ஃப்ளெக்ஸி டிராடவுன் என்றால் என்ன?

ஃப்ளெக்ஸி கடன் டிராடவுன் என்பது உங்கள் ஃப்ளெக்ஸி டேர்ம் மற்றும் ஃப்ளெக்ஸி ஹைப்ரிட் கடன் மீது வழங்கப்படும் வித்ட்ராவல் வசதியாகும், இங்கு உங்கள் கிடைக்கக்கூடிய கடன் வரம்பிலிருந்து தேவையான தொகையை நீங்கள் வித்ட்ரா செய்யலாம்.

டிராடவுன்/ வித்ட்ராவல் கோரிக்கையை செய்த பிறகு நான் எப்போது தொகையை பெறுவேன்?

டிராடவுன்/வித்ட்ராவல் கோரிக்கையை செய்த பிறகு, தொகை 2 முதல் 3 மணிநேரங்களுக்குள் உங்கள் வங்கி கணக்கில் கிரெடிட் செய்யப்படும்*. தொழில்நுட்ப காரணங்களால் பணம்செலுத்தல் தாமதமானால், அது 24 மணிநேரங்களுக்குள் மீண்டும் செயல்முறைப்படுத்தப்படும்*.

குறிப்பு: வங்கி விடுமுறை அல்லது வேறு ஏதேனும் எதிர்பாராத சூழ்நிலைகளில், டர்ன்-அரவுண்ட் நேரம் அதன்படி பாதிக்கப்படலாம்.

*விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்.

எனது ஃப்ளெக்ஸி கடன் கணக்கிற்கான டிராடவுன்/ வித்ட்ராவல் கோரிக்கையை வைப்பதில் ஏதேனும் வரம்பு உள்ளதா?

டிராடவுன்/வித்ட்ராவல் கோரிக்கைகளின் ஃப்ரீக்வென்சியில் எந்த வரம்பும் இல்லை. இருப்பினும், டிராடவுன்/ வித்ட்ராவல் கோரிக்கை தொகை உங்களுக்கு முன்-ஒப்புதலளிக்கப்பட்ட ஃப்ளெக்ஸி கடன் தொகையின் கிடைக்கக்கூடிய வரம்பிற்குள் இருக்க வேண்டும்.

எனது ஃப்ளெக்ஸி டேர்ம் கடன் மற்றும் ஃப்ளெக்ஸி ஹைப்ரிட் கடன் கணக்குகளில் இருந்து பணத்தை டிராடவுன்/வித்ட்ரா செய்ய நான் ஏதேனும் கூடுதல் கட்டணங்களை செலுத்த வேண்டுமா?

உங்கள் ஃப்ளெக்ஸி கடன் கணக்கிலிருந்து பணத்தை டிராடவுன்/வித்ட்ரா செய்ய நீங்கள் எந்த கூடுதல் கட்டணங்களையும் செலுத்த வேண்டியதில்லை. உண்மையில், உங்கள் கடனை முன்கூட்டியே செலுத்துவதன் மூலம் நீங்கள் எந்த கூடுதல் கட்டணங்களையும் செலுத்த வேண்டியதில்லை.

எனது ஃப்ளெக்ஸி கடனில் இருந்து நான் எவ்வாறு பணத்தை டிராடவுன்/ வித்ட்ரா செய்ய முடியும்?

