பஜாஜ் ஃபின்சர்வ் வீட்டுக் கடன்

  1. முகப்பு
  2. >
  3. வீட்டு கடன்
  4. >
  5. அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

வீட்டு கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

விரைவான விண்ணப்பம்

விண்ணப்பிக்க வெறும் 60 வினாடிகள்

உங்கள் முதல் பெயர் மற்றும் கடைசி பெயரை உள்ளிடவும்
உங்கள் 10-இலக்க மொபைல் எண்ணை உள்ளிடவும்
உங்கள் அஞ்சல் குறியீட்டை உள்ளிடவும்

இந்த விண்ணப்பம் மற்றும் பிற தயாரிப்புகள்/சேவைகள் தொடர்பாக என்னை அழைக்க /SMS மூலம் தொடர்பு கொள்ள பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதியை நான் அங்கீகரிக்கிறேன். இந்த ஒப்புதல் DNC/NDNC-க்கான எனது பதிவை புறக்கணிக்கிறது.வி&நி

உங்கள் மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பப்பட்டது

ஒரு-முறை கடவுச்சொல்லை உள்ளிடவும்*

0 வினாடிகள்
நிகர மாதாந்திர சம்பளத்தை உள்ளிடவும்
பிறந்த தேதியை தேர்ந்தெடுக்கவும்
PAN கார்டு விவரங்களை உள்ளிடவும்
பட்டியலிலிருந்து பணி அமர்த்துபவர் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்
தனிபட்ட இமெயில் முகவரியை உள்ளிடவும்
அலுவலக இமெயில் முகவரியை உள்ளிடவும்
தற்போதைய மாதாந்திர செலவினங்களை உள்ளிடவும்
உங்கள் மாதாந்திர சம்பளத்தை உள்ளிடவும்
ஆண்டு வருவாயை உள்ளிடவும் (18-19)

நன்றி

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

நான் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பித்த பிறகு பஜாஜ் ஃபைனான்ஸ் பின்பற்றும் செயல்முறைகள் யாவை?

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை அவசியான ஆதரவளிக்கும் அவணங்களுடன் நாங்கள் பெற்றதும், கீழ்க்காண்பவை நடக்கும்:
முதலில், BFL நீங்கள் வழங்கிய அனைத்து ஆவணங்களையும் பரிசோதிக்கிறது. இவை யாவும் முறையாக இருக்கும் பட்சத்தில், ஒரு குறிப்பிட்ட கடன் தொகை பெற உங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது, இந்த தொகை பின்வரும் காரணிகளை அடிப்படையாக கொண்டது: நீங்கள் கேட்ட தொகை, இணை/அடமான சொத்தின் மதிப்பு, உங்கள் கடன் திருப்பிச் செலுத்தும் திறன் (கடன் தகுதி). நாங்கள் கடனுக்கு ஒப்புதல் வழங்கவில்லை (ஏதேனும் காரணத்திற்காக) என்றால் அதற்கான சரியான காரணத்தை உங்களுக்கு தெரியப்படுத்துவோம்,
அடுத்து, எங்கள் தரப்பு வழக்கறிஞர்கள் மற்றும் சொத்து நிபுணர்கள் சொத்து ஆவணங்களை சரிபார்ப்பார்கள். அவர்கள் சொத்தை மதிப்பிட அதை முழுமையாக தொழில்நுட்ப பரிசோதனை செய்வார்கள்.
இந்த இரண்டு செயல்முறைகளையும் நிறைவு செய்த பின்னர், உங்கள் வீட்டு கடனுக்கான பட்டுவாடா செயல்முறையை பஜாஜ் ஃபைனான்ஸ் தொடங்கும்.

ஒரு வீட்டு கடனுக்கு விண்ணப்பிக்கும் போது ஒரு இணை-விண்ணப்பதாரரை கொண்டிருப்பது கட்டாயமா? ஆம் என்றால், எனது வீட்டு கடனுக்கு யார் இணை-விண்ணப்பதாரராக இருக்க முடியும்?

