நிலையான வைப்புத்தொகை பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஒரு நிலையான வைப்புத்தொகை திட்டம் என்றால் என்ன?

ஒரு நிலையான வைப்புத்தொகை திட்டம் ஒரு சேமிப்புத் திட்டமாகும், பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் உடன் நீங்கள் முதலீடு செய்த தொகைக்கு அந்த நிறுவனம் சரியான கால இடைவெளியில் எளிய வட்டி விகிதத்திலோ அல்லது கூட்டு வட்டி விகிதத்திலோ நீங்கள் சேர்த்துள்ள பணத்திற்கான வட்டியை அளிக்கும். சேமிக்கு கணக்கில் செலுத்தப்பட்ட பணம், ஒரு குறிப்பிட்டக் காலத்திற்கு லாக் செய்யப்படுகிறது மற்றும் வாடிக்கையாளர் பிரீமெச்சூரிட்டி அபராதத்தை ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் மட்டுமே தொகையை வித்ட்ரா செய்ய முடியும் என்றக் காரணத்தால் வட்டி விகிதங்கள் பணத்தை விட அதிகமாக உள்ளன

BFL நிலையான வைப்புத்தொகைத் திட்டத்தில் யாரால் முதலீடு செய்ய முடியும்

தனிநபர்கள், நிறுவனங்கள், இந்துக் கூட்டுக் குடும்பங்கள், கூட்டு-நபர்கள், தனிநபர்களின் குழு, சமூகங்கள், டிரஸ்ட்கள், தனியுரிமைகள், கூட்டுறவுகள், சமூகங்கள் (குடியிருப்பு மற்றும் கடன் கூட்டுறவுகள்), கிளப்கள், பள்ளிகள், பல்கலைக்கழகங்களும் முதலீடு செய்ய முடியும்

BFL நிலையான வைப்புத்தொகைத் திட்டத்தில் யாரால் முதலீடு செய்ய முடியாது

BFL FD திட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களால் முதலீடு செய்ய முடியாது.

கிடைக்கப்பெறும் வட்டி பேஅவுட் தேர்வுகள் என்ன

நாங்கள் ஒட்டுமொத்தம் மற்றும் ஒட்டுமொத்தம் அல்லாத வட்டி செலுத்தும் தேர்வுகளை வழங்குகிறோம்.

• ஒரு ஒட்டுமொத்தம் அல்லாத நிலையான வைப்புத்தொகை திட்டத்தில், வட்டி மாதந்தோறும், காலாண்டிற்கு, அரையாண்டிற்கு அல்லது ஆண்டிற்கு ஒருமுறை செலுத்தப்படும். நீங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் வட்டி செலுத்த விரும்பினால் இந்த திட்டம் வசதியானது.

• 'ஒட்டுமொத்தமான' கால வைப்புத்தொகை திட்டத்தில் வட்டியானது மெச்சூரிட்டி காலத்தில் அசல் தொகையுடன் ஆண்டுதோறும் கணக்கிடப்பட்டு கூட்டுவட்டியுடன் செலுத்தப்படும். இத்திட்டம் குறிப்பிட்ட கால இடைவெளியில் வட்டி செலுத்துதல் தேவைப்படாத மற்றும் பணம் பெருக்கத் திட்டத்தை பயன்படுத்தும் நபருக்கு ஏற்றது. வட்டி ஆண்டுதோறும் கூட்டிணைக்கப்படும் மற்றும் இறுதி பேஅவுட் பொருந்தக்கூடிய நேரத்தில் வரி கழிக்கப்பட்டு வழங்கப்படும்.

பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் வழங்கும் வட்டி விகிதங்கள் என்ன?

ரூ.5 கோடிக்கு மேலான விகிதங்களுக்கு, தயவுசெய்து fd@bajajfinserv.in க்கு மெயில் அனுப்பவும்

Annual rate of interest valid for deposits up to Rs.5 crore (w.e.f 07 December 2019)

புதிய வாடிக்கையாளர்களுக்காக:

தவணைக்காலம் மாதங்களில் குறைந்தபட்ச வைப்புத்தொகை ( ரூ.) ஒட்டுமொத்தம் ஒட்டுமொத்தம் அல்லாத
மாதாந்திரம் ஒவ்வொரு காலாண்டிற்கும் அரையாண்டு வருடாந்திரம்
12 – 23 25,000 7.60% 7.35% 7.39% 7.46% 7.60%
24 – 35 7.90% 7.63% 7.68% 7.75% 7.90%
36 - 60 8.10% 7.81% 7.87% 7.94% 8.10%

குறிப்பிட்ட வகை விண்ணப்பதாரர்களுக்காக ஏதேனும் சிறப்பு விகிதங்கள் உண்டா?

ஆம், கீழே-கொடுக்கப்பட்டுள்ளக் குறிப்பட்ட வகை விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள வட்டி விகிதங்களுக்கும் மேலான சிறப்பு விகிதங்களுக்குத் தகுதியானவர்கள்:

• மூத்த குடிமக்கள் (அதாவது 60 வயதுக்கும் மேற்பட்ட நபர்கள், வயதின் சான்றுக்கு உட்பட்டவர்கள்): ரூ5 (ஐந்து) கோடி வரையிலான வைப்புத்தொகைக்கு ஆண்டுக்கு 0.25% கூடுதல் வட்டி விகிதம் வழங்கப்படும்;

• BFL அமைப்பில் வாடிக்கையாளர் ID கொண்ட தனிப்பட்ட வாடிக்கையாளர்கள்: 0.10% ஆண்டுக்கு என்ற விகிதத்தில் நடப்பு வாடிக்கையாளருக்கு கூடுதல் வட்டி. ₹5 (ஐந்து) கோடி வரை வைப்புத் தொகையில் வழங்கப்படும். கூறப்பட்ட 0.10%-யின் கூடுதல் நன்மையானது, தற்போதைய வைப்பு நிதியை தொடங்கிய தேதியிலிருந்து 15 நாட்கள் இடைவெளியில் உருவாக்கப்பட்ட வைப்பு நிதியின் மீது பொருந்துகிறது என தெளிவாக குறிப்பிடப்படுகிறது. உதாரணமாக, முதலாவது வைப்பு நிதியானது 1st ஜனவரி XXXX உருவாக்கப்பட்டிருந்தால், 0.10% வரை கூடுதல் நன்மையை பெறுவதற்கு, சமீபத்திய FD 15th ஜனவரி XXXX அன்று அல்லது அதற்கு பின் உருவாக்கப்பட வேண்டும்;

• பஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெடின் நடப்பு பாலிசி வைத்திருப்பவர். (பாலிசி ஆவண சான்று சமர்ப்பித்தலுக்கு உட்பட்டது): ₹5 (ஐந்து) கோடி வரைக்குமான வைப்புத் தொகையின் மீது ஆண்டிற்கு 0.10% விகிதத்தில் கூடுதல் வட்டி;

• கீழே பட்டியலிடப்பட்டுள்ள பஜாஜ் குழு நிறுவனங்களின் ஊழியர்கள் ஆண்டுக்கு 0.10% வரை கூடுதல் விகிதத்தைப் பெறுவார்கள் (பஜாஜ் ஹோல்டிங்ஸ் அண்ட் இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட்., மகாராஷ்டிரா ஸ்கூட்டர்ஸ் லிமிடெட்., பஜாஜ் அலையன்ஸ் இன்சூரன்ஸ் கோ. லிமிடெட்., பஜாஜ் ஹவுசிங் ஃபைனானஸ் லிமிடெட்., பஜாஜ் ஃபைனானஸ் செக்யூரிட்டீஸ் லிமிடெட், பஜாஜ் ஃபின்சர்வ் டைரக்ட் லிமிடெட்., முகந்த் லிமிடெட். அண்ட் பஜாஜ் எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்.) ஒரு வைப்புக்கு ₹ 5 கோடி வரை;

மேலே குறிப்பிட்ட சிறப்பு பிரிவின் பயன் ஒரே ஒரு பரிவர்த்தனைக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது என்பதை கவனத்தில் கொள்ளவும். அதாவது பஜாஜ் குழு தொழிலாளர் கூட ஒரு கடன் வாடிக்கையாளராக இருந்தால், அவர் Q-வில் குறிப்பிடப்பட்டுள்ள கார்டு விகிதத்திற்கு மேலே 0.10% தொகையை மட்டுமே பெறுவார் (0.10%+0.10%=0.20% இல்லை).

