செயலியை பதிவிறக்குங்கள் image

பஜாஜ் ஃபின்சர்வ் செயலி

Personal Loan
உங்கள் முழு பெயரை உள்ளிடவும்
தயவுசெய்து முழுப்பெயரை உள்ளிடவும்
தயவுசெய்து பட்டியலில் இருந்து உங்கள் குடியிருப்பு நகரத்தை தேர்ந்தெடுக்கவும்
நகரம் காலியாக இருக்க முடியாது
மொபைல் எண் எதற்கு? இது உங்கள் தனிநபர் கடன் சலுகையை பெற எங்களுக்கு உதவும். கவலைப்பட வேண்டாம், நாங்கள் இந்த தகவலை இரகசியமாக வைப்போம்.
மொபைல் எண் காலியாக இருக்கக்கூடாது

இந்த விண்ணப்பம் மற்றும் பிற தயாரிப்புகள்/சேவைகள் தொடர்பாக பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதி என்னை தொடர்புகொள்ள/SMS அனுப்புவதற்கு நான் அங்கீகரிக்கிறேன். இந்த ஒப்புதல் DNC/NDNC-க்கான எனது பதிவை பாதிக்கிறது. T&C

விதிமுறைகள் & நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவும்

உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP(ஓடிபி) அனுப்பப்பட்டது

7897897896

செல்லுபடியாகாத OTP, தயவுசெய்து மீண்டும் முயற்சிக்கவும்

ஒரு புதிய OTP-யைப் பெற 'மீண்டும் அனுப்பவும்'-மீது கிளிக் செய்யவும்

47 வினாடிகள்
OTP-ஐ மீண்டும் அனுப்பவும் தவறான எண்ணை உள்ளிட்டுள்ளீர்கள் எண்?? இங்கே கிளிக் செய்யவும்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

EMI என்றால் என்ன?

சமப்படுத்தப்பட்ட மாதாந்திர தவணைகள் (EMIகள்) தனிநபர் கடன் தொகையை சிறிது சிறிதாக சுலப தவணைகளில் திருப்பிச் செலுத்துவதற்கான நன்மையை எளிய முறையில் உங்களுக்கு வழங்குகிறது. தவணைகள் அசல் தொகை மற்றும் வட்டி தொகை இரண்டையும் உள்ளடக்கியுள்ளன.

ஃபோர்குளோஷர் மற்றும் பகுதி-முன்பணமளிப்பு கட்டணங்கள் ஏதும் உண்டா?

ஆம், முன் கூட்டியே அடைத்தல்(ஃபோர்குளோசர்) மற்றும் பகுதியளவு-முன் பணம் செலுத்துதல் கட்டணங்கள் பொருந்துகின்றன. வட்டி விகிதங்கள் மற்றும் கட்டணங்கள் பற்றி மேலும் படிக்க, இங்கே கிளிக் செய்க.

நீங்கள் ஒரு சம்பளதாரர் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது உங்களுக்கு கிடைக்கக்கூடிய அதிகபட்ச கடன் தொகை என்ன?

• நீங்கள் ரூ.25 லட்சம் வரை உடனடி தனிநபர் கடனை பெறலாம்.
• இருப்பினும், ஒப்புதல் அளிக்கப்பட்ட இறுதி தொகை உங்கள் வருமானம், உங்கள் CIBIL ஸ்கோர் மற்றும் பிற தகுதி வரம்புகளை பொறுத்தது ஆகும்.

என்னென்ன தவணைக்கால தேர்வுகள் உள்ளன?

உங்களுடைய விருப்பம் மற்றும் கடன் அளிப்பு நிபந்தனைகளை பொருத்து 12 முதல் 60 மாதங்கள் வரைக்குமான ஒரு தவணை வரம்பை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

பஜாஜ் ஃபின்சர்விலிருந்து ஒரு தனிப்பட்ட கடனை எடுப்பதன் பலன்கள் அல்லது சாதக அம்சங்கள் என்ன?

மேலும் விவரங்களுக்கு தனிநபர் கடன் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் பகுதியை பாருங்கள்.

ஊதியம் பெறுவோருக்கான தனிநபர் கடனுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

நீங்கள் எங்களின் ஆன்லைன் விண்ணப்ப வசதியின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது ‘எங்களைத் தொடர்பு கொள்க’ என்ற பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு வழிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

சம்பளதாரர் தனிநபர் கடனை நான் எப்போது பெறுவேன்?

ஆன்லைன் விண்ணப்பங்களுக்கு, நீங்கள் உடனடி ஒப்புதலை பெறுவீர்கள். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட 24 மணிநேரங்களுக்குள் கடன் தொகை உங்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

நான் எப்படி கடனைத் திருப்பிச் செலுத்துவது?

ஈக்குவேட்டட் மன்த்லி இன்ஸ்டால்மெண்ட் (EMI) வழியாக அல்லது பின்தேதியிட்ட காசோலைகளை வழங்கி உங்களுடைய தொகையைச் செலுத்தி கடனை நீங்கள் அடைக்கலாம்.

ஒரு சம்பளதாரர் தனிநபர் கடனுக்கான ஆன்லைன் ஒப்புதல் செயல்முறை என்ன?

எங்களது ஆன்லைன் வசதியைக் கொண்டு, நீங்கள் ஊதியம் பெறுவோருக்கான தனிநபர் கடனுக்கு எங்கிருந்தும் விண்ணப்பித்து அதற்கு உடனடி ஒப்புதலைப் பெறலாம்.

ஒரு இன்ஸ்டன்ட் தனிநபர் கடனுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

விவரங்களுக்கு, தனிநபர் கடனுக்காக எவ்வாறு விண்ணப்பிப்பது பிரிவில் படிநிலை வாரியாக செயல்முறையை சரிபார்க்கவும்.

