அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

பத்திரங்கள் மீதான கடன் என்றால் என்ன?

பத்திரங்கள் மீதான கடன்கள் ஓவர்டிராஃப்ட் வசதி வடிவத்தில் கிடைக்கின்றன. இது பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகள், நிலையான மெச்சூரிட்டி திட்டங்கள், யூனிட்கள் மற்றும் பத்திரங்கள் போன்ற நிதி பத்திரங்களுக்கு எதிராக அடமானம் வைப்பதன் மூலம் பெறப்படும் கடனாகும். நீங்கள் கடன் தொகைக்கு எதிராக அடமானமாக முதலீடு செய்த பத்திரங்களை நீங்கள் அடமானம் வைக்கலாம். உங்களுடைய முதலீடுகளை கடினமாக உழைக்கவும் உன்னதமானதாகவும் செயல்படுத்துவதற்கு பத்திரங்கள் மீதான கடன் சிறந்த வழியாகும்.

பத்திரங்கள் மீதான கடனின் நோக்கம் யாவை?

பத்திரங்கள் மீதான கடனுடன், உங்கள் தனிப்பட்ட தேவைகள், எந்தவொரு அவசர நிலைகள் போன்றவற்றை பூர்த்தி செய்ய நீங்கள் உடனடியாக நிதிகளை திரட்டலாம். பத்திரங்கள் மீதான கடனில், நீங்கள் உங்கள் பங்குகள், ஈக்விட்டி பங்குகள், பத்திரங்கள் அல்லது காப்பீட்டு பாலிசிகளை அடமானமாக வைக்கிறீர்கள். ஒரு சில மாதங்களுக்குப் பிறகு நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை பெற நினைக்கும் போது மற்றும் இடையில் உங்களுக்கு பணம் தேவைப்படும் போது நீங்கள் இந்த வசதியை பெறுவது சிறப்பானது.

பத்திரங்கள் மீதான கடனின் சிறப்பம்சங்கள் யாவை?

பஜாஜ் ஃபைனான்ஸ் பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகள் முதல் ஆரம்ப பொது சலுகைகள் வரை ஒப்புதலளிக்கப்பட்ட பத்திரங்களின் விரிவான பட்டியலை வழங்குகிறது, இதன் மூலம் நீங்கள் கடனுக்கான அடமானத்தை பெற முடியும். பத்திரங்கள் மீதான கடன்கள் மீது பஜாஜ் ஃபைனான்ஸ் வழங்கும் சிறப்பம்சங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

 1. ரூ. 10 கோடி வரை கடன் பெறுங்கள்
 2. குறைவான ஆவணம் சரிபார்த்தல்
 3. எக்ஸ்பீரியா போர்ட்டலில் இருந்து எங்கிருந்து வேண்டுமானாலும் உங்கள் கடன் கணக்கிற்கான எளிதான ஆன்லைன் அணுகல்
 4. ஒரு அர்ப்பணிக்கப்பட்ட ரிலேஷன்ஷிப் மேனேஜர் பத்திரங்கள் மீதான கடனை எளிதாக பெற உங்களின் எந்தவொரு கேள்விகளுக்கும் உதவுவார்
 5. உங்கள் வசதிக்கேற்ப பகுதியளவு பணம்செலுத்தல் அல்லது முன்கூட்டியே அடைத்தல்(ஃபோர்குளோசர்) கட்டணங்கள் இல்லாமல் நீங்கள் கடனை திருப்பிச் செலுத்தலாம்.
பத்திரங்கள் மீதான கடன்களின் பல்வேறான வகைகள் யாவை?

பஜாஜ் ஃபைனான்ஸில் இருந்து பின்வரும் பத்திரங்கள் மீதான கடன்களை நீங்கள் கடன் வாங்கலாம்.

 1. பங்குகள் மீதான கடன்
 2. பத்திரங்கள் மீதான கடன்
 3. மியூச்சுவல் ஃபண்ட்கள் மீதான கடன்
 4. காப்பீட்டு பாலிசிகள் மீதான கடன்*
 5. பணியாளர் பங்கு உரிமையாளர் திட்டத்திற்கு (இஎஸ்ஓபி) எதிரான கடன்
 6. ஆரம்ப பொது சலுகைகள் (ஐபிஓ-கள்) மீதான கடன்
 7. நிலையான மெச்சூரிட்டி திட்டங்கள் (எஃப்எம்பி-கள்) மீதான கடன்

குறிப்பு: *பஜாஜ் அலையன்ஸ் யூனிட்-இணைக்கப்பட்ட காப்பீட்டு பாலிசிகள் மட்டுமே

பஜாஜ் ஃபைனான்ஸ் பத்திரங்களுக்கு எதிராக எந்த வகையான கடன்களை வழங்குகிறது?