BFL உடன் எனது கடன்/FD மூடப்பட்டது/முதிர்ச்சியடைந்தது. FD-இல் முதலீடு செய்யும்போது நான் இன்னமும் 0.10% தற்போதைய வாடிக்கையாளருக்கான நன்மையைப் பெற முடியுமா?

ஆம்

நான் ஒரு EMI கார்டை வைத்திருக்கிறேன். FD ல் முதலீடு செய்யும்போது நான் இன்னமும் 0.10% தற்போதைய வாடிக்கையாளருக்கான நன்மையைப் பெற முடியுமா?

ஆம்

நான் பஜாஜ் ஆட்டோ ஃபைனான்ஸ் லிமிடெட்-இல் ஆட்டோ கடனைப் பெற்றுள்ளேன். FD ல் முதலீடு செய்யும்போது நான் இன்னமும் 0.10% தற்போதைய வாடிக்கையாளருக்கான நன்மையைப் பெற முடியுமா?

இல்லை.

FD-யின் புதுப்பித்தலில் நன்மைகள் எதாவது இருக்கின்றதா?

ஆம். கூடுதல் விகிதம் 0.10% வருடத்திற்கு (வைப்புத்தொகை அளவு ₹5 கோடி வரை) சிறப்பு வகை நன்மைக்கு மேல் பொருந்தும். எ.கா. ஒரு மூத்த குடிமகன் தனது வைப்புத்தொகையை 48 மாதங்களுக்கு வருடாந்திர முறைகளில் புதுப்பிக்க விரும்பினால், அவர் புதுப்பிப்பில் 8.35%+0.25%+0.10% = 8.80% பெறுவார்.

FD விகிதங்களை BFL தற்போது மாற்றியுள்ளது. எனது நடைமுறையில் உள்ள வைப்புத்தொகைக்கு இந்தப் புதிய விகிதங்கள் பொருந்துமா

இல்லை. நீங்கள் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் உங்கள் பணத்தை லாக் செய்திருக்கும்வரை, நீங்கள் மெச்சூரிட்டி வரை தொடர்ந்து அந்த விகிதத்தைப் பெறுவீர்கள். நீங்கள் புதிய விகிதத்தைப் பெற விரும்பினால், நாங்கள் எங்களிடம் புதிய வைப்புத்தொகையில் முதலீடு செய்ய உங்களை பரிந்துரைக்கிறோம்.

BFL நிலையான வைப்புத்தொகையின் நன்மைகள் யாவை?

இந்தியாவில் மிகவும் பிரபலமான பிராண்டுகளின் ஒரு முதலீடு, பெருந்திரளான நன்மைகளை bfl நிலையான வைப்புத்தொகை வழங்குகிறது:
• குறைந்தபட்ச வைப்புத்தொகை அளவு ரூ.25000. அதிகபட்ச வரம்பு தொகை இல்லை
• CRISIL மூலம் FAAA மதிப்பிடப்பட்டது/நிலைப்படுத்தப்பட்டது மற்றும் ICRA மூலம் MAAA மதிப்பிடப்பட்டது/நிலைப்படுத்தப்பட்டது, அதாவது உங்கள் பணத்திற்கு உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்படுகிறது
• உங்களது பணம் கவர்ச்சிகரமான உத்தரவாதமான வட்டிவிகிதத்துடன் குறிப்பிட்ட காலத்தில் வளர்வது
• எல்லோருடைய தேவைகளுக்கும் பொருந்தும் பல்வேறு வகையான வட்டி விகிதத்தை கொண்ட, ஏறக்குறைய 12 முதல் 60 மாதங்கள் வரையிலான தவணை காலத்தை தேர்வு செய்யவும்
• இந்தியா முழுவதும் உள்ள 1000 இடங்களில் இருக்கும் கிளைகளின் இருப்பிடம்
• எங்களது வாடிக்கையாளர் போர்ட்டல் – எக்ஸ்பீரியா மீது அனைத்து தயாரிப்பு விவரங்களையும் அணுகலாம்
• மின்னணு அல்லது பிசிகல் முறைகள் மூலம் பணம்செலுத்தும் விருப்பம் உள்ள நெகிழ்வுத்தன்மை
• மூத்த குடிமக்கள், நடப்பு வாடிக்கையாளர்கள் மற்றும் குழு ஊழியர்களுக்கான சிறப்பு விகிதங்கள்

எனக்கு வழங்கப்படும் சேவை வசதிகள் யாவை?

சிறந்த சேவை அனுபவத்தை வழங்குவதில் முழுமையான கவனம் செலுத்துவதன் மூலம் சேவையை அடிப்படையாகக் கொண்ட ஒரு நிறுவனம். சில முக்கிய சிறப்பம்சங்கள்:
• எளிதில் அடையக் கூடிய டச் பாயிண்ட்கள்
• எளிய மற்றும் வெளிப்படையான கொள்கைகள்
• உங்களது தேவைகளை திட்டமிட உதவும் நிரந்தர வைப்பு நிதிக்கான ஆன்லைன் கால்குலேட்டர் தயாராக உள்ளது
• மெச்சூரிட்டி-க்கான கோரிக்கையின்படி, ஒரு நிலையான வைப்புத்தொகையை முன்பதிவு செய்யும் போது வாடிக்கையாளர்களுக்கு விரிவான SMS மற்றும் இமெயில் தகவல்தொடர்பு அனுப்பப்படும்
• நீங்கள் சமர்ப்பித்த அனைத்து ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல், எளிதில் அணுகக்கூடிய வகையில் ஆன்லைனில் கிடைக்கும்
• ஒட்டுமொத்தத்தில் ஒரு மகிழ்ச்சியான அனுபவம்

ஒரு நிலையான வைப்பு கணக்கைத் தொடங்க நான் ஏதாவது பரிந்துரைகளை வழங்க வேண்டுமா?

பரிந்துரைகள் தேவையில்லை.

நான் எனது பணம் செலுத்தலைச் செய்ய பயன்படுத்தக்கூடிய பல்வேறு முறைகள் என்ன?

காசோலை,டெபிட் கார்டு (தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளில் மட்டும்) அல்லது RTGS/NEFT

பணம் செலுத்தி நான் வைப்புக் கணக்கு திறக்க முடியுமா?

இல்லை

ஒரு நிலையான வைப்புதொகை கணக்கைத் தொடங்குவதற்கு நான் சமர்ப்பிக்க வேண்டிய பல்வேறு ஆவணங்கள் யாவை?

