உங்கள் Android சாதனத்தில் பஜாஜ் ஃபைனான்ஸ் BLU உடன் எவ்வாறு பேசுவது

நீங்கள் இதை மூன்று எளிய படிநிலைகளில் செய்யலாம்:

படிநிலை 1: உங்கள் சாதனத்தில் கூகுள் அசிஸ்டன்ட்-ஐ தொடங்கி "பஜாஜ் ஃபைனான்ஸ் உடன் பேசுங்கள்." உங்கள் கேள்விகளுக்கு உதவ நீங்கள் BLU-வில் இருந்து ஒரு வரவேற்பு மெசேஜை பெறுவீர்கள், மற்றும் Google உடன் உங்கள் பஜாஜ் ஃபைனான்ஸ் கணக்கு விவரங்களை இணைக்குமாறு உங்களிடம் கேட்கப்படும். உங்கள் போனில் Android பதிப்பு 6 அல்லது அதற்கு மேற்பட்டவை இருந்தால், நீங்கள் Google Assistant செயலியை Play Store அல்லது App Store-யில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

படிநிலை 2: பரிந்துரை சிப்பில் இருந்து "ஆம்" என்று கூறுங்கள் அல்லது "ஆம்" என்பதை தேர்ந்தெடுக்கவும்.

படிநிலை 3: உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட உடனடியாக ஒரு திரையை நீங்கள் காண்பீர்கள். உங்கள் மொபைல் எண் ஏற்கனவே பஜாஜ் ஃபைனான்ஸ் உடன் பதிவு செய்யப்பட்டிருந்தால், ஒரு ஓடிபி உடன் உங்கள் சுயவிவரத்தை அங்கீகரிக்க உங்களிடம் கேட்கப்படும். வெற்றிகரமாக சரிபார்க்கப்பட்டவுடன், நீங்கள் Blu-யில் இருந்து ஒரு உறுதிப்படுத்தல் மெசேஜை பெறுவீர்கள்.

இது எளிதானது. இந்த மூன்று படிநிலைகளை பின்பற்றவும் மற்றும் உங்கள் பஜாஜ் ஃபைனான்ஸ் கணக்கை இன்று Google Assistant உடன் இணைக்கவும்.

நீங்கள் Google Assistant -யிடம் என்னென்ன விஷயங்களை கேட்கலாம்?

கூகுள் அசிஸ்டண்டில் BLU உதவியுடன் நீங்கள் தீர்க்கக்கூடிய சில மாதிரி கேள்விகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:

  • “வாடிக்கையாளர் போர்ட்டலில் நான் எவ்வாறு உள்நுழைவது?”
  • “முன்கூட்டியே அடைத்தல்(ஃபோர்குளோசர்) கட்டணங்கள் யாவை?”
  • “எனது ஃப்ளெக்ஸி ஹைப்ரிட் கடனில் இருந்து நான் எவ்வாறு டிராடவுன் செய்வது?”
  • “எனது வங்கி கணக்கு எண்ணை எவ்வாறு மாற்றுவது?"
  • “எனது வட்டி சான்றிதழை எவ்வாறு பெறுவது என்பதை நான் தெரிந்து கொள்ள வேண்டும்.”
  • “எனது கடனை முன்கூட்டியே அடைப்பது எப்படி?”
  • “எனது ஃப்ளெக்ஸி கடனை எவ்வாறு பகுதியளவு-முன்கூட்டியே செலுத்துவது?”
  • “வாடிக்கையாளர் சேவை எண்ணை எனக்கு கூறுங்கள்.”
  • “எனது டேர்ம் கடனை ஃப்ளெக்ஸி ஹைப்ரிட் கடனாக மாற்றுவதற்கான நