அழைப்பு, SMS, இ-மெயில் வழியாக எங்களை அணுகவும் அல்லது எங்களது கிளை அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.

Contact Us FAQ

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் ("BFL") அதன் வாடிக்கையாளர்களுக்கு ரெசல்யூஷன் திட்டத்தை வழங்குகிறதா?

ஆகஸ்ட் 6, 2020 கோவிட்-19 தொடர்பான அழுத்தத்திற்கான ரெசல்யூஷன் ஃபிரேம் ஒர்க்கின் அடிப்படையில் தகுதியான வாடிக்கையாளர்களுக்கு BFL ரெசல்யூஷன் திட்டத்தை வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் எங்கள் வாடிக்கையாளர் போர்ட்டல் எக்ஸ்பீரியா https://bit.ly/3iM2vDk ஐ அணுகி "சலுகை பிரிவை" சரிபார்க்கலாம்.

ரெசல்யூஷன் திட்டம் என்றால் என்ன?

• கோவிட் -19 தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி காரணமாக, வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட கணிசமான நிதி அழுத்தத்திற்கு தீர்வளிக்கும் வகையில், ரெசல்யூஷன் திட்டம் வழங்கப்படுகிறது.

• BFL-இன் கொள்கையின்படி தகுதியுள்ள மற்றும் சிறந்த திருப்பிச் செலுத்தல் ட்ராக் பதிவு கொண்ட பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இது வழங்கப்படுகிறது.

• தங்கள் பணப்புழக்கத்தை உருவாக்கும் திறன்களுடன் ஒப்பிடும் போது கடன்சுமை மிகவும் அதிகரித்து, அது வணிகத்தின் நீண்டகால நம்பகத்தன்மையை பாதிக்கக்கூடும் என்ற காரணத்தினால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைப்பதே இந்த ரெசல்யூஷன் திட்டத்தின் நோக்கமாகும். இந்த ரெசல்யூஷன் திட்டத்தின் கீழ் கடன் EMI தொகையைக் குறைப்பதிலும் கடன் காலத்தை நீட்டிப்பதிலும் வாடிக்கையாளர்களுக்கு உதவி வழங்கப்படுகிறது.

• ரெசல்யூஷன் திட்டத்தைக் குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு, உரிமை மற்றும் தனிப்பட்ட கடன்களில் மாற்றம் இல்லாமல் தகுதியான நிறுவனங்களால் பெற முடியும்.

• தகுதிவாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ரெசல்யூஷன் திட்டம் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் / ஆவணங்களை ஏற்றுக்கொள்வதற்கும் பின்பற்றுவதற்கும் உட்பட்டது.

லாக்டவுன் காலத்தில் பிப்ரவரி, 29, 2020 க்கு பிறகு ஒப்புதல் அளிக்கப்பட்ட புதிய கடன்களுக்கு ரெசல்யூஷன் திட்டம் பொருந்துமா?

ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, இந்த கட்டமைப்பின் கீழ் ‘ஸ்டாண்டர்ட்’ என வகைப்படுத்தப்பட்ட, அதே சமயம், மார்ச் 1, 2020 நிலவரப்படி கடன் வழங்கும் நிறுவனத்துடன் 30 நாட்களுக்கு மேல் டிஃபால்ட் நிலையில் இல்லாத கணக்குகள் மட்டுமே ரெசல்யூஷன் திட்டம் பெற தகுதியுடையவை.

நான் ரெசல்யூஷன் திட்டத்தை செயல்படுத்த விண்ணப்பித்தால் எனது கிரெடிட் பியூரோ பதிவுகள் பாதிக்கப்படுமா?

• நீங்கள் தகுதியானவராக இருந்து ரெசல்யூஷன் திட்டத்தைப் பெற்றிருந்தால், பெறப்பட்ட ரெசல்யூஷன் திட்டத்தின் விவரங்களுடன் உங்கள் கிரெடிட் பியூரோ பதிவுகள் புதுப்பிக்கப்படும்.

• ரெசல்யூஷன் திட்டத்தின் கீழ் நீங்கள் பெற்ற உதவி உங்கள் பியூரோ அறிக்கைகளில் தோன்றும். இருப்பினும், ஒவ்வொரு நிறுவனத்தின் கிரெடிட் பாலிசி மாறுபடும் என்பதால், பிற வங்கிகள்/நிதி நிறுவனங்கள் இதை எவ்வாறு கருத்தில் கொள்ளும் என்பதில் BFL க்கு எந்த பங்கும் இருக்காது,.

