தனிநபர் கடனை முன்கூட்டியே அடைப்பதற்கான கட்டணங்கள் யாவை?
கடன் முன்கூட்டியே அடைத்தல்(ஃபோர்குளோசர்) என்பது பல இஎம்ஐ-களை செலுத்துவதற்கு பதிலாக உங்கள் மீதமுள்ள கடன் தொகையை ஒரே செலுத்தலில் திருப்பிச் செலுத்துவதாகும். நீங்கள் தற்போதுள்ள தனிநபர் கடனை திருப்பிச் செலுத்த விரும்பும் உபரி நிதிகள் உங்களிடம் இருந்தால், நீங்கள் தனிநபர் கடன் முன்கூட்டியே அடைத்தல்(ஃபோர்குளோசர்) வசதியை தேர்வு செய்யலாம்.
பஜாஜ் ஃபின்சர்வ் முன்கூட்டியே அடைத்தல்(ஃபோர்குளோசர்) கட்டணமாக முன்கூட்டியே செலுத்தும் நாளில் நிலுவையிலுள்ள தனிநபர் கடன் அசல் மீது 4.72% (பொருந்தக்கூடிய வரிகள் உட்பட) பெயரளவு கட்டணத்தை வசூலிக்கிறது.
தனிநபர் கடன் முன்கூட்டியே அடைத்தல்(ஃபோர்குளோசர்) கட்டணங்களைச் செலுத்த பஜாஜ் ஃபின்சர்வ் வாடிக்கையாளர் போர்ட்டலில் உள்நுழையவும்.
உங்கள் தனிநபர் கடன் மீது பொருந்தும் வட்டி விகிதங்கள் மற்றும் கட்டணங்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்.