பஜாஜ் ஃபின்சர்வ் பத்திரங்கள் மீதான கடன்களை டேர்ம் கடன்கள் மற்றும் ஃப்ளெக்ஸி கடன்களாக வழங்குகிறது. ஒரு டேர்ம் கடனில், ஒரு வாடிக்கையாளர் 3, 6, 9 மற்றும் 12 மாதங்கள் போன்ற ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு கடன் வாங்குகிறார் மற்றும் கடன் தவணைக்காலம் முடியும் நேரத்தில் கடன் தொகையை திருப்பிச் செலுத்தலாம். ஒரு ஃப்ளெக்ஸி கடனில், வாடிக்கையாளர்கள் கடன் தவணைக்காலத்தின் போது எந்த நேரத்திலும் தகுதி தொகை வரை திருப்பிச் செலுத்தல் மற்றும் வழங்கலை கோரலாம்.

பத்திரங்கள் மீதான எனது கடனை நான் முன்கூட்டியே அடைக்க முடியுமா?

எந்த சமயத்திலும், கடனுக்கான வட்டி மற்றும் அசல் தொகையைத் திரும்பச் செலுத்திய பின்னர் உங்கள் கடனை முன்முடிப்பு செய்ய முடியும். ஃபோர்குளோசர் கட்டணங்கள் இல்லை.

பத்திரங்களுக்கு எதிராக எனது கடனில் பகுதி பணம் செலுத்தல்கள் செய்ய முடியுமா?

எங்கள் அனைத்து கடன்களும் பகுதியளவு-முன்கூட்டியே செலுத்தும் வசதியுடன் வருகின்றன. இதன் மூலம், கடன் தவணைக்காலத்தின் போது நீங்கள் விரும்பும் பகுதியளவை முன்கூட்டியே செலுத்தலாம்.

பத்திரங்கள் மீதான கடனுக்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கடன் தொகைகள் என்ன?

பஜாஜ் ஃபைனான்ஸில், நீங்கள் குறைந்தபட்ச கடன் தொகை ரூ. 5 லட்சம் மற்றும் அதிகபட்ச கடன் தொகை ரூ. 10 கோடி பெறலாம்.

நான் எப்படி பத்திரங்களுக்கான கடனை விண்ணப்பிப்பது?

பஜாஜ் ஃபைனான்ஸில், நீங்கள் எங்கள் ஆன்லைன் விண்ணப்ப வசதி மூலம் விண்ணப்பிக்கலாம்:

 1. 'ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்' மீது கிளிக் செய்யவும் மற்றும் பெயர், போன் எண், நகரம், இமெயில் ஐடி போன்ற உங்கள் அடிப்படை விவரங்களை உள்ளிடவும்
 2. படிவத்தில் உங்கள் மொத்த போர்ட்ஃபோலியோ மதிப்பு மற்றும் பத்திரங்களின் வகைகளை தேர்ந்தெடுக்கவும்
 3. உங்கள் விண்ணப்பத்தின் நிலை குறித்து இமெயில் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் உறுதிப்படுத்தலை நீங்கள் பெறுவீர்கள்
 4. தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்காக எங்கள் பிரதிநிதிகளில் ஒருவர் உங்களைத் தொடர்புகொண்டு செயல்முறையை மேலும் எடுத்துச் செல்வார்

உங்கள் ஆவணங்களை வெற்றிகரமாக சரிபார்த்த பிறகு, உங்கள் வங்கி கணக்கில் கடன் தொகை மற்றும் உங்கள் ஆன்லைன் கடன் கணக்கின் உள்நுழைவு விவரங்களை நீங்கள் பெறுவீர்கள்.

பஜாஜ் ஃபைனான்ஸில் இருந்து பங்குகள் மீதான கடன் பெறுவதற்கான நன்மைகள் அல்லது பலன்கள் யாவை?