ரெசல்யூஷன் திட்டத்திற்கான கோரிக்கையை நான் எப்போது வைக்க முடியும்?

• எங்கள் வாடிக்கையாளர் போர்ட்டல் எக்ஸ்பீரியா https://bit.ly/3iM2vDk -ஐ அணுகுவதன் மூலம் ரெசல்யூஷன் திட்டத்தை நீங்கள் தேர்வு செய்யலாம் மற்றும் கிடைக்கக்கூடியச் சலுகைக்காக நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

• மேலும் எங்கள் தொடர்பு மைய எண்ணில் நீங்கள் எங்களைத் தொடர்புக்கொள்ளலாம் அல்லது எங்கள் வாடிக்கையாளர் சேவை கிளைகளை அணுகலாம். மேலும் விவரங்களுக்கு எங்களைத் தொடர்புக்கொள்ள https://www.bajajfinserv.in/reach-us -ஐ கிளிக் செய்யவும். ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களின் படி, இந்தச் சலுகை டிசம்பர் 31, 2020 க்குப் பிறகு கிடைக்காது.

•ரெசல்யூஷன் திட்ட சலுகைகள் மாதம் 28-ஆம் தேதியிலிருந்து 5-ஆம் தேதி வரை கிடைக்காது.

ரெசல்யூஷன் திட்டத்திற்கான கோரிக்கையை நான் எவ்வாறு செய்ய முடியும்?

நீங்கள் ரெசல்யூஷன் திட்டத்தைப் பெற விரும்பினால், உங்கள் தகுதியை சரிபார்க்க வாடிக்கையாளர் போர்ட்டல் எக்ஸ்பீரியாவில் https://bit.ly/3iM2vDk உள்நுழையவும்.

• நீங்கள் உள்நுழைந்து உங்களை நீங்களே அங்கீகரிக்க வேண்டும்.

"சலுகை உலகம்" டேபை தேர்வு செய்யவும். கிடைக்கக்கூடிய சலுகையை சரிபார்க்க ரெசல்யூஷன் திட்ட சலுகையை தேர்ந்தெடுக்கவும்.

• விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை (“T&Cs”) கவனமாகப் படித்து புரிந்துக்கொள்ளவும்.

• T&Cகளை ஏற்றுக்கொண்டு பின்பற்றுவதை உறுதிசெய்து, கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும்.

• நீங்கள் தகுதிபெறவில்லையெனில், ரெசல்யூஷன் திட்டத்திற்கான எந்த சலுகையையும் நீங்கள் காண மாட்டீர்கள்.
ரெசல்யூஷன் திட்ட சலுகைகள் மாதத்தின் 28-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை கிடைக்காது.

மாற்றாக, எங்கள் தொடர்பு மைய எண்ணில் எங்களை அழைக்கவும் அல்லது எங்கள் வாடிக்கையாளர் சேவை கிளைகளை அணுகவும்

ரெசல்யூஷன் திட்டத்திற்கான எனது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டால் எனக்கு தெரிவிக்கப்படுமா?

உங்கள் பதிவுசெய்த மொபைல் எண்ணிற்கு SMS அனுப்புவதன் மூலம் ரெசல்யூஷன் திட்டத்திற்கான உங்கள் கோரிக்கையை செயல்முறைப்படுத்தியவுடன் உங்களுக்கு தெரிவிக்கப்படும். எங்கள் வாடிக்கையாளர் போர்ட்டல் எக்ஸ்பீரியாவை அணுகுவதன் மூலம் நீங்கள் நிலையை சரிபார்க்கலாம் மற்றும் இந்த திட்டத்தின் கீழ் புக் செய்யப்பட்ட புதிய கடனுக்கான திருத்தப்பட்ட திருப்பிச்செலுத்தல் அட்டவணையை பார்வையிடலாம்.

BFL உடனான எனது அனைத்து செயல்பாட்டில் உள்ள கடன்களுக்கும் ரெசல்யூஷன் திட்டம் வழங்கப்படுமா, மேலும் நான் அனைத்து கடன்களுக்கும் தனித்தனி கோரிக்கையை வழங்க வேண்டுமா?