ஒரு இணை-விண்ணப்பதாரரை கொண்டிருப்பது கட்டாயம் இல்லை. ஒருவேளை சொத்திற்கு,எவரேனும் இணை-உரிமையாளராக இருந்தால், அவர் கட்டாயம் வீட்டு கடனுக்கு இணை-விண்ணப்பதாரராக இருப்பார். ஒருவேளை சொத்திற்கு நீங்கள் மட்டுமே உரிமையாளராக இருந்தால், உங்கள் குடும்பத்தில் உள்ள எந்தவொரு நபரும் இணை-விண்ணப்பதாரராக இருக்க முடியும்.

வீட்டு கடன் அங்கீகரித்தல் மற்றும் பணப் பட்டுவாடா செயல்முறை என்ன?

நீங்கள் சொத்தை தேர்ந்தெடுத்த உடன், அந்த வீடு/ஃப்ளாட்-க்கு எப்படி நிதி பெறுவது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். நீங்கள் இந்த ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்:
-> விண்ணப்ப படிவம்
-> செயல்முறை கட்டணம்
-> தேவையான ஆவணங்கள்
-> தனிபட்ட கலந்துரையாடல்
-> விசாரணை சரிபார்ப்பு
-> கடன் ஒப்புதல்
-> கடனை ஏற்றுக்கொள்ளதுதல்
-> சட்ட /சொத்து மதிப்பீடு
-> கடன் வழங்கீடு
‘கடன் ஒப்புதல்’மற்றும் ‘கடன் பட்டுவாடா’ இவை இரண்டும் முற்றிலும் வெவ்வேறானவை என்பதை நீங்கள் தெரிந்துக்கொள்ள வேணடும். இங்கு நீங்கள் உங்கள் கடன் எவ்வாறு ஒப்புதல் பெற்று பட்டுவாடா செய்யப்படுகிறது என்று சரியான முறையில் விளக்கப்பட்டுள்ளது:

விண்ணப்பப் படிவம்:
-> இது ஒரு முதன்மை ஆவணம் இதை உங்கள் கடன் வழங்குனர் (பஜாஜ் ஃபைனான்ஸ்) உங்கள் கடனை ஒப்புதல் செய்வதற்கான தீர்மானக் காரணியாக கருதுகிறார் . கடன் பெறுபவரின் (உங்களின்) தனிப்பட்ட விவரங்கள், உங்களின் தொடர்பு விவரங்கள், அடமானமாக வழங்கப்பட்ட சொத்தின் விவரங்கள், இந்த சொத்தின் மொத்த மதிப்பு, தேவைப்படும் மொத்த கடன் தொகை, உங்கள் வருமானம் சம்பந்தப்பட்ட விவரங்கள், மற்றும் கோரிக்கை செய்யப்பட்ட கடன் தவணை காலம் போன்றவை அடங்கிய மற்ற ஆவணங்களையும் உங்கள் விண்ணப்பம் கொண்டிருக்கிறது. நீங்கள் மேலும் உங்கள் செயல்முறை கட்டண காசோலையை இங்கு இணைக்க வேண்டும்.

செயல்முறை கட்டணம்:
-> உங்களுக்கு ஒரு கடன் விண்ணப்ப படிவம் வழங்கப்படும், மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம் மற்றும் ஆவணங்களுடன் நீங்கள் செயல்முறை கட்டணத்தைச் செலுத்த கேட்கப்படுவீர்கள்.

ஆவணங்கள்:
-> நீங்கள் சமர்பித்த உங்கள் கடன் விண்ணப்ப ஆவணங்களைப் பொருத்து நீங்கள் ஒரு ஆவணங்களின் தொகுப்பை சமர்பிக்க வேண்டும் (விவரங்களுக்கு ‘தகுதி & ஆவணங்கள்’ பக்கத்தை பார்க்கவும்).
இங்கிருக்கும் அவசியமான ஆவணங்களை பார்வையிடுங்கள், ஆனால் இது உங்கள் வாடிக்கையாளர் சுயவிவரத்திற்கு உட்பட்டது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்:
-> அடையாள சான்று
-> முகவரி சான்று
-> வருமான சான்று
-> கல்வி தகுதிகளுக்கான சான்று
-> வயதிற்கான சான்று
-> வேலை/பணி விவரங்கள்
-> வங்கி அறிக்கைகள்
சமர்பிப்பதற்கு முன்னர் நீங்கள் தீர்மானம் செய்த சொத்தின் விவரங்கள்

நான் எனது புதிய அஞ்சல் முகவரியை எப்படி மேம்படுத்துவது?

கடன் வாங்கிய முகவரியும் உங்களுடைய புதிய அஞ்சல் முகவரியும் ஒன்றாக இருந்தால், நீங்கள் கீழ்க்காணும் எந்த ஒரு வழியிலும் முகவரியை மாற்றலாம்:
எங்களை 020 3957 4151 எண்ணில் அழைப்பதன் மூலம் (அழைப்பு கட்டணங்கள் பொருந்தும்) (2 May 2015 லிருந்து)
உங்கள் பதிவுசெய்த இமெயில் ID-ஐ பயன்படுத்தி எங்களை இதில் தொடர்பு கொள்ளுங்கள்: https://www.bajajfinserv.in/reach-us
உங்களின் புதிய முகவரி கடன் பெறப்பட்டதற்கான முகவரியாக இல்லாவிட்டால், உங்கள் அசல் முகவரி சான்றுடன், சுய-கையொப்பமிட்ட புதிய முகவரிச் சான்றின் நகல் மற்றும் புகைப்பட அடையாளம் போன்றவற்றை எடுத்துக் கொண்டு நீங்கள் உங்கள் அருகில் உள்ள எங்கள் கிளைக்கு நேரடியாக வர வேண்டும்.

எனது வீட்டுக் கடன் கணக்கின் கீழ் நான் எப்படி எனது மொபைல் எண் மற்றும் பதிவுசெய்த இமெயில் முகவரியை மேம்படுத்துவது?

கீழ்காணும் வழிகளில் ஏதேனும் ஒன்றில் நீங்கள் உங்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை புதுப்பிக்கலாம்:
• எங்களை 020 3957 4151 எண்ணில் அழைப்பதன் மூலம் (அழைப்பு கட்டணங்கள் பொருந்தும்) (2 May 2015 லிருந்து)
• உங்கள் பதிவுசெய்த இமெயில் ID-ஐ பயன்படுத்தி எங்களை இதில் தொடர்பு கொள்ளுங்கள்: https://www.bajajfinserv.in/reach-us

வாடிக்கையாளருக்கு தற்காலிக வட்டி சான்றிதழ் வழங்கப்படுமா?

ஒரு முழு நிதி ஆண்டிற்கு அதாவது ஏப்ரல் முதல் மார்ச் வரை அட்டவணையிடப்பட்ட EMI-க்கான அசல் மற்றும் வட்டி தொகை ப்ரேக்அப்-ஐ தற்காலிக வட்டி சான்றிதழ் அளிக்கிறது. இந்த கணக்கீடு வருமான வரிச் சட்டம் பிரிவு 80C மற்றும் பிரிவு 24 -யின் கீழ் பொருத்தமான சந்தர்பங்களில் வருமான வரி விலக்குகளை கோரல் செய்ய உதவுகிறது. இந்த கணக்கீடு நடப்பு அசல் தொகை இருப்புகள், நடப்பு ROI மற்றும் நடப்பு EMI மற்றும் இதனுடன் நடப்பு நிதி ஆண்டில் பதிவு செய்யப்பட்ட மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டது. நிதி ஆண்டு முடிவிற்கு முன்னால் ஏற்படும் எந்தவொரு மாற்றமும் கணக்கீடு மற்றும் மதிப்புகளில் மாற்றம் செய்யும். இதை நீங்கள் பின்வரும் வழிகளில் பெறக்கூடும்-
• எங்கள் வாடிக்கையாளர் போர்ட்டல் – “எக்ஸ்பீரியா”-வில் உள்நுழைவதன் மூலம்
• எங்களை இதில் தொடர்பு கொள்ளுங்கள்: https://www.bajajfinserv.in/reach-us

விகிதங்களில் மாற்றம் ஏற்படும்போது வருமான வரி சான்றிதழில் மாற்றம் ஏற்படுமா?

