வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர்

விரைவான விண்ணப்பம்

விண்ணப்பிக்க வெறும் 60 வினாடிகள்

உங்கள் முதல் பெயர் மற்றும் கடைசி பெயரை உள்ளிடவும்
உங்கள் 10-இலக்க மொபைல் எண்ணை உள்ளிடவும்
உங்கள் அஞ்சல் குறியீட்டை உள்ளிடவும்

இந்த விண்ணப்பம் மற்றும் பிற தயாரிப்புகள்/சேவைகள் தொடர்பாக என்னை அழைக்க /SMS மூலம் தொடர்பு கொள்ள பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதியை நான் அங்கீகரிக்கிறேன். இந்த ஒப்புதல் DNC/NDNC-க்கான எனது பதிவை புறக்கணிக்கிறது.வி&நி

உங்கள் மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பப்பட்டது

ஒரு-முறை கடவுச்சொல்லை உள்ளிடவும்*

0 வினாடிகள்
நிகர மாதாந்திர சம்பளத்தை உள்ளிடவும்
பிறந்த தேதியை தேர்ந்தெடுக்கவும்
PAN கார்டு விவரங்களை உள்ளிடவும்
பட்டியலிலிருந்து பணி அமர்த்துபவர் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்
தனிபட்ட இமெயில் முகவரியை உள்ளிடவும்
அலுவலக இமெயில் முகவரியை உள்ளிடவும்
தற்போதைய மாதாந்திர செலவினங்களை உள்ளிடவும்
உங்கள் மாதாந்திர சம்பளத்தை உள்ளிடவும்
ஆண்டு வருவாயை உள்ளிடவும் (18-19)

நன்றி

நிகர மாதாந்திர ஊதியம்

ரூ

தவணைக்காலம்

ஆண்டு

மாதாந்திர பிற வருமானம்

ரூ

தற்போதைய EMI-கள்/பொறுப்பு

ரூ

நீங்கள் வீட்டுக் கடன் ரூ. 0 வரை பஜாஜ் ஃபின்சர்வ் மூலம் குறிப்பிட்ட காலத்திற்கு பெறலாம். விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்.

 

வீட்டுக் கடன் தகுதி பற்றி

சொத்து வாங்கும் போது இந்தியாவில் வீட்டுக் கடன்கள் எளிதில் அணுகக்கூடிய நிதியுதவி விருப்பங்கள். கடன் பெறுபவர்கள் சொத்தின் தற்போதைய சந்தை மதிப்பில் 80% வரை நிதியைப் பெறலாம்.

பஜாஜ் ஃபின்சர்வ் மூலம், வீட்டுக் கடன் வடிவத்தில் போதுமான நிதி உதவியை ரூ. 3.5 கோடி வரை பெறுங்கள் மற்றும் உங்கள் குடியிருப்பு சொத்து வாங்குவதற்கு அல்லது கட்டுமானத்திற்கு முதலீடு செய்யுங்கள். உங்கள் கனவு வீட்டை எளிதில் பெறுவதற்கு உங்களுக்கு உதவ பல நன்மைகளை இவை கொண்டுள்ளது.

வீட்டு கடனுக்கான தகுதி என்ன?

ஒவ்வொரு கடன் பெறுபவரும் வீட்டுக் கடனுக்குத் தகுதி பெறுவதற்குத் தேவையான தகுதி வரம்புகளை பூர்த்தி செய்ய வேண்டும். தவறுதல் இல்லாமல் அவர் கடன் தொகையை சிரமமின்றி திருப்பிச் செலுத்த முடியும் என்பதை இது உறுதி செய்கிறது.

தகுதி வரம்புகளை பூர்த்தி செய்யத் தவறினால் கடன் விண்ணப்பத்தை நிராகரிக்க வழிவகுக்கும், இது தனிநபரின் கிரெடிட் சுயவிவரத்தில் எதிர்மறையான அடையாளத்தை ஏற்படுத்தும். எனவே, தேவையான தகுதி வரம்புகளை பூர்த்தி செய்வதன் மூலம் செயலாக்கத்தை விரைவாகவும் சுமுகமாகவும் முடிக்க உறுதிசெய்யும்.