எந்த தகுதி வரம்பின் மீது எனக்கு கடன் அளிக்கப்படும்?

மேலும் தகவலைப் பெற தனிநபர் கடன் தகுதி மற்றும் ஆவணங்கள் பிரிவை நீங்கள் சரிபார்க்கலாம். பஜாஜ் ஃபின்சர்வின் உள்புற பாலிசிகளின் அடிப்படையில் அனைத்து கடன்களும் ஒப்புதல் அளிக்கப்படுகின்றன.

ஒரு தனிநபர் கடனிற்காக ஆன்லைனில் விண்ணப்பிப்பதின் நன்மைகள் யாவை?

• எங்களது ஆன்லைன் விண்ணப்ப வசதி வழியாக, எங்கிருந்தும் எந்த நேரத்தலும், எந்த ஒரு கிளைக்கும் போகாமல் நீங்கள் ஒரு கடனுக்கு விண்ணப்பிக்க முடியும்.
• மேலும் உங்கள் கடனின் மீது நீங்கள் உடனடி ஒப்புதலை பெறுவீர்கள் மற்றும் உள் சரிபார்ப்பு செய்யப்பட்ட 24 மணிநேரங்களுக்குள் கடன் தொகை உங்களுக்கு வழங்கப்படும்.

நான் ஆன்லைனில் விண்ணப்பித்த என்னுடைய கடனின் நிலையை நான் எப்படி சரிபார்க்கலாம்?

உங்கள் கடன் நிலையை சரிபார்க்க
1800-103-3535 எண்ணில் எங்கள் வாடிக்கை சேவை மையத்தை தொடர்பு கொள்ளுங்கள், மற்றும் இமெயில் மற்றும் SMS மூலம் உங்களுக்கு வழங்கப்பட்ட உங்கள் தனிபட்ட குறிப்பு எண்ணை வழங்குங்கள்.
• பெயர் மற்றும் பிறந்த நாள் போன்ற விவரங்களை உறுதி செய்ததும், உங்களுடைய கணக்கின் நிலை தெரிவிக்கப்படும்.

நான் அளிக்கும் தகவல் எந்த அளவு பாதுகாப்பானது?

எங்களுடைய ஆன்லைன் விண்ணப்ப முறை முழுமையாக பாதுகாப்பான முறையாகும். பலமான பாதுகாப்பு அமைப்புகளைக் கொண்டிருப்பதால், உங்களுடைய எல்லாத் தரவுகளும் பாதுகாப்பாக இருக்கும்.

ஆன்லைன் விண்ணப்பத்திறகு பாதுகாப்புக் கட்டணம் என்றால் என்ன?

ஆன்லைனில் உங்களுடைய விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிபதற்கு அல்லது பரிசீலிப்பதற்கு நீங்கள் செலுத்த வேண்டிய கட்டணமே பாதுகாப்புக் கட்டணம்.

ஆன்லைன் பாதுகாப்புக் கட்டணத்தை செலுத்தாவிட்டால் என்ன நடக்கும்?

ஒருவேளை நீங்கள் பாதுகாப்புக் கட்டணத்தைச் செலுத்தாவிட்டால், நீங்கள் உடனடி ஆன்லைன் ஒப்புதல் பலனை இழந்து விடுவீர்கள்.

தனிநபர் கடன் விண்ணப்பம் வழியாக நான் பாதுகாப்புக் கட்டணத்தை ஏற்கனவே செலுத்தி விட்டேன். ஆனால், இப்போது நான் தனிநபர் கடனைப் பெற விரும்பவில்லை. பஜாஜ் ஃபின்சர்விலிருந்து தனிநபர் கடனை நான் பெறாவிட்டால், பாதுகாப்புக் கட்டணம் எனக்கு திருப்பிச் செலுத்தப்படுமா?

• ஒருவேளை கடன் ஒப்புதலளிக்கப்பட்டு, ஆனால் 30 நாட்களுக்குள் நீங்கள் பணத்தைப் பெறாவிட்டால், நாங்கள் பாதுகாப்புக் கட்டணத்தை முழுமையாக உங்களுக்குத் திருப்பிக் கொடுத்து விடுவோம்.
• உங்களுடைய கடன் நிராகரிக்கப்பட்டால், நீங்கள் செலுத்திய முழு பாதுகாப்புக் கட்டணமும் திருப்பி அளிக்கப்படும்.

பாதுகாப்புக் கட்டணத்தை நான் எப்படிச் செலுத்தலாம்?

உங்களுடைய பாதுகாப்புக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த பல வழிகள் உள்ளன:
1. டெபிட் கார்டு
2. நெட் பேங்கிங்

இந்தத் தளத்தில் என்னுடைய டெபிட் கார்டை பயன்படுத்துவது பாதுகாப்பானதா?

எங்களுடைய இணையதளத்தில் உள்ள எல்லாப் பரிவர்த்தனைகளும் பாதுகாப்பாக உள்ளன. நாங்கள் மிகச்சிறந்த வகை பாதுகாப்பைப் பயன்படுத்துகிறோம். பரிவர்த்தனைகள் பாதுகாப்பானவை. SSL டேட்டா என்கிரிப்ஷனை நாங்கள் பயன்படுத்தி அங்கீகரிக்கப்படாத தனிநபர்கள் பார்க்க முடியாமல் பாதுகாக்கிறோம்.

ஒரு பரிவர்த்தனையை நான் எப்படி ரத்து செய்வது அல்லது பணத்தை திரும்பப் பெறுவது எப்படி?