வட்டி விகித மாற்றம் போன்ற சில குறிப்பிட்ட சூழ்நிலைகளின் கீழ் தற்காலிக வருமான வரிச் சான்றிதழ் மாறுபடக்கூடும். இந்த திட்டம் “as is” அடிப்படையில் கணக்கிடப்படுகிறது மற்றும் இது எதிர்காலத்தில் வட்டியின் மீதோ, EMI அல்லது அசல் தொகையின் மீதோ ஏற்படும் எந்தவொரு மாற்றத்தையும் கருத்தில் கொள்ளாது.

எனது சமமான மாதத் தவணை (EMI) எப்படி கணக்கிடப்படும்?

உங்கள் EMI இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கும்-நீங்கள் கடனாக வாங்கிய அசல் தொகையை திருப்பிச் செலுத்துதல், அதனுடன் அந்த தொகையின் 'மீது' செலுத்தப்பட்ட வட்டி. இதில் அடங்கியுள்ள மூன்று காரணிகள்-நீங்கள் கடன் வாங்கிய தொகை, அதற்கான வட்டி விகிதம், மற்றும் கடன் தவணைக் காலம். நீங்கள் இரண்டு வழிகளில் உங்கள் EMI தொகையை குறைக்கலாம்: ஒன்று, வட்டி விகிதங்களில் வீழ்ச்சி ஏற்படும் போது இது தானகவே குறையும், அல்லது தேவைக்கும் மேலான தொகையை நீங்கள் திருப்பிச் செலுத்தும் போது (இது 'பகுதியளவு முன்கூட்டியே செலுத்துதல்' என்றழைக்கப்படுகிறது).

எனது EMI பணம் செலுத்துவதற்கேற்ற வெவ்வேறு விதமான விருப்பங்கள் யாவை?

இது குறித்து தெரிந்து கொள்ள இரண்டு வழிகள் உள்ளன:
• ஒரு எலக்ட்ரானிக் கிளியரிங் சர்வீஸ் (ECS) என்பது ஒரு சுலபமான மற்றும் வசதியான தேர்வாகும், இது வங்கி கணக்கு கொண்டவர்களுக்காகவே பிரத்யேகமாக கிடைக்கக்கூடியது. ஒவ்வொரு மாதமும், ஒரு குறிப்பிட்ட தேதியில் உங்கள் வங்கி கணக்கிலிருந்து உங்கள் EMI-கள் தானகவே செலுத்தப்படுகின்றன.
• பஜாஜ் ஃபைனான்ஸ் உடன், எந்த வங்கி கணக்கிலிருந்தும் பிந்தைய-தேதியிட்ட காசோலைகளை (PDCகளை) முன்கூட்டியே வழங்குவதற்கான விருப்பத்தை நீங்கள் தேர்வு செய்யலாம். இது ECS வசதி இல்லா வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.
• ECS முறை அதிகமாக பரிந்துரைக்கப்படுகிறது, ஏனெனில் இது வேகமானது மற்றும் இதில் பிழைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. மேலும் EMI மாறும் போது, அல்லது அது செலுத்தப்படாத பட்சத்தில் அவற்றை PDC-களாக மாற்றுவதில் எந்த தொந்தரவும் இல்லை.

நான் பஜாஜ் ஃபைனான்ஸ்-யிடமிருந்து வீட்டுக் கடனை ஃப்ளோட்டிங் வட்டி விகிதத்தில் பெற்றுள்ளேன். இந்த வட்டி விகிதத்தின் அதிகரிப்பு எனக்கு எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்?

வட்டி விகிதங்கள் எதிர்பாராமல் அதிகரிக்கும் போது, பஜாஜ் ஃபைனான்ஸ் முதற்கட்டமாக அனுமதிக்கப்படும் வரம்புகளுக்குள் - கடன் தவணைக்காலத்தை அதிகரிப்பதன் மூலம் உங்கள் கடனை எளிதாக்குகின்றது. இது பிரச்சனையை தீர்க்காவிட்டால்—நடப்பு EMI ன் கீழ் வட்டிகளை அடக்குகிறோம்—எனவே நாங்கள் EMI ஐ அதிகரிக்க வேண்டும். மற்றொரு தீர்வு—வட்டி தொகையை குறைக்க அருகிலுள்ள பஜாஜ் ஃபைனான்ஸ் கிளையில் நீங்கள் பகுதியளவு பணத்தை முன்கூட்டியே செலுத்தலாம். மாறாக, நீங்கள் எக்ஸ்பீரியா போர்டல் வழியாக பகுதியளவு பணத்தை முன்கூட்டியே ஆன்லைனில் செலுத்தலாம்.