உங்களுடைய ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட செயல்பாட்டிலுள்ள கடன்கள் தொடர்பாக BFL கொள்கையின்படி நீங்கள் தகுதியுடையவராக இருந்தால், BFL உடன் உங்களுடைய பல்வேறு வகையான செயல்பாட்டிலுள்ள கடன்களுக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வெவ்வேறான சலுகைகள் இருக்கலாம். எங்கள் இணையதளத்தில் சலுகை விவரங்களை நீங்கள் பார்க்கும்போது, அதற்கு தகுதியான கடன்களின் விவரங்கள் இருக்கும். உங்களிடம் ஒன்றுக்கும் அதிகமான கடன் அல்லது பல்வேறு வகையான கடன்கள் இருந்தால் ஒவ்வொரு சலுகையையும் நீங்கள் தனித்தனியாக தேர்வு செய்ய வேண்டும் (எ.கா: நுகர்வோர் நீடித்த கடன்கள், தனிநபர் கடன்கள் அல்லது தொழில் கடன்கள்).

எனது கடனுக்கான ரெசல்யூஷன் திட்டத்தை நான் பெற விரும்பவில்லை என்றால், நான் என்ன செய்ய வேண்டும்?

• நீங்கள் எதுவும் செய்யத் தேவையில்லை. உங்கள் கடன் அல்லது கடன்களின் விதிமுறைகளின்படி, ஏற்கனவே உள்ள கடன்களுக்கான உங்கள் EMIகளை நாங்கள் தொடர்ந்து வசூலிப்போம்.

• ரெசல்யூஷன் திட்டத்தின் படி கடனில் திருத்தம் செய்வது பியூரோக்களுக்குத் தெரிவிக்கப்படும் என்பதால், தற்போதுள்ள கடன்களின் விதிமுறைகளின்படி திருப்பிச் செலுத்துவதைத் தொடர போதுமான நிதி உள்ள வாடிக்கையாளர்களை நாங்கள் ஊக்குவிக்கிறோம். வங்கிகள் / நிதி நிறுவனங்கள் அத்தகைய அறிக்கையை ஒரேமாதிரியான அல்லது வேறுபட்ட முறையில் கருத்தில் கொள்ளலாம், மேலும் புதிய கடன்களைப் பெறுவதற்கான உங்கள் எதிர்கால வாய்ப்புகளை பாதிக்கும் சாத்தியத்தை நாங்கள் நிராகரிக்க முடியாது.

ரெசல்யூஷன் திட்டத்தைப் பெறுவதற்கு நான் ஏதேனும் ஆவணங்கள், புதிய NACH டெபிட் மேண்டேட் போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டுமா?

தற்போதுள்ள மேண்டேட் கடன் தவணைக்காலம் முடிவதற்கு முன்பு காலாவதியாகிவிட்டால் மற்றும் ரெசல்யூஷன் திட்டத்தை செயல்படுத்திய பின்னர் திருத்தப்பட்ட தொகைக்கு NACH டெபிட் மேண்டேட் போதுமானதாக இல்லை என்றால் BFL மூலம் தேவைப்படக்கூடிய புதிய NACH டெபிட் மேண்டேட்டை நீங்கள் வழங்க வேண்டும். மற்ற அனைத்து சந்தர்ப்பங்களிலும், புதிய மேண்டேட்டை சமர்ப்பிக்க வேண்டியத் தேவை இல்லாமல் இருக்கலாம். ரெசல்யூஷன் திட்டத்தின் கீழ் நீட்டிக்கப்பட்ட உதவியானது சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதற்கு/கடைப்பிடிக்கப்படுவதற்கு உட்பட்டதால், உங்கள் கடன் கணக்கில் ரெசல்யூஷன் திட்டத்தை செயல்படுத்த BFL மூலம் அறிவுறுத்தப்பட்டபடி, T&Cs/ஆவணங்களை ஏற்றுக்கொள்ளுதல்/செயல்படுத்தலுக்கான உங்கள் ஒப்புதல் தேவைப்படும்.

ரெசல்யூஷன் திட்டத்தில் நான் கூடுதலாக செலுத்த வேண்டிய வட்டி விகிதம் என்ன?

நுகர்வோர் நீடித்த கடன்களுக்கு, ஒவ்வொரு கடனுக்கும் மாதம் ஒன்றுக்கு 1% கட்டணம் வசூலிக்கப்படும். வசூலிக்கப்படும் தொகை தோராயமானது. திருத்தப்பட்ட பணம்செலுத்தல் திட்டத்தின் (ரெசல்யூஷன் திட்டம்) கீழ் நீட்டிக்கப்பட்ட தவணைக்காலத்திற்கான வருடாந்திர வட்டி விகிதம் 24%. தனிநபர் கடன், தொழில் கடன் மற்றும் தொழில்முறை கடன்களுக்கான வட்டி கட்டணங்கள் ஒரே மாதிரியானவை.