பஜாஜ் ஃபைனான்ஸ் உங்கள் நிதி தேவைகளை விரைவாக பூர்த்தி செய்ய ஒரு கடனை பெற உதவுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட பத்திரங்களின் பரந்த பட்டியலை வழங்குகிறது. பஜாஜ் ஃபைனான்ஸ் மூலம், பங்குகள், பத்திரங்கள், மியூச்சுவல் ஃபண்டுகள், இஎஸ்ஓபி-கள், காப்பீட்டு பாலிசிகள் மற்றும் பலவற்றிற்கு எதிராக அடமானம் வைப்பதன் மூலம் நீங்கள் ரூ. 10 கோடி வரை கடன் பெற முடியும். மேலும், நீங்கள் பகுதியளவு பணம்செலுத்தல் அல்லது முன்கூட்டியே அடைத்தல்(ஃபோர்குளோசர்) கட்டணங்கள் இல்லாமல் உங்கள் கடனை திருப்பிச் செலுத்தலாம். மேலும், உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் ஒரு அர்ப்பணிக்கப்பட்ட ரிலேஷன்ஷிப் மேனேஜர் உங்களுக்கு உதவுவார்.

பங்குகள் மீதான எனது கடனை நான் எப்போது பெறுவேன்?

அனைத்து ஆன்லைன் விண்ணப்பங்களுக்கும், நீங்கள் உடனடி ஒப்புதலைப் பெறுவீர்கள்.

நான் எப்படி கடனைத் திருப்பிச் செலுத்துவது?

நீங்கள் கடனை ஆர்டிஜிஎஸ்/என்இஎஃப்டி/காசோலை மூலம் செலுத்த வேண்டிய வட்டி மற்றும் அசல் கடன் தொகையை திருப்பிச் செலுத்துவதன் மூலம் கடன் தவணைக்காலத்தின் போது எந்த நேரத்திலும் திருப்பிச் செலுத்தலாம். எங்கள் வாடிக்கையாளர் போர்ட்டல் - எக்ஸ்பீரியா மூலம் நீங்கள் கடனை ரீஃபண்ட் செய்யலாம்.

பங்குகள் மீதான கடனின் ஆன்லைன் செயல்முறை யாவை?

பங்குகள் மீதான கடனை ஆன்லைனில் பெறுவது எளிதானது மற்றும் வசதியானது. ஒரு டீமேட் கணக்கில் பங்குகள் டிஜிட்டல் ரீதியாக சேமிக்கப்படுகின்றன; எனவே, நீங்கள் ஆன்லைனில் கடனுக்கு விண்ணப்பிக்க வேண்டும். எங்கள் ஆன்லைன் விண்ணப்ப வசதியுடன், நீங்கள் எந்தவொரு இடத்திலிருந்தும் பங்குகள் மீதான கடனுக்கு விண்ணப்பிக்கலாம் மற்றும் உடனடி கடன் ஒப்புதலைப் பெறலாம்.

ஆன்லைனில் நான் எப்படி பத்திரங்களுக்கான உடனடிக் கடனை விண்ணப்பிப்பது?

கடனுக்கு விண்ணப்பிக்க நீங்கள் இங்கே கிளிக் செய்யலாம். விவரங்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள, 'எப்படி விண்ணப்பிப்பது' பிரிவை காணவும்.

எந்த தகுதி வரம்பின் மீது எனக்கு கடன் அளிக்கப்படும்?

பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட்டின் உள்புற கொள்கைகளின் அடிப்படையில் அனைத்து கடன்களும் ஒப்புதல் அளிக்கப்படுகின்றன.

ஒருவேளை நான் ஆன்லைனில் விண்ணப்பித்தால் எப்போது கடன் பெறுவேன்?

கடன் விண்ணப்பம் ஒப்புதல் பெற்ற நேரத்திலிருந்து 72 மணிநேரங்களுக்குள் கடன் வழங்கப்படுகிறது.

கடன்களை ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதனின் முக்கிய நன்மைகள் யாவை?

எங்கள் தொந்தரவு இல்லாத ஆன்லைன் விண்ணப்ப வசதியுடன் நீங்கள் எந்த இடத்திலிருந்தும் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். நீங்கள் சில விரைவான விவரங்களை நிரப்ப வேண்டும், மற்றும் எங்கள் பிரதிநிதிகள் விரைவில் உங்கள் விண்ணப்பத்திற்கு பதிலளிப்பார்கள்.

நான் ஆன்லைனில் விண்ணப்பித்த என்னுடைய கடனின் நிலையை எப்படி சரிபார்க்கலாம்?