EMI பணம்செலுத்தல் தொகையை எப்படி மாற்றுவது?

பின் தேதியிட்ட காசோலைகளை ஒப்படைப்பதன் மூலம் மின்னணு முறைகளை (ECS) பயன்படுத்தியோ அல்லது நேரடி பண செலுத்துதல்களைப் பயன்படுத்தியோ நீங்கள் EMI-களை செலுத்துவதற்குத் தேர்ந்தெடுக்கலாம்.
• ECS விருப்பத்தை தேர்வு செய்தால், அடுத்த மாதத்திலிருந்து திருத்தியமைக்கப்பட்ட தொகையை நீங்கள் செலுத்த வேண்டும்; நடப்பு மாதத்தின் போது, நீங்கள் ஒரு தொகையை தனியாக செலுத்துவீர்கள்.
• நீங்கள் PDC-களை தேர்வு செய்தால், உங்கள் பழைய காசோலைகளை நீங்கள் முற்றிலுமாக மாற்ற வேண்டும்.
உங்கள் பணம் செலுத்தும் முறை எந்த வகையானதாக இருந்தாலும், தவணை தேதிக்கு முன்னர் அல்லது தவணை தேதியில் EMI செலுத்தப்பட வேண்டும்.

கடன் காலத்தின் போது EMIஐ அதிகரிக்க முடியுமா?

கடன் தவணை காலத்தில் நீங்கள் விரும்பும் போது EMI தொகையை அதிகரிப்பதற்கான விருப்பத்தை நீங்கள் தேர்வு செய்ய முடியும். இதைப் பயன்படுத்தி, நீங்கள் கடன் தவணையை குறைக்க முடியும் மற்றும் கடன் மீது ஒரு மொத்த தொகையை நீங்கள் சேமிக்க முடியும். இந்த விருப்பத்தை பெற:
• எக்ஸ்பீரியா” போர்டலில் உள்நுழையுங்கள் அல்லது
• எங்களை இதில் தொடர்பு கொள்ளுங்கள்: https://www.bajajfinserv.in/reach-us

எதிர்மறை நாணயமாக்கல் என்றால் என்ன?

வட்டி விகிதங்கள் உயரும் போது, EMI க்கான வட்டி விகிதமும் உயருகிறது. EMI மாறா விகிதங்களில் வைக்கப்பட்டது ஆனால் இது ஒரு குறைவான அசல் தொகையை கொடுக்கும். விகிதங்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருந்தால், வட்டி EMI தொகையை விட அதிகரிக்கக்கூடிய சூழ்நிலை உருவாகும். இத்தகைய சூழ்நிலையில், அசல் தொகை (EMI-வட்டி) ஒரு எதிர் மதிப்பை வழங்குகிறது. இதன் விளைவாக, நிலுவையிலுள்ள இருப்புத்தொகை, அசல் தொகையுடன் தொடக்க அசலிலிருந்து குறைவதற்குப் பதிலாக, எதிர் மதிப்பு கொண்ட அசல் தொகையுடன் அதிகரிக்கிறது. இது பொதுவாக எதிர் கடன்தீர்ப்பு அட்டவணை என்று குறிப்பிடப்படுகிறது.
வழக்கமான பணம் செலுத்தல்கள் வட்டி தொகைக்கு போதுமானதாக இல்லாத நிலையில், கடன்தீர்ப்பு அட்டவணை மதிப்பு எதிர்மறையாக உள்ள கடன் திருப்பிச் செலுத்தப்படுவதில்லை. செலுத்தப்படாத வட்டி தொகை அசல் தொகையுடன் சேர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. வட்டி விகிதங்கள் குறையத் தொடங்கினால் மட்டுமே இந்நிலை மாறும். இத்தகைய சூழ்நிலையில், வாடிக்கையாளர் கடன் தொகையை பகுதியளவு முன்கூட்டியே திருப்பிச் செலுத்துகிறார் அல்லது கடனின் EMI ஐ அதிகரிக்கிறார்.