தனிநபருக்கான:
1. சமீபத்திய புகைப்படம்
2. VID (விர்ச்சுவல் ஐடென்டிஃபிகேஷன் நம்பர்)/ ஆதார் கார்டு /ஆதாரில் சேர்ப்பதற்கான விண்ணப்பத்தின் சான்று
3. PAN கார்டு
அல்லது
3. படிவம் 60 + கீழே குறிப்பிடப்பட்டுள்ள OVD-களில் ஏதேனும் 1 (அதிகாரப்பூர்வமாக செல்லுபடியாகும் ஆவணங்கள்):
• செல்லுபடியான பாஸ்போர்ட்
• செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம்
• வாக்காளர் அடையாள அட்டை
• NREGA வேலை அட்டை
• தேசிய மக்கள் தொகை பதிவேடு மூலம் வழங்கப்பட்ட பெயர் மற்றும் முகவரி கொண்டுள்ள கடிதம்

தனிநபர் உரிமையாளருக்கு:
1. உரிமையாளரின் சமீபத்திய புகைப்படம்
2. VID (விர்ச்சுவல் ஐடென்டிஃபிகேஷன் நம்பர்) / ஆதார் அட்டை / உரிமையாளரின் ஆதார் பதிவு விண்ணப்பம் ஆதாரம்
3. உரிமையாளரின் PAN கார்டு
அல்லது
3. உரிமையாளரின் 60 படிவம் + கீழே குறிப்பிடப்பட்ட OVDகளில் எதாவது 1 ( அதிகாரப் பூர்வமாக செல்லுபடியாகும் ஆவணங்கள்):
• செல்லுபடியான பாஸ்போர்ட்
• செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம்
• வாக்காளர் அடையாள அட்டை
• NREGA வேலை அட்டை
• தேசிய மக்கள் தொகை பதிவேடு மூலம் வழங்கப்பட்ட பெயர் மற்றும் முகவரி கொண்டுள்ள கடிதம்
4. தனிநபர் வணிகத்தின் PAN கார்டு
5. தனிநபர் உரிமையாளரின் பின்வரும் ஆவணங்களில் ஏதேனும் 2:
• பதிவுச் சான்றிதழ்
• கடை மற்றும் நிறுவன சட்டத்தின் கீழ் நகராட்சி அமைப்புகள் வழங்கிய சான்றிதழ் / உரிமம்
• GST அல்லது வருமான வரி தாக்கல்
• GST சான்றிதழ் (தற்காலிகமானது/நிரந்தரமானது)
• தொழில் வரி அமைப்புகள் வழங்கிய சான்றிதழ் / பதிவு ஆவணம்
• சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட எந்தவொரு தொழில்முறை அங்கத்தால் தொடர்புடைய நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நடைமுறை உரிமம் / சான்றிதழ்
• நிறுவனத்தின் பெயரில் வருமானம் காட்டப்பட்டு வருமானவரி அதிகாரிகளால் ஒப்புதல் அளிக்கப்பட்டு/ஏற்றுக் கொள்ளப்பட்ட தனிநபர் வணிகத்தின் முழுமையான வருமான வரி தாக்கல் (வெறும் ஒப்புகை அல்ல)
• வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் வழங்கிய ஏற்றுமதி-இறக்குமதி குறியீடு
• இரண்டு மாதங்களுக்கு மேல் காலாவதி இல்லாத எதாவது சேவை வழங்குனரின் பயன்பாட்டு பில்கள் (மின்சாரம், தண்ணீர், குழாய் எரிவாயு, போஸ்ட் பெய்டு மொபைல், டெலிபோன் பில்)

HUF-களுக்கு:
1. கர்தாவின் சமீபத்திய புகைப்படம்
2. VID (விர்ச்சுவல் ஐடென்டிஃபிகேஷன் நம்பர்) / ஆதார் அட்டை / கர்தாவின் ஆதார் பதிவுக்கான விண்ணப்பத்தின் ஆதாரம்
3. கர்தாவின் PAN கார்டு
அல்லது
3. கர்தாவின் 60 படிவம் + கீழே குறிப்பிடப்பட்டுள்ள OVD களில் ஏதாவது 1 (அதிகாரப்பூர்வமாக செல்லுபடியாகும் ஆவணங்கள்):
• செல்லுபடியான பாஸ்போர்ட்
• செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம்
• வாக்காளர் அடையாள அட்டை
• NREGA வேலை அட்டை
• தேசிய மக்கள் தொகை பதிவேடு மூலம் வழங்கப்பட்ட பெயர் மற்றும் முகவரி கொண்டுள்ள கடிதம்
4. HUF-இன் PAN கார்டு
5. பத்திரம்
6. HUF இன் மீதான இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகாத எந்தவொரு சேவை வழங்குனரின் பயன்பாட்டு பில்கள் (மின்சாரம், தண்ணீர், குழாய் எரிவாயு, போஸ்ட் பெய்டு மொபைல், டெலிபோன் பில்)

பதிவுசெய்த கூட்டு நிறுவனங்களுக்கு:
1. அனைத்து பங்குதாரர்களின் சமீபத்திய புகைப்படம்
2. VID (விர்ச்சுவல் ஐடென்டிஃபிகேஷன் நம்பர்) / ஆதார் அட்டை / அனைத்து பங்குதாரர்களின் ஆதார் பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தின் சான்று
3. அனைத்து பங்குதாரர்களின் PAN கார்டு
அல்லது
3. அனைத்து பங்குதாரர்களின் 60 படிவம் + கீழே குறிப்பிடப்பட்டுள்ள OVD களில் ஏதாவது 1 (அதிகாரப்பூர்வமாக செல்லுபடியாகும் ஆவணங்கள்):
• செல்லுபடியான பாஸ்போர்ட்
• செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம்
• வாக்காளர் அடையாள அட்டை
• NREGA வேலை அட்டை
• தேசிய மக்கள் தொகை பதிவேடு மூலம் வழங்கப்பட்ட பெயர் மற்றும் முகவரி கொண்டுள்ள கடிதம்
4. பதிவுசெய்த கூட்டாண்மையின் PAN கார்டு
5. பத்திரம்
6. பதிவு செய்த கூட்டாண்மையின் மீதான இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகாத எந்தவொரு சேவை வழங்குனரின் பயன்பாட்டு பில்கள் (மின்சாரம், தண்ணீர், குழாய் எரிவாயு, போஸ்ட் பெய்டு மொபைல், டெலிபோன் பில்)
7. அதன் சார்பாக பரிவர்த்தனைகள் செய்ய அதிகாரம் உள்ள நபருக்கு வழங்கப்பட்ட அதிகார பத்திரம்
8. பதிவுச் சான்றிதழ்

பதிவு செய்யப்படாத கூட்டாண்மை நிறுவனங்களுக்கு:
1. அனைத்து பங்குதாரர்களின் சமீபத்திய புகைப்படம்
2. VID (விர்ச்சுவல் ஐடென்டிஃபிகேஷன் நம்பர்) / ஆதார் அட்டை / அனைத்து பங்குதாரர்களின் ஆதார் பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தின் சான்று
3. அனைத்து பங்குதாரர்களின் PAN கார்டு
அல்லது
3. அனைத்து பங்குதாரர்களின் 60 படிவம் + கீழே குறிப்பிடப்பட்டுள்ள OVD களில் ஏதாவது 1 (அதிகாரப்பூர்வமாக செல்லுபடியாகும் ஆவணங்கள்):
• செல்லுபடியான பாஸ்போர்ட்
• செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம்
• வாக்காளர் அடையாள அட்டை
• NREGA வேலை அட்டை
• தேசிய மக்கள் தொகை பதிவேடு மூலம் வழங்கப்பட்ட பெயர் மற்றும் முகவரி கொண்டுள்ள கடிதம்
4. பதிவுசெய்த கூட்டாண்மையின் PAN கார்டு
5. பத்திரம்
6. பதிவு செய்த கூட்டாண்மையின் மீதான இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகாத எந்தவொரு சேவை வழங்குனரின் பயன்பாட்டு பில்கள் (மின்சாரம், தண்ணீர், குழாய் எரிவாயு, போஸ்ட் பெய்டு மொபைல், டெலிபோன் பில்)
7. அதன் சார்பாக பரிவர்த்தனைகள் செய்ய அதிகாரம் உள்ள நபருக்கு வழங்கப்பட்ட அதிகார பத்திரம்

பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளைகள்:
1. அனைத்து அறங்காவலர்களின் சமீபத்திய புகைப்படம்
2. VID (விர்ச்சுவல் ஐடென்டிஃபிகேஷன் நம்பர்) / ஆதார் அட்டை / அனைத்து அறங்காவலர்களின் ஆதார் பதிவு செய்வதற்கான விண்ணப்பம்
3. அனைத்து அறங்காவலர்களின் PAN கார்டு
அல்லது
3. அனைத்து அறங்காவலர்களின் 60 படிவம் + கீழே குறிப்பிடப்பட்ட OVD களில் ஏதேனும் 1 (அதிகாரப்பூர்வமாக செல்லுபடியாகும் ஆவணங்கள்):
• செல்லுபடியான பாஸ்போர்ட்
• செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம்
• வாக்காளர் அடையாள அட்டை
• NREGA வேலை அட்டை
• தேசிய மக்கள் தொகை பதிவேடு மூலம் வழங்கப்பட்ட பெயர் மற்றும் முகவரி கொண்டுள்ள கடிதம்
4. அறக்கட்டளையின் PAN கார்டு
5. பத்திரம்
6. அறக்கட்டளையின், இரண்டு மாதங்களுக்கு மேல் காலாவதி இல்லாத எதாவது சேவை வழங்குனரின் பயன்பாட்டு பில்கள் (மின்சாரம், தண்ணீர், குழாய் எரிவாயு, போஸ்ட் பெய்டு மொபைல், டெலிபோன் பில்)
7. அதன் சார்பாக பரிவர்த்தனைகள் செய்ய அதிகாரம் உள்ள நபருக்கு வழங்கப்பட்ட அதிகார பத்திரம்
8. பதிவுச் சான்றிதழ்

பதிவு செய்யப்படாத சங்கங்கள்/தனிநபர் அமைப்புகள்/பதிவு செய்யப்படாத அறக்கட்டளைகளுக்கு:
1. அனைத்து அதிகார நபர்களின் சமீபத்திய புகைப்படம்
2. VID (விர்ச்சுவல் ஐடென்டிஃபிகேஷன் நம்பர்) / ஆதார் அட்டை / அனைத்து அதிகார நபர்களின் ஆதாரை பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தின் ஆதாரம்
3. அனைத்து அதிகார நபர்களின் PAN கார்டு
அல்லது
3. அனைத்து அதிகார நபர்களின் 60 படிவம் + கீழே குறிப்பிடப்பட்டுள்ள OVD களில் ஏதேனும் 1 (அதிகாரப்பூர்வமாக செல்லுபடியாகும் ஆவணங்கள்):
• செல்லுபடியான பாஸ்போர்ட்
• செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம்
• வாக்காளர் அடையாள அட்டை
• NREGA வேலை அட்டை
• தேசிய மக்கள் தொகை பதிவேடு மூலம் வழங்கப்பட்ட பெயர் மற்றும் முகவரி கொண்டுள்ள கடிதம்
4. நிறுவனத்தின் PAN கார்டு
5. பத்திரம்
6. அறக்கட்டளையின், இரண்டு மாதங்களுக்கு மேல் காலாவதி இல்லாத எதாவது சேவை வழங்குனரின் பயன்பாட்டு பில்கள் (மின்சாரம், தண்ணீர், குழாய் எரிவாயு, போஸ்ட் பெய்டு மொபைல், டெலிபோன் பில்)
7. அதன் சார்பாக பரிவர்த்தனைகள் செய்ய அதிகாரம் உள்ள நபருக்கு வழங்கப்பட்ட அதிகார பத்திரம்
8. பதிவுச் சான்றிதழ்
9. நிர்வாக அமைப்பின் தீர்மானம்

பள்ளிகளுக்கு:
1. தீர்மானத்தின் நகல்
2. அமைப்பு முறையேடு மற்றும் செயல்முறை விதிகள் / துணை விதிகளின் பிரதி
3. சான்றளிக்கப்பட்ட உண்மையான பதிவு சான்றிதழ் ( சங்கங்களின் பதிவுச் சட்டம், 1860 இன் கீழ் பதிவு செய்யப்பட்ட சங்கம் அல்லது மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைமுறையில் உள்ள தொடர்புடைய பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் பட்சத்தில்)
4. VID (விர்ச்சுவல் ஐடென்டிஃபிகேஷன் நம்பர்) / ஆதார் அட்டை / அனைத்து அதிகார நபர்களின் ஆதாரை பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தின் ஆதாரம்
5. அனைத்து அதிகார நபர்களின் PAN கார்டு
அல்லது
5. அனைத்து அதிகார நபர்களின் 60 படிவம் + கீழே குறிப்பிடப்பட்டுள்ள OVD களில் ஏதேனும் 1 (அதிகாரப்பூர்வமாக செல்லுபடியாகும் ஆவணங்கள்):
• செல்லுபடியான பாஸ்போர்ட்
• செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம்
• வாக்காளர் அடையாள அட்டை
• NREGA வேலை அட்டை
• தேசிய மக்கள் தொகை பதிவேடு மூலம் வழங்கப்பட்ட பெயர் மற்றும் முகவரி கொண்டுள்ள கடிதம்
6. சங்கத்தின் முகவரிக்கான சான்றுக்கு கீழ்க்கண்ட ஏதாவது ஒன்றை பெற வேண்டும்
• கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் வழங்கிய சான்றிதழின் பிரதி.
• ஏற்கனவே உள்ள வங்கியாளரால் வழங்கப்பட்ட வங்கி சான்றிதழ்.
• முந்தைய 3 மாதங்களின் வங்கிக் கணக்கு அறிக்கை.
• மத்திய / மாநில அல்லது வேறு எந்த உள்ளூர் அரசாங்க அதிகாரிகளால் வழங்கப்பட்ட முகவரி கொண்ட பதிவு சான்றிதழ்

நிறுவனங்களுக்கு:
1. உருவாக்கம்/பதிவு சான்றிதழ் மற்றும் அமைப்பு முறையேடு & செயல்முறை விதிகள்
2. அதன் நபருக்கு அதிகாரம் அளித்து பரிமாற்றங்கள் / உடன்படிக்கையில் ஈடுபட்டு அதன் சார்பாக வங்கிக் கணக்குகளை திறந்து செயல்பட இயக்குநர்கள் குழு இயற்றிய தீர்மானம், அவர்களின் பெயர் மற்றும் மாதிரி கையொப்பம் (கள்)
3. நிறுவனத்தின் PAN ஒதுக்கீட்டு கடிதம் / PAN கார்டு
4. சமீபத்திய தொலைபேசி / மின்சார கட்டணம் பில் அல்லது வங்கிக் கணக்கு அறிக்கை மற்றும் ரத்து செய்யப்பட்ட காசோலை
5. இயக்குநர்கள், ஊழியர்கள் மற்றும் அத்தகைய பரிவர்த்தனைகளுக்கு அங்கீகாரம் பெற்ற நபர்கள் மற்றும் அவர்களின் முகவரி அடையாளம் காணும் அதிகாரபூர்வமாக செல்லுபடியாகும் ஆவணம் (PAN, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை).
• செல்லுபடியான பாஸ்போர்ட்

கூட்டுறவு வங்கிகளுக்கு:
1. RBI ஆல் வழங்கப்பட்ட வங்கி உரிமம்
அல்லது
1. சங்கத்தின் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட சான்றிதழ்.
2. விதிகள் மற்றும் துணை சட்டங்களின் சான்றளிக்கப்பட்ட "உண்மை மற்றும் புதுப்பித்தல்" நகல்
அல்லது
2. அதன் இயக்குனர் ஒருவரால் கையொப்பமிடப்பட்ட வங்கியின் அமைப்பு முறையேடு/செயல் விதிமுறைகள்.
3. அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிடுபவர்களின் விவரங்களுடன் சேர்த்து கையொப்பமிடப்பட்ட வாரியத்தின் தீர்மானம்.
4. வங்கியின் PAN கார்டு நகல்
5. அங்கீகாரம் பெற்ற கையொப்பம் செய்பவர்களின் KYC - ஒரு சமீபத்திய பாஸ்போர்ட் அளவு வண்ண புகைப்படம், ஆதார் எண்/ ஆதார் பதிவு செய்வதற்கான விண்ணப்ப ஆதாரம் மற்றும் PAN / படிவம் 60

PAN கார்டு மற்றும் ஆதார் கொண்டுள்ள ஒரு மூத்த குடிமகன் வாடகை தங்குமிடத்திற்கு மாறியுள்ளார். வாடகை ஒப்பந்தம் அவர்களின் மகனின் பெயரில் உள்ளது, மற்றும் ஒப்பந்தத்தில் மூத்த குடிமகனின் (பெற்றோரின்) பெயர் இல்லை. அந்த சமயத்தில், மூத்த குடிமக்களிடம் இருந்து அவரது FD -ஐ செயல்முறைப்படுத்த என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்?

