வீட்டுக் கடன் 70 லட்சம் வரை விவரங்கள்

பஜாஜ் ஃபின்சர்வ் வீட்டுக் கடனை வழங்குகிறது, இது உங்கள் அதிக மதிப்புள்ள கொள்முதல்களுக்கு நிதியளிக்க உதவி நிதி பற்றி கவலைப்படாமல் உங்கள் கனவு இல்லத்தை உருவாக்க உதவுகிறது. சொத்தை வாங்குவதிலிருந்து கட்டுமான செலவுகள் வரை தேவையான செலவுகளை கவர் செய்வதற்கு ₹. 70 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகைக்கு நீங்கள் எளிதாக ஒப்புதல் பெறலாம்.

மேலும், பிஎம்ஏஒய் போன்ற அரசாங்க-ஆதரவு திட்டங்கள் மற்றும் டாப்-அப் கடன் சிறப்பம்சங்கள், நெகிழ்வான திருப்பிச் செலுத்தும் விதிமுறைகள் போன்ற கூடுதல் வசதிகளுக்கு நன்றி, நீங்கள் மேலும் சேமிக்கலாம். இருப்பினும், உங்கள் 70 லட்சம் வீட்டுக் கடன் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிப்பதற்கு முன்னர், தகுதி தேவைகள், வட்டி கட்டணங்கள் போன்றவற்றை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

70 லட்சம் வீட்டுக் கடன் தொகைக்கான தகுதி வரம்பு

இந்த கடன் வசதியின் அதிக பலன்களை பெறுவதற்கு, முதலில் பின்வரும் வீட்டுக் கடன் தகுதி வரம்பை பூர்த்தி செய்யுங்கள்.

சுய தொழில் தனிநபர்களுக்கு:

 • நீங்கள் ஒரு இந்திய குடியிருப்பாளராக இருக்க வேண்டும்
 • உங்களுடைய வயது 25 முதல் 70 வயதிற்கு இடையில் இருக்க வேண்டும்**
 • ஒரு நிலையான தொழிலை குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் நீங்கள் செய்திருக்க வேண்டும்

மாத ஊதியம் பெறும் நபர்களுக்கு:

 • நீங்கள் ஒரு இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்
 • உங்களின் வயது 23 முதல் 62 ஆண்டுகளுக்கு இடையில் இருக்க வேண்டும்**
 • நீங்கள் ஒரு புகழ்பெற்ற நிறுவனத்துடன் தொடர்புடையவராக இருக்க வேண்டும் மற்றும் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வேலை அனுபவத்தை கொண்டிருக்க வேண்டும்
 • நீங்கள் குறைந்தபட்ச மாதாந்திர வருமான வரம்பு மற்றும் உங்கள் நகரத்திற்கான சொத்து தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்

இந்த அளவுருக்களை பூர்த்தி செய்வது தவிர, 70 லட்சம் வரை வீட்டுக் கடனைப் பெறுவதற்கு பின்வரும் ஆவணங்கள் உங்களிடம் தயாராக இருப்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும்:

 • படிவம் 16 அல்லது சமீபத்திய சம்பள இரசீதுகள் (ஊதியம் பெறும் தனிநபர்களுக்கு)
 • டிஆர் ஆவணம் அல்லது இலாப நஷ்ட அறிக்கை (2 ஆண்டுகள்) (சுயதொழில் புரியும் தனிநபர்களுக்கு)
 • குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தொழில் நடத்தியதற்கான சான்று (சுயதொழில் புரியும் தனிநபர்களுக்கு)
 • முகவரி மற்றும் அடையாளச் சான்று போன்ற அடிப்படை கேஒய்சி ஆவணங்கள்
 • வங்கி கணக்கு அறிக்கைகள் (கடந்த 6 மாதங்கள்)

தேவையான அனைத்து ஆவணங்களும் உங்களிடம் இருந்தால், உங்கள் மாதாந்திர கடமைகளை மதிப்பிடுவதற்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

**கடன் மெச்சூரிட்டி நேரத்தில் கருதப்படும் அதிகபட்ச வயது.

ரூ. 70 லட்சம் வீட்டுக் கடன் மீது பொருந்தக்கூடிய வட்டி விகிதம்

ஊதியம் பெறும் விண்ணப்பதாரர்கள் மற்றும் தொழில்முறை விண்ணப்பதாரர்களுக்கு ரூ.70 லட்சம் வீட்டுக் கடனுக்கான ஒதுக்கப்பட்ட வீட்டுக் கடன் வட்டி விகிதம் 8.60%* மற்றும் அதற்கு மேல் ஆகும். நினைவில் கொள்ளுங்கள், வட்டி விகிதம் எப்பொழுதும் கடன் வாங்குவதற்கான ஒட்டுமொத்த செலவை பாதிக்கிறது, மேலும் உங்கள் மாதாந்திர கடன்கள் அதற்கேற்ப வேறுபடுகின்றன.

வீட்டுக் கடன் இஎம்ஐ கால்குலேட்டரைப் பயன்படுத்தி மாதாந்திர தவணைத் தொகையை நீங்கள் கணக்கிடுவதை உறுதிசெய்யவும், குறிப்பாக நீங்கள் அத்தகைய பெரிய தொகையைத் தேர்ந்தெடுக்க திட்டமிடும்போது. இந்த வழியில் உங்கள் நிதிகளை அதன்படி திட்டமிடுவது எளிதாகும்.

