உழைத்தல், மற்றும் வலுவான திட்டமிடல் - இவை அனைத்தும் ஒரு சிறப்பான உறைவிடத்தை உங்களுக்கும் மற்றும் உங்கள் குடும்பத்திற்கும் அன்பளிப்பாக வழங்க செய்யப்பட்டவை. உங்கள் கனவை பாதுகாக்க, நீங்கள் உங்கள் வீடு மற்றும் அதன் பகுதிகளை தீ, வெளிப்புற காலநிலைகள், திருடு போன்றவற்றிறகு எதிரான காப்பீடு கொண்டு பாதுகாக்க வேண்டும். எதிர்பாராமல் நிகழும் பேராபத்துகளிலிருந்து உங்கள் வீட்டை பாதுகாக்க உங்களுக்கு வீட்டு காப்பீடு தேவை இல்லையெனில் நீங்கள் பயணத்தில் இருக்கும் போது உங்கள் வீடு சம்பந்தப்பட்டவைகளின் பாதுகாப்பிற்கு வீட்டு பாதுகாப்பு காப்பீட்டை எடுத்துக்கொள்ளுங்கள்.

பொறுப்புத்துறப்பு - * நிபந்தனைகள் பொருந்தும். இந்த தயாரிப்பு குழு காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது, இதில் பஜாஜ் நிதி லிமிடெட் முதன்மை பாலிசிதாரராக உள்ளது. காப்பீட்டுத் தொகை எங்கள் கூட்டாளர் காப்பீட்டு நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் ஆபத்தை ஏற்காது. IRDAI கார்ப்பரேட் ஏஜென்சி பதிவு எண் CA 0101 மேலே குறிப்பிடப்பட்ட நன்மைகள் மற்றும் பிரீமியம் தொகை காப்பீட்டாளரின் வயது, வாழ்க்கை முறை பழக்கம், உடல்நலம் போன்ற பல்வேறு காரணிகளுக்கு உட்பட்டவை (பொருந்தினால்). வழங்கல், தரம், சேவைத்திறன், பராமரிப்பு மற்றும் எந்தவொரு உரிமைகோரல்களுக்கும் பிந்தைய விற்பனைக்கு BFL எந்தப் பொறுப்பையும் கொண்டிருக்கவில்லை. இந்த தயாரிப்பு காப்பீட்டுத் தொகையை வழங்குகிறது. இந்த தயாரிப்பு வாங்குவது முற்றிலும் தன்னார்வமானது. எந்தவொரு மூன்றாம் தரப்பு தயாரிப்புகளையும் கட்டாயமாக வாங்க BFL தனது வாடிக்கையாளர்கள் எவரையும் கட்டாயப்படுத்தவில்லை. ”

நாங்கள் எப்படி வீட்டு காப்பீட்டின் கீழ் சொத்தை மதிப்பிடுகிறோம்?

சதுர அடிக்கு ஒரு கட்டுமான செலவுடன் சொத்துக்களின் கட்டமைக்கப்பட்ட பகுதியை பெருக்குவதன் மூலம் சொத்து மதிப்பீடு செய்யப்படுகிறது.

வீட்டு காப்பீட்டு கிளைமில் எப்போது FIR தேவைப்படுகிறது?

கொள்ளை, திருட்டு, தீங்கிழைக்கும் சேதம், கலவரம் மற்றும் வேலைநிறுத்தம் விஷயத்தில் போலீஸ் FIR கட்டாயமாகும.

கொள்ளை, களவு மற்றும் திருட்டு இவற்றிற்கிடையில் உள்ள வேற்றுமை என்ன?

கொள்ளை என்பது திருடுவதற்காக உங்கள் வளாகத்தில் வலுக்கட்டாயமாக வந்து திருடுதல் ஆகும். வளாகத்திலிருந்து எந்த ஆதாரமும் விட்டுவைக்காமல் பொருட்களை திருடிச் சென்றால் அது களவு ஆகும் . ஒரு தெரிந்த நபர் உங்கள் வளாகத்திற்கு வந்து உங்கள் உடமைகளை திருடிச் சென்றால் அது திருட்டு ஆகும்.