• ஏதாவது முரண்பாடு இருந்தால், அதற்கான காரணங்கள் செல்லத்தக்கதாக இருந்தால், அந்தப் பணத்தை நாங்கள் திருப்பிச் செலுத்துவோம்.
• தயவுசெய்து 1800-103-3535 என்ற எண்ணில் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் அல்லது personalloans@bajajfinserv.in. என்ற முகவரியில் எங்களை அணுகுங்கள். உங்களுக்கு உதவுவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம்.
• கூடுதல் விரவங்களுக்கு விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் பகுதியை தயவுசெய்து வாசிக்கவும்.

ஃப்ளெக்ஸி டேர்ம் கடனின் சிறப்பம்சங்கள் யாவை?

• ஃப்ளெக்ஸி டேர்ம் கடன் என்பது ஒரு தொழில்துறையின் முதலாவது வசதியாகும். எங்களுடைய பிரீமியம் வாடிக்கையாளர்களுக்கு பஜாஜ் ஃபின்சர்வினால் அளிக்கப்படுகிறது.
• அது ஒரு ஹைப்ரிட் திட்டமாகும், டேர்ம் கடன் மற்றும் ஒரு எழுத்துப்பூர்வமான கடன் வரம்பின் அடிப்படையில் உள்ள மதிப்பு இரண்டையும் ஒருங்கிணைத்த அம்சங்கள் இதில் உள்ளன.
• இந்தத் தயாரிப்பைக்கொண்டு நீங்கள் எத்தனை முறை விரும்புகிறீர்களோ அத்தனை முறையும் முன் தொகை செலுத்தலாம் மற்றும் பணத்தை எடுக்கலாம். இது சுலபமாகவும் தொந்தரவற்றதாகவும் இருக்கும்.
• நீங்கள் பயன்படுத்திய தொகைக்கு மட்டுமே வட்டி விதிக்கப்படுகிறது. முழு கடன் தொகைக்கும் அல்ல.
• இதைப் பெற்றதும், எந்தக் கூடுதல் செலவின்றி கடனுக்கு பணம் முன் செலுத்தலாம் வட்டியை மிச்சப்படுத்தலாம்.
• மாதாந்திர அடிப்படையில் உங்களுடைய பணம் எடுக்கும் சக்தி குறையும். இவ்வாறு ஒப்பளிக்கப்பட்ட கடன் தொகை கடன் இறுதிக் காலத்தில் பூஜ்ஜியமாகும்.

வழக்கமான டேர்ம் கடனோடு ஒப்பிடுகையில் ஃப்ளெக்ஸி கடன்களின் பலன் என்ன?

வழக்கமான டேர்ம் கடனோடு ஒப்பிடுகையில் ஃப்ளெக்ஸி கடன்கள் பல பலன்களை அளிக்கின்றன:
1. கடனை உங்களிடம் உள்ள நிதியைக்கொண்டு முன்னரே அடைக்கும் இளகுத்தன்மையும் உங்களுக்கு உள்ளது.
2. எந்த கூடுதல் ஆவணமும் இல்லாமல் கடன் தவணை காலத்திற்குள் எந்த நேரத்திலும் ட்ராப்-லைன் வசதிக்குள் முன்பே-செலுத்தப்பட்ட தொகையை நீங்கள் திரும்ப-பெற முடியும்.
3. நீங்கள் வட்டி செலவுகளின் மீது சேமிக்கிறீர்கள் – பயன்படுத்தப்பட்ட தொகையின் மீது மட்டுமே வட்டி செலுத்தப்படுகிறது. முன்கூட்டியே-செலுத்தப்பட்ட தொகையின் மீது வட்டி விதிக்கப்படுதில்லை.
4. பஜாஜ் ஃபின்சர்வ் இண்டர்நெட் போர்ட்டல்- எக்ஸ்பீரியாவில் இசைவான, சுலபமான, தொந்தரவு-அற்ற ஆன்லைன் பரிவர்த்தனைகள், ட்ராடவுன் மற்றும் RTGS-க்கான சுய-சேவை கணக்கு அணுகல் கருவி, இது நெட்பேங்கிங் பரிவர்த்தனைகள் வழியாக BFL-க்கு நீங்கள் முன்கூட்டியே-பணம் செலுத்துவதை அனுமதிக்கிறது.

டிராப்லைன் வசதியின் முக்கிய உட்கூறுகள் யாவை?

டிராப்லைன் அடிப்படையிலான முதலீட்டுத் தள்ளுபடியின் உட்கூறுகள் கீழே தரப்பட்டுள்ளன:

1. ட்ராப்லைன் இருப்புத்தொகை: தவணை காலத்தின் மீது குறைந்துக்கொண்டே வரும் நடைமுறையிலுள்ள கடன் தொகை.
2. பயன்படுத்தப்பட்ட தொகை: உங்களால் பயன்படுத்தப்பட்ட தொகை. இது POS (அசல் நிலுவைத்தொகை) ஆகும்.
3. மீதமிருக்கும் தொகை: இது நீங்கள் ட்ராடவுன் செய்யக்கூடிய தொகை (ட்ராப்லைன் மற்றும் பயன்படுத்தப்பட்ட தொகை இவற்றிற்கு இடையில் உள்ள வித்தியாசமாக கணக்கிடப்படுகிறது).

பில்லிங் சுழற்சி என்னவாக இருக்கும்?

பில்லிங் சுழற்ச்சி ஒவ்வொரு மாதமும் 26th முதல் 25th வரை இருக்கும் மற்றும் பின்வரும் மாதத்தின் 5th தேதி இதற்கான தவணை தேதியாகும்.

என்னுடைய தவணை செலுத்தும் நாள் என்ன?

ஒவ்வொரு மாதமும் 5 ஆம் தேதி அனைத்து ஃபிளெக்சி கடன்களுக்கான தவணை தேதி ஆகும்.

வாடிக்கையாளர் திரும்பப் பெற்றால் அல்லது பில்லிங் சுழற்சிக்குப் பின்னர் பகுதியாக முன்செலுத்தினால் வட்டி எப்படிக் கணக்கிடப்படும்?

மாதத்தின் 26th முதல் 25th வரையிலான அனைத்து பரிவர்த்தனைகளுக்கும், தொகை பயன்படுத்தப்பட்ட ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கான கட்டணம் உங்களிடமிருந்து வசூலிக்கப்படும்.
எடுத்துக்காட்டாக., நீங்கள் ரூ. 10 இலட்சத்தை கடன் வரம்பை பெற்றிருந்து மற்றும் மாதத்தின் 26th தேதியில் ரூ. 10 இலட்சத்தை ட்ரா டவுன் செய்து மற்றும் அதே மாதத்தில் 29th தேதி ரூ. 5 இலட்சத்தை முன்கூட்டியே செலுத்தி, இதன் மூலம் அந்த மாதத்தின் 29th தேதியிலிருந்து அடுத்த மாதத்தின் 25th தேதி வரை ரூ. 5 இலட்சம் பயன்படுத்தப்பட்டால், 26 – 29th தேதியிலிருந்து ரூ. 10 இலட்சத்தின் மீதும் மற்றும் 30 – 25th தேதியிலிருந்து ரூ. 5 இலட்சத்தின் மீதான வட்டி உங்களிடமிருந்து வசூலிக்கப்படும்.
அதேபோல், நீங்கள் ரூ. 15 இலட்சம் கடன் வரம்பை பெற்றிருந்து மற்றும் மாதத்தின் 26th தேதியில் ரூ. 10 இலட்சத்தை ட்ரா டவுன் செய்து மற்றும் 29th தேதி மற்றொரு ரூ. 5 இலட்சத்தை ட்ரா டவுன் செய்து, இதன் மூலம் முழு இருப்புத்தொகையையும் பயன்படுத்தி இருந்தால், 26 – 29th தேதியிலிருந்து ரூ. 10 இலட்சத்தின் மீதும் மற்றும் 30 – 25th தேதியிலிருந்து ரூ. 15 இலட்சத்தின் மீதான வட்டி உங்களிடமிருந்து வசூலிக்கப்படும்.

ஒரு சாதாரண காலவரம்புக் கடனோடு ஒப்பிடுகையில் வட்டி விகிதம் ஒரே அளவில் இருக்குமா / குறைவாக இருக்குமா?

டேர்ம் கடன்கள் மற்றும் ஃப்ளெக்ஸி டேர்ம் கடன்கள் மீது பொருந்தும் கட்டணங்களின் விரிவான பட்டியலுக்காக தயவுசெய்து தனிநபர் கடன் வட்டி விகிதம் ஐ காணவும்.

எந்தவொரு ஆன்லைன் பணம் செலுத்தலையும் அளிக்க நான் விரும்பவில்லை, வேறு எந்த வழியிலாவது நான் பரிவர்த்தனை செய்யலாமா?

• ஃப்ளெக்ஸி டேர்ம் கடன்கள் வழியாக, ஒரு விரைவான மற்றும் சுலபமான கடன் வசதியை அளிக்க நாங்கள் எண்ணியுள்ளோம். உங்களுடைய வீட்டில் / அலுவலகத்திலிருந்து சௌகரியமான சூழலில் பாதுகாப்பாக பரிவர்த்தனை செய்யும் சுதந்திரம் அளிக்கப்படுகிறது.
• தற்போது எல்லா ஃப்ளெக்ஸி பரிவர்த்தனைகளும் இணையத்தில் செய்யப்பட வேண்டும்.

எந்தவொரு ஆன்லைன் பணம் செலுத்தலையும் அளிக்க நான் விரும்பவில்லை, ஒவ்வொரு முறையும் ஒருவர் வந்து பரிவர்த்தனையைச் எடுத்துச் செல்ல வேண்டும்?

பணம் எடுத்தல்கள் இணையம் வழியாக மட்டுமே அனுமதிக்கப்பட்டாலும், RTGS/NEFT/IMPS வழியாக இணையம் வழியாகவோ அல்லது உங்களுடைய வங்கி வழியாகவோ தொகையைச் செலுத்தலாம்.

இந்த வசதிக்காக எனக்கு ஏதும் செக் புக் அளிப்பீர்களா, அதனை டிராபேக்/பணம் செலுத்தப் பயன்படுத்தலாமா?

இல்லை, ஓவர்டிராஃப்ட் வசதியுள்ள ஒரு நடப்புக் கணக்கு போன்று இது செயல்படுவதில்லை. மேலும், பஜாஜ் ஃபின்சர்வ் லிமிடெட் என்பது ஒரு NBFC என்பதால் ஒரு வங்கியைப் போலன்றி, ஃப்ளெக்ஸி கடன்களும் எங்களது பிற கடன் திட்டங்களும் இந்த வசதியை அளிக்க இயலாது.

வாடிக்கையாளர் எந்த வெல்கம் கிட்டையும் பெறாவிட்டால் என்ன செய்வது?

வாடிக்கையாளர் எங்களை cs@bajajfinserv.in என்ற இணையதள முகவரியில் தொடர்பு கொள்ளலாம் மற்றும் இந்த விவரம் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு திருப்பி அனுப்பப்படும்.

என்னுடைய எக்ஸ்பீரியா உள்நுழைவு ID மற்றும் கடவுச்சொல்லை நான் எப்போது பெறுவேன்?

• உங்களுடைய எக்ஸ்பீரியா ID மற்றும் கடவுச்சொல் புதிய கடன் ரிலேஷன்ஷிப் கிட்/ வெல்கம் கிட்டுடன் அனுப்பப்படும்.
• கடன் பெற்று 10 நாட்களுக்குள் உங்களுடைய பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு SMS அனுப்பி வைக்கப்படும்.

திருப்பிச் செலுத்தும் காலஅட்டவணை / வட்டி சான்றிதழ்கள் / கணக்கு அறிக்கை / தடையில்லாச் சான்றுக்கான என்னுடைய அறிக்கைகளை நான் எப்படிப் பெறலாம்?

• அனைத்து கடன் கணக்கு அறிக்கைகளும் உங்களுக்கு ஆன்லைனில் கிடைக்கின்றன மற்றும் உங்கள் எக்ஸ்பீரியா Id மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி https://www.bajajfinserv.in/customer-portal -க்கு உள்நுழைவதன் மூலம் காணலாம் / பதிவிறக்கம் செய்யலாம்.
• எனினும், எங்கள் வாடிக்கையாளர் சேவை மையம்-ஐ அழைப்பதன் மூலம் அல்லது ஒரு இமெயில் கோரிக்கையின் மூலமாக உங்கள் அறிக்கைகளின் நகலை நீங்கள் கோரலாம்.
• ஒவ்வொரு ஆண்டின் இறுதியில் இமெயில் வழியாக கணக்கின் ஆண்டு அறிக்கையை பஜாஜ் ஃபின்சர்வ் அனுப்பும்.

என்னுடைய முழுமையான கடன் விவரங்களை நான் எப்படி அறிவேன்?

• நீங்கள் உங்கள் இமெயில் ID-இல் ஒரு வெல்கம் கிட்-ஐ பெறுவீர்கள் (& இது எக்ஸ்பீரியாவிலும் இருக்கும்) இதில் அடங்கியுள்ளவை:
1. உங்களுடைய எல்லா ஃப்ளெக்ஸி கடன் விவரங்கள்
2. எக்ஸ்பீரியாவுக்கான பயனர் ID மற்றும் கடவுச்சொல்
3. ட்ராடவுன் பரிவர்த்தனைகளுக்கான உங்களின் பதிவு செய்யப்பட்ட வங்கி விவரங்கள்.
4. தனிபட்ட மெய்நிகர் கணக்கு எண்
5. பதிவுசெய்த மொபைல் எண்
6. நீங்கள் தயாரிப்பை பற்றி புரிந்துக்கொள்ள மற்றும் சுய-சேவை கருவியை திறம்பட பயன்படுத்த உதவும் குறிப்பு சேவை வழிகாட்டி.

என்னுடைய ஃப்ளெக்ஸி டேர்ம் கடன் இருப்பை எப்படி அறியலாம்?

• நீங்கள் எல்லா கடன் விவரங்களையும், ஃப்ளெக்ஸி டேர்ம் கடன் கணக்கு சம்பந்தமான தகவல்கள் அனைத்தையும் எங்களது வாடிக்கையாளர் போர்ட்டலான எக்ஸ்பீரியாவில் உங்களுடைய நடப்பு கணக்கு ID மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழைவு செய்து பெறலாம்.
• எக்ஸ்பீரியாவில் டிராடவுன் கோரிக்கையை நீங்கள் வைக்கலாம்.

பகுதி முன்பணமளிப்பு செலுத்தும் வழிமுறை என்ன?

• பஜாஜ் ஃபின்சர்வ் உங்களுக்கு ஒரு தனித்துவமான கணக்கு எண்ணை அளிக்கும்.
• உங்களுடைய நெட்பேங்கிங் கணக்கு வழியாக இந்த தனித்துவமான கணக்கில் எல்லா தொகை வழங்கீடுகளையும் / முன் தொகை வழங்கீடுகளையும் செய்யலாம்.
• ஃப்ளெக்ஸி டேர்ம் கடன் கணக்கில் குறிப்பிட்ட நேரத்துக்குள் வங்கி வழிகாட்டு நெறிகளின்படி வரவு வைக்கப்படும்.

ஃப்ளெக்ஸி கடனுக்கு முன்-பணமளிப்பு கட்டணம் ஏதும் உண்டா?

முன-பணமளிப்புக்கு எந்தக் கட்டணமும் இல்லை. ஃப்ளெக்ஸி கடன் வாடிக்கையாளர் என்ற முறையில், நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் பரிவர்த்தனை செய்யலாம் (உங்களுடைய கணக்கில் தொகை செலுத்தலாம், இருக்கும் இருப்புத் தொகையிலிருந்து பணம் எடுக்கலாம்).

எனது முதல் பகுதி தொகையை எப்போது நான் முன்னரே செலுத்தலாம்?

கடன் பட்டுவாடா செய்த 36 மணி நேரத்திற்கு பின்னர் பகுதி முன்பணம் செலுத்தலாம்.

நான் எத்தனை முறை பகுதி-பணமளிப்பு செய்யலாம்?

ஃப்ளெக்ஸி டேர்ம் கடன் வாடிக்கையாளர் தன்னுடைய கடனுக்கு எத்தனை முறை விரும்பினாலும் பகுதி முன்பணமளிப்பு செலுத்த முடியும். ஒரு நாளில் செலுத்தப்படும் பகுதி முன்பணமளிப்புகளின் எண்ணிக்கைக்கு வரம்பு இல்லை.

ஒரு நாளில் என்னுடைய ஃப்ளெக்ஸி டேர்ம் கடனிலிருந்து எத்தனை முறை நான் வித்ட்ரா செய்யலாம்?

தற்போது, அதிகபட்சமாக ஒரு நாளில் ஐந்து முறை பணம் எடுக்கலாம்.

நான் பணத்தை எடுத்து அதே நாளில் பகுதியளவு முன் செலுத்தலாமா?

ஆம், அதே முறையில் பணத்தை எடுக்கலாம் பகுதியளவு அதே நாளில் முன் செலுத்தலாம்.