PAN கார்டு மற்றும் ஆதார் தவிர, கீழே உள்ள ஸ்கிரீன்ஷாட்-யில் காட்டப்பட்டுள்ளபடி FD விண்ணப்ப படிவத்தின் 1 பக்கத்தில் மூத்த குடிமக்கள் அவரது “தற்போதைய/தொடர்புகொள்ளும் முகவரியை” நிரப்ப வேண்டும் மற்றும் “தற்போதைய/தொடர்புகொள்ளும் முகவரியும் மற்றும் நிரந்திர முகவரியும் ஒரே முகவரியா?” என்பதில் “இல்லை” என்பதை டிக் செய்ய வேண்டும். வாடிக்கையாளர் மீது பொறுப்பு உள்ளதால் அவர் தனது தொடர்பு முகவரியை சமர்ப்பிக்கத் தேவையில்லை.

படம்

ஒரு நிரந்தரவைப்பு நிதியைத் தொடங்கும்போது ஏதேனும் செயல்முறைக் கட்டணம்/வேறு ஏதாவது கட்டணம் விதிக்கப்படுகிறதா?

உங்கள் நிலையான வைப்பு கணக்கைத் திறக்க கட்டணம் எதுவும் கிடையாது.

வரி விலக்கிற்கு நான் இந்த FD முதலீட்டை காண்பிக்க முடியுமா?

வரி விலக்கு நன்மைக்காக 80C பிரிவின் கீழ் பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் FD முதலீட்டை ஒரு முதலீடாக காண்பிக்க முடியாது.

எனது வட்டி தொகை எப்போது செலுத்தப்படும்?

ஒட்டுமொத்தம்-அல்லாத - திட்டத்திற்கான வட்டி செலுத்துதலின் வரைவுத் தன்மையைப் பொறுத்து வாடிக்கையாளருக்கு வட்டி செலுத்தப்படும்
மாத விருப்பத்தேர்வு - ஒவ்வொரு மாதத்தின் இறுதி தேதி. FD எடுக்கப்பட்ட பிந்தைய மாதத்தின் கடைசி நாளில் முதல் வட்டி செலுத்தப்படும். எ.கா. வாடிக்கையாளர் 25th மார்ச்-யில் FD-ஐ தொடங்கி மாத வட்டிக்கு கோரிக்கை விடுத்திருந்தால், அடுத்த மாதம் இறுதியில் அதாவது 30th ஏப்ரல், 31st மே -யில் அதே பணம் செலுத்தப்படும்.
காலாண்டு விருப்பத்தேர்வு - ஜூன் 30, செப்டம்பர் 30, டிசம்பர் 31 மற்றும் மார்ச் 31
அரை ஆண்டு விருப்பத்தேர்வு - செப்டம்பர் 30 மற்றும் மார்ச் 31
ஆண்டு விருப்பத்தேர்வு - மார்ச் 31 ஒட்டுமொத்த திட்டம் - வட்டி ஆண்டுதோறும் கூட்டிச் சேர்க்கப்படும் மற்றும் மெச்சூரிட்டி தொகை வரி விதிப்புக்கு உட்படுத்தப்படும். மெச்சூரிட்டி மீது வட்டி செலுத்தப்படும்.

தொகை, தவணைக்காலம், வட்டி % முதலான FD விவரங்களை நான் எங்கு பெற முடியும்?

விவரங்களுக்காக எங்கள் வாடிக்கையாளர் போர்ட்டல் எக்ஸ்பீரியாவில் இருக்கும் உங்கள் FDR அல்லது கணக்கு அறிக்கையை பார்க்கலாம்.

நான் எனது FD சான்றிதழ் /ரசீதை தொலைத்து விட்டேன் மற்றும் புதிதாக ஒன்று வேண்டும்

எங்கள் பதிவுகளில் புதுப்பிக்கப்பட்டிருக்கும் முகவரிக்கு அசல் FD இரசீதுகள் கூரியர் செய்யப்படும். ஒருவேளை, மாற்று FD ரசீது தேவைப்பட்டால், எங்களது கிளையில் FD கணக்கு வைத்திருக்கும் அனைவரும் கையெழுத்திட்ட எழுத்து மூலமான கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

எனது FD-இல் உள்ள நாமினி விவரங்களை மாற்றவோ/புதிய நாமினியை இணைக்கவே நான் விரும்புகிறேன்.

நாமினி பெயர் மாற்றம் செய்வதற்கான ஏதாவது கோரிக்கைகாக, https://www.bajajfinserv.in/fixed-deposit-terms-and-conditions இதில் இருக்கும் நாமினேஷன் படிவத்தை நிரப்பி/சமர்பிக்கவும் முறையாக கையொப்பமிட்டு, எங்களுடைய கிளைக்கு/உங்கள் RM/புரோக்கரிடம் சமர்ப்பிக்க வேண்டும், அடிப்படை மாற்றங்கள் எங்கள் பதிவில் செய்யப்படும்

வைப்புத்தொகையாளருக்கு எப்போது TDS சான்றிதழ் வழங்கப்படும்?

ஒவ்வொரு காலாண்டிலும் வைப்பீட்டாளருக்கு TDS சான்றிதழ் வழங்கப்படும்.

எனது நிரந்தர வைப்பு நிதி ரசீதை நான் எவ்வளவு விரைவில் பெறுவேன்?

தனது வைப்புக் கணக்கை உருவாக்கிய 3 வாரங்களுக்குள் அதிகபட்சமாக கூரியர் மூலம் வைப்புத்தொகையாளர் நிலையான வைப்புத்தொகை ரசீதை பெறுவார்

என்னால் எனது நிலையான வைப்புத் தொகை ரசீதை கண்காணிக்க முடியவில்லை. தயவுசெய்து உதவுங்கள்.

எங்கள் இணையதளத்தில் FDR கண்காணிப்பு அமைப்பு விரைவில் கிடைக்கும். எங்களது வாடிக்கையாளர் இணையதளமான எக்ஸ்பீரியாவில் FD-கான சான்றிதழின் விர்ச்சுவல் நகல் உள்ளது. எனவே இதனை ஆன்லைன் மூலம் காண முடியும்.

எனது கணக்கில் வரவு வைக்கப்படும் வட்டித் தொகை எவ்வளவு?

வாடிக்கையாளர் பெற்றுக்கொண்டுள்ள திட்டத்தின் அடிப்படையில், எங்களுடன் பதிவுசெய்து கொண்டுள்ள வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் வட்டித் தொகை செலுத்தப்படும். ஒரு வாடிக்கையாளர் கணக்கில் வட்டி செலுத்தப்பட்டபின், அதற்கான செய்தி SMS/இமெயில் வழியாக வாடிக்கையாளருக்கு அனுப்பப்படும்.
பெறப்பட்ட வட்டித் திட்டம் மற்றும் செலுத்தத்தக்க வட்டியின் விவரங்கள் ஆகியவற்றின் விவரங்களை பற்றி அறிய உங்கள் கணக்கு அறிக்கையைப் பார்க்கவும்.

முதிர்ச்சித் தொகை எவ்வாறு பரிமாறப்படும்?