பஜாஜ் ஃபின்சர்வ் எளிதில் அடையக்கூடிய தகுதி வரம்புகளைக் கொண்டுவருகிறது, இது வீட்டுக் கடனை மேலும் அணுகக்கூடியதாக மாற்றுகிறது. விவரங்களுடன் ஒரு விளக்கப்படம் கீழே உள்ளது.

வீட்டுக் கடன் தகுதி வரம்பு
ஊதியம் பெறும் தனிநபர்களின் வயது வரம்பு 23 இருந்து 62 வரை
சுயதொழில் செய்யும் தனிநபர்களின் வயது வரம்பு 25 இருந்து 70 வரை
வீட்டுக் கடனுக்குத் தேவையான CIBIL ஸ்கோர் குறைந்தபட்சம் 750
ஊதியம் பெறும் விண்ணப்பதாரர்களின் வேலை அனுபவம் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள்
தொழில் தொடர்ச்சி குறைந்தபட்சம் 5 ஆண்டுகள்
குறைந்தபட்ச சம்பளம் ரூ. 25,000
குடியுரிமை நாட்டிற்குள் வசிக்கும் இந்தியன்

ஊதியம் பெறும் விண்ணப்பதாரர்கள் ரூ. 3.5 கோடி வரையும், சுயதொழில் செய்யும் தனிநபர்கள் ரூ. 5 கோடி வரையும் வீட்டுக் கடனை பெறலாம். விண்ணப்பிப்பதற்கு முன் முழுமையான வீட்டுக் கடன் தகுதிவரம்பு மற்றும் வீட்டுக் கடனுக்குத் தேவையான ஆவணங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளுங்கள்.

சம்பளத்தின் அடிப்படையில் வீட்டுக் கடன் தகுதி

நீங்கள் எவ்வளவு கடன் பெற முடியும் என்பதை தீர்மானிக்கும் தகுதிகளில் ஒன்று உங்கள் நிகர சம்பளம் (கையில் பெறும் சம்பளம்). உங்கள் திருப்பிச் செலுத்தும் திறன்களை முன்னறிவிக்க உதவுவதால் உங்கள் சம்பளம் முக்கியமானது.

உங்கள் வருமானம் நீங்கள் தகுதியுள்ள கடன் தொகையை தீர்மானிக்கும். கடனளிப்பவர்கள் நீங்கள் கையில் பெறும் சம்பளம், கிராச்சுட்டி(பணிக்கொடை), PF, ESI போன்ற சில பொதுவான கழிவுகளை கழித்தலை கருத்தில் கொள்வார்கள். நீங்கள் கையில் பெறும் சம்பளம் நீங்கள் வாங்கக்கூடிய EMI தொகையை தீர்மானிக்கும், இதனால் நீங்கள் கடன் வாங்கக்கூடிய மொத்த கடன் தொகையை தெரிந்துகொள்ளலாம்.

உதாரணமாக, நீங்கள் கையில் பெறக்கூடிய சம்பளம் ரூ. 25,000 ஆக இருந்தால், ரூ. 40 லட்சம் மதிப்புள்ள வீட்டை வாங்க நீங்கள் ரூ. 18.64 லட்சம் வரை கடன் பெற முடியும் (உங்களிடம் ஏற்கனவே நிதி கடமைகள் இல்லை என்றால் வழங்கப்படும்) ஆனால் நீங்கள் கையில் பெறக்கூடிய சம்பளம் ரூ. 50,000 ஆக இருந்தால், அதே சொத்திற்கு நீங்கள் ரூ. 37.28 லட்சம் கடன் தொகையை பெற முடியும். அதன் பிறகு, நீங்கள் கையில் பெறக்கூடிய சம்பளம் ரூ. 75,000 இருந்தால் நீங்கள் உங்கள் கடன் தகுதியை ரூ. 55.93 லட்சம் வரை அதிகரிக்க முடியும்.