ரெசல்யூஷன் திட்டத்தை தேர்வுச் செய்ய நான் கூடுதல் கட்டணங்களை செலுத்த வேண்டுமா?

• ரெசல்யூஷன் திட்டத்தைப் பெறுவதற்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.

விண்ணப்பித்த பிறகு ரெசல்யூஷன் திட்டத்திலிருந்து நான் வெளியேற முடியுமா?

• இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட சலுகைகளின் அடிப்படையில் உங்கள் கடன்களுக்கான ரெசல்யூஷன் திட்டத்தை நீங்கள் தேர்வு செய்த பிறகு, அதிலிருந்து நீங்கள் வெளியேற முடியாது.

எனது கடன்களின் மீது மொராட்டோரியத்திற்கான வட்டி ஏற்கனவே கணக்கிடப்பட்டுள்ளது, அது தள்ளுபடி செய்யப்படுமா?

இல்லை. மொராட்டோரியம் காலத்தில் கடன்களின் மீது விதிக்கப்பட்ட வட்டி தள்ளுபடி செய்யப்படாது.

ரெசல்யூஷன் திட்டத்தின் கீழ் திருத்தப்பட்ட கடனை பகுதியளவு-முன்கூட்டியே செலுத்துவதற்கு அல்லது முன்கூட்டியே அடைப்பதற்கு கூடுதல் கட்டணங்கள் ஏதேனும் வசூலிக்கப்படுமா?

• தனிநபர் கடன்கள் மற்றும் தொழில் கடன்கள் மற்றும் தொழில்முறை கடன்களுக்கு, நடப்பு கடன்களின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் படி பகுதியளவு பணம் செலுத்தல் அல்லது முன்கூட்டியே அடைத்தல்(ஃபோர்குளோசர்) கட்டணங்கள் பொருந்தும்.

• நுகர்வோர் நீடித்த கடன்களுக்கு பகுதியளவு பணம் செலுத்தல் அல்லது முன்கூட்டியே அடைத்தல் கட்டணங்கள் இல்லை (CD கடன்கள் PL- RMPL ஆக மாற்றப்படுகின்றன, இவற்றிற்கு முன்கூட்டியே அடைத்தல் கட்டணங்கள் பொருந்தாது)

ரெசல்யூஷன் திட்டத்தின் கீழ் கடன்கள் இருந்தால் பகுதியளவு முன்கூட்டியே செலுத்தல் மற்றும் முன்கூட்டியே அடைத்தலுக்கான லாக் இன் காலம் என்ன?

• குறைந்தபட்சம் (1) EMI சுழற்சியை நிறைவு செய்தாலன்றி, ரெமீடியல் PL-ஐ முன்கூட்டியே அடைக்க முடியாது மற்றும் அத்தகைய வாடிக்கையாளர் EMI-ஐ உடனடியாகச் செலுத்த வேண்டும்.

• பிற ரெசல்யூஷன் திட்டங்களில் முன்கூட்டியே அடைத்தல் மற்றும் பகுதியளவு-முன்கூட்டியே செலுத்துதல் ஆகியவற்றிற்கான லாக் இன் காலமானது ஆரம்பக் கடன் அல்லது கடன்களுக்காக வாடிக்கையாளர்களால் கையொப்பமிடப்பட்ட / ஏற்றுக்கொள்ளப்பட்ட கடன் ஆவணங்களால் நிர்வகிக்கப்படும்.

நான் அத்தகைய கடன்களுக்கு முன்கூட்டியே EMI-கள் அல்லது பகுதியளவு முன்-பணத்தைச் செலுத்த முடியுமா?

கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக ஏற்படும் தற்காலிக இடையூறை சமாளிக்க உங்களுக்கு உதவும் வகையில் ரெசல்யூஷன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இருப்பினும், தற்போதுள்ள கடன் விதிமுறைகளின்படி எந்தவொரு முன்கூட்டிய EMI-ஐ செலுத்துவதற்கும் அல்லது பகுதியளவு பணத்தை முன்கூட்டியே செலுத்துவதற்குமான விருப்பத்தேர்வு உங்களிடம் உள்ளது.

மார்ச் 1, 2020-இன் படி, எனது கடன் NPA-இல் இருந்தால், ரெசல்யூஷன் திட்டம் எனக்கு பொருந்துமா?