ஏதேனும் விலை மாற்றம் எப்படி வீட்டுக் கடனின் கடன்தீர்ப்பு நிதியின் அட்டவணையை பாதிக்கும்?

மாறக்கூடிய வட்டி விகிதம் உள்ள ஒரு வீட்டுக் கடனைப் பொருத்தவரை, வட்டியை கணக்கிடுவதற்குப் பயன்படுத்தப்படும் வட்டி விகிதம் மாறக்கூடியது. விகிதங்கள் மாறும் போது, பின்வருபவைகளில் ஏதேனும் ஒரு மாற்றம் கடன் தொகையில் செய்யப்படக்கூடும்:
•கடன் தவணை நீட்டிக்கப்படுகிறது (விகிதங்கள் அதிகரிக்கும் போது) அல்லது குறைக்கப்படுகிறது (விகிதங்கள் குறையும் போது).
•EMI தொகை மீட்டமைக்கப்படுகிறது (விகிதங்கள் உயர்ந்தால் அதிகரிக்கிறது & விகிதங்கள் குறைந்தால் குறைகிறது).
•வாடிக்கையாளர் பிந்தைய-தேதிக்கான காசோலைகளை வழங்கியிருக்க கூடும் மற்றும் ஒவ்வொரு விகித மாற்றத்தின் போதும் அதை மாற்றுவது கடினம் என்ற நிலையில், ஒரு நடைமுறையாக, கடன் தவணை நீட்டிக்கப்பட்டது. இருப்பினும், கட்டுமான பண்புகளின் கீழ், முன்-EMI தொகை இயல்பாகவே அதிகரிக்கிறது.

எதிர்மறை கடன்தீர்ப்பு அட்டவணை கொண்ட வீட்டு கடனுக்கு கிடைக்கக்கூடிய விருப்பத் தேர்வுகள் யாவை?

ஒரு நடைமுறையாக, பஜாஜ் ஃபின்சர்வ் எதிர்மறை மதிப்புள்ள கடன்களை அனுமதிப்பதில்லை அதாவது வீட்டு கடனுக்கான வட்டிக்கு EMI போதுமானதாக இல்லாத நிலையில். இருப்பினும், வட்டி தொகையின் காரணமாக வீட்டு கடனுக்கான EMI பற்றாக்குறை ஏற்படும் போது, சுய-தொழில் வாடிக்கையாளருக்கு உடனடியாக தெரிவிக்கப்படும் மேலும் பின்வரும் தீர்வு விருப்பங்களில் ஒன்று வழங்கப்படும்:
•கடனின் மீதமுள்ள தவணை காலத்திற்கு ஏற்ப EMI ஐ பொருத்தமாக மாற்றுங்கள்.
•அசல் தொகையின் ஒட்டு மொத்த பகுதி முன்பணமளிப்பை கருதுங்கள்
•இவை இரண்டின் கூட்டமைப்பு வாடிக்கையாளரின் வசதியைப் பொருத்தது. வசதிக்கேற்ப, வாடிக்கையாளர் மேலே உள்ள விருப்பங்களில் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம். ஒரு வீட்டு கடனின் மீதமிருக்கும் தவணைக் காலத்தை சமப்படுத்தும் பொருட்டு, EMI ஐ மாற்ற இயல்பான விருப்பத் தேர்வு உள்ளது.

எதிர்மறையான கடன்தீர்ப்புக்கு முன்னதாகவே ஏதேனும் எச்சரிக்கை வழங்கப்படுமா?

ஒருவேளை வட்டி உட்கூறு எந்த ஒரு நேரத்திலும் EMI தொகையின் 85%-ஐ விஞ்சினால், அது வாடிக்கையாளருக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வட்டி விகிதங்களில் ஏற்படும் மாற்றம் எந்தவொரு சிரமத்தையும் ஏற்படுத்தாது என்பதை இது உறுதி செய்யும்.

எதன் அடிப்படையில் இன்டர்னல் FRR மாறுகிறது?

இன்டர்னல் FRR என்பது ஒரு தரமான குறிப்பு விகிதம் ஆகும். இது சந்தை நிலைமைகள் மற்றும் நிறுவனத்திற்கான நிதி செலவினம் ஆகியவற்றின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த மாற்றங்கள் பல்வேறு வெளிப்புற காரணிகள் மற்றும் பொருளாதார நிலைமைகளைச் சார்ந்துள்ளது.

