வீட்டுக் கடன் EMI பணம்செலுத்தல்

  1. முகப்பு
  2. >
  3. வீட்டு கடன்
  4. >
  5. வீட்டு கடன் முத்திரை வரி மற்றும் பதிவு கட்டணங்களை உள்ளடக்கியதா?

வீட்டு கடன் முத்திரை வரி மற்றும் பதிவு கட்டணங்களை உள்ளடக்கியதா?

விரைவான விண்ணப்பம்

விண்ணப்பிக்க வெறும் 60 வினாடிகள்

உங்கள் முதல் பெயர் மற்றும் கடைசி பெயரை உள்ளிடவும்
உங்கள் 10-இலக்க மொபைல் எண்ணை உள்ளிடவும்
உங்கள் அஞ்சல் குறியீட்டை உள்ளிடவும்

இந்த விண்ணப்பம் மற்றும் பிற தயாரிப்புகள்/சேவைகள் தொடர்பாக என்னை அழைக்க /SMS மூலம் தொடர்பு கொள்ள பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதியை நான் அங்கீகரிக்கிறேன். இந்த ஒப்புதல் DNC/NDNC-க்கான எனது பதிவை புறக்கணிக்கிறது.வி&நி

உங்கள் மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பப்பட்டது

ஒரு-முறை கடவுச்சொல்லை உள்ளிடவும்*

0 வினாடிகள்
நிகர மாதாந்திர சம்பளத்தை உள்ளிடவும்
பிறந்த தேதியை தேர்ந்தெடுக்கவும்
PAN கார்டு விவரங்களை உள்ளிடவும்
பட்டியலிலிருந்து பணி அமர்த்துபவர் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்
தனிபட்ட இமெயில் முகவரியை உள்ளிடவும்
அலுவலக இமெயில் முகவரியை உள்ளிடவும்
தற்போதைய மாதாந்திர செலவினங்களை உள்ளிடவும்
உங்கள் மாதாந்திர சம்பளத்தை உள்ளிடவும்
ஆண்டு வருவாயை உள்ளிடவும் (18-19)

நன்றி

வீட்டு கடன் முத்திரை வரி மற்றும் பதிவு கட்டணங்களை உள்ளடக்கியதா?

வீடு வாங்குதல் செயல்முறை வெறும் வீட்டிற்கு மட்டுமே ஆகும் செலவை கொண்டிருப்பதில்லை, இது பல்வேறு வகையான கூடுதல் செலவுகளையும் கொண்டுள்ளது. ஒரு நிறுத்துமிடம் அல்லது பராமரிப்பு கட்டணத்திற்காக பணம் செலுத்துவது ஒரு வகையான கட்டணம், மற்றொரு வகையான கட்டணம் என்னவென்றால் உங்கள் வீடு வாங்கல் செயல்முறையை நிறைவு செய்ய நீங்கள் கட்டாயம் செலுத்த வேண்டிய முத்திரை வரி மற்றும் பதிவு கட்டணம் ஆகும். மற்றும் அதிகரிக்கும் சொத்து விலைகளுடன், உங்களின் வீடு வாங்குதல் செலவிற்கு அதிகப்படியான காப்பீடு வழங்கும் ஒரு நல்ல வீட்டு கடனை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். இருப்பினும், வீட்டு கடனில் முத்திரை வரி மற்றும் பதிவு கட்டணங்களுக்கு காப்பீடு அளிக்கப்படுவதில்லை. அதனால், இதற்காக ஆகும் செலவை நீங்கள் உங்கள் கையிலிருந்து செலுத்த நேரிடும் எனவே அதற்கேற்ப சேமித்திடுங்கள்

சமீபத்தில், நேஷனல் ஹவுசிங் பேங்க் (NHB), சில மாநிலங்களில் 12% வரை அதிகரித்துக் கொண்டே செல்லும் விகிதங்களுடன் ஒப்பிடுகையில் முத்திரை வரி மற்றும் பதிவு கட்டணம் சொத்து விலையின் 5–6% க்கு எவ்வாறு குறைக்கப்பட வேண்டும் என்பதை உயர்த்திக் காட்டுகிறது. தற்போது, இந்த சதவிகிதம் ஒவ்வொரு பகுதிக்கும் மாறுபடுகிறது, மற்றும் இது அரசாங்கத்தின் விருப்பப்படி நிர்ணயிக்கப்படுகிறது. அதனால், மாநில அரசாங்கம் NHB-யின் கோரிக்கைக்கு ஒப்புக்கொண்டால், நேரம் வரும்போது இந்த விகிதங்கள் குறைக்கப்படும், எனவே வீடு வாங்குதல் உங்களுக்கு எளிமையாக இருக்கும்.

இதற்கிடையில், இந்த கட்டணங்களை பற்றி இன்னும் விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

முத்திரை வரி என்றால் என்ன மற்றும் அதை எப்படி கணக்கிடப்படுகிறது?

முத்திரை வரி என்பது உங்கள் வீடு வாங்குதலை நிறைவு செய்யும் போது நடைபெறும் எந்தவொரு பண பரிவர்த்தனையிலும் விதிக்கப்படும் வரி, மற்றும் இந்திய முத்திரைச் சட்டம் 1899. கடந்து வந்த பிறகு, இந்த பரிமாற்ற செயல்கள், விற்பனை பத்திரங்கள் மற்றும் சட்ட ஆவணங்கள் ஆகியவற்றின் பரிவர்த்தனைகள் பற்றிய வரிகளை உள்ளடக்கியது. நீங்கள் முத்திரை வரி பணம் செலுத்தியவுடன், இந்த ஆவணங்களை நீங்கள் கோரலாம். ஒவ்வொரு ஆவணத்தின் வரிக்கான சரியான தொகை உங்கள் சொத்து மதிப்பு மற்றும் தன்மையை மதிப்பீடு செய்வதன் மூலம் கணக்கிடப்படுகிறது. பின்னர் அது சர்க்கிள் ரேட் உடன் ஒப்பிடப்படுகிறது. அந்த தொகையானது பின்னர் அதிகமான மதிப்பில் கணக்கிடப்படுகிறது.

உங்கள் சொத்து மீதான பதிவு கட்டணம் என்ன?

பதிவுக் கட்டணம் என்பது உங்கள் பெயரில் பதிவு செய்யப்பட்ட சொத்தை பெறுவதற்கு நீங்கள் முத்திரை வரி மீது மற்றும் அதற்கு மேல் செலுத்தும் செலவாகும். கட்டணம் வழக்கமாக மொத்த சொத்து அல்லது அதன் சந்தை மதிப்பில் 1% கணக்கிடப்படுகிறது, நீங்கள் எங்கு சொத்து வாங்குகிறீர்கள் என்பதை பொறுத்தது. மும்பையில், உதாரணமாக, அது சொத்தினுடைய மொத்த சந்தை அல்லது ஒப்பந்த மதிப்பில் 1% ஆகும், அல்லது ரூ.30,000,இதில் எது குறைவானதோ. கொல்கத்தாவில், இது சொத்தினுடைய மொத்த செலவில் 1% ஆகும். எனவே, நீங்கள் ரூ.70 லட்சத்துக்கு வீடு வாங்குகிறீர்கள் என்றால், உதாரணமாக வீட்டிற்கான பதிவு கட்டணம் 1% என்று இருக்கும், அதாவது ரூ.70,000 ஆகும்.

நீங்கள் முத்திரை வரி மற்றும் பதிவு நடைமுறைகளை எவ்வாறு கவனித்துக்கொள்கிறீர்கள்?

இந்திய பதிவு சட்டம் 1908. இன் கீழ் பதிவுசெய்தல் செயல்முறை நடைமுறைக்கு வந்தது. உங்கள் சொத்து அமைந்துள்ள இடத்தின் சார்-பதிவாளர் அலுவலகத்தில் உங்கள் சொத்தை பதிவு செய்ய பின்வரும் எளிமையான படிநிலைகளை பின்பற்றுங்கள்.

• உங்கள் சொத்து மதிப்பை மதிப்பீடு செய்யுங்கள் மற்றும் முத்திரை வரியை கணக்கிடுங்கள்.
• தேவையான அளவு நான்-ஜுடிசியல் முத்திரை தாள்களை வாங்கிக் கொள்ளுங்கள். நீங்கள் இ-ஸ்டாம்ப் பேப்பர்களை கூட ஆன்லைனில் வாங்கிக் கொள்ளலாம்.
• உங்கள் சார்பாகவும், சொத்து வழங்குனர் சார்பாகவும் செயல்படவிருக்கும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட வழக்கறிஞர் மூலம் விற்பனை ஒப்பந்தத்தை தயார் செய்யுங்கள்.
• முத்திரை வரி மற்றும் பதிவு கட்டணங்களைச் செலுத்துங்கள்.
• இரண்டு சாட்சிகளிடமிருந்து பெறப்பட்ட கையெழுத்துக்களுடன் சார்-பதிவாளர் அலுவலகத்தில் பத்திரத்தை பதிவு செய்யுங்கள்.
• அடையாளச் சான்று, முகவரிச் சான்று மற்றும் தடையின்மை சான்றிதழ் (NOC) போன்ற தேவையான ஆவணங்களைச் சமர்பிக்கவும்.
• ஆவணம் சரிபார்க்கப்பட்ட பின்னர், பதிவு செய்தல் செயல்முறை முடிவடைகிறது. உங்கள் அசல் ஆவணங்கள் உங்களிடம் ஒப்படைக்கப்படும் அதேசமயம் ஆவணங்களின் நகலை சார்-பதிவாளர் அலுவலகம் தங்களின் பதிவுகளுக்காக தன்னிடம் வைத்துக்கொள்ளும்.

தற்போது நீங்கள் முத்திரை வரி மற்றும் பதிவு கட்டணங்கள் பற்றியும் மேலும் உங்கள் சொத்தை எப்படி பதிவு செய்வது என்பதை பற்றியும் நீங்கள் தெரிந்து கொண்டீர்கள். நீங்கள் வீடு வாங்க திட்டமிடும் போது இதற்கான செலவையும் உங்கள் பட்ஜெட்டில் சேர்த்துக்கொள்ள மறந்துவிடாதீர்கள். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் முத்திரை வரி மற்றும் சொத்து பதிவு கட்டணங்களை தெரிந்துக்கொள்ள எங்கள் முத்திரை வரி கால்குலேட்டரை பயன்படுத்துங்கள்.

மக்களும் இதையே கருதுகின்றனர்

வீட்டுக் கடன் EMI கால்குலேட்டர்

கடன் தொகையில் விதிக்கப்படும் உங்களுடைய மாதாந்திர EMI, தவணைகள் மற்றும் வட்டி விகிதம் ஆகியவற்றைக் கணக்கிடுங்கள்

இப்போது கணக்கிடு

வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்

எந்தவித கூடுதல் ஆவணமும் இல்லாமல் டாப் அப் கடனைப் பெறுங்கள்

விண்ணப்பி

வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர்

உங்களுடைய வீட்டுக் கடன் தகுதியைத் தீர்மானித்துவிட்டு, அதற்கேற்றார்போன்று விண்ணப்பத் தொகையைத் திட்டமிடவும்

இப்போது கணக்கிடு

வீட்டுக் கடன் வட்டி விகிதம்

தற்போதைய வீட்டு கடனை சரிபார்க்கவும்
வட்டி விகிதங்கள்

மேலும் ஆராயவும்