உங்கள் விண்ணப்ப நிலையை சரிபார்க்க, நீங்கள் எங்கள் வாடிக்கையாளர் சேவையை 1800-103-3535 என்ற எண்ணில் அழைக்கலாம்.

நான் அளிக்கும் தகவல் எந்த அளவு பாதுகாப்பானது?

வழங்கப்பட்ட அனைத்து தகவல்களும் பாதுகாப்பானது. ஆன்லைன் விண்ணப்பத்தின் போது வழங்கப்பட்ட தரவு முற்றிலும் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய நாங்கள் அதிநவீன பாதுகாப்பு அமைப்புகளைப் பயன்படுத்துகிறோம்.

இந்தத் தளத்தில் என்னுடைய டெபிட் கார்டை பயன்படுத்துவது பாதுகாப்பானதா?

எம்முடைய வலைதளத்தில் உள்ள எல்லாப் பரிவர்த்தனைகளும் பாதுகாப்பாக உள்ளன. நாங்கள் சிறந்த வகையான பாதுகாப்பு அம்சத்தை பயன்படுத்துகிறோம் மற்றும் இங்கு பரிவர்த்தனைகள் பாதுகாப்பாக செய்யப்படுகின்றன. கூடுதலாக, நாங்கள் எஸ்எஸ்எல் குறியாக்கத்தைப் பயன்படுத்துகிறோம், இது தகவல்களை அங்கீகரிக்கப்படாத நபர்களால் பார்க்கப்படுவதிலிருந்து பாதுகாக்கிறது.

நான் ஒரு பரிவர்த்தனையை எவ்வாறு இரத்து செய்வது மற்றும் ரீஃபண்ட் தொகையை எவ்வாறு பெறுவது?

ஏதாவது முரண்பாடு இருந்தால், அதற்கான காரணங்கள் செல்லத்தக்கதாக இருந்தால், அந்தப் பணத்தை நாங்கள் திருப்பிச் செலுத்துவோம். நீங்கள் எங்களை 1800-103-3535. என்ற எண்ணில் அழைக்கலாம். மேலும் விவரங்களுக்கு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை படிக்கவும்.

பங்குகள் மீதான கடனுக்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கடன் தொகைகள் யாவை?

குறைந்தபட்ச கடன் தொகை ரூ. 15 லட்சம் மற்றும் அதிகபட்ச கடன் தொகை ரூ. 10 கோடி.

ஒரு வாடிக்கையாளருக்கு பஜாஜ் ஃபைனான்ஸ் உடன் டீமேட் கணக்கு இல்லை என்றால், பஜாஜ் ஃபின்சர்விலிருந்து பங்குகள் மீதான கடனை அவர் பெற முடியுமா?

ஆம், நீங்கள் பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட் (என்எஸ்டிஎல்) அல்லது சென்ட்ரல் டெபாசிட்டரி சர்வீசஸ் லிமிடெட் (சிடிஎஸ்எல்)-யில் வைத்திருக்கும் எந்தவொரு டெபாசிட்டரி பங்கேற்பாளருடன் உள்ள பங்குகளை அடமானம் வைக்கலாம்.

வேல்யூ மற்றும் மார்ஜின் கடன் என்றால் என்ன?

அடமானம் வைக்கப்பட்ட பத்திரங்களின் மதிப்பில் 50% வரை நீங்கள் கடன்களை பெறலாம்.

ஒரு வாடிக்கையாளர் எவ்வளவு வட்டி செலுத்த வேண்டும்?

தினசரி அடிப்படையில் தினசரி நிலுவைத் தொகையின் மீது வட்டி கணக்கிடப்படுகிறது, இது மாதாந்திர அடிப்படையில் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும். இது வாடிக்கையாளரின் ஃபோர்ட்போலியோவையும் சார்ந்துள்ளது.

ஒரு வாடிக்கையாளர் தனது போர்ட்ஃபோலியோவின் அனைத்து பத்திரங்களையும் உறுதியளிப்பாரா?

பஜாஜ் ஃபின்சர்வில், எங்களிடம் எங்களது சொந்த ஒப்புதலளிக்கப்பட்ட ஸ்கிரிப் பட்டியல் உள்ளது, மற்றும் அந்த ஸ்கிரிப்களுக்கு எதிராக மட்டுமே கடன் வழங்கப்படுகிறது.