காப்பீடு செய்யப்பட்ட வீடு விற்பனை செய்யப்பட்டுவிட்டால் வீட்டு காப்பீட்டு பாலிசி என்னவாகும்?

உரிமையாளர் மாறும் போது, பாலிசி இரத்து செய்யப்படுகிறது மற்றும் பாலிசியின் கீழ் காப்பீடு செய்யப்பட்டவர் காப்பீடு செய்யபட்டவராகவே இருக்கிறார். அதன் பிறகு மீதமுள்ள காப்பீட்டு காலத்திற்கான பிரீமியம் தொகையை நாங்கள் திருப்பிச் செலுத்தி விடுவோம்.

வீடு கொள்ளை போனதற்கான கோரலுக்கு சமர்பிக்கத் தேவையான ஆவணங்கள் யாவை?

திருடப்பட்ட பொருட்களுக்கான மதிப்புடன், உண்மையான இரசீது சமர்பிக்கப்படவேண்டும். இதனுடன் கூடுதலாக மாற்றுதல் செலவு/பழுதுபார்த்தல் செலவு, FIR, இறுதி போலீஸ் அறிக்கை மற்றும் கோரல் படிவம் போன்றவற்றையும் வழங்க வேண்டும்.

காப்பீடு செய்ய வேண்டிய சொத்தின் மீது ஏதேனும் வயது வரம்பு உள்ளதா?

இல்லை, ஒரு வீட்டுக் காப்பீட்டுத் திட்டத்தை வாங்குவதற்கு எந்த வயது வரம்பும் இல்லை.

எனது காப்பீட்டு பாலிசி எந்த தேதியில் தொடங்குகிறது?

உங்கள் காப்பீட்டு கவர் முன்மொழிதல் படிவத்தில் உங்களால் குறிப்பிடப்பட்ட தொடக்க தேதியில் இருந்து அல்லது நாங்கள் பிரீமியம் பெற்றுக்கொண்டதில் இருந்து, எது கடைசியானதோ அதிலிருந்து உங்கள் காப்பீடு தொடங்கும்.

வீட்டு காப்பீட்டு பாலிசி எதை உள்ளடக்கியுள்ளது?

தீ விபத்து, புயல், சூறாவளி, கடும்புயல், மின்னல், நிலச்சரிவுகள் மாறும் வெள்ளம், பூகம்பம், கலவரம், கதவடைப்பு, தீங்கிழைக்கும் நோக்கம் கொண்ட மற்றும் பயங்கரவாத சேதம் (விருப்பத்தேர்விலான காப்பீடு), குண்டுவெடிப்பு/உமிழ்வு போன்ற இயற்கையான அல்லது மனிதனால் உருவாக்கப்படும் சம்பவங்களின் காரணமாக ஏற்படும் சேதங்களை இந்தப் பாலிசி காப்பீடு செய்கிறது. உங்கள் வீட்டு கட்டிடம், அப்ளையன்சஸ், தீயில் சேதமான மதிப்புமிக்க சொத்துக்கள் மற்றும் பயங்கரவாத சேதத்தை உள்ளடக்கியது (விருப்பத்திற்கேற்ப காப்பீடு), பூகம்பத்துடன் சேர்ந்து திருட்டு, வீட்டை உடைத்தல், கொள்ளை மற்றும் மெக்கானிக்கல் / எலக்ட்ரிக்கல் அப்ளையன்சஸ் பழுது முதலியவை பாலிசியில் அடங்கும்.

எங்கள் செய்திமடலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்

பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடன் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்

உங்களுக்கு தெரியுமா, ஒரு நல்ல சிபில் ஸ்கோர் கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகள் மீது சிறந்த டீல்களை பெற உதவும்?