வட்டி விகிதங்கள் அடிக்கடி எந்த அளவில் மாறுபடும்?

எங்களது ரீ-பிரைசிங் கொள்கையின்படி, வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் ஒவ்வொரு 2 மாதங்களிலும் மறு ஆய்வு செய்யப்படும் மற்றும் வட்டி விகிதத்தை மாற்றலாமா அல்லது மாற்றாமல் வைத்திருக்கலாமா என்று தீர்மானம் எடுக்கப்படும்.

பஜாஜ் முன்னெச்சிரிக்கை நடவடிக்கையாக விலைக் குறைப்புச் செய்கிறதா?

ஒரு நல்லெண்ண அடிப்படையில் மற்றும் தற்போதிருக்கும் எங்கள் வாடிக்கையாளருடன் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட, பஜாஜ் ஃபின்சர்வ், எங்கள் ப்ரோ-ஆக்டிவ் டவுன்வார்ட் ரீ-பிரைசிங் ஸ்ட்ரேடெஜி மூலம், தற்போதிருக்கும் எங்கள் வாடிக்கையாளர்களில் யாருக்கும், கடைசி மாதங்கள் சராசரி சோர்சிங் ரேட்-ற்கு மேல் BPS அதிகப்படியாக இல்லை என்பதை உறுதி செய்கிறது. ஒரு வாடிக்கையாளர் கடைசி மாதங்கள் சராசரி சோர்சிங் ரேட்-லிருந்து > BPS க்கு அதிகமாக இருந்தால், அத்தகைய வாடிக்கையாளர்களுக்கு , கடைசி 3 மாதங்கள் சராசரி சோர்சிங் ரேட்-ற்கு மேல் அதிகபட்சமாக BPS க்கு அவர்களை கொண்டு வர, நாங்கள் வட்டி விகிதத்தின் ரீப்ரைசிங் ஐ செயல்படுத்துகிறோம். இது ஒரு இரு-வருட செயல்முறை ஆகும். நாட்டில் உள்ள எந்தவொரு NBFC க்கும் இது முதன்மையாக உள்ளது.

வீட்டு கடன் பகுதி பணப் பட்டுவாடா என்றால் என்ன?

கட்டுமானத்தின் கீழ் ஒப்புதல் பெற்ற வீட்டு கடனை நாங்கள் உங்களுக்கு தவணைகளில் பட்டுவாடா செய்கிறோம். தவணைகளில் வழங்கப்படும் பணப் பட்டுவாடா பகுதி பணப் பட்டுவாடா என்றழைக்கப்படுகிறது. பகுதி பணப் பட்டுவாடா பெற பஜாஜ் ஃபின்சர்விற்கு நீங்கள் ஆன்லைன் கோரிக்கை விடுக்க வேண்டும்.

வீட்டுக் கடன்களின் பகுதியளவு பணப்பட்டுவாடா செய்வதற்காக பஜாஜ் ஃபின்சர்வ் எவ்வளவு நேரங்கள் எடுத்துக் கொள்ளும்?

பஜாஜ் ஃபைனான்ஸ் எடுத்துக்கொள்ளும் நேரம் உங்கள் சொத்து சார்ந்திருக்கும் வகையை பொருத்தது. நாங்கள் ஒவ்வொரு சொத்தையும் APF (ஒப்புதல் பெற்ற திட்ட வசதி) மற்றும் APF-அல்லாதவை என வகைப்படுத்துகிறோம். பகுதி பட்டுவாடா செய்ய
எடுத்துக்கொள்ளப்படும் காலம்:
4 வேலை நாட்கள் - சொத்து ஒப்புதலளிக்கப்பட்ட திட்டத்தின் பகுதியாக இருந்தால்
7 வேலை நாட்கள் - சொத்து ஒப்புதலளிக்கப்பட்ட திட்டத்தின் பகுதியாக இல்லை என்றால்.

எனது அடுத்த பகுதியளவு பணப்பட்டுவாடாவை நான் எப்படி எடுப்பது?

