அதிக வருவாய்களுடன் சிறந்த 10 முதலீட்டு விருப்பங்கள்

ஸ்மார்ட் முதலீடுகளை மேற்கொள்வது உங்கள் பணம் வருமானத்தை உருவாக்குவதற்கு உதவும். பணத்தை சம்பாதிக்க கடினமாக உழைக்கும் போது, உங்கள் கனவுகள் மற்றும் இலக்குகளை எப்போதும் நிறைவேற்றுவதற்கு இது போதாது. முதலீடு தொடங்குவதற்கு, நீங்கள் வளர்ச்சி சார்ந்த அல்லது நிலையான வருவாய் முதலீட்டு கருவிகளை கருத்தில் கொள்ளலாம்.

மக்கள் தங்களது தனிப்பட்ட நிதி திட்டமிடுதலில் சேமிப்பு மற்றும் முதலீடுகளுக்கு இடையில் அடிக்கடி குழப்பம் பெறுகிறார்கள். சேமிப்பு, முதலீடு இவை இரண்டும் முக்கியம் என்றாலும், அவைகளுக்கு வெவ்வேறு நோக்கங்கள் உள்ளன. பணத்தை ஒதுக்கி வைத்துக் வைப்பதற்கான நோக்கம் அல்லது காரணம் முதல் வேறுபாட்டு காரணியாகும்.

நீங்கள் வழக்கமாக அவசர காலத்திற்காக பணத்தை சேமிக்கலாம். இருப்பினும், முதலீடு என்பது இந்த பணத்தை சிறந்த முதலீட்டு வழிகளில் எதிர்காலத்திற்கான செல்வத்தை உருவாக்குவதற்கான நம்பிக்கை உடன் சிறப்பாக முதலீடு செய்வது ஆகும்.

சேமிப்பு மற்றும் முதலீடு செல்வம் திரட்டப்பட்ட விதத்தில் மாறுபடுகிறது. சேமிப்பு ஒரு செயல்பாடற்ற செல்வக் குவிப்பு என கருதப்படும் போது, நன்கு திட்டமிடப்பட்ட முதலீட்டு உத்திகள் அதிக செல்வத்தை பெருக்க உதவுகின்றன.

முதலீட்டின் வகைகள்

நீங்கள் முதலீடு செய்வதற்கு முன், பல்வேறு வகையான முதலீடுகளை புரிந்துகொள்வது சிறந்தது. பெரும்பாலான முதலீட்டாளர்களுக்கு, முதலீடுகள் அபாய அளவை பொறுத்து மாறுபடும் - குறைந்த அபாயம், நடுத்தர அபாயம் மற்றும் உயர் அபாயம். இங்கே இந்த முதலீட்டு தெரிவு வாய்ப்புகளை விரிவாக பாருங்கள்:

குறைந்த அபாய முதலீடுகள் - இவை வணிக அல்லது பொருளாதார மாற்றங்களை கணக்கில் கொள்ளாமல் நிலையான வருமானத்தை அளிக்கும் கருவிகளாகும். பத்திரங்கள், கடனீடு மற்றும் நிலையான வைப்புத்தொகை இந்த பிரிவின் கீழ் வருகின்றன. மேலும் சிறப்பு முதலீட்டு திட்டங்கள் - PPF, EPF, SCSS, சுகன்யா சம்ரித், தேசிய சேமிப்பு திட்டம் மற்றும் பிற சிறு அஞ்சல் அலுவலகம் திட்டங்கள் ஆகியவை குறிப்பிட்ட நோக்கங்களுக்காக அரசாங்க சட்டத்தால் உருவாக்கப்பட்டவை. இவை உறுதியான வருமானம் அளிப்பதால் குறைந்த அபாயம் கொண்டவை. இவற்றின் வருமானம் குறிப்பிட்ட கால இடைவெளி கொண்டது மற்றும் முன்பே தீர்மானிக்கப்படுகிறது.

குறைந்த இடர் முதலீடுகள் பங்குச் சந்தை இயக்கத்துடன் இணைக்கப்படவில்லை, இவை பொதுவாக நிதிசார் வட்டி விகித இயக்கங்கள் மூலம் நிர்வகிக்கப்படுகின்றன. இருப்பினும், வருவாய் எப்போதுமே உத்தரவாதம் அளிக்கப்பட்டவை.