70 லட்சம் வீட்டுக் கடன் இஎம்ஐ விவரங்கள்

கடனைப் பெறுவதற்கு முன்னர் கடன் அமார்டைசேஷன், குறிப்பிட்ட திருப்பிச் செலுத்தும் தவணைக்காலம் போன்றவற்றிற்கு நீங்கள் எவ்வளவு செலுத்த வேண்டும் போன்றவற்றை புரிந்து கொள்வது அவசியம். முன்னர் குறிப்பிட்டுள்ளபடி, தொடர்புடைய நிதி கருவியைப் பயன்படுத்தி வீட்டுக் கடன் இஎம்ஐ-ஐ மதிப்பிடுவது இஎம்ஐ விவரங்களைப் பெறுவதற்கும் ஒவ்வொரு மாதம் நீங்கள் செலுத்த வேண்டிய சரியான தொகையை தெரிந்து கொள்வதற்கும் சிறந்தது.

பல்வேறு தவணைக்காலங்களுடன் 70 லட்சம் வீட்டுக் கடனுக்கான இஎம்ஐ கணக்கீடு

நீங்கள் தேர்வு செய்யும் தவணைக்காலத்தைப் பொறுத்து உங்கள் வீட்டுக் கடன் இஎம்ஐ மாறுபடும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இப்போது, இது உங்கள் மாதாந்திர தவணையை எவ்வாறு பாதிக்கிறது என்பதை பற்றிய சிறந்த யோசனையைப் பெற, கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த எடுத்துக்காட்டுகளைக் கண்டறியவும். இங்கே, அசல் தொகை மற்றும் வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது, அதாவது ரூ. 70 லட்சம் மற்றும் ஆண்டுக்கு 8.60%*, தவணைக்காலம் மட்டுமே வேறுபடும்.

30 ஆண்டுகளுக்கு ரூ. 70 லட்சம் வீட்டுக் கடனுக்கான இஎம்ஐ

கடன் தொகை

ரூ. 70 லட்சம்

வட்டி விகிதம்

8.60%*

தவணைக்காலம்

30 வருடங்கள்

இஎம்ஐ

ரூ. 54,321

 

20 ஆண்டுகளுக்கு ரூ. 70 லட்சம் வீட்டுக் கடனுக்கான இஎம்ஐ

கடன் தொகை

ரூ. 70 லட்சம்

வட்டி விகிதம்

8.60%*

தவணைக்காலம்

20 வருடங்கள்

இஎம்ஐ

ரூ. 61,191

 

15 ஆண்டுகளுக்கு ரூ. 70 லட்சம் வீட்டுக் கடனுக்கான இஎம்ஐ

கடன் தொகை

ரூ. 70 லட்சம்

வட்டி விகிதம்

8.60%*

தவணைக்காலம்

15 வருடங்கள்

இஎம்ஐ

ரூ. 69,343


மேலே குறிப்பிட்டுள்ள எடுத்துக்காட்டுகள் திருப்பிச் செலுத்தும் தவணைக்காலங்களைப் பொறுத்து மாதாந்திர தவணைகள் எவ்வாறு மாறுகின்றன என்பதைப் புரிந்துகொள்வதை எளிதாக்குகின்றன. எனவே, கடன் தவணைக்காலத்தை கவனமாக தேர்வு செய்வதை உறுதிசெய்யவும், இதனால் உங்கள் பட்ஜெட்டிற்கு இடையூறு ஏற்படாமல் இருக்கும்.

ரூ. 70 லட்சத்திற்கும் குறைவான வீட்டுக் கடன் தொகைக்கான இஎம்ஐ கணக்கீடுகள்

ரூ. 70 லட்சம் வீட்டுக் கடன் பெறும்போது உங்கள் அனைத்து தற்போதைய நிதி பொறுப்புகளையும் பூர்த்தி செய்ய உங்களுக்கு மிகவும் சவாலாக இருந்தால், குறைவான தொகைக்கு விண்ணப்பிப்பதைக் கருத்தில் கொள்ளுங்கள், அது தானாகவே உங்கள் இஎம்ஐ-களை குறைக்கும். வெவ்வேறு கடன் தொகைகள் இஎம்ஐ-களை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை தெளிவுபடுத்தும் ஒரு எடுத்துக்காட்டு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:

20 ஆண்டுகளுக்கு ரூ. 69 லட்சம் வீட்டுக் கடனுக்கு

 • வட்டி விகிதம்: 8.60%*
 • தவணைக்காலம்: 20 ஆண்டுகள்
 • இஎம்ஐ: ரூ. 60,317

20 ஆண்டுகளுக்கு ரூ. 68 லட்சம் வீட்டுக் கடனுக்கு

 • வட்டி விகிதம்: 8.60%*
 • தவணைக்காலம்: 20 ஆண்டுகள்
 • இஎம்ஐ: ரூ. 59,443

20 ஆண்டுகளுக்கு ரூ. 67 லட்சம் வீட்டுக் கடனுக்கு

 • வட்டி விகிதம்: 8.60%*
 • தவணைக்காலம்: 20 ஆண்டுகள்
 • இஎம்ஐ: ரூ. 58,569

20 ஆண்டுகளுக்கு ரூ. 66 லட்சம் வீட்டுக் கடனுக்கு

 • வட்டி விகிதம்: 8.60%*
 • தவணைக்காலம்: 20 ஆண்டுகள்
 • இஎம்ஐ: ரூ. 57,695

நீங்கள் பார்க்கிறபடி, அசல் தொகை மற்றும் திருப்பிச் செலுத்தும் தவணை ஆகியவற்றில் ஒரு சிறிய மாற்றம் மாதாந்திர தவணையை மாற்றலாம். பஜாஜ் ஃபின்சர்வின் பரந்த அளவிலான பலன்களிலிருந்து பயனடைய உங்கள் நிதிப் பொறுப்புகளை மதிப்பீடு செய்து வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கவும்.

*குறிப்பிடப்பட்டுள்ள வட்டி விகிதங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை, சமீபத்திய விகிதங்களை தெரிந்துகொள்ள இங்கே அணுகவும்