தொழில் கடன் தகுதி வரம்பு மற்றும் ஆவணங்கள்

எங்கள் வணிகக் கடனைப் பெறுவதற்குத் தேவையான அளவுகோல்களைத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.

தகுதி வரம்பு மற்றும் தேவையான ஆவணங்கள்

கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து அடிப்படை அளவுகோல்களை யாராவது பூர்த்தி செய்தால் எங்கள் தொழில் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். நீங்கள் அனைத்து தகுதி வரம்பையும் பூர்த்தி செய்தால், உங்கள் விண்ணப்ப செயல்முறையை நிறைவு செய்ய உங்களுக்கு ஒரு தொகுப்பு ஆவணங்கள் தேவைப்படும்.

அடிப்படை தகுதி வரம்பு

  • நாடு: இந்தியன்
  • தொழில் காலம்: குறைந்தபட்சம் 3 ஆண்டுகள்
  • சிபில் ஸ்கோர்: 685 அல்லது அதற்கு மேல்
  • வேலை நிலை: சுயதொழில் புரிபவர்
  • வயது: 24 முதல் 70 ஆண்டுகள் வரை*

ஆவணங்கள்

  • கேஒய்சி ஆவணங்கள் - ஆதார்/ பான் கார்டு/ பாஸ்போர்ட்/ வாக்காளர் ஐடி
  • தொழில் உரிமையாளர் சான்று
  • மற்ற நிதி ஆவணங்கள்

*கடன் தவணைக்காலத்தின் முடிவில் நீங்கள் 70 வயது அல்லது அதற்கு குறைவானவராக இருக்க வேண்டும்.

தொழில் கடனுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது

தொழில் கடனுக்கு விண்ணப்பிப்பதற்கான படிப்படியான வழிகாட்டி

  1. இந்த பக்கத்தில் உள்ள 'விண்ணப்பிக்கவும்' பட்டனை கிளிக் செய்யவும்.
  2. உங்கள் 10-இலக்க மொபைல் எண் மற்றும் ஓடிபி-ஐ உள்ளிடவும்.
  3. உங்கள் முழுப் பெயர், பான், பிறந்த தேதி மற்றும் அஞ்சல் குறியீடு போன்ற உங்கள் அடிப்படை விவரங்களுடன் விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்.
  4. உங்கள் அனைத்து விவரங்களையும் நீங்கள் உள்ளிட்டவுடன், கடன் தேர்வு பக்கத்தை அணுக தயவுசெய்து 'தொடரவும்' மீது கிளிக் செய்யவும்.
  5. உங்களுக்குத் தேவையான கடன் தொகையை உள்ளிடவும். எங்கள் மூன்று தொழில் கடன் வகைகளில் இருந்து தேர்வு செய்யவும் - டேர்ம், ஃப்ளெக்ஸி டேர்ம் மற்றும் ஃப்ளெக்ஸி ஹைப்ரிட். 
  6. திருப்பிச் செலுத்தும் தவணைக்காலத்தை தேர்வு செய்யவும் – நீங்கள் 12 மாதங்கள் முதல் 96 மாதங்கள் வரையிலான தவணைக்கால விருப்பங்களை தேர்ந்தெடுத்து 'தொடரவும்' என்பதை கிளிக் செய்யவும்’. 
  7. உங்கள் கேஒய்சி-ஐ நிறைவு செய்து உங்கள் தொழில் கடன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

எங்கள் பிரதிநிதி அடுத்த படிநிலைகள் குறித்து உங்களுக்கு வழிகாட்டுவார். உங்கள் ஆவணங்களை சரிபார்த்த பிறகு கடன் தொகை உங்கள் வங்கி கணக்கிற்கு டிரான்ஸ்ஃபர் செய்யப்படும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

வணிகக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான அதிகபட்ச தவணைக்காலம் என்ன?

96 மாதங்கள் வரையிலான எங்களின் நெகிழ்வான திருப்பிச் செலுத்தும் காலத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பஜாஜ் ஃபின்சர்வ் வணிகக் கடனுக்கு தகுதி பெற தேவையான சிபில் ஸ்கோர் என்ன?

எங்கள் வணிகக் கடனுக்கு விண்ணப்பிக்க சிபில் ஸ்கோர் 685 அல்லது அதற்கு மேல் தேவையாகும்.

திருப்பிச் செலுத்துதல் முறை என்றால் என்ன?

என்ஏசிஎச் மேண்டேட் மூலம் உங்கள் வணிகக் கடனை நீங்கள் திருப்பிச் செலுத்தலாம்.

வணிகக் கடன் பெறுவதற்கு நான் ஏதேனும் பத்திரம் வழங்க வேண்டுமா?

எங்கள் வணிகக் கடனுக்கு விண்ணப்பிக்க சொத்து அல்லது தங்க ஆபரணங்கள் போன்ற எந்தவொரு அடமானமும் அல்லது பத்திரமும் நீங்கள் வழங்க வேண்டியதில்லை.

மேலும் காண்பிக்கவும் குறைவாகக் காண்பிக்கவும்