எவ்வளவு நேரத்தில் பணம் என்னுடைய கணக்கில் வரவு வைக்கப்படும்?

பஜாஜ் ஃபின்சர்வ் பணப் பரிமாற்றங்களுக்கு RTGS/ NEFT ஐ பயன்படுத்துகிறது. வங்கி வழிகாட்டுதல்கள் அடிப்படையில் இது குறிப்பிட்ட காலத்திற்குள் உங்கள் கணக்கில் செலுத்தப்படும்.

எனது EMI தேதிக்கு முன்பே நான் பணத்தை முன்கூட்டியே செலுத்திவிட்டேன். இருப்பினும் நான் எனது தவணை தொகையை செலுத்த வேண்டுமா?

ஆம், பகுதி முன் தொகை எதுவானாலும், தவணை செலுத்தப்பட வேண்டிய நாளில் கழிக்கப்படும். பில்லிங் காலத்தின்போது பயன்படுத்தப்பட்ட தொகையின்மீது EMI பெறப்படுவதால்.

கணக்கு அறிக்கையில் பகுதி-முன்பணமளிப்பு மற்றும் வித்ட்ராவல்கள் நடைமுறைக்கு வர எவ்வளவு நாட்கள் ஆகும்?

• ஃப்ளெக்ஸி டேர்ம் கடனின் கீழ் தொகை செலுத்துவதற்கான கோரிக்கைகள் 20 நிமிடங்களில் பரிசீலிக்கப்படும்
• தற்போது ஃப்ளெக்ஸி டேர்ம் கடன் வித்ட்ராவல் கோரிக்கைகள் மணி நேர அடிப்படையில் எழுப்பப்படுகின்றன மற்றும் ஏற்கப்பட்ட டர்ன்அரவுண்ட் நேரத்தின்படி பணம் செலுத்தல் தொடங்கப்படும்.
• சிஸ்டத்தில் பேமண்ட் கோரிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதுமே பணம் எடுப்பு பதிவு உடனடியாக கணக்கு அறிக்கையில் தெரியும்.
• இருப்பினும், உங்களுடைய கணக்கில் வரவு வைக்கப்படுவதற்கு முன்னர், வங்கித் தளத்தில் அந்தத் தொகுதி அங்கீகரிக்கப்பட வேண்டும்.

ஒருவேளை வாடிக்கையாளர் வித்ட்ராவல் அல்லது பகுதி முன்பணமளிப்பு செய்யும்போது ஏதாவதொரு பிரச்சனையை சந்தித்தால், யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும்?

நீங்கள் எங்களை இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம்:
1. எங்கள் அழைப்பு மையத்தின் எண். - 020-39574151
2. https://www.bajajfinserv.in/reach-us என்பதில் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்

செலுத்தவேண்டிய தவணை தொகை மற்றும் நாளை நினைவூட்டி எனக்கு எந்த ஒரு தகவலும் அளிக்கப்படுமா?

• ஆம், ஒரு ஃப்ளெக்ஸி வாடிக்கையாளர் என்ற முறையில், உங்களுடைய பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் கீழ்க்காணும் நினைவூட்டலை பெறுவீர்கள்.
1. ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் SMS (எக்ஸ்பீரியாவில் செய்யப்படும் பேமெண்ட் மற்றும் ட்ராடவுன்)
2. தவணை தேதிக்கு முன்னரே அதற்கான அறிவிப்பு/நினைவூட்டல்
3. கிளியரன்ஸ் மற்றும் கிரெடிட்டிற்கு பின்னர் தவணை இரசீது அறிவிப்பு
4. மாறாக, உங்கள் வசதிக்கேற்ப உங்கள் எக்ஸ்பீரியா கணக்கில் உள்நுழைவதன் மூலம் உங்கள் கடன் மற்றும் தவணை விவரங்களைச் சரிபார்த்தல்.

ஃப்ளெக்ஸி கடனை நான் எப்படி எங்கு முன்னரே முடிக்கலாம்?

• எந்தவொரு கூடுதல் கட்டணமும் செலுத்தாமல் எந்த தொகை வரையும் முன்-பணமளிப்பு அல்லது முன்கூட்டியே அடைத்தலை நீங்கள் செய்யலாம்.
• உங்களுக்கு ஒதுக்கப்பட்ட தனித்துவமான பஜாஜ் ஃபின்சர்வ் கணக்கிற்கு RTGS வழியாக நீங்கள் தொகையை முன்னரே செலுத்தலாம்.
• இந்தக் கடன் வசதியை நீங்கள் நிறுத்த விரும்பினால், கடன் கணக்கில் உள்ள வட்டி உட்பட்ட ஒட்டுமொத்த நிலுவைத் தொகையையும் செலுத்தி முன்னரே முடிப்பதற்கான ஒரு கோரிக்கையைச் சமர்ப்பித்து முடித்துக் கொள்ளலாம்.
• முன்கூட்டியே அடைத்தலுக்கான கோரிக்கையை எழுப்ப- எக்ஸ்பீரியா/ விகேர்/ வாடிக்கையாளர் சேவை மைய எண். / கிளையை அணுகுங்கள்.

எனது முகவரி/மொபைல் எண்/ வங்கி கணக்கு எண் போன்ற விவரங்களை நான் எவ்வாறு மாற்றுவது? நான் ஏதேனும் சான்றை அனுப்ப வேண்டுமா?

உங்களுடைய எல்லா தனிப்பட்ட விவரங்களையும் நிங்கள் உரிய முறையில் கையொப்பமிட்டு ஒரு கோரிக்கைக் கடிதத்துடன் ஆவணச் சான்றுகளை உரிய உறவு மேலாளரிடம் சமர்ப்பித்து சுலபமாக மாற்றலாம்.

