கண்ணோட்டம்

play

விடுமுறையில் செல்லுதல் என்பது உங்கள் ஓய்வில்லா திட்டமிடல்களுக்கு சிறு விடுப்பு கொடுத்து நீங்கள் சற்று ஓய்வு எடுத்துக் கொள்வதாகும். இருப்பினும், பயணத்தின் போது ஹோட்டலில் முன்பதிவு செய்யாமல் சிரமப்படுவது, உங்கள் வாலெட்டை தொலைப்பது அல்லது விபத்துகள் போன்ற சிக்கல்களைச் சந்திக்க நேரிடலாம்.

பஜாஜ் ஃபின்சர்விலிருந்து ஒரு உள்நாட்டு விடுமுறை காப்பீட்டுடன், இந்த வகையான சிக்கல்களிலிருந்து எந்தவித தொந்தரவும் இல்லாமல் நீங்கள் சுலபமாக விடுபடலாம்.

 • அவசரக்கால பயண உதவி

  நீங்கள் உங்கள் விடுமுறை பயணத்தில் சிக்கிக் கொண்டால், நீங்கள் இந்தியாவில் ரூ. 50,000 வரைக்கும் அவசர பயணம் மற்றும் ஹோட்டல் உதவியைப் பெறலாம் மற்றும். வெளிநாட்டில் உங்கள் ஹோட்டல் பில்கள், திரும்புதல் பயணம் மற்றும் மற்ற செலவுகளை சுலபமாக கவனித்துக் கொள்ள ரூ. 1,00,000 பெறலாம்.

 • சாலையோர உதவி

  உங்கள் விடுமுறை பயணத்தின் போது கார் பிரேக் டவுனில் சிக்கிக் கொண்டீர்களா? இந்தியாவில் 700 க்கும் மேற்பட்ட இடங்களில், வாகன பழுதுபார்ப்பிற்கு சாலையோர உதவியைப் பெறுங்கள்.

 • காம்ப்ளிமென்டரி காப்பீடு

  தனிநபர் விபத்துகள், விபத்து மருத்துவ உள்ளிருப்புச் சிகிச்சை, பயணங்கள் இரத்து, வீட்டுக் கொள்ளை, மற்றும் பொருட்கள் இழப்பு ஆகியவற்றின் மீது ரூ. 3,00,000 வரை காம்ப்ளிமென்டரி காப்பீடு பெறுங்கள். நீங்கள் விடுமுறை பயணத்தில் இருக்கும் போது ஒவ்வொரு அவசர நிலைக்கும் எதிரான பாதுகாப்பை இது உறுதி செய்கிறது.

 • 24/7 கார்டு முடக்க சேவை

  உங்கள் விடுமுறை பயணத்தில் நீங்கள் வாலெட்டை இழந்தால் அதை சமாளிப்பது மிகவும் கடினம். அவ்வாறு இழந்தால், ஒரே தொலைபேசி அழைப்பில் உங்களின் அனைத்து டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை தடை செய்யும் வசதியை பெறுங்கள். நீங்கள் உங்கள் PAN கார்டை மீண்டும் இலவசமாக பெறலாம்.

டிராவல் சேஃப் மெம்பர்ஷிப்

பஜாஜ் ஃபின்சர்வின் உள்நாட்டு விடுமுறை காப்பீட்டில் ஒரு-வருட பயண பாதுகாப்பு உறுப்பினருக்கான அட்டை உள்ளது, அதில் பின்வரும் நன்மைகள் உள்ளன:

• உங்கள் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள் தொலைந்து விட்டாலோ அல்லது திருடுபோய் விட்டாலோ, அவற்றை பிறர் தவறாக பயன்படுத்துவதை தடுக்க நீங்கள் அனைத்து கார்டுகளையும் தடை செய்யலாம்.

• ஒருவேளை நீங்கள் இந்தியாவில் இருந்தால், எந்த அவசர பயணத் தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ள, நீங்கள் ரூ. 50,000 வரை நிதியுதவி பெறுவீர்கள். ஒருவேளை நீங்கள் வெளிநாட்டில் இருந்தால், காப்பீட்டுத் தொகை ரூ. 1,00,000 வரை இருக்கும். இது அதிகபட்சமாக 28 நாட்களுக்கு ஒரு வட்டி-இல்லா முன்தொகை. நீங்கள் இந்தத் தொகையை 28 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும்.

• இந்த காப்பீடு உங்கள் கார் பிரேக் டவுன் ஆகும் பட்சத்தில் உங்களுக்கு சாலையோர உதவியை வழங்குகிறது.

• மேலும் நீங்கள் ஒரு காருக்கு 5 லிட்டர் எரிபொருளுக்கான செலவையும் மற்றும் ஒரு இரு-சக்கர வாகனத்திற்கு 2 லிட்டர் எரிபொருளுக்கான செலவையும் பெறலாம்.

• மற்ற கார்டுகள் மற்றும் ஆவணங்களுடன் PAN கார்டையும் இழந்திருந்தால் அதற்கான ரீபிளேஸ் செலவை நாங்கள் கவர் செய்கிறோம்.

• மேலும் நீங்கள் ரூ. 3 இலட்சம் வரைக்கும் ஒரு காம்ப்ளிமென்டரி தனிநபர் விபத்து காப்பீடு பாதுகாப்பையும் பெறலாம், இதில் பொருட்கள் இழப்பும் அடங்கும்.

 

எவை உள்ளடங்காது?

• நீங்கள் போதையில் இருக்கும் போது உங்கள் பொருட்களை இழந்தால், காப்பீட்டு உரிமைக்கோரல் கருதப்படமாட்டாது.

• நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறியதால் உண்டான வாகனச் சேதங்களுக்கு காப்பீடு வழங்கப்படாது.

தேவையான ஆவணங்கள்

• KYC ஆவணங்கள்

• பயண பாதுகாப்பு மெம்பர்ஷிப் கடிதம்

எப்படி விண்ணப்பிப்பது

• நீங்கள் சுலபமாக உள்நாட்டு விடுமுறைக் காப்பீட்டிற்கு விண்ணப்பிக்க முடியும். பஜாஜ் ஃபின்சர்வ் இணையதளத்தில் உள்நுழைந்து, விண்ணப்ப படிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள தேவையான விவரங்களை நிரப்பவும் மற்றும் பிரீமியம் தொகையை ஆன்லைனில் உடனடியாகச் செலுத்தவும்.

கோரிக்கை செயல்முறை

• கார்டுகளை இழக்கும் பட்சத்தில், 24 மணிநேரத்திற்குள் பின்வரும் எங்களது இலவச எண்ணை தொடர்பு கொள்ளவும் 1800-419-4000.

• அவசர உதவிக்காக நீங்கள் உங்கள் தேவைக்கான ஆதாரத்தை வழங்க வேண்டியிருக்கும்.