தனிநபர் கடன்

தனிநபர் கடன் பகுதியளவு பணம்செலுத்தல்: இது எவ்வாறு செயல்படுகிறது?

தனிநபர் கடன் பகுதியளவு பணம் செலுத்துதல் என்றால் என்ன & அது எவ்வாறு இயங்குகிறது?

ஒரு தனிநபர் கடன் மீதான பகுதியளவு-பணம்செலுத்தல் என்பது குறைந்தபட்சமாக நீங்கள் 3 EMI களை ஒரே நேரத்தில் செலுத்துவதாகும். இவ்வாறு செய்வதின் நன்மைகள்:

  • உங்கள் தனிநபர் கடனுக்கான EMI களை குறைக்கிறது
  • உங்கள் தனிநபர் கடனுக்கான தவணைக்காலத்தை குறைக்கிறது

தனிநபர் கடன் மீதான பகுதியளவு-பணம்செலுத்தலை நீங்கள் எப்போது மேற்கொள்ள வேண்டும்?

  • உங்களுக்கு ஒரு பெரிய தொகை கிடைத்தால் அதை கொண்டு உங்கள் தனிநபர் கடனை கொடுக்கப்பட்ட தவணைக்குள் நீங்கள் அடைக்கலாம்.
  • இது ஒரு ஊக்கத்தொகை, பாகப்பிரிவினை, பரிசு அல்லது சொத்தை விற்று வரும் தொகையாக இருக்கலாம்.

நீங்கள் மேற்கொண்டு தொடரும் முன் பகுதியளவு-பணம்செலுத்தலின் தாக்கத்தை கணக்கிட்டுக்கொள்ளுங்கள்:

எவ்வாறு ஒரு பகுதியளவு-பணம்செலுத்தல் உங்கள் திருப்பிச் செலுத்துதல் சுமையை குறைக்கிறது என்பதிற்கு எடுத்துக்காட்டு:

  • உதாரணமாக நீங்கள் ரூ. 2 லட்சத்தை 24 மாதங்களுக்கு கடனாக பெறுகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். ஒவ்வொரு மாதமும் உங்கள் EMI ரூ. 9,603 ஆக கணக்கிடப்படும்.
  • நீங்கள் ரூ. 40,000 ஐ பகுதியளவு-பணம்செலுத்தல் செய்ய முடியுமென்றால் உங்கள் EMI ரூ. 7,682 ஆக அதே தவணைக்காலமான 24 மாதங்களுக்கு இருக்கும்.
  • அல்லது நீங்கள் அதே EMI ஆன ரூ. 9603 ஐ தொடர்ந்து செலுத்தி கடனை குறைக்கப்பட்ட தவணைக்காலத்தில் அடைக்கலாம், அதாவது 24 மாதங்களுக்கு பதிலாக 19 மாதங்களில்.

தனிநபர் கடன் மீதான பகுதியளவு-பணம்செலுத்தலுக்கான கட்டணங்கள்

  • பகுதியளவு-பணம்செலுத்தலுக்காக 2% கட்டணம் உங்கள் முதல் EMI எங்களால் பெறப்படுவதற்கு முன் வசூலிக்கப்படும்.
  • ஃப்ளெக்ஸி மற்றும் பியூர் ஃப்ளெக்ஸி கடன்களுக்காக பகுதியளவு-பணம்செலுத்தல் கட்டணங்கள் எதுவும் கிடையாது.
  • ஃப்ளெக்ஸி மற்றும் பியூர் ஃப்ளெக்ஸி கடன்களுக்காக பகுதியளவு-பணம்செலுத்தல் எப்போது வேண்டுமானாலும் செலுத்தலாம்.

பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடன்களை பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்