வீட்டுக் கடன் EMI என்றால் என்ன?
EMI (சமமான மாதாந்திர தவணை) என்பது உங்கள் வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான மாதாந்திர கட்டணமாகும். மாறுபட்ட விகிதங்களில் EMI வட்டி மற்றும் அசல் மூலம் செலுத்தப்படுகிறது. நீங்கள் ஒரு வீட்டுக் கடனை பெற்றால், முழு கடன் முழுவதும் முழுமையாக செலுத்தும் வரை ஒவ்வொரு மாதமும் அசல் மற்றும் வட்டியின் ஒரு பகுதியை நீங்கள் செலுத்துவீர்கள்.
வீட்டு கடன் EMI கணக்கிடுவதற்கான விதிமுறை:
இந்த நோக்கத்திற்காக கடன் வழங்குபவர்கள் பொதுவாக பின்வரும் EMI கணக்கீடு விதிமுறையை பயன்படுத்துகின்றனர் –
EMI = [P x I x (1+I)N] / [(1+I)N-1]
இங்கு,
P – அசல் தொகை எ.கா. கடன் தொகை
I – ஒரு மாதத்திற்கு வட்டி விகிதம்
N – தவணைகளின் எண்ணிக்கை
வீட்டு கடன் EMI கணக்கிடுவது எப்படி?
1.மேலுள்ள விதிமுறையில் கடன் தொகை, ஒரு மாதத்திற்கான வட்டி விகிதம் மற்றும் தவணைகளின் எண்ணிக்கை ஆகியவற்றை மாற்றுக.
2. வருடாந்திர வட்டி வீதத்தை 100 ஆல் பிரிப்பதன் மூலம் ஒரு மாதத்திற்கான வட்டி விகிதம் கணக்கிடப்படுகிறது.
3. EMI-ஐ பெறுவதற்கு கவனமாகக் கணக்கிடுங்கள்.
எடுத்துக்காட்டு:
அஜய் பக்ஷி அவர்களுக்கு ரூ. 25 லட்சம் வீட்டு கடன் தேவைப்படுகிறது, ஒரு ஆண்டுக்கு 9.5% வட்டி விகிதத்தில் 10 ஆண்டுகளுக்கு. பின் EMI கீழே கணக்கிடப்பட்டவாறு இருக்கும்:
இங்கே,
P = ரூ. 25,00,000
I = 9.5 / (12 x 100) = 0.0079
N = 10 வருடங்கள் = 120 மாதங்கள்
EMI = [25,00,000 x 0.0079 x (1+0.0079)120 / (1+0.0079)120 -1 = ரூ. 32329*
*இந்த மதிப்பு செயல்முறை கட்டணத்தை சேர்க்கவில்லை
நீங்கள் எங்களின்
வீட்டுக் கடன் EMI கால்குலேட்டர் பயன்படுத்தி உங்களின் மாதாந்திர வீட்டு கடன் EMI-களை பெறலாம்.