வயது
நிகர மாதாந்திர வருமானம் (ரூ.)
  25,000 50,000 75,000
25 வயது 18.64 லட்சம் 37.28 லட்சம் 55.93 லட்சம்
30 வயது 18.64 லட்சம் 37.28 லட்சம் 55.93 லட்சம்
35 வயது 18.64 லட்சம் 37.28 லட்சம் 55.93 லட்சம்
40 வயது 18.64 லட்சம் 37.28 லட்சம் 55.93 லட்சம்
45 வயது 18.64 லட்சம் 37.28 லட்சம் 55.93 லட்சம்
50 வயது 18.64 லட்சம் 37.28 லட்சம் 55.93 லட்சம்

வயதின் அடிப்படையில் வீட்டுக் கடன் தகுதி

கடன் தவணைக்காலத்தை பொறுத்தவரை வயது என்பது மற்றொரு தீர்மானிக்கும் காரணியாகும். நீங்கள் பெறக்கூடிய அதிகபட்ச தவணைக்காலம் 20 ஆண்டுகள்.

நீங்கள் குறைந்த வயதுடையவராக இருந்தால் நீண்ட திருப்பிச் செலுத்தும் தவணைக்காலத்தை பெற முடியும். உங்களுக்கு அதிக வருமானம் இருந்தால் அதிக மதிப்புள்ள வீட்டுக் கடனையும் பெறலாம்.

ஊதியம் பெறும் விண்ணப்பதாரர்கள் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்க 23 மற்றும் 62 வயதுக்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். சுயதொழில் செய்யும் விண்ணப்பதாரர்கள் கடனைப் பெறுவதற்கு 25 மற்றும் 70 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பின்வரும் அட்டவணையில் அதிகபட்ச தவணைக்காலத்தை தங்கள் வயதை அடிப்படையாகக் கொண்டு தகுதி பெறுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது:

வயது
ஊதியம் பெறும் விண்ணப்பதாரர்களுக்கான அதிகபட்ச தவணைக்காலம்
சுயதொழில் செய்யும் விண்ணப்பதாரர்களுக்கான அதிகபட்ச தவணைக்காலம்
25 வயது 30 வயது 30 வயது
30 வயது 30 வயது 30 வயது
35 வயது 30 வயது 30 வயது
40 வயது 30 வயது 30 வயது
45 வயது 25 வயது 25 வயது
45 வயது 20 வயது 20 வயது

வீட்டுக் கடனுக்கான தகுதிவரம்பு கால்குலேட்டர் என்றால் என்ன?

ஆன்லைன் கால்குலேட்டரைப் பயன்படுத்துவது வீட்டுக் கடன் தகுதியை சரிபார்க்க எளிதான வழி. பஜாஜ் ஃபின்சர்வ் வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர் நீங்கள் கடன் பெற தகுதியுள்ள தொகையை உடனடியாக கணக்கிடுகிறது. இது சிறந்த நிதி திட்டமிடவும் மற்றும் விண்ணப்ப நிராகரிப்பு வாய்ப்புகளை குறைக்கவும் உதவுகிறது. இந்த டூல் கைமுறை கணக்கீட்டின் சிக்கலை முற்றிலுமாக நீக்குகிறது.

பஜாஜ் ஃபின்சர்வ் மூலம், இந்த ஆன்லைன் கால்குலேட்டரை நீங்கள் எங்கிருந்தும் தேவைப்படும்போதெல்லாம் அணுகி இலவசமாகப் பயன்படுத்தவும்.

வீட்டு கடன் தகுதி எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

தகுதி கால்குலேட்டர் நீங்கள் தகுதி பெறும் கடன் தொகையை மதிப்பிட ஒரு கணித சூத்திரத்தின் அடிப்படையில் இயங்குகிறது. இது கடன் தவணைக்காலம், நிகர மாத சம்பளம், தற்போதிருக்கும் செலவுகள் அல்லது EMI-கள், பிற மாத வருமானங்கள் போன்றவற்றை கவனத்தில் கொள்கிறது.

