கடன் எவ்வளவு மலிவானது மற்றும் நீங்கள் அதை எவ்வளவு வசதியாக திருப்பிச் செலுத்த முடியும் என்பதை உங்கள் வீட்டுக் கடன் வட்டி விகிதம் நேரடியாக பாதிக்கிறது. உங்கள் திருப்பிச் செலுத்துதல் EMI-களின் வடிவத்தில் இருப்பதால், வட்டி மற்றும் அசல் கூறுகள் இரண்டையும் கொண்டுள்ளதால், குறைந்த வீட்டுக் கடன் வட்டி உங்கள் EMI-களை குறைக்கிறது. எனவே, நாமினல் வீட்டுக் கடன் வட்டி விகிதங்களை வழங்கும் ஒரு கடன் வழங்குநரைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது, மற்றும் உங்கள் விண்ணப்பத்தை நீங்கள் ஒப்படைக்கும் முன் உங்கள் வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை கணக்கிடுவது சிறந்தது.
இந்தியாவில் வீட்டுக் கடன் வட்டி விகிதம் இரண்டு வகைகளில் வழங்கப்படுகிறது: நிலை மற்றும் ஃப்ளோட்டிங். நிலையான வீட்டுக் கடன் வட்டியை தேர்ந்தெடுக்கும் போது வட்டி விகிதம் கடனின் தவணைக்காலம் முழுதும் நிலையானதாக இருக்கும். மாறாக ஃப்ளோட்டிங் வட்டி விகிதத்தை தேர்ந்தெடுக்கும் போது காலத்திற்கு காலம் மாறுபடும். ஏதாவது ஒரு வகையான வட்டி விகிதம் தேர்ந்தெடுக்கும் போது பல்வேறு காரணிகளை கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
வீட்டுக் கடன் வட்டி விகிதங்களை பாதிக்கும் காரணிகள் சில பின்வருமாறு:
• RBI கொள்கை: RBI கொள்கையில் மாற்றம் நிகழும் போது வீட்டுக்கடன் வட்டி விகிதத்தில் மாற்றம் வரும். உதாரணமாக MCLR நடைமுறைக்கு பின்பு நீங்கள் வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்படும் தேதியை (வழக்கமாக ஒவ்வொரு 6 மாதம் அல்லது ஒரு வருடத்தில்) அமைத்துக் கொள்ளலாம். இது குறையும் வட்டி விகிதத்தின் லாபத்தை விரைவில் அடைய உதவும்.
• கடன் மதிப்பீடு: உங்கள் கடன் மதிப்பீடு உங்கள் கடனை தீர்மானிக்கிறது. உங்களுடைய மதிப்பு அதிகமாக இருக்கும் பொழுது நம்பிக்கை உள்ளவராக உங்களுக்கு குறைவான கடன் வட்டி விகிதம் வழங்குவதற்கு கருத்தில் கொள்ளப்படும். இதேபோல் உங்கள் கடன் மதிப்பீடு குறைவாக இருக்கும் பட்சத்தில் நம்பிக்கை குறைந்தவர் என அதிக வட்டி விகிதத்திற்கு பரிந்துரை செய்யப்படும்.
• பணம் வழங்கல்: நிதி நிறுவனங்கள் கடன் அளிக்க அதிக பணம் வைத்திருக்கும் போது, பண மதிப்பிழப்பு போன்றவைக்கு பின்னர், குறைந்த வீட்டு கடன் வட்டி விகிதங்களை வழங்க முடியும். எனினும், பொருளாதாரத்தில் பண பற்றாக்குறை இருந்தால், அதிக விகிதம் வட்டி விதிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் கடன்களின் அதிக தேவை மற்றும் வட்டி வீதம் இவற்றின் இடையே ஆன உறவு நேர் மாறானது.
நீங்கள் கடன் வட்டி விகிதத்தை கணக்கீடு செய்ய இந்த எளிய சூத்திரம் பயன்படுத்தலாம்.
EMI= [P x R x (1+R)/\N]/ [(1+R)/\N-1]
இதில் 'P' என்பது அசல், N என்பது மாத தவணை மற்றும் R என்பது மாத வட்டி விகிதம். இதை கைமுறையாக கணக்கீடு செய்தால் சிக்கலான மற்றும் பிழைகள் ஏற்படலாம் என்பதால் நீங்கள் எளிதாக வீட்டு கடன் கால்குலேட்டர் பயன்படுத்தி வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை கணக்கிடலாம்.
பெரும்பாலான கடன் வழங்குபவர்கள் பஜாஜ் ஃபைனான்ஸ் உட்பட வீட்டுக் கடன் EMI கால்குலேட்டர் இணையதளத்தில் வழங்குகிறார்கள். இது அசல், வட்டி விகிதம், தவணைக்காலம் உள்ளிடுவதற்கு அனுமதிக்கிறது. நீங்கள் EMI மதிப்பு தொகையை பெற இவற்றை சரி செய்து கொள்ளலாம். மிக முக்கியமாக நீங்கள் செலுத்த வேண்டிய மொத்த வட்டி மற்றும் மொத்த தொகை (வட்டி மற்றும் அசல்) ஆகியவற்றை பார்த்துக் கொள்ளலாம்.
மேலும் காலத்தை குறைப்பது, உங்களுடைய சற்று அதிகமான EMI க்கு பதிலாக வீட்டுக் கடன் மீது குறைந்த வட்டி செலுத்துவது எவ்வாறு என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். உதாரணமாக, நீங்கள் ரூ. 20 லட்சம் கடன் வாங்கினால், 11% வட்டி விகிதத்தில் 115 மாதங்களுக்கு மாத EMI ரூ. 22,212 ஆக இருக்கும். நீங்கள் செலுத்தும் மொத்த வட்டி ரூ. 12,44,389.
மாறாக, நீங்கள் அனைத்து மதிப்புகளையும் மாறாமல், காலத்தை 100 மாதங்கள் என குறைப்பதால், உங்கள் EMI ரூ. 30,633 ஆக இருக்கும், மேலும் உங்கள் மொத்த வட்டி ரூ. 10,63,350 ஆக குறையும்.
வீட்டு கடன் வட்டி கால்குலேட்டரை பயன்படுத்துவதன் சுருக்கமான நன்மைகள் இங்கே.
• இது உங்கள் வீட்டுக் கடன் மீது எவ்வளவு வட்டி வசூலிக்கப்படுகிறது என்பதை நீங்கள் காண அனுமதிக்கிறது.
• உங்கள் கடனுக்காக சரியான காலத்தை தேர்வு செய்ய உதவுகிறது.
• இது கடன் பொருத்தமானதா இல்லையா என்பதைக் குறிக்கிறது.
• இது வீட்டை வாங்குவதற்கு உங்கள் நிதி திட்டத்தை தீர்மானிக்க உதவுகிறது.
• இது துல்லியமான மற்றும் பிழை-இல்லாத முடிவுகளை வழங்குகிறது.
இந்த தகவலுடன், உங்கள் வீட்டு கடன் வட்டி கணக்கிடுவது மட்டும் அல்ல, உங்கள் வீட்டு கடன் விண்ணப்பத்தின் வட்டி விகிதம் மற்றும் நேரத்தையும் பாதிக்கும் காரணிகளையும் நீங்கள் அறியலாம்.