ஃப்ளெக்ஸி கடனுக்கு ஏதும் ஃபோர்குளோஷர்(முன்கூட்டியே அடைத்தல்) கட்டணங்கள் உண்டா?

தெளிவான ஃப்ளெக்ஸி கடன்களுக்கான முன்னரே முடிப்பதற்கான கட்டணம் பட்டுவாடா செய்யப்பட்ட தொகையிலும் ஃப்ளெக்ஸி கடன்களுக்கு நடப்பு நிலுவை POS-லும் கணக்கிடப்படும்.

ஃப்ளெக்ஸி கடன் வசதியில் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கடன் தொகைகள் யாவை?

குறைந்தபட்ச தொகையாக ரூ.80 ஆயிரம் மற்றும் அதிகபட்ச தொகையாக ரூ.15 இலட்சத்தை பெற முடியும்.

ஃப்ளெக்ஸி கடன் வசதி பெறுவதற்கான தவணை காலம் என்ன?

குறைந்தபட்ச தவணைக்காலம் 1-வருடம் இதன் பிறகு உங்கள் ஃப்ளெக்ஸி கடன் வசதியை நீங்கள் புதுப்பித்து கொள்ளலாம்.

கடனைப் பெறுவதற்கான கால அளவு என்ன?

தவணைக்காலம் 1- ஆண்டாக இருக்கும் இதன் பிறகு வாடிக்கையாளர் இதனை அடுத்த 12 மாதங்களுக்கு புதுப்பித்து கொள்ளவோ அல்லது இதை சாதரண டேர்ம் கடனாக மாற்றி கொள்ளவோ செய்யலாம்.

ஒரு ஃப்ளெக்ஸி டேர்ம் கடனின் மாதாந்திர தவணை/EMI-இல் அசல் தொகையும் இருக்குமா?

ஒரு ஃப்ளெக்ஸி டேர்ம் கடனில், EMI வடிவத்தில் நீங்கள் வெறும் வட்டியை மட்டுமே செலுத்துவீர்கள். எடுத்துக்காட்டு: ரூ.5 இலட்சத்திற்கான ஃப்ளெக்ஸி டேர்ம் கடன் தோராயமாக EMI (வட்டி மட்டும்) ரூ.6,000 கொண்டிருக்கும் மற்றும் வழக்கமான EMI ரூ. 12,000 இருக்காது.

ஒரு பகுதி-பணமளிப்பு அல்லது டிராடவுன் செய்தல், EMI-இல் உடனடியாக அந்த மாற்றம் தெரியுமா?

எந்தவொரு மாதத்தின் 22nd தேதிக்கு முன்னர் ஏதேனும் பகுதியளவு-பணம்செலுத்தல் அல்லது வித்ட்ராவல் செய்யப்பட்டால், அடுத்த மாதத்தின் EMI-யில் மாற்றம் பிரதிபலிக்கும். இல்லை என்றால், ஒரு மாதம் கழித்து மாற்றம் தெரியும்.

வருடாந்திர பராமரிப்பு கட்டணங்கள் வசூலிக்கும் சுழற்சி நாள் என்றால் என்ன?

உங்களுடைய கடன் ஆண்டு நிறைவில் உங்களுடைய கணக்கிலிருந்து வருடாந்திர பராமரிப்புக் கட்டணம் தானாக பற்ற வைக்கப்படும்.

முதல் பணப் பட்டுவாடாவில் நான் ரூ.25 இலட்சம் பெற தகுதி பெற்றிருக்கிறேன், இருப்பினும், லைன் ஆஃப் கிரெடிட் கொள்கையின் படி எனக்கு ரூ.15 இலட்சம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அடுத்து வரும் வருடத்தில் நான் கூடுதலாக கடன் பெற விரும்பினால், அதற்கான செயல்முறை என்னவாக இருக்கும்?

நீங்கள் எங்களது வாடிக்கையாளர் சேவையைத் தொடர்பு கொண்டு, கடன் தொகையை அதிகரிக்கும்படி கோர வேண்டும். அதன் பிறகுதான் உங்களுடைய கடன் புதுப்பிக்கப்படும். உங்களுடைய கடன் செயல்திறனைப் பொருத்து, புதிய கடன் தொகைக்கு ஒப்புதல் அளிக்கப்படும்.

ஃப்ளெக்ஸி டேர்ம் கடனை நான் எப்படி டேர்ம் கடனாக மாற்றலாம்?

• உங்களுடைய ஃப்ளெக்ஸி கடனை வழக்கமான கடனாக மாற்றுவதற்கு எங்களது வாடிக்கையாளர் சேவைக்கு (உங்களுடைய ஒப்புதலுடன்) ஒரு இமெயிலை நீங்கள் அனுப்ப வேண்டும்.
• வாடிக்கையாளர் சேவை உங்களுடைய ஒப்புதலைப் பெற்று உங்கள் சார்பாக ஒரு கோரிக்கையை எழுப்புவார்.
• இதற்குப் பின்னர், உங்களுடைய ஃப்ளெக்ஸி டேர்ம் கடனானது டேர்ம் கடனாக 60 மாதங்களுக்கு மாற்றப்படும் வழக்கமான EMI வரும் அதில் முதலும் அடங்கும்.

ஒரு டேர்ம் கடனை ஒரு ஃப்ளெக்ஸி டேர்ம் கடனாக மாற்றலாமா?

ஆம், ஒரு புதிய ஃப்ளெக்ஸி டேர்ம் கடன் ஒரு புதிய உடன்படிக்கையுடன் பதிவு செய்யப்படும் மற்றும் ஏற்கனவே உள்ள கடன் முடிக்கப்படும்.

ஃப்ளெக்ஸி கடன் வசதியை டேர்ம் கடனாக மாற்றும் முறை என்ன?