இல்லை. ரெசல்யூஷன் திட்டம் "தரம்" என்று வகைப்படுத்தப்பட்ட கடன்களுக்கு மட்டுமே கிடைக்கும் மற்றும் மார்ச் 1, 2020 படி, 30 நாட்களுக்கும் மேலாக உள்ள செலுத்தப்படாத கடன்களுக்கு கிடைக்காது.

நான் ஏற்கனவே ECLGS/ ஃப்ளெக்ஸி கன்வெர்சன் வசதியின் கீழ் கடன் பெறுகிறேன் என்றால், நான் ரெசல்யூஷன் திட்டத்திற்கு தகுதியுடையவரா?

• அத்தகைய கடன்களுக்கான ரெசல்யூஷன் திட்டத்திற்கு தனி திட்டங்கள்/சலுகைகள் கிடைக்கும்.

கட்டமைப்பின் கீழ் வழங்கப்பட்ட மொராட்டோரியம் காலத்தில் வேறு எந்த கடனுக்கும் நான் தகுதி பெற முடியாதா?

இல்லை. இருப்பினும், வேறு எந்த கடனுக்கான உங்கள் தகுதியானது, அவ்வப்போது பொருந்தும் வகையில் வங்கியின் அந்தந்த கடன் திட்டத்திற்கான பரிந்துரைக்கப்பட்ட தகுதி விதிமுறைகளைப் பொறுத்தது.

ரெசல்யூஷன் திட்டத்தின் கீழ் மொராட்டோரியத்திற்கான அதிகபட்ச தவணைக்காலம் என்னவாக இருக்கும்?

• நிறுவனத்தின் தனிப்பட்ட விருப்பத்தின்படி தனிநபர், நுகர்வோர் மற்றும் பிற கடன்களுக்கு 24 மாதங்கள் வரை.

ரெசல்யூஷன் திட்டத்தை செயல்படுத்திய உடனுக்குடன் எனது EMI தொடங்குமா அல்லது ரெசல்யூஷன் திட்டத்திற்கு பிறகு சில மொராட்டோரியம் காலம் இருக்குமா?

• ரெசல்யூஷன் திட்டத்தின்படி மொராட்டோரியத்திற்கான நீட்டிப்பு காலத்திற்கு உங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படாவிட்டால், ரெசல்யூஷன் திட்டத்தைச் செயல்படுத்திய உடன் உங்கள் EMI தொடங்கும்.

ரெசல்யூஷன் திட்டத்தின் காரணமாக எனது தற்போதைய கடன் சலுகை பாதிக்கப்படுமா?

• தற்போதுள்ள சலுகையின் மீதான நடவடிக்கை BFL-யின் உட்புற கொள்கையின்படி இருக்கும்.

ரெசல்யூஷன் திட்டத்தை தேர்ந்தெடுக்கும் போது நான் EMI / தவணைக்கால விளைவை தேர்ந்தெடுக்க முடியுமா?

• இல்லை. ரெசல்யூஷன் திட்டம் உங்கள் கடனுக்கு பொருந்தக்கூடிய சலுகையின் அடிப்படையில் செயல்படுத்தப்படும்.

சலுகையைப் பெற நான் புதிய விண்ணப்பம் / ஒப்பந்தத்துடன் விண்ணப்பிக்க வேண்டுமா?

• நீங்கள் பெறும் சலுகையின் அடிப்படையில், எங்கள் வாடிக்கையாளர் போர்டல் எக்ஸ்பீரியாவில் அல்லது BFL மூலம் நிர்ணயிக்கப்பட்ட வேறு ஏதேனும் முறையில் நீங்கள் ஏற்றுக்கொண்டதற்கான திருத்தப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் உங்களுடன் பகிரப்படும்.

EMI செலுத்தும் தேதியில் மாற்றத்தை நான் கோர முடியுமா?

• EMI செலுத்தும் தேதி நிலையானதாக இருக்கும் மற்றும் கோரிக்கையின் பேரில் மாற்ற இயலாது.

நான் ரெசல்யூஷன் திட்டத்திற்கு விண்ணப்பித்தேன், ஆனால் எனது EMI கழிக்கப்பட்டுள்ளது - நான் ரீஃபண்ட் பெற முடியுமா, அல்லது அது சரிசெய்யப்படும்?

• EMI தொகைக்காக செலுத்தப்பட்ட எந்தவொரு அதிகபட்ச தொகையும் அடுத்து வரும் மாதத்தின் EMI-யில் சரிசெய்யப்படும்.