முதிர்வு தொகை நேஷனல் எலெக்ட்ரானிக் ஃபண்ட் டிரான்ஸ்ஃபர்(தேசிய மின்னணு நிதி பரிமாற்றம்)/ரியல் டைம் கிராஸ் செட்டில்மென்ட் (அசல் நேர கடன் தீர்வு) முறைகள் மூலம் விண்ணப்பப்படிவத்தில் குறிப்பிடப்பட்ட வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படும். மொத்தத் தொகையும் வைப்பு முதிர்வு தேதி அன்று மாற்றப்படும். ஒருவேளை மின்னனு கணக்கு பரிமாற்றம் பவுன்ஸ் ஆனால், வைப்பாளரை அழைப்பு, இமெயில் மற்றும் எழுத்துப்பூர்வமான கடிதத்தின் மூலம் தொடர்பு கொண்டு அவரை எங்களிடம் பதிவுசெய்த அவரின் வங்கி கணக்கு விவரங்களை புதுப்பிக்குமாறு கோரப்படும்.

நான் எனது வங்கி கணக்கு விவரங்களை மாற்றவேண்டுமா?

https://www.bajajfinserv.in/forms-centre-யிலிருந்து வங்கி விவரங்களை மாற்றுவதற்கான படிவத்தை பதிவிறக்கம் செய்து விரவங்களை நிரப்பி அதனுடன் FDR மற்றும் இரத்து செய்யப்பட்ட காசோலையை இணைத்து உங்கள் RM/புரோக்கரிடம் சமர்ப்பியுங்கள்.

நான் FD -இல் எனது வட்டியைப் பெறவில்லை

படிநிலை 1: எங்களுடன் பதிவு செய்துள்ள வங்கிக் கணக்கு அறிக்கையை நீங்கள் கவனமாக சரிபார்த்துள்ளீர்கள் என்பதை உறுதிசெய்யவும். நீங்கள் வட்டியை பெறவில்லை என உறுதிசெய்யப்பட்டால், படிநிலை 1:-க்கு தொடரவும்.
படிநிலை 2: தயவுசெய்து மேலே குறிப்பிட்டுள்ள வட்டி வைப்பு தேதியை சரிபார்க்கவும். நீங்கள் வட்டியை பெற உறுதிசெய்யப்பட்டும், ஆனால் பெறவில்லை என்றால் வழிமுறை 3-க்கு தொடரவும்.
படிநிலை 3: FDR எண் மற்றும் வட்டி பெறப்படாத மாதம்/காலாண்டு/ஆண்டை குறிப்பிட்டு wecare@bajajfinserv.in க்கு தயவுசெய்து மெயில் அனுப்பவும்.

எனக்குப் பணம் தேவை என்றால், எனது FDக்கு எதிராக, குறைந்த விகிதத்தில் எனக்கு கடன் கிடைக்குமா?

3 மாதங்கள் முன்பதிவு செய்த பின்னர், வைப்புத்தொகையாளர்கள் கடன் தொகையைப் பெற முடியும். இது 75% வைப்புத் தொகையாக இருக்கும், மேலும் வட்டி விகிதம் வைப்புநிதி துவங்கியபோது இருந்த வட்டி விகிதத்தை விட 2% அதிகமாக இருக்கும். தவணை காலம் FD-இல் எஞ்சிய மெச்சூரிட்டி இருக்கும்.

FD மீதான கடனுக்கு எப்படி விண்ணப்பிப்பது 

உங்களுக்கு FD-க்கான கடன் தேவை என்றால் உங்கள் RM/கிளை உடன் தயவுசெய்து தொடர்பில் இருங்கள்

FD-க்காக பெறப்பட்ட கடனை என்னால் அளிக்க முடியவில்லை என்றால் எனது FD பாதிக்கப்படுமா?

FD மீது எந்த தாக்கமும் ஏற்படாது. FD மெச்சூரிட்டியின் போது கிடைத்த தொகை கொண்டு அனைத்து நிலைவையிலுள்ள கடன்களும் சரிசெய்யப்படும், மேலும் மீதமுள்ள இருப்பு வைப்பாளருக்குச் செலுத்தப்படும்.

எனக்கு BFL -இல் ஏற்கனவே ஒரு கடன் (எ.கா.வீட்டுக் கடன்) உள்ளது மற்றும் நான் BFL FD-இல் முதலீடு செய்துள்ளேன். எனினும், பெறப்பட்ட கடனிற்கு என்னால் சேவையளிக்க முடியவில்லை. எனது FD பாதிக்கப்படுமா?

FD மீது எந்த தாக்கமும் ஏற்படாது. FD-க்காக செலுத்தவேண்டிய தவணைகளை சரிசெய்ய முடியாது. நீங்கள் FD ஐ ப்ரீமெச்சுர் செய்யவும் மற்றும் நிலுவையிலுள்ளக் கட்டணங்களைச் செலுத்தவும் தேர்வு செய்யுங்கள்.

FD -க்கான கடன் அதிகப்படியான வசதியை அளிக்குமா?

இல்லை, EMI அங்கம் அசல் மற்றும் வட்டியை கொண்டுள்ளது.

நான் இப்போது எனது FD -க்கான முழுக் கடனையும் திரும்பச் செலுத்திவிட்டேன். FD-க்கு எதிராக மீண்டும் ஒருமுறை நான் கடன் பெற முடியுமா?

ஆம், FD கடனை முன் கூட்டியேச் செலுத்துவது உங்களை முழுவதுமாக ஒரு புதிய FD கடனைப் பெற தகுதியாக்குகிறது.

FD-க்கு எதிராக நான் செலுத்தும் கடனின் EMI -யில் எதவாது வருமான வரி விலக்கு பெற முடியுமா?

இல்லை

சில NBFC/வங்கியின் FD க்கு எதிராக உங்களிடமிருந்து நான் கடன் பெற முடியுமா?

இல்லை. BFL நிலையான வைப்புத்தொகைக்கு மட்டும் BFL கடன் வழங்குகிறது.

எனது FD -ஐ எப்படி புதுப்பிப்பது?

பின்வரும் 3 வழிகளில் உங்கள் FD-யை புதுப்பிக்கலாம்:
https://customer-login.bajajfinserv.in/Customer?SOURCE=FD_DETAILS-ஐ பார்வையிடுவதன் மூலம்
• உங்கள் அருகிலுள்ள BFL கிளையை FDR கொண்டு (பரிந்துரைக்கப்பட்டது, ஆனால் கட்டாயமில்லை) மெச்சூரிட்டிக்கு குறைந்தபட்சம் 2 நாட்களுக்கு முன்னர் அணுகவும்
• உங்கள் RM-ஐ மெச்சூரிட்டிக்கு குறைந்தபட்சம் 2 நாட்களுக்கு முன்னர் கோருவதன் மூலம்

எனது FD-ஐ புதுப்பிப்பதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை?

எங்களுக்கு FD விண்ணப்ப படிவம் மட்டுமே வேண்டும். நீங்கள் அசல் FDR ஐ அதனுடன் இணைக்கலாம் (பரிந்துரைக்கப்படுகிறது, ஆனால் கட்டாயமில்லை) எனினும், உங்கள் விண்ணப்ப படிவத்தில் தானியங்கு புதுப்பிப்பு டிக்-குறியீடு இருந்தால், வேறு ஆவணங்களை நீங்கள் சமர்ப்பிக்க தேவையில்லை

FD புதுப்பித்தல் நேரத்தில் என் புகைப்படத்துடன் மீண்டும் KYC ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டுமா?

இல்லை

புதுப்பித்தலின் போது, நாமினி பெயர் அல்லது துணை விண்ணப்பதாரரின் பெயரை மாற்றலாமா?

ஆம், நாமினையை மாற்ற முடியும், ஆனால் இணை- விண்ணப்பதாரரை அல்ல.

நான் புதிதாக முதலீடு செய்கிறேன் மற்றும் எனக்கு BFL நிலையான வைப்புத் தொகையில் முதலீடு செய்ய வேண்டும். நான் யாரைத் தொடர்புக் கொள்ள வேண்டும்?

நீங்கள் உங்கள் முதலீட்டு ஆலோசகரை தொடர்புக் கொள்ளுங்கள், அல்லது fd@bajajfinserv.in க்கு மெயில் அனுப்புங்கள் அல்லது 020-71124281 என்ற எண்ணிற்கு அழைக்கவும் (கட்டணங்களுக்கு உட்பட்டது). நீங்கள் மேலும் https://www.bajajfinserv.in/fd-application-payment/fixed-deposit-online-application-form -ஐ கிளிக் செய்வதன் மூலம் ஆன்லைனில் முதலீடு செய்யலாம்

நான் இப்போது எனது FD விண்ணப்ப படிவத்தை சமர்ப்பித்தேன் மற்றும் எனக்கு எனது விண்ணப்பத்தின் நிலையை தெரிந்து கொள்ள வேண்டும். நான் யாரைத் தொடர்புக் கொள்ள வேண்டும்?

நீங்கள் உங்களின் RM/தரகரை தொடர்பு கொள்ளவும், அல்லது fd@bajajfinserv.in முகவரிக்கு இமெயில் அனுப்பவும் அல்லது 020-71124281 எண்ணிற்கு அழைக்கவும் (கட்டணத்திற்கு உட்பட்டது)

நான் ஏற்கனவே BFL FD-இல் முதலீடு செய்துள்ளேன், ஆனால் எனக்கு இன்னும் சந்தேகம் உள்ளது. நான் யாரைத் தொடர்புக் கொள்ள வேண்டும்?

நீங்கள் உங்களின் RM/தரகரை தொடர்புக் கொள்ளவும், அல்லது wecare@bajajfinserv.in முகவரிக்கு மெயில் அனுப்பவும் அல்லது 020-39574151 எண்ணிற்கு அழைக்கவும் (இலவச அழைப்பு). தயவுசெய்து கட்டாயமாக உங்களின் FDR எண்ணை குறிப்பிடவும்.

FD மீதான வட்டி வரிக்கு உட்பட்டதா? வரி செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு?

ஆமாம், வருமான வரி சட்டம் 1961, பிரிவு 194A -வின் கீழ், NBFC-கள் மூலம் நிலையான வைப்புத்தொகை முதலீடுகளிலிருந்து பெற்ற வட்டி ரூ. 5,000-ஐ விட அதிகமாக இருந்தால், வட்டிக்கு வரி விதிக்கப்படும். முதலீட்டாளருக்கு அவரது PAN கார்டு மட்டத்தில், அவரது அனைத்து நிலையான வைப்புத்தொகையும் தொகுத்து அதன் வட்டி வருமானம் பெறப்படும். பஜாஜ் ஃபைனான்ஸ் மூலம் TDS கணக்கிடப்பட்டு மற்றும் அரசுக்கு காலாண்டுக்கு ஒருமுறை செலுத்தப்படும். ஒரு வேளை முதலீட்டாளர் விண்ணப்பிக்கும் சமயத்தில் 15G/15H அளித்தால், அவரது வட்டி வருமானத்திற்கு அவருக்கு வரிவிலக்கு அளிக்கப்படும். எனினும், நிதியாண்டில் மொத்த தொகைக்கான செலுத்தப்பட்ட அல்லது செலுத்த வேண்டிய வட்டி பின்வருவதை விட அதிகமானால் ரூ. 2,50,000 மூத்த-குடிமக்கள் அல்லாதவர்களுக்கு, மூத்த-குடிமக்களுக்கு ரூ.3,00,000 மற்றும் மிகவும் மூத்த-குடிமக்களுக்கு ரூ.5,00,000 (80 வயது மற்றும் அதற்கு மேலுள்ளவர்கள்), பின்பு படிவம் 15 G/H செல்லுபடியாகாது மற்றும் வரி விலக்கு உண்டு

15 G/H படிவத்தை நான் எங்கு பெற மற்றும் சமர்பிக்க முடியும்?

1. எக்ஸ்பீரியா: எங்களது வாடிக்கையாளர் போர்ட்டல் எக்ஸ்பீரியா-வில் உள்நுழையுங்கள் கணக்கு தகவல் மை ரிலேஷன்ஸ் நிலையான வைப்புத்தொகை விவரங்கள் விவரங்களை காணுங்கள் (ஒவ்வொரு டெபாசிட்டுக்கும்) படிவம் 15 G/H. ஆன்லைனில் உங்கள் படிவத்தை சமர்பிப்பதற்கு செக்பாக்ஸில் கிளிக் செய்யவும்,தேவையான விவரங்களை பூர்த்தி செய்து, OTP-யை உருவாக்கி உள்ளிடவும் மற்றும் உறுதி ஆவணத்தை சமர்பிக்கவும்.
2. தரகர்: எங்களது website யிலிருந்து படிவம் 15 G/H பதிவிறக்கவும் மற்றும் உங்கள் தரகரிடம் அதை சமர்ப்பிக்கவும், அவர் எங்களுக்கு அதை அனுப்புவார்.
3. கிளை: எங்கள் இணையதளம்-யிலிருந்து 15 G/H பதிவிறக்கம் செய்து உங்கள் அருகிலுள்ள பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் கிளையில் சமர்ப்பிக்கவும்

TDS அடிக்கடி எப்போதெல்லாம் கழிக்கப்படுகிறது

ஒவ்வொரு காலாண்டிற்கும்.

15 G/H படிவத்தை சமர்ப்பித்தும் கூட, எனது TDS கழிக்கப்பட்டது. நான் யாரைத் தொடர்புக் கொள்ள வேண்டும்?

நீங்கள் உங்களின் RM/தரகரை தொடர்பு கொள்ளலாம், அல்லது wecare@bajajfinserv.in க்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பவும். இது உண்மையானதாக இருந்தால் நாங்கள் ரீஃபண்டை தொடங்குவோம்.

தவணைக்காலம் முடிவதற்கு முன்னரே FD-ஐ நான் வித்டிராவல் செய்ய முடியுமா? ஆம் என்றால், வட்டி மீதான விளைவு என்ன?

எந்த FD-க்கும் உள்ள லாக் இன் காலமானது 3 மாதங்கள் ஆகும், அதற்கு முன் FD-ஐ வித்ட்ரா செய்ய முடியாது. முன்கூட்டியே வித்ட்ரா செய்வதனால் அபராத கட்டங்கள் உண்டு:
• 0 -3 மாதங்கள் - FD வித்டிரா செய்ய முடியாது (இறப்பு சந்தர்ப்பங்களில் பொருந்தாது)
• 3 -6 மாதங்கள் - வைப்புத்தொகை மீது வட்டி செலுத்தப்படாது. அசல் மட்டுமே செலுத்தப்பட வேண்டியது ஆகும்
• >6 மாதங்கள்-செலுத்தப்படவேண்டிய வட்டி வைப்புநிதி செயல்படும் காலத்தில் பொருந்தக்கூடிய வட்டி விகிதத்தை விட 2% குறைவு. இந்த காலகட்டத்தில் வட்டி எதுவும் குறிப்பிடப்படவில்லை எனில், செலுத்தப்படும் வட்டி பஜாஜ் ஃபைனான்ஸ் வைப்புநிதிகளுக்காக ஒப்புக்கொள்ளும் குறைந்தபட்ச வட்டி விகிதத்தை விட, 3% குறைவாக இருக்கும்.

முதன்மை விண்ணப்பதாரர் காலாவதியாகிவிட்டார். ப்ரீ-மெச்சூரிட்டிக்காக FD-இல் துணை விண்ணப்பதாரர் கோரிக்கை செய்ய முடியுமா?

ஆம், இணை-விண்ணப்பதாரர் உங்கள் RM/தரகருக்கு ஒரு எழுத்து வடிவலான கோரிக்கை, இறப்புச் சான்றிதழ் மற்றும் FDR ஐ சமர்பிக்க வேண்டும். விண்ணப்பத்தின் ரசீது 8 நாட்களுக்குள் எங்களுடன் பதிவுசெய்த வங்கிக் கணக்கில் FD வருமானங்கள் (TDS கழித்த பின்னர்) கிரெடிட் செய்யப்படும்

முதன்மை விண்ணப்பதாரர் FD-யில் முதலீடு செய்த ஒரு சில நாட்களுக்குள் காலாவதியாகிவிட்டார். ப்ரீமெச்சூர் வித்ட்ராயலில் BFL TDS யைக் குறைக்குமா?

ஆம்.

முதன்மை விண்ணப்பதாரர் மரணித்து விட்டால் மற்றும் எந்த நாமினி அல்லது கூட்டு பங்காளரும் இல்லை என்றால், FD-ஐ பிரீ-மெச்சூர் செய்ய சட்ட வாரிசிற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை?

ஒருவேளை, முதன்மை-விண்ணப்பதாரர் நாமினிகள்/கூட்டு வைப்பாளர்கள் இல்லாமல் மரணித்து விட்டால், கீழுள்ள ஆவணங்களை சட்ட வாரிசு சமர்ப்பிக்க வேண்டும்:
• இறந்தவரின் கோரல் விண்ணப்பம் (கட்டாயம்)
• இறப்பு சான்றிதழின் சட்டநெறியான நகல் (கட்டாயம்)
• வாரிசு சான்றிதழ்/நிர்வாகத்தின் கடிதம்/விருப்பத்தின் உயில் (பரிந்துரைக்கப்படுகிறது, ஆனால் கட்டாயமில்லை)
• சட்ட ரீதியான வாரிசு / பிரதிநிதியிடம் இருந்து பெறப்பட்ட ஈட்டுறுதிப் பிணைமுறி (கட்டாயம்)

முதன்மை விண்ணப்பதாரர் மரணித்து விட்டால், மெச்சூரிட்டியின் போது, புது முதன்மை விண்ணப்பதாரரை சேர்ப்பதன் மூலம் FD-ஐ புதுப்பிக்க இணை-விண்ணப்பதாரர் கோர முடியுமா?

இல்லை. அத்தகைய வைப்புத்தொகையை புதுப்பிக்க முடியாது.

இணை-விண்ணப்பதாரர் மரணித்து விட்டால், புதுப்பித்தலின் போது அவருக்கு பதிலாக மற்றொரு துணை-விண்ணப்பதாரரின் பெயரை சேர்க்க முடியுமா?

இல்லை, இறந்த இணை-விண்ணப்பதாரரின் இடத்தில் மற்றொரு இணை-விண்ணப்பதாரரை சேர்க்க முடியாது. எனினும் செல்லுபடியான ஆவணங்களை வழங்குவதன் மூலம், மரணிக்கப்பட்ட இணை-விண்ணப்பதாரரின் பெயர் FD -லிருந்து அகற்றப்படலாம்.

இந்து கூட்டுக் குடும்பத்தில், கர்தா மரணித்து விட்டால்,
•FD -ஐ முதிர்வு அடைய செய்யாமல் புதிய கர்தாவை முதன்மை விண்ணப்பதாரராக்க முடியுமா? ஆம் என்றால், அதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை?
•FD யை ப்ரீ-மெச்சூர் செய்ய விரும்பும் நபரிடமிருந்து பெறப்பட வேண்டிய ஆவணங்கள் யாவை?

மேலே உள்ள இரண்டு சூழல்களில், பின்வரும் ஆவணங்கள் தேவைப்படுகின்றன:
• வைப்புதாரரின் இறப்புச் சான்று
• HUF-யின் புதிய கர்த்தாவாக மூத்த கோபார்செனரை அறிவிக்கும் HUF-யின் பகுதியை உருவாக்கும் உறுப்பினர்களிடமிருந்து பிரகடனம்/வாக்குமூலம்/முன்காப்பீடு.
• கர்தா மற்றும் வயது வந்தோர் கோபார்சனெர்களால் கையொப்பமிடப்பட்ட கோபார்சனெர்கள் பட்டியலுடன் HUF அறிவிப்பின் புதிய பத்திரம்
• புதிய கர்தாவின் ஆதார் மற்றும் PAN

முதன்மை விண்ணப்பதாரர் மரணித்து விட்டால், அதைப் பற்றி BFL -யிடம் தெரிவிப்பது அவசியமா?

ஆம், அது ஏனென்றால் BFL ஆல் இறந்த மனிதருக்கு தொடர்ந்து வட்டி செலுத்தி அவர் பான் கார்டின் TDS ஐக் குறைக்க முடியாது

ஒரு டெபாசிட்டில், A=முதன்மை விண்ணப்பதாரர் மற்றும் B=கூட்டு விண்ணப்பதாரர். இப்போது, மற்றொரு FD-யில், ஒருவேளை B=முதன்மை விண்ணப்பதாரர் (மற்றும் A கூட்டு விண்ணப்பதாரர்/இல்லாதவர்), B அவரது KYC ஆவணங்களை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டுமா?

இல்லை, B-இன் KYC ஆவணங்கள் செல்லுபடியாகும் வரை, B தனது ஆவணங்களை மீண்டும் சமர்ப்பிக்கத் தேவையில்லை

எங்களிடம் முதலீடு செய்த பிறகு முதலீட்டாளர் NRI-ஆக மாறிவிட்டார். அவர் வைப்புத்தொகைக்கு என்னவாகும்?

மெச்சூரிட்டி வரை வைப்பு எங்களுடன் இருக்க முடியும். புதுப்பித்தல் தேதியில், அவர் NRI-ஆக இருந்தால், அவரால் வைப்புத்தொகையை புதிப்பிப்பு செய்ய முடியாது மற்றும் அது மெச்சூர் ஆக வேண்டும். மெச்சூரிட்டி வருமானங்கள் அவரது NRO கணக்கிற்கு மட்டுமே செல்ல வேண்டும். புதுப்பித்தல் தேதியில், அவர் இந்திய குடிமகனாக மீண்டும் மாறினால்(எந்த காரணத்திற்காகவும் இருக்கலாம்), அவர் திரும்பவும் அவரது வைப்புத்தொகையை புதிப்பிப்பு செய்ய முடியும்.

நிலையான வைப்புத்தொகை கால்குலேட்டர்

முதலீட்டுத் தொகை

தயவுசெய்து முதலீட்டு தொகையை உள்ளிடவும்

தயவுசெய்து முதலீட்டு தொகையை உள்ளிடவும்

முதலீட்டு விகிதம்

தயவுசெய்து முதலீடு விகிதத்தை உள்ளிடவும்

முதலீட்டு தவணைக்காலம்

தயவுசெய்து முதலீட்டு தவணையை உள்ளிடவும்

நிலையான வைப்புத்தொகை வருமானங்கள்

  • வட்டி விகிதம் :

    0%

  • வட்டி செலவினம் :

    Rs.0

  • முதிர்ச்சி அடையும் காலம் :

    --

  • மெச்சூரிட்டி தொகை :

    Rs.0

விரைவாக முதலீடு செய்ய கீழுள்ள விவரங்களை தயவுசெய்து பூர்த்தி செய்யவும்

முழு பெயர்*

முதல் பெயரை உள்ளிடவும்

மொபைல் எண்*

தயவுசெய்து மொபைல் எண்ணை உள்ளிடவும்

நகரம்*

தயவுசெய்து நகரத்தை உள்ளிடுங்கள்

இமெயில் ID*

தயவுசெய்து இமெயில் ஐடியை டைப் செய்யவும்

வாடிக்கையாளர் வகை*

தயவுசெய்து வாடிக்கையாளர் வகையை உள்ளிடவும்

முதலீட்டுத் தொகை*

தயவுசெய்து முதலீட்டு தொகையை உள்ளிடவும்

தயவுசெய்து முதலீட்டு தொகையை உள்ளிடவும்

நான் விதிமுறைகள் & நிபந்தனைகள்-ஐ ஏற்றுக்கொள்கிறேன்

தயவுசெய்து சரிபார்க்கவும்