கடனை வழக்கமான கடனாக மாற்றுவதற்கு எங்களது வாடிக்கையாளர் சேவைக்கு (உங்களுடைய ஒப்புதலுடன்) ஒரு இமெயிலை நீங்கள் அனுப்ப வேண்டும். வாடிக்கையாளர் சேவை உங்களுடைய ஒப்புதலைப் பெற்று உங்கள் சார்பாக ஒரு கோரிக்கையை வைப்பார். இதற்குப் பின்னர், இந்த ஃப்ளெக்ஸி கடன் வசதி டேர்ம் கடனாக 60 மாதங்களுக்கு மாற்றப்படும் வழக்கமான EMI வரும். அதில் முதலும் அடங்கும்.

நிரந்தர பணமெடுக்கும் காலமான 12 மாதங்கள் என்றால் என்ன?

வருடாந்திர பராமரிப்பு கட்டணங்களைச் செலுத்தி ஒவ்வொரு 12 மாதங்களுக்குப் பின்னரும் உங்களுடைய ஃப்ளெக்ஸி கடன் வசதியை நீங்கள் புதுப்பிக்க வேண்டும். ஒப்புதலளிக்கப்பட்ட கடன் தொகையில் 1.0% அளவுக்கு வருடாந்திர பராமரிப்பு கட்டணம் விதிக்கப்படும்.

பகுதி முன்-பணமளிப்பை நான் எப்படிச் செய்யலாம்?

• உங்களுடைய கடன் ஒப்புதலான பின்னர் வாடிக்கையாளர் போர்ட்டல் - எக்‌ஸ்பீரியாவை பயன்படுத்தி நீங்கள் பகுதியளவு முன் தொகை செலுத்தலாம்.
• எக்ஸ்பீரியா ID மற்றும் கடவுச்சொல் உங்களுடைய கடன் பட்டுவாடாவிற்கு பின்னர் வரவேற்புக் கடிதத்தில் உங்களிடம் பகிரப்படும்.
• பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 9227564444-க்கு SMS அனுப்புவதன் மூலம் விர்ச்சுவல் கணக்கு எண்ணை (VAN) பெறலாம்.

1st EMI-க்கு முன்னர் நான் பகுதி முன்பணமளிப்பு செலுத்த முடியுமா?

இல்லை, 1st EMI க்கு முன்னர் நீங்கள் பகுதி முன்பணமளிப்பு செய்ய முடியாது.

என்னுடைய ஃப்ளெக்ஸி டேர்ம் கடனை எப்படி குறைக்க முடியும்?

எங்களது வாடிக்கையாளர் போர்ட்டல் - எக்‌ஸ்பீரியா வழியாக உங்களுடைய ஃப்ளெக்ஸி டேர்ம் கடனை நீங்கள் எடுக்கலாம்.

எந்தச் சூழல்களில் ஃப்ளெக்ஸி கடன் வசதி பயன்பாடு தடுக்கப்படுகிறது?

உங்களின் ஃப்ளெக்ஸி டேர்ம் கடன் வசதி பயன்பாட்டை இந்த காரணங்களுக்காக தடை செய்யக்கூடும்:
• பஜாஜ் ஃபின்சர்வ் லிமிடெட்டுடன் அல்லது பிற எந்த ஒரு நிதி நிறுவனத்துடன் உங்களுடைய மாதாந்திர தவணையைக் குறைக்கவும்
• கிரெடிட் பியூரோ ஸ்கோர் குறையும்
• வேலையில் மாற்றம்
• தொடர்பு தகவலில் மாற்றம் (பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு முன்கூட்டியே குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி).

ஏதும் துணைப் பிணையம் அல்லது உத்தரவாதமளிப்பவரை அளிக்க வேண்டுமா?

ஒரு ஊதியம் பெறும் தனிநபர் கடன் பெறுவதற்கு எந்தவொரு பத்திரம், பிணையம், அல்லது உத்திரவாதம் அளிப்பவர் தேவையில்லை.

உங்கள் தனிநபர் கடன் EMI ஐ சரிபாருங்கள்

கடன் தொகை

தயவுசெய்து கடன் தொகையை உள்ளிடவும்

தவணைக்காலம்

தயவுசெய்து தவணைக்காலத்தை உள்ளிடவும்

வட்டி விகிதம்

வட்டி விகிதத்தை உள்ளிடவும்

உங்கள் EMI தொகையானது

ரூ.0

விண்ணப்பி

பொறுப்புத் துறப்பு :

EMI கால்குலேட்டர் என்பது ஒரு கருவியாகும் மற்றும் வழங்கல் தேதி மற்றும் முதல் EMI தேதிக்கு இடையில் உண்மையான வட்டி விகிதங்கள் மற்றும் காலத்தின் அடிப்படையில் முடிவுகள் மாறுபடலாம். கணக்கீட்டு முடிவுகள் தோராயமானவை மற்றும் தகவல் நோக்கங்களுக்கு மட்டுமே.
மொபைல் எண்ணை புதுப்பிக்கவும்
மொபைல் எண் காலியாக இருக்கக்கூடாது
OTP உடன் சரிபார்க்கவும்

தயவுசெய்து உங்கள் மொபைல் எண் 80005 04163-க்கு அனுப்பியுள்ள OTP-ஐ உள்ளிடவும்
மொபைல் எண்ணை மாற்றவும்

கீழே OTP-ஐ உள்ளிடவும்

செல்லுபடியாகாத OTP, தயவுசெய்து மீண்டும் முயற்சிக்கவும்

புதிய OTP-ஐ கோரவும் 0 விநாடிகள்

நன்றி

உங்கள் மொபைல் எண் வெற்றிகரமாக சரிபார்க்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. எங்கள் பிரதிநிதி விரைவில் இந்த எண்ணில் உங்களை தொடர்பு கொள்வார்.