இது எனது கடைசி 2 EMI-கள், ரெசல்யூஷன் திட்டத்திற்கான விருப்பத் தேர்வை நான் பெறுவேனா?

• ஆம், ஒன்றுக்கும் அதிகமான EMI-கள் செலுத்த வேண்டிய சந்தர்ப்பங்களில் விண்ணப்பிக்கலாம்.

ஒருவேளை, எனது முந்தைய கடன்கள் ரெசல்யூஷன் திட்டத்தின் கீழ் அடங்குகின்றன என்றால், நான் புதிய கடனுக்கு விண்ணப்பிக்க முடியுமா?

• அவ்வப்போது BFL-யின் உட்புற ஆபத்து கொள்கையின் அடிப்படையில் உங்களுக்காக உருவாக்கப்படும் எதிர்கால சலுகைகளை இது சார்ந்திருக்கும்.

ரெசல்யூஷன் திட்ட கோரிக்கையை செயல்முறைப்படுத்த எத்தனை நாட்கள் தேவைப்படும்?

• கடன்களுக்கான ரெசல்யூஷன் பொதுவாக 10 வேலை நாட்களுக்குள் செயல்முறைப்படுத்தப்படும்.

தற்போதுள்ள கடனின் (CIP) EMI-ஐ வழங்கும் போது ரெசல்யூஷன் திட்டத்தின் கீழ் கடன்களுக்கான நடவடிக்கை என்னவாக இருக்கும்?(CIP)?

• தற்போதைய கடன் செயல்முறையின் படி இது நிர்வகிக்கப்படும். புதிய கடனுக்கு பதிவு செய்த பிறகு பழைய கடனுக்கான எந்தவொரு கூடுதல் EMI கழிக்கப்பட்டாலும், அது புதிய கடனுக்கு எதிராக சரிசெய்யப்படும்.

நான் ஏற்கனவே மொராட்டோரியம் காலத்தை பெற்றுள்ளேன், தானியங்கி முறையில் ரெசல்யூஷன் திட்டத்தை செயல்படுத்த நான் தகுதி பெறுவேனா?

• இல்லை. ரெசல்யூஷன் திட்ட சலுகைகள் எங்கள் உள் கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன, மேலும் நீங்கள் அதை எங்கள் வாடிக்கையாளர் போர்ட்டல் எக்ஸ்பீரியாவில் சரிபார்க்க வேண்டும்.

நான் ஒரு ரெசல்யூஷன் திட்டச் சலுகையை தேர்ந்தெடுத்தால் எனது EMI கார்டு முடக்கப்படுமா?

• ஒருவேளை நீங்கள் ரெசல்யூஷன் திட்டத்தை செயல்படுத்த தேர்ந்தெடுத்தால், உங்கள் EMI கார்டு முடக்கப்படும். அடுத்த சில மாதங்களில் உங்கள் கடனை திருப்பிச் செலுத்துவதன் அடிப்படையில் கார்டை தடைநீக்கம் செய்யலாம்.

RBL வங்கி மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் கோ-பிராண்டட் கிரெடிட் கார்டு உட்பட பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் (BFL) உடனான அனைத்து தயாரிப்புகளுக்கும் இது பொருந்துமா?

• FD மீதான கடன்கள், தங்க கடன் மற்றும் கோ-பிராண்டட் கிரெடிட் கார்டுகள் மீது நிலுவையிலுள்ள நிலுவை கடன்களை தவிர்த்து BFL உடனான தற்போதைய கடன்களுக்கு மட்டுமே இது பொருந்தும். தெளிவாகக் கூற வேண்டுமென்றால், ரெசல்யூஷன் திட்டம் RBL வங்கி மற்றும் BFL கோ-பிராண்டட் கிரெடிட் கார்டுக்கு பொருந்தாது.

ரெசல்யூஷன் திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டுமென்றால் எனது பஜாஜ் ஃபின்சர்வ் EMI நெட்வொர்க் கார்டு எப்போது தடைநீக்கம் செய்யப்படும்?

ரெசல்யூஷன் திட்டத்தின் கீழ் கடனை முழுமையாக திருப்பிச் செலுத்திய பிறகு மற்றும்/அல்லது நடைமுறையில் உள்ள BFL கொள்கையின் படி.

எங்களது சமூக வலைதளங்கள்

எங்களுடைய சமீபத்திய செய்தி மற்றும் சலுகைகளை தெரிந்துகொள்ள சமூக ஊடகத்தின் மூலம் எங்களை தொடர்பு கொள்ளவும்