வாடிக்கையாளர் அவரது பத்திரங்களை அவரது நிறுவனத்தின் பெயரில் வைத்திருந்தால், அவற்றிற்கு எதிராக அவர்கள் கடன் பெற முடியுமா?

ஆம், தேவையான தொடர்புடைய ஆவணப்படுத்தலைப் பூர்த்தி செய்த பின்பு, தனது நிறுவனத்தின் பங்குகளை அடமானம் வைப்பதன் மூலம் வாடிக்கையாளரால் கடன் பெற முடியும்.

ஒரு வாடிக்கையாளர் தங்கள் மனைவி, குழந்தைகள் அல்லது பெற்றோர்களின் பெயரில் உள்ள பத்திரங்களை அடமானம் வைக்க முடியுமா?

ஆம், அவர்கள் தங்கள் மனைவி, குழந்தைகள் அல்லது பெற்றோர்களின் பெயரில் உள்ள பத்திரங்கள் மீது கடனை பெற முடியும். இருப்பினும், அவர்கள் அனைவரையும் இணை-கடன் வாங்குபவர்கள்/பாதுகாப்பு வழங்குநர்களாக வைத்திருக்க வேண்டும்.

பிணைய கட்டணங்கள் என்றால் என்ன?

தனிநபர் வைப்பு பங்கேற்பாளர்களுக்கு ஏற்ப பிணைய கட்டணங்கள் மாறுபடும். இருப்பினும், நிலையான கட்டணம் அடமான தொகையில் 0.04% ஆகும்.

ஒரு வாடிக்கையாளர் தங்கள் கடன் தகுதி தொகையை எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும்?

பத்திரங்கள் மீதான ஒரு கடனுக்கான கடன் தகுதி தொகையை கணக்கிடும் போது, பஜாஜ் ஃபின்சர்வ் கிளையண்டின் சுயவிவரம், பிணைய பத்திரங்களின் மதிப்பீடு மற்றும் நடைமுறையில் இருக்கும் கடன்கள் போன்றவற்றை கருத்தில் கொள்கிறது. கூடுதலாக, தனிநபர் சந்திப்பின் போது தகுதி தொகையை தெரிந்து கொள்ள கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கைகள் (ஏஎஸ்எம்) உதவுகிறது.

ஒரு வாடிக்கையாளர் அவரது பத்திரங்களின் கணக்கு அறிக்கைக்காக எப்படி கடனை பெறலாம்?

ஒரு வாடிக்கையாளர் எங்கள் வாடிக்கையாளர் போர்ட்டல் - எக்ஸ்பீரியா மூலம் கணக்கு அறிக்கையை ஆன்லைனில் பெறலாம், அல்லது பத்திரங்கள் மீதான கடன் தொடர்பு மேலாளரை தொடர்பு கொள்ளலாம்.

ஒரு வாடிக்கையாளர் அவரது கடனை எப்படி திரும்பச் செலுத்தலாம்?

பஜாஜ் ஃபின்சர்வ் பெயரில் காசோலை எடுப்பதன் மூலமாகவோ அல்லது ஆர்டிஜிஎஸ்/என்இஎஃப்டி மூலமாகவோ கடன் தவணை காலத்தின் எந்த நேரத்திலும் ஒரு வாடிக்கையாளர் தன் கடன் தொகையை பகுதியளவு அல்லது முழுவதுமாக திரும்ப செலுத்த முடியும். எங்கள் வாடிக்கையாளர் போர்ட்டல் – எக்ஸ்பீரியா மூலமாகவும் வாடிக்கையாளர் அவர்களின் கடனை திருப்பிச் செலுத்தலாம்.

வாடிக்கையாளர் அடமானம் வைக்கப்பட்ட பங்குகள்/பத்திரங்களை பகுதியளவு மீட்க முடியுமா?

முடியும். தேவைக்கேற்ப பராமரிக்கப்படும் மார்ஜின் தொகை அளவிற்கு நிகரான கடன் தொகையை திருப்பி செலுத்திய பிறகு ஒரு வாடிக்கையாளர் அவற்றை மீட்க முடியும்.

திருப்பிச் செலுத்துதல் கட்டணங்கள் யாவை?

பஜாஜ் ஃபின்சர்வில் திருப்பிச் செலுத்தும் கட்டணங்கள் எதுவும் இல்லை.

ஒரு வாடிக்கையாளர் தன் அடமான பத்திரங்களை எவ்வாறு மீட்க முடியும்?