கீழ்காணும் ஆவணங்களுடன், பஜாஜ் ஃபின்சர்வுக்கு பகுதி விநியோகம் செய்வதற்கு ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
கட்டுமானரிடமிருந்து பெறப்பட்ட ஸ்கேன் செய்யப்பட்ட கோரிக்கை கடிதத்தின் நகல்.
மேம்பாட்டாளருக்கு கடைசியாக செலுத்திய பேமண்ட் இரசீது.

நான் எனது கடனை முன்கூட்டியே அடைத்தால் அது CIBIL ஐ பாதிக்குமா?

இல்லை, உங்கள் கடனை முன்கூட்டியே அடைத்தால் அது CIBIL ஸ்கோரின் மீது எந்த விளைவையும் ஏற்படுத்தாது. உங்கள் கடன் முன்கூட்டியே அடைக்கப்பட்டால் அது ‘கடன் முடிவுற்றது’ என்று CIBIL க்கு அறிவிக்கப்படும் மற்றும் இது உங்கள் CIBIL ஸ்கோரின் மீது எந்த விளைவையும் ஏற்படுத்தாது.

ப்ரீ-EMI வட்டி என்றால் என்ன?

ப்ரீ-EMI வட்டி என்பது பஜாஜ் ஃபின்சர்விலிருந்து நீங்கள் கடனாக வாங்கும் தொகையின் மீது நீங்கள் செலுத்த வேண்டிய வட்டியாகும். ஒவ்வொரு பணப் பட்டுவாடா தேதியிலிருந்து தொடங்கி, EMI தொடங்கும் வரை, இதை நீங்கள் ஒவ்வொரு மாதமும் செலுத்த முடியும்."

30 நாட்களுக்குள் உங்கள் புகார்/சேவை கோரிக்கை தீர்க்கப்படவில்லை எனில் என்ன செய்ய வேண்டும்?

அத்தகைய விஷயங்களுக்கு கீழே குறிப்பிட்டுள்ள நபர்களை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்:

அடமான அசல் கட்டணம் என்றால் என்ன?

அடமான அசல் கட்டணம் என்பது ஒரு வீட்டு கடன் விண்ணப்பத்தை செயல்முறைப்படுத்த கடன் வழங்குனரால் விதிக்கப்படும் கட்டணம் ஆகும். இது கடனளிப்பவர் சரியான நேரத்தில் உங்கள் வீட்டு கடன் செயல்முறையை சீராக செய்கிறார் என்பதை இது உறுதி செய்கிறது. கடன் வழங்குனருக்கு அடமான அசல் கட்டணத்தை செலுத்தும் போது, நீங்கள் பின்வரும் நன்மைகளை பெறுவீர்கள்:
• வீட்டு கடனின் ஒப்புதல் மீது ஒப்புதல் கடிதத்தின் ஷாஃப்ட் காபி நகல் பகிரப்பட வேண்டும் (60 நாட்களுக்கு செல்லுபடியாகும்)
• பணப் பட்டுவாடா வரை, கடன் விண்ணப்ப செயல்முறைக்கு ஒரு நம்பகமான தொடர்பு மேலாளர் உங்களுக்கு உதவுவார்

மக்களும் இதையே கருதுகின்றனர்

வீட்டுக் கடன் EMI கால்குலேட்டர்

கடன் தொகையில் விதிக்கப்படும் உங்களுடைய மாதாந்திர EMI, தவணைகள் மற்றும் வட்டி விகிதம் ஆகியவற்றைக் கணக்கிடுங்கள்

இப்போது கணக்கிடு

வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்

எந்தவித கூடுதல் ஆவணமும் இல்லாமல் டாப் அப் கடனைப் பெறுங்கள்

விண்ணப்பி

வீட்டுக் கடன் வட்டி விகிதம்

தற்போதைய வீட்டு கடனை சரிபார்க்கவும்
வட்டி விகிதங்கள்

மேலும் ஆராயவும்

வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர்

உங்களுடைய வீட்டுக் கடன் தகுதியைத் தீர்மானித்துவிட்டு, அதற்கேற்றார்போன்று விண்ணப்பத் தொகையைத் திட்டமிடவும்

இப்போது கணக்கிடு