தனிநபர் கடன்

தனிநபர் கடனுக்கான CIBIL ஸ்கோரை எவ்வாறு சரிபார்ப்பது?

தனிநபர் கடனுக்கான CIBIL ஸ்கோரை எவ்வாறு சரிபார்ப்பது?

டிரான்ஸ்யூனியன் CIBIL என்பது ஒரு கிரெடிட் தகவல் நிறுவனம் இது இந்தியாவில் நிதி நுகர்வோர்களின் கடனைத் திருப்பிச் செலுத்தும் வரலாறுகளைக் கண்காணித்து வருகிறது.
உங்கள் CIBIL ஸ்கோரானது ஒரு மூன்று-இலக்க எண்ணாகும். இது 300 இலிருந்து 900 வரை இருக்கும். இது வங்கிகள் மற்றும் NBFC-களால் உங்கள் நம்பகத்தன்மையையும் நீங்கள் கடனை உரிய காலத்தில் செலுத்தும் சாத்தியக்கூறையும் தீர்மானிக்க பயன்படும்.

கீழ்க்காணும் படிநிலைகளைப் பின்பற்றி உங்களுடைய CIBIL ஸ்கோரை நீங்கள் சரிபார்க்கலாம்:

  1. CIBIL-ன் அலுவலக வலைதளத்தில் ஒரு படிவத்தை நிரப்புவதன் மூலம் நீங்கள் இதை தொடங்கலாம்.
  2. பெயர், முகவரி மற்றும் தொடர்பு எண் போன்ற உங்கள் தனிப்பட்ட விவரங்களை உள்ளிடவும்.
  3. உங்களுக்கு ஒரு CIBIL ட்ரான்ஸ்யூனியன் ஸ்கோர் மற்றும் உங்கள் CIR (கிரெடிட் இன்ஃபர்மேஷன் ரிபோர்ட்) தேவையென்றால் நீங்கள் ஒரு சிறு கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும்.
  4. படிவத்தை நீங்கள் சமர்ப்பித்து, பணத்தைச் செலுத்திய பின்னர், உங்களின் CIBIL ஸ்கோர் மற்றும் அறிக்கை உங்களுக்கு அனுப்பப்படும்

நீங்கள் உங்கள் CIBIL ஸ்கோருக்காக ஆஃப்லைனிலும் விண்ணப்பிக்கலாம் இதற்கு நீங்கள் உங்கள் ஆவணங்களையும் டிமாண்ட் டிராஃப்டையும் மும்பையிலுள்ள CIBIL அலுவலகத்திற்கு தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்.