பஜாஜ் நிறுவனத்திடம் கடன் மற்றும் வட்டி தொகையை திருப்பிச் செலுத்திய பிறகு தன் வைப்புத்தொகை பங்கேற்பாளர் மூலம் ஒரு வாடிக்கையாளர் தன் பத்திரத்தை திரும்ப பெறுவதற்கான கோரிக்கையை தொடங்க முடியும்.

ESOP நிதி என்றால் என்ன?

இஎஸ்ஓபி என்பது பணியாளர் பங்கு உரிமைத் திட்டத்தைக் குறிக்கிறது, இது தொழிலாளர்களுக்கு நிறுவனத்தில் உரிமை ஆர்வத்தின் பலனை வழங்குகிறது. ஒதுக்கீட்டின் போது பெறப்படும் பங்குகளை அடகு வைப்பதன் மூலம், இஎஸ்ஓபி-யின் கீழுள்ள தன் பங்குகளை செயல்முறைப்படுத்த ஒரு ஊழியருக்கு ஒரு கடனளிப்பவர் நிதி வழங்குவார்.

யார் ESOP க்கான நிதியை பெற தகுதியானவர்கள்?

பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் எந்தவொரு ஊழியரும் இஎஸ்ஓபி-க்கான நிதிகளைப் பெறலாம்.

இஎஸ்ஓபி நிதிக்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கடன் தொகைகள் யாவை?

இஎஸ்ஓபி நிதிக்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கடன் தொகை ரூ. 10 லட்சம் மற்றும் ரூ. 10 கோடி.

கடன் தகுதி தொகை எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

கடன் தகுதி இதன் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது:

 1. வெஸ்டட் விலை
 2. சந்தை விலை
 3. பங்குகளின் மார்ஜின்
நீங்கள் ஃப்ரிஞ்ச் பெனிஃபிட் டாக்ஸ் (எஃப்பிடி) க்கு நிதியளிக்கிறீர்களா?

ஆம், தேவையான கடன் தொகை மற்றும் எஃப்பிடி தொகை தகுதியான கடன் தொகைக்குள் இருந்தால் நாங்கள் ஃப்ரிஞ்ச் பெனிஃபிட் டாக்ஸ் (எஃப்பிடி)-க்கு நிதியளிக்கிறோம்.

ESOP நிதிக்காக நீங்கள் கருத்தில் கொள்ளும் மார்ஜின் தொகை எவ்வளவு?

ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மார்ஜின் வேறுபடுகிறது. இருப்பினும், இது 30% முதல் 40% வரை இருக்கும்.

இஎஸ்ஓபி நிதிக்கான தவணைக்காலம் யாவை?

இஎஸ்ஓபி நிதிக்கான தவணைக்காலம் 30 நாட்கள் முதல் 180 நாட்கள் வரை இருக்கும்.

இஎஸ்ஓபி நிதி பெறுவதற்கான கட்டணங்கள் யாவை?

இஎஸ்ஓபி நிதி பெறுவதற்கான கட்டணங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:

 1. வட்டி விகிதம்
 2. செயல்முறை கட்டணம்
 3. பிணையம்/ பிணையமற்ற கட்டணங்கள்
 4. டீமேட் கணக்கு திறப்பு கட்டணங்கள்
 5. டீமேட் கணக்கிற்கான ஏஎம்சி கட்டணங்கள்
 6. ஆவணப்படுத்தல் கட்டணங்கள்
இஎஸ்ஓபி நிதி பெறுவதற்கான செயல்முறை யாவை?

பணியாளர் கடன் விண்ணப்ப படிவம் மற்றும் புதிய பவர் ஆஃப் அட்டார்னி (பிஓஏ) அடிப்படையிலான டீமேட் கணக்கு படிவத்தை பூர்த்தி செய்து அவற்றை பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