அரசு பத்திரங்கள் மற்றும் ஆயுள் காப்பீட்டு பாலிசிகள் நல்ல வருமானத்தை அளிக்கின்றன, இருப்பினும், அவை நீண்ட முடக்க காலம் கொண்டவை. எனவே, இந்த முதலீட்டு விருப்பங்களில் இருந்து கணிசமான வருமானத்தை சம்பாதிக்க நீண்ட காலம் காத்திருக்க வேண்டும். நிலையான வைப்புத்தொகை நிலையான, உயர்ந்த வருமானம் மற்றும் உடனடி பணப்புழக்கத்தை வழங்கும் சில குறைந்த அபாய முதலீடுகளில் ஒன்றாகும்.

நடுத்தர அபாய முதலீடுகள் - இவை குறிப்பிட்ட சில அபாயங்களை ஏற்படுத்தக்கூடிய முதலீடுகள் ஆகும், ஆனால் அவை முதலீடு செய்யத் தயாராக இருக்கும் முதலீட்டாளர்களுக்கு உயர்ந்த வருமானத்தை அளிக்கின்றன. கடன்பத்திரங்கள், சீரான பரஸ்பர நிதிகள் மற்றும் குறியீட்டு நிதிகள் இந்த பிரிவில் வரும். இத்தகைய முதலீடுகள் கடன் மற்றும் உறுதிப்பாடு போன்ற அம்சங்களை கொண்டது, ஆனால் அவை உங்கள் அசல் தொகையை பாதிக்கும் மாறுபடும் சந்தை அபாயங்கள் உடன் இணைக்கப்பட்டுள்ளன. வருவாயில் ஒழுங்கற்ற தன்மை, அத்தகைய முதலீட்டின் மீது எந்தவொரு நிலையான வருமானத்தையும் சாத்தியமற்றது ஆக்கும்.

உயர் அபாய முதலீடுகள் - இவை உயர்ந்த, குறைந்த வரம்பு இல்லாத அபாயம் மற்றும் வருமானம் கொண்ட முதலீடுகள் ஆகும். இவை நிறுவனங்களின் பங்குகள், பங்கு பரஸ்பர நிதிகள், ஆகும். இந்த கருவிகள் அதிக வருமானம் அளிக்கும் அதே சமயம் இழப்புகளுக்கான வாய்ப்புகள் நிறுவனத்தின் உள் மற்றும் பல்வேறு வெளிப்புற காரணிகளைப் பொறுத்தது. இந்த கருவிகளின் வருவாயின் அளவு மற்றும் நேரம் நிரந்தரம் அற்றது. எனவே, அவைகள் அதிக அபாயம் கொண்டவை.
 

இந்தியாவில் சிறந்த முதலீட்டு வாய்ப்புகள்

இந்தியர்கள் தங்கள் நிதி இலக்குகளுக்கு சேமித்து வைக்க நினைக்கும் போது இங்குள்ள 10 முதலீட்டு விருப்பங்களை கருதுகிறார்கள்

 • பங்குகள் - நிறுவனங்களின் பங்குகள் வாங்குதல் ஒரு முறை முதலீட்டுத் திட்டம் ஆகும். இது எந்தவொரு வியாபாரத்திற்கும் உங்கள் பணத்தை முதலீடு செய்ய எளிதான வழிகளில் ஒன்றாகும். இவை ஒவ்வொன்றும் முதலீட்டாளர் வாங்குகின்ற நிறுவனத்தின் பகுதி உரிம அலகுகள் ஆகும். பங்குச் சந்தை என்று அழைக்கப்படும் சந்தையில் இந்த பங்குகளை வர்த்தகம் செய்யலாம். இவை வாங்குவதற்கு மிகவும் இலாபகரமான மற்றும் அபாயகரமான முதலீட்டு வாய்ப்பில் ஒன்றாகும்.
 • FDகள் - இவை சரியான கால இடைவெளியில் நிலையான வட்டிக்கு உறுதியளிக்கும் பாதுகாப்பான முதலீடாகும். இது முதலீட்டிற்கான மற்றும் நெகிழ்வான செலுத்தும் வாய்ப்புகளை வழங்குகிறது . வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் (வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள்) நிலையான வைப்புத்தொகைகள் வசதிகளை வழங்குகின்றன. நிலையான வைப்புத்தொகையில் குறுகிய கால முதலீட்டுத் திட்டங்கள் பணவீக்கத்திற்கு எதிராக உங்கள் நிதிகளை பாதுகாக்க உதவும்.
 • மியூச்சுவல் ஃபண்ட்ஸ் - இவை நிதி மேலாளரால் நிர்வகிக்கப்படும் கூட்டு முதலீட்டு திட்டங்கள் ஆகும், இது மக்களின் பணத்தை சேகரித்து பல்வேறு நிறுவனங்களின் பங்குகள் மற்றும் பத்திரங்களில் முதலீடு செய்து வருமானம் திரும்பப் பெறும். குறைவாக இருந்தாலும், பங்குகள் போலவே அதே வகை அபாயத்தில் உள்ளன.
 • SCSS -மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் என்பது 60 வயதுக்கும் மேலானவர்களுக்கு ஆன முதலீட்டு திட்டமாகும். இது அரசாங்கத்தால் ஆதரவு அளிக்கப்படும் ஒரு நீண்டகால சேமிப்பு தெரிவு ஆகும். இது ஓய்வூதியத் தேவைகளை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த முதலீட்டு வாய்ப்பு அவ்வப்போது அரசாங்கம் பரிந்துரை செய்யும்படி உயர்ந்த மற்றும் நிலையான வட்டி விகிதத்தை அளிக்கிறது.
 • PPF - பொது வருங்கால வைப்பு நிதி இந்தியாவில் மிகவும் பொதுவான மற்றும் நம்பகமான முதலீட்டு திட்டங்களில் ஒன்றாகும். இது ஆண்டுதோறும் வட்டி விகிதத்தை அளிக்கிறது மற்றும் ஆண்டு ஒன்றிற்கு குறைந்தபட்ச முதலீடு ரூ. 500 ஆகும். இது 15 ஆண்டுகள் காலம் கொண்டது. இது அவ்வப்போது அரசாங்கம் பரிந்துரைத்தபடி உயர்ந்த மற்றும் நிலையான வட்டி வீதத்தை அளிக்கிறது.