பஜாஜ் ஃபின்சர்வின் தகுதி கால்குலேட்டரை எவ்வாறு பயன்படுத்துவது?

பஜாஜ் ஃபின்சர்வ் மூலம் வழங்கப்பட்ட தகுதிவரம்பு கால்குலேட்டரை பயன்படுத்துவது மிகவும் எளிதானது. உங்கள் பிறந்த தேதி மற்றும் வசிக்கும் நகரம் உட்பட தேவையான அனைத்து விவரங்களையும் உள்ளிடவும்.

படி 1: DD/MM/YYYY ஃபார்மட்டில் பிறந்த தேதியை உள்ளிடவும்.
படி 2: நீங்கள் வசிக்கும் இடத்தை வழங்கவும்.
படி 3: தொகையை நேரடியாக உள்ளிட்டு அல்லது வழங்கப்பட்ட பட்டியை சரிசெய்வதன் மூலம் நிகர மாத சம்பளத்தை அமைக்கவும்.
படி 4: உங்கள் நிதி திட்டங்கள் மற்றும் திருப்பிச் செலுத்தும் திறனின் அடிப்படையில் 240 மாதங்கள் வரை உங்களுக்கு விருப்பமான கடன் காலத்தை அமைக்கவும்.
படி 5: மாதத்திற்கு பிற வருமானங்கள் ஏதேனும் இருந்தால் அந்த விவரங்களை உள்ளிடவும். உங்களிடம் வேறு வருமான மூலதனம் இல்லையென்றால் இந்த படியை தவிர்க்கவும்.
படி 6: உங்களது தற்போதைய கடன்களுக்கு நீங்கள் மொத்தம் எவ்வளவு EMI-கள் செலுத்துகிறீர்கள் என்பதை வழங்கவும். எதுவும் இல்லையென்றால் தவிர்க்கவும்.

சரியான முடிவுகளைக் கணக்கிடுவதற்கு துல்லியமான தகவல்களை வழங்குவதை உறுதிசெய்க. அனைத்து உள்ளீடுகளையும் சரிபார்த்த பிறகு ‘உங்கள் தகுதியை சரிபார்க்கவும்' என்பதன் மீது கிளிக் செய்யவும்’. பஜாஜ் ஃபின்சர்வில் இருந்து உடனடியாக நீங்கள் பெறக்கூடிய அதிகபட்ச கடன் தொகையை கால்குலேட்டர் காண்பிக்கும்.

பிற செலுத்தத்தக்க தவணைகளுக்கான அட்ஜஸ்டிங் பாரை சரிசெய்து, நீங்கள் பெறக்கூடிய அளவுகளை சரிபார்க்கவும். அதிகபட்ச தகுதித் தொகையை நீங்கள் பெற்றதும், உங்கள் தேவைகளுக்கு ஏற்ப வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கவும்.

வீட்டுக் கடன் தகுதியை என்ன காரணிகள் தீர்மானிக்கின்றன?

வீட்டுக் கடனுக்காக கடன் வாங்குபவரின் தகுதியை பல காரணிகள் தீர்மானிக்கின்றன. ஒரு சில அத்தியாவசியமானவை பின்வருமாறு:

1. வயது வரம்பு: 25 முதல் 70 வயது வரம்பிற்குள் வரும் சுயதொழில் விண்ணப்பதாரர்கள் கடனுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுகின்றனர். ஊதியம் பெறும் நபர்கள் தகுதி பெற 23 முதல் 62 வயது வரை இருக்க வேண்டும்.
2. CIBIL ஸ்கோர்:CIBIL என்பது 3-இலக்க மதிப்பு ஆகும். இது ஒரு தனிநபரின் கடன் தகுதியைக் குறிக்கிறது. கடனுக்கான தகுதிக்குத் தேவையான குறைந்தபட்ச மதிப்பீடாக 300 முதல் 900, 750 வரையிலான அளவு கருதப்படுகிறது. கவர்ச்சிகரமான அம்சங்கள் மற்றும் சிறந்த வட்டி விகிதங்களைப் பெறுவதற்கு வீட்டுக் கடனுக்கான ஒரு சிறந்த CIBIL ஸ்கோர் பயனளிக்கும்.
3. தொழில்: MNC அல்லது பொதுத்துறை நிறுவனத்தில் அல்லது ஏதேனும் தனியார் நிறுவனத்தில் சம்பளத்திற்கு வேலை செய்பவராக அல்லது சுய-தொழில் செய்பவராக விண்ணப்பதாரர்கள் இருக்க வேண்டும்.
4.குறைந்தபட்ச சம்பளம்: பஜாஜ் பின்சர்வ் வசிக்கும் இடத்தின் அடிப்படையில் மாதத்திற்கு நிகர வருமானத்தின் ஒரு வரம்பை கொண்டுவருகிறது. விண்ணப்பதாரர்கள் பொருந்தக்கூடிய குறைந்தபட்ச தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
5. LTV மற்றும் சொத்து மதிப்பு: சொத்தின் சந்தை மதிப்பு அதிகமாக இருந்தால் அதிக கடன் தொகையைப் பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும். நீங்கள் 20% முன்பணம் செலுத்த முடியும் என்றால், நீங்கள் விரைவாக வீட்டுக் கடன் பெற முடியும்.

ஒரு தகுதியான விண்ணப்பதாரர் பகுதியளவு முன்பணம் செலுத்துதல், முன்கூட்டியே அடைத்தல் (ஃபோர்குளோஷர்), பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் வசதி போன்ற சிறப்பம்சங்களுடன் போட்டிகரமான வீட்டு கடன் வட்டி விகிதம் ஐ அனுபவிக்க முடியும்.

வீட்டுக் கடனுக்கான தகுதியை எவ்வாறு மேம்படுத்துவது?

  • தவணைக்காலத்தை அதிகரித்து EMI-கள் குறைக்கப்படுவதால் அதிக கடன் தொகைக்கு நீங்கள் அதிக தகுதி பெறுகிறீர்கள். இருப்பினும் செலுத்த வேண்டிய வட்டி அதிகரிக்கிறது.
  • கடன் EMI-கள், கிரெடிட் கார்டு பாக்கிகள் போன்ற உங்கள் தற்போதைய கடன்களை செலுத்தி முடிக்கவும். இது உங்கள் FOIR-ஐக் குறைக்கிறது, இது வீட்டுக் கடனுக்கு நீங்கள் அதிக தகுதி பெறச் செய்கிறது.
  • இணை விண்ணப்பதாரருடன் கூட்டு வீட்டுக் கடனுக்காக விண்ணப்பிக்கவும், அதிக தொகையை கடன் வாங்க உங்கள் தகுதியை அதிகரிக்கவும்.
பஜாஜ் ஃபின்சர்வின் தகுதி வரம்புகளைப் பயன்படுத்தி உங்கள் தகுதியைச் சரிபார்த்து, உங்கள் சொத்து வாங்குவதற்கு நிதியளிக்க சிறப்பம்சம் நிறைந்த வீட்டுக் கடனைப் பெறுங்கள்.

மக்களும் இதையே கருதுகின்றனர்

வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்

எந்தவித கூடுதல் ஆவணமும் இல்லாமல் டாப் அப் கடனைப் பெறுங்கள்

விண்ணப்பி

வீட்டுக் கடன் வட்டி விகிதம்

தற்போதைய வீட்டு கடனை சரிபார்க்கவும்
வட்டி விகிதங்கள்

மேலும் ஆராயவும்

வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர்

உங்களுடைய வீட்டுக் கடன் தகுதியைத் தீர்மானித்துவிட்டு, அதற்கேற்றார்போன்று விண்ணப்பத் தொகையைத் திட்டமிடவும்

இப்போது கணக்கிடு

வீட்டுக் கடன் EMI கால்குலேட்டர்

கடன் தொகையில் விதிக்கப்படும் உங்களுடைய மாதாந்திர EMI, தவணைகள் மற்றும் வட்டி விகிதம் ஆகியவற்றைக் கணக்கிடுங்கள்

இப்போது கணக்கிடு