உங்கள் வீட்டு கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்னர் மும்பையில் முத்திரை வரி விகிதங்கள் மற்றும் சொத்து பதிவு கட்டணங்கள் பற்றி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். நீங்கள் வாங்க விருப்பப்படும் சொத்துக்கான செலவுடன் இந்த செலவுகளும் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும். ஆண், பெண் மற்றும் ஆண் & பெண் கூட்டு உரிமையாளர்களுக்கு மும்பையில் முத்திரை வரி விகிதங்கள் 6%ஆக இருக்கின்றன. முத்திரை வரியானது சொத்தின் பதிவுசெய்யப்பட்ட விலை மற்றும் அதன் ரெடி ரெக்கனர் விகிதத்தை அடிப்படையாகக் கொண்டது. இவை இரண்டில் அதிகமாக இருக்கும் விகிதம் முத்திரை வரி செயல்படுத்தும் போது பரிசீலிக்கப்படும்.
மும்பையில் குடியிருப்புகள்/வீட்டுமனைகளுக்கான ரெடி ரெக்கனர் விகிதங்கள் ஒரு சதுர அடிக்கு ரூ. 42,000-8,61,000 க்கு இடையில் உள்ளன. குடியிருப்பு நிலங்களுக்கான ரெடி ரெக்கனர் விகிதங்கள் ஒரு சதுர மீட்டருக்கு ரூ. 16,500-4,75,500 க்கு இடையில் உள்ளன. பயன்படுத்துவதற்கு எளிதான எங்களது முத்திரை வரி கால்குலேட்டர் பயன்படுத்தி முத்திரை வரி மற்றும் சொத்து பதிவு கட்டணங்களைக் கணக்கிடுங்கள்.
மேலும் தெரிந்துக்கொள்க: முத்திரை வரி மற்றும் பதிவுக் கட்டணங்கள் ஒரு வீட்டு கடனுள் அடங்குகிறதா?