பல்வேறு வகையான முதலீட்டு வாய்ப்புகளின் ஒப்பீடு இங்கே.

இந்தியாவில் மிகச் சிறந்த 10 முதலீட்டு விருப்ப தேர்வுகள்

  அபாயம் தவணைக்காலம் பணப்புழக்கம் ரிட்டர்ன்கள்
நேரடி பங்கு அதிகம் எப்போது வேண்டுமானாலும் விற்க முடியும் அதிகம் சந்தை-தொடர்புடையவை
பங்கு மியூச்சுவல் ஃபண்ட் நடுநிலை-அதிகம் ஓபன் என்ட்* அதிகம் சந்தை-தொடர்புடையவை
ரியல் எஸ்டேட் அதிகம் எப்போது வேண்டுமானாலும் விற்க முடியும் குறைந்த சந்தை-தொடர்புடையவை
கோல்டு குறைவு-நடுநிலை எப்போது வேண்டுமானாலும் விற்க முடியும் வேறுபடுகிறது சந்தை-தொடர்புடையவை
பிபிஎஃப்(PPF) அபாயம் இல்லை 15 வருடங்கள் பகுதி திரும்பப் பெறுதல்** 7.90 சதவீதம்
வங்கி நிலையான வைப்புத் தொகை குறைந்த 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை முன்கூட்டியே வெளியேறுதல் வேறுபடுகிறது
கடன் நிதிகள் குறைவு-அதிகம் ஓபன் என்ட் அதிகம் சந்தை-தொடர்புடையவை
வரி விதிப்புக்கு உள்ளான RBI பத்திரங்கள் அபாயம் இல்லை 7 வருடங்கள் குறைந்த 7.75 சதவீதம்
NPS குறைவு-அதிகம் 60 மைனஸ் நுழைவு வயது வரையறுக்கப்பட்டது சந்தை-தொடர்புடையவை
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் அபாயம் இல்லை 5 வருடங்கள் குறைந்த 8.60 சதவீதம்
*ELSS 3 வருட லாக்-இன் காலத்துடன் வருகிறது ** நிபந்தனைகளுக்கு உட்பட்டது
தங்கம், காகித தங்கம் மற்றும் கடன் நிதிகள் இவற்றிற்கு நீண்ட தவணை காலம் 3 ஆண்டுகள் ஆகும். ரியல் எஸ்டேட் இவற்றிற்கு நீண்ட தவணை காலம் 2 ஆண்டுகள் ஆகும்

ஏன் பஜாஜ் ஃபைனான்ஸ் FD சிறந்த முதலீட்டு வாய்ப்பு?