உங்கள் ஃப்ளெக்ஸி கடனில் இருந்து பணத்தை டிராடவுன்/வித்ட்ரா செய்ய, கீழே குறிப்பிடப்பட்டுள்ள படிநிலைகளை தயவுசெய்து பின்பற்றவும்:

  • முகப்பு பக்கத்தின் மேல் உள்ள 'மை ரிலேஷன்ஸ்'-க்கு சென்று 'அனைத்தையும் காண்பி' மீது கிளிக் செய்யவும்.
  • நீங்கள் பணத்தை வித்ட்ரா செய்ய விரும்பும் கடன் கணக்கு எண் (எல்ஏஎன்)-ஐ தேர்ந்தெடுக்கவும்.
  • 'விரைவான நடவடிக்கைகள்' கீழ், 'வித்ட்ரா' மீது கிளிக் செய்யவும்'.
  • உங்கள் கிடைக்கக்கூடிய வரம்பிற்குள் தொகையை உள்ளிடவும்.
  • அதே கணக்கில் பணம் கிரெடிட் செய்யப்படுவதால் உங்கள் வங்கி கணக்கு விவரங்களை சரிபார்க்கவும்.
  • 'சமர்ப்பிக்கவும்' என்பதன் மீது கிளிக் செய்யவும்'.

வேறு வங்கி கணக்கைப் பயன்படுத்தி எனது ஃப்ளெக்ஸி கடன் கணக்கிலிருந்து நான் பணத்தை டிராடவுன்/வித்ட்ரா செய்ய முடியுமா?

ஆம், ஆனால் டிராடவுன்/ வித்ட்ராவல் கோரிக்கையை தொடங்குவதற்கு முன்னர் நீங்கள் உங்கள் வங்கி கணக்கு விவரங்களை புதிய கணக்கில் புதுப்பிக்க வேண்டும். உங்கள் வங்கி கணக்கு விவரங்களை புதுப்பிக்க, தயவுசெய்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள படிநிலைகளை பின்பற்றவும்:

  • முகப்பு பக்கத்தின் மேல் உள்ள 'மை ரிலேஷன்ஸ்'-க்கு சென்று 'அனைத்தையும் காண்பி' மீது கிளிக் செய்யவும்.
  • நீங்கள் டிராடவுன் வங்கி கணக்கை மாற்ற விரும்பும் 'கடன் கணக்கு எண் (எல்ஏஎன்)' மீது கிளிக் செய்யவும்.
  • 'விரைவான நடவடிக்கைகள்' -யின்கீழ் 'வித்ட்ரா செய்க' மீது கிளிக் செய்யவும்.
  • 'வங்கி கணக்கை புதுப்பிக்கவும்' மீது கிளிக் செய்து பின்னர் 'ஓடிபி பெறுக' மீது கிளிக் செய்யவும்'.
  • உங்கள் மொபைலில் ஓடிபி-ஐ நீங்கள் பெறுவீர்கள், அந்த ஓடிபி-ஐ உள்ளிடவும் மற்றும் 'சமர்ப்பிக்கவும்' மீது கிளிக் செய்யவும்’.
  • உங்கள் பதிவுசெய்த இமெயில் ஐடி-யில் பெறப்பட்ட இரண்டாவது ஓடிபி-ஐ உள்ளிடவும் மற்றும் 'சமர்ப்பிக்கவும்' மீது கிளிக் செய்யவும்'.
  • உங்கள் வங்கி கணக்கு எண்ணை புதுப்பிக்கவும்.
  • ஐஎஃப்எஸ்சி குறியீட்டை புதுப்பித்து 'சரிபார்க்கவும்' மீது கிளிக் செய்யவும்’.
  • 'முடிந்தது' மீது கிளிக் செய்யவும்'.

குறிப்பு: உங்கள் பெயர் உங்கள் தற்போதைய வங்கி விவரங்கள் மற்றும் புதிய வங்கி விவரங்களுடன் பொருந்த வேண்டும்.

ஃப்ளெக்ஸி கடன் டிராடவுன் கோரிக்கையை வைக்க தகுதியான தொகை என்ன?

குறைந்தபட்ச தொகை ரூ. 1000 மற்றும் முன்-ஒப்புதலளிக்கப்பட்ட கடன் வரம்பு வரை நீங்கள் ஃப்ளெக்ஸி கடன் டிராடவுன் கோரிக்கையை வைக்கலாம்.

மேலும் படிக்க குறைவாக படிக்கவும்