 1. தனது நிறுவனத்தால் வழங்கப்பட்ட தன் இஎஸ்ஓபி அனுமதி கடிதத்தை ஊழியர் சமர்ப்பிக்க வேண்டும்.
 2. பஜாஜ் ஃபைனான்ஸ் ஆவணங்களை சரிபார்த்து மற்றும் கடன் கணக்கை திறக்கும் மற்றும் இஎஸ்ஓபி நிதிக்கான பிஓஏ டீமேட் கணக்கை திறக்கும்.
 3. ஊழியர் அவரால் தெளிவாக கையொப்பமிடப்பட்ட ஒரு பிணைய படிவத்தை பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு சமர்பிக்க வேண்டும்.
 4. பஜாஜ் ஃபைனான்ஸ் கடன் தகுதி தொகையை கணக்கிடும் மற்றும் அதன் ஊழியருக்கு தெரிவிக்கும்.
 5. இஎஸ்ஓபி நிதிக்காக உருவாக்கப்பட்ட பிஓஏ டீமேட் கணக்கு எண்ணை ஊழியர் குறிப்பிட வேண்டும் மற்றும் இஎஸ்ஓபி-ஐ பயன்படுத்த விண்ணப்பத்தை தொடங்க வேண்டும்.
 6. தகுதி தொகை மற்றும் இஎஸ்ஓபி தேவைகளின் அடிப்படையில் பஜாஜ் ஃபைனான்ஸ் அந்தந்த நிறுவனத்தின் சார்பாக ஆர்டிஜிஎஸ்/காசோலையை வழங்கும்.
 7. பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்திடம் பங்குகளை ஒதுக்கிய தேதியை ஊழியர் தெரிவிக்க வேண்டும்.
 8. பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட்-க்கு ஆதரவாக பிஓஏ இருக்கும் பணியாளரின் பிஓஏ டீமேட் கணக்கில் நிறுவனம் பங்குகளை ஒதுக்க வேண்டும்.
 9. பிஓஏ டீமேட் கணக்கில் பங்குகள் ஒதுக்கப்பட்டவுடன் பஜாஜ் ஃபைனான்ஸ் அந்த பங்குகள் மீது ஒரு அடமானத்தை உருவாக்கும்.
ESOP -இல் எனது கடனிற்கான வட்டி எப்படி கணக்கிடப்படுகிறது?

விண்ணப்ப நேரத்தில் நீங்கள் இஎஸ்ஓபி நிதிக்காக தேர்ந்தெடுத்த தவணைக்காலத்தின் அடிப்படையில் வட்டி கணக்கிடப்படுகிறது. இருப்பினும், கடனை 30 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்தினால் பஜாஜ் ஃபைனான்ஸ் குறைந்தபட்சம் 30 நாட்களுக்கான வட்டியை வசூலிக்கிறது.

வட்டி செலுத்துவதற்கான செயல்முறை என்ன?

பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் ஒவ்வொரு மாதமும் வட்டி வசூலிப்பதற்காக, பிந்தைய தேதியிட்ட காசோலையை வங்கியில் செலுத்தும்.

நான் எனது கடனை எப்படி திருப்பி செலுத்துவது?

பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் மூலம் ஒதுக்கப்பட்ட பத்திரங்களை விற்பனை செய்வதன் மூலம் நீங்கள் உங்கள் கடனை திருப்பிச் செலுத்தலாம். இந்த விஷயத்தில், பஜாஜ் ஃபைனான்ஸ் பத்திரங்களை விற்பனை செய்வதை தொடங்குகிறது மற்றும் அது கடன் மற்றும் வட்டியை உள்ளடக்குகிறது என்று பெறக்கூடியவைகளை தக்கவைக்கிறது. பஜாஜ் ஃபைனான்ஸிற்கு வட்டியுடன் கடன் தொகையை செலுத்துவதன் மூலம் மீதமுள்ள தொகை ஊழியரின் பயனாளி கணக்கில் கிரெடிட் செய்யப்படும். இத்தகைய நிலையில் பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம் கணக்கை சரி செய்து பத்திரங்களை மீட்டு அதை ஊழியரின் பயனர் கணக்கிற்கு பரிமாற்றம் செய்யும்.

ESOP-க்கு நான் பலமுறை விண்ணப்பிக்க முடியுமா?

ஆம், பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் உடன் உங்கள் கடன் கணக்கு செயலில் இருந்தால் நீங்கள் இஎஸ்ஓபி நிதிக்கு பலமுறை விண்ணப்பிக்கலாம்.

ஒரு முகவர் மூலம் நான் இந்த கடனை பெற முடியுமா?

நாங்கள் கீழே உள்ள பங்குதாரர்கள் மூலம் பத்திரங்கள் மீதான எங்கள் ஆன்லைன் கடனை விநியோகிக்கிறோம்:

 1. nj india invest pvt. லிமிடெட்.
 2. prudent corporate advisory services ltd.
 3. aruvek advisory services pvt. ltd. (kuvera)
மேலும் படிக்க குறைவாக படிக்கவும்