பல்வேறு தேர்வுகளில், FD-கள் அனைத்து மக்களும் விரும்பும் முதலீட்டு தேர்வாக உள்ளது. வசதி முதல் நெகிழ்வு வரை FD-கள் அனைத்து வயது மற்றும் வருமான பிரிவு கொண்ட முதலீட்டாளர்களுக்கு ஒரு வரம் ஆகும். வங்கி FD-கள் ஒவ்வொரு வங்கியின் சொத்துகள் மற்றும் பொறுப்புகள் அடிப்படையில் நிர்வகிக்கப்படும் போது, நிறுவனத்தின் FD-கள் வங்கி FD-களை விட அதிக வட்டி அளிக்கின்றன. பஜாஜ் ஃபைனான்ஸ் FD உங்கள் சேமிப்புக்கு பாதுகாப்பான மற்றும் நிலையான வளர்ச்சியை வழங்குகிறது. பின்வரும் காரணங்கள் காரணமாக அனைத்து வகைகளிலும் முதலீட்டாளர்களுக்கு இது சிறந்த முதலீட்டு விருப்பங்களில் ஒன்றாகும்:

 • உயர் வட்டி விகிதங்கள் - இந்த வட்டி விகிதம் இந்திய நிதி சந்தையில் வழங்கப்படும் மிக உயர்ந்த ஒன்றாகும். இது அதே காலத்திற்கு வழக்கமாக வங்கியின் FD களை விட 1-2% அதிகமாக இருக்கும். பஜாஜ் ஃபைனான்ஸ் FD 3-5 ஆண்டுகளுக்கு 8.35% வட்டி விகிதத்தை வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கான FD வட்டி விகிதம் வழக்கமான FD வட்டி விகிதத்தை விட 0.25% அதிகமாக உள்ளது. மேலும், புதுப்பித்தலில் கூடுதல் 0.10% பெறலாம்.
 • தர மதிப்பீடு - இது ICRA இன் MAAA (நிலையானது) மற்றும் CRISIL இன் FAAA / நிலையானது மதிப்பீடு மூலம் மதிப்பீடு செய்யப்படுவதால் உங்கள் முதலீடுகளின் உறுதி தன்மையையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும்.
 • ஒட்டு மொத்தம் அல்லது ஒட்டுமொத்தம் அல்லாத தெரிவுகள் - உங்கள் தேவைகள் அடிப்படையில், நீங்கள் ஒட்டு மொத்தம் அல்லது ஒட்டுமொத்தம் அல்லாத வட்டி முறையை தேர்வு செய்யலாம். ஒட்டு மொத்தம் தேர்வு வட்டியை அசலுடன் கூடுதலாக முதலீடு செய்ய அனுமதிக்கிறது மேலும் அதிக வட்டி பெறப்படுகிறது. இது நீண்ட காலத்திற்கான ஒரு நிதி திரட்டல் உருவாக்குவதற்கான சிறந்த வழி ஆகும். ஒட்டுமொத்தம் அல்லாத தேர்வு செலவுகளை சந்திக்க உதவும் வகையில் - நிலையான மாதாந்திர, காலாண்டு அல்லது வருடாந்தர கால இடைவெளியில் வட்டி பெற உதவுகிறது.
 • அடுக்குக்கோவை வசதி - பஜாஜ் ஃபைனான்ஸ் FD களை அடுக்கடுக்காக பயன்படுத்தலாம் - குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ச்சியான முதிர்ச்சி அடைவதற்கு பல FD க்களை முதலீடு செய்யலாம். 12 மாதங்கள் முதல் 60 மாதங்கள் வரை தேவைகளுக்கு ஏற்றவாறு நீங்கள் தவணை காலத்தை தேர்வு செய்யலாம்.
 • குறைந்தபட்ச முதலீட்டு அளவு - உங்கள் பட்ஜெட்டை பாதிக்காத அளவில் சிறிய அளவிலான ரூ. 25,000 இல் நீங்கள் தொடங்கலாம்.
 • FD மீதான கடன் - உங்கள் அவசர தேவையின் போது பணம் பெறுவதை உறுதி செய்ய நீங்கள் உங்கள் FD மீது கடன் பெற முடியும்.
 

வைப்புத்தொகைகளுக்கு செல்லுபடியாகும் ஆண்டு வட்டி விகிதம் ரூ.5 கோடி வரை (07 டிசம்பர் 2019 முதல்)

தவணைக்காலம் மாதங்களில் குறைந்தபட்ச வைப்புத்தொகை ( ரூ.) ஒட்டுமொத்தம் ஒட்டுமொத்தம் அல்லாத
மாதாந்திரம் ஒவ்வொரு காலாண்டிற்கும் அரையாண்டு வருடாந்திரம்
12 – 23 25,000 7.60% 7.35% 7.39% 7.46% 7.60%
24 – 35 7.90% 7.63% 7.68% 7.75% 7.90%
36 - 60 8.10% 7.81% 7.87% 7.94% 8.10%

