ட்ரெக் கவர்

play

டிரெக் காப்பீட்டை கொண்டிருப்பது உங்கள் டிரெக் பயணத்தை திட்டமிடுவதில் ஒரு முக்கியமான பகுதியாகும். உங்கள் வாலெட்டை இழப்பதன் காரணமாக ஏற்படும் எந்தவொரு பின்னடைவுகளிலிருந்தும் இது உங்களுக்கு நிதி பாதுகாப்பாக இருக்க உதவுகிறது, மேலும் டிரெக் பயணத்தின் போது ஒரு விபத்துடன் சிக்கிக் கொள்வதில் இருந்து உங்களை பாதுகாக்கிறது.

CPP-யின் டிரெக் காப்பீட்டுடன், உங்கள் கிரெடிட் கார்டுகளை ஒரே அழைப்புடன் முடக்கலாம், பயணம் மற்றும் ஹோட்டல் உதவியைப் பெறுங்கள், அவசரகாலத்தில் உங்கள் குடும்பத்தை தொடர்பு கொள்ள தற்காலிக ஸ்மார்ட்போனைப் பெறலாம், காம்ப்ளிமென்டரி தனிநபர் விபத்து காப்பீடு மற்றும் பல.

பிளான் விவரங்கள்

டிரெக் காப்பீடு ரூ. 699 பிரீமியத்தில் ரூ. 1.5 லட்சம் வரை காப்பீட்டை வழங்குகிறது. உங்களுக்கு விருப்பமான ஆன்லைன் பணம்செலுத்தல் முறைகளில் ஏதேனும் ஒன்றில் இருந்து பணம் செலுத்தலை மேற்கொள்ளுங்கள். மேலும், இந்த திட்டத்தின் கீழ் ஒரு வருட பயண பாதுகாப்பு மெம்பர்ஷிப்பை பெறுங்கள்.
 • எதெல்லாம் காப்பீடு செய்யப்படுகிறது

  இந்த திட்டத்தின் கீழ் உள்ளடங்குபவை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:

 • அவசரக்கால பயண உதவி

  உங்கள் டிரெக் பயணத்தின் போது நீங்கள் எங்கும் சிக்கிக் கொண்டிருந்தால், நீங்கள் இந்தியாவில் ரூ. 1 லட்சம் வரை மற்றும் வெளிநாட்டில் ரூ. 1.8 லட்சம் வரை அவசர பயணம் மற்றும் ஹோட்டல் உதவி பெறலாம்.

 • உங்கள் கார்டுகளை ஒரே அழைப்பில் முடக்கிடுங்கள்

  உங்கள் டிரெக் பயணத்தின் போது உங்கள் கிரெடிட் கார்டுகள் மற்றும் டெபிட் கார்டுகளை இழக்கும் பட்சத்தில் வெறும் ஒரே ஒரு போன் அழைப்புடன் முடக்கவும். டோல்-ஃப்ரீ எண் 1800-419-4000-யில் அழைப்பதன் மூலம் உங்கள் கார்டுகளை நீங்கள் முடக்கலாம்.

 • காம்ப்ளிமென்டரி பாதுகாப்பு

  காம்ப்ளிமென்டரி பாதுகாப்பு காப்பீட்டுடன், ட்ரெக்கிங் பயணத்தின் போது ஏற்படும் தனிநபர் விபத்துகளுக்கு நீங்கள் ரூ. 1.5 லட்சம் வரை காப்பீடு பெறலாம். இதில் சாகச விளையாட்டுகளின் போது ஏற்படும் விபத்துகளும் அடங்கும்.

 • PAN கார்டு ரீப்ளேஸ்மென்ட்

  ஒருவேளை PAN கார்டை நீங்கள் தொலைத்தால் அதற்காக நீங்கள் இலவச மாற்று அட்டையையும் பெறலாம்.

 • டிராவல் சேஃப் மெம்பர்ஷிப்

  CPP-யின் டிரெக் காப்பீட்டில் ஒரு வருட பயண பாதுகாப்பு மெம்பர்ஷிப் உள்ளடங்கும், இது பின்வரும் நன்மைகளை வழங்குகிறது:

  • ஒருவேளை உங்கள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் தொலைந்துவிட்டால் அல்லது திருடப்பட்டால் அவற்றை நீங்கள் முடக்கலாம், எனவே உங்கள் கார்டுகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதை தவிர்க்கலாம்.
  • இழப்பு நேரத்தில் நீங்கள் இந்தியாவில் இருந்தால், உங்கள் ஹோட்டல் பில்கள் மற்றும் வீட்டிற்கு திரும்ப வரும் விமான பயணச் செலவை உள்ளடக்கும் விதமாக நீங்கள் ரூ. 1 லட்சம் வரை நிதி உதவி பெறலாம். இந்த முன்பணம் அதிகபட்சம் 28 நாட்களுக்கு வட்டி இல்லாத முன்பணம் ஆகும். நீங்கள் இந்தத் தொகையை 28 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும்.
  • உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பு கொள்ள நீங்கள் ஒரு ஸ்பேர் ஸ்மார்ட்போனை பெறலாம். உங்கள் பயணம் முடிந்த பிறகு அல்லது 7 நாட்களுக்குள் ஸ்மார்ட்போனை திருப்பியளிக்க வேண்டும். இந்த அம்சம் குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே செல்லுபடியாகும்.
  • உங்கள் அடிப்படை வாழ்க்கை செலவுகளை உள்ளடக்க மற்றும் வீட்டிற்கு திரும்பி வருவதற்கு நீங்கள் ரூ. 5,000 உடனடி ரொக்க முன்பணத்தை பெறலாம்.
  • மற்ற கார்டுகள் மற்றும் ஆவணங்களுடன் நீங்கள் PAN கார்டை இழக்கும் பட்சத்தில் அவற்றை ரீப்ளேஸ் செய்வதற்கான செலவுகளுக்கு காப்பீட்டை பெறுங்கள்.
  • காம்ப்ளிமென்டரி பாதுகாப்பு காப்பீடு தனிநபர் விபத்துகளுக்கு ரூ. 1.5 லட்சம் வரை காப்பீட்டை வழங்குகிறது, இதில் நீங்கள் டிரெக் பயணத்தில் இருக்கும் போது அதிகபட்சமாக 10 நாட்களுக்கு அட்வென்சர் ஸ்போர்ட்ஸ் அடங்கும்.

உள்ளடங்காதவை

இந்த திட்டத்தின் கீழ் ஒரு விலக்கு உள்ளது:

• நீங்கள் மது போதையில் இருக்கும் போது உங்கள் பொருட்களை இழந்தால், இந்த திட்டம் அவற்றிற்கு காப்பீடு வழங்காது

எப்படி விண்ணப்பிப்பது

திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் படிநிலைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:

• 'இப்போது வாங்குங்கள்' பட்டனை கிளிக் செய்து ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில் உங்கள் அடிப்படை விவரங்களை பகிருங்கள்
• உங்கள் மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP-ஐ உள்ளிடுவதன் மூலம் உங்கள் விண்ணப்பத்தை சரிபார்த்து உறுதிசெய்யவும்
• கிரெடிட்/டெபிட் கார்டு, UPI, மொபைல் வாலெட் அல்லது வேறு ஏதேனும் கிடைக்கும் ஆன்லைன் பணம்செலுத்தல் முறை மூலம் பிரீமியத்தை செலுத்துங்கள்
• உங்கள் மெம்பர்ஷிப் விவரங்களை இமெயில்/WhatsApp மூலம் நீங்கள் பெறுவீர்கள்

ஒரு கோரலை எவ்வாறு செயல்முறைப்படுத்துவது

ஒரு கோரலை எழுப்ப, பின்வரும் வழிகளில் ஒன்றின் மூலம் நீங்கள் காப்பீட்டு வழங்குநரை தொடர்பு கொள்ளலாம்:

• டோல்-ஃப்ரீ எண்: நீங்கள் 24 மணிநேரங்களுக்குள் 1800-419-4000 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்
• இமெயில்: feedback@cppindia.com-க்கு இமெயில் அனுப்பவும்
 

தேவையான ஆவணங்கள்

கோரலை எழுப்புவதற்கு தேவையான ஆவணங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:

• கேஒய்சி ஆவணங்கள்
• பயண பாதுகாப்பு மெம்பர்ஷிப் கடிதம்

தொடர்புகொள்ள

பாலிசி தொடர்பான கேள்விகளுக்கு, தயவுசெய்து எங்களுக்கு wecareinsurance@bizsupportc.com என்ற முகவரிக்கு இமெயில் அனுப்புங்கள்.

பொறுப்புத்துறப்பு - பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் (BFL) மேலே உள்ள தயாரிப்புகளின் டிஸ்ட்ரிப்யூட்டராக மட்டுமே உள்ளது, இதன் உரிமையாளர் CPP Assistance Services Private Ltd. (CPP). இந்த தயாரிப்புகளை வழங்குவது CPP-யின் தனிப்பட்ட விருப்பமாகும். இந்த தயாரிப்பு CPP தயாரிப்பு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளால் நிர்வகிக்கப்படும் மற்றும் வழங்கல், தரம், சேவைத்திறன், பராமரிப்பு மற்றும் விற்பனைக்கு பிறகான எந்தவொரு கோரல்களுக்கும் BFL எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இது ஒரு காப்பீட்டு தயாரிப்பு இல்லை மற்றும் CPP Assistance Services Private Ltd ஒரு காப்பீட்டு நிறுவனம் அல்ல. இந்த தயாரிப்பை வாங்குவது முற்றிலும் தன்னார்வமானது. எந்தவொரு மூன்றாம் தரப்பு தயாரிப்புகளையும் கட்டாயமாக வாங்க BFL அதன் எந்தவொரு வாடிக்கையாளரையும் கட்டாயப்படுத்தாது.”

உங்களுக்கு தெரியுமா, ஒரு நல்ல சிபில் ஸ்கோர் கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகள் மீது சிறந்த டீல்களை பெற உதவும்?