விகித நன்மைகள் அடிப்படையில் வாடிக்கையாளர் வகை (. 07 டிசம்பர் 2019):

+ மூத்த குடிமக்களுக்கு 0.25%

+ பஜாஜ் குழும ஊழியர்கள், பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் வாடிக்கையாளர்கள் மற்றும் பஜாஜ் அலையன்ஸ் ஆயுள் காப்பீட்டில் ஏற்கனவே இருக்கும் பாலிசிதாரர்களுக்கு 0.10%

 

புதுப்பித்தல்:

+0.10% வைப்பு பதிவு செய்யப்பட்ட வட்டி விகிதத்திற்கும் அதிகமாக

 

சிறப்பான தவணை திட்டத்துடன் கூடுதலாக, தங்கள் நிலையான வைப்புத்தொகை மீது ஏற்கனவே இருக்கும் வாடிக்கையாளர்கள் அல்லது பஜாஜ் ஊழியர்கள் 0.10% உயர் வட்டி விகிதங்களைப் பெற முடியும், மற்றும் மூத்த குடிமக்கள் 0.25% உயர் வட்டி விகிதங்களைப் பெற முடியும்.

 

எப்படி முதலீடு செய்யலாம்?

இது மக்களின் ஒரு மிக முக்கியமான கேள்வி அதாவது எங்கே எதில் முதலீடு செய்வது. இரண்டு கேள்விகளுக்கும் பதில் உங்களுடைய வருமானம் மற்றும் செலவினை பொறுத்தது. முதலில் ஒவ்வொரு நேரத்திலும் எவ்வளவு நிதி தேவை என்பதனை கணக்கீடு செய்யுங்கள். இதில் குறிப்பிட்ட பகுதி FD போன்ற சீரான முதலீட்டில் இருக்க வேண்டும். ஒவ்வொரு நேரத்திலும் நீங்கள் தொகையை தீர்மானித்து முதலீடு செய்ய முடியும்.

இப்போது ஆன்லைனில் உங்கள் வீட்டில் இருந்தே நிலையான வைப்பு தொகையில் முதலீடு செய்யலாம். எது சிறந்தது என கண்டுபிடித்து முதலீட்டை தொடங்க வாழ்த்துக்கள்!

நீங்கள் FD இல் முதலீடு செய்ய திட்டமிடுகிறீர்களா? FD கணக்கை எவ்வாறு திறப்பது என்பதை அறியுங்கள்.

முதலீட்டு கருத்துகள் பற்றிய மேலும் தகவலுக்கு, முதலீடு செய்வதற்கும் மற்றும் பல்வேறு தேவைகளுக்கும், எங்களுடன் தொடர்பு கொள்ளவும்.

நிலையான வைப்புத்தொகை கால்குலேட்டர்

முதலீட்டுத் தொகை

தயவுசெய்து முதலீட்டு தொகையை உள்ளிடவும்

தயவுசெய்து முதலீட்டு தொகையை உள்ளிடவும்

முதலீட்டு விகிதம்

தயவுசெய்து முதலீடு விகிதத்தை உள்ளிடவும்

முதலீட்டு தவணைக்காலம்

தயவுசெய்து முதலீட்டு தவணையை உள்ளிடவும்

நிலையான வைப்புத்தொகை வருமானங்கள்

 • வட்டி விகிதம் :

  0%

 • வட்டி செலவினம் :

  Rs.0

 • முதிர்ச்சி அடையும் காலம் :

  --

 • மெச்சூரிட்டி தொகை :

  Rs.0

விரைவாக முதலீடு செய்ய கீழுள்ள விவரங்களை தயவுசெய்து பூர்த்தி செய்யவும்

முழு பெயர்*

முதல் பெயரை உள்ளிடவும்

மொபைல் எண்*

தயவுசெய்து மொபைல் எண்ணை உள்ளிடவும்

நகரம்*

தயவுசெய்து நகரத்தை உள்ளிடுங்கள்

இமெயில் ID*

தயவுசெய்து இமெயில் ஐடியை டைப் செய்யவும்

வாடிக்கையாளர் வகை*

தயவுசெய்து வாடிக்கையாளர் வகையை உள்ளிடவும்

முதலீட்டுத் தொகை*

தயவுசெய்து முதலீட்டு தொகையை உள்ளிடவும்

தயவுசெய்து முதலீட்டு தொகையை உள்ளிடவும்

நான் விதிமுறைகள் & நிபந்தனைகள்-ஐ ஏற்றுக்கொள்கிறேன்

தயவுசெய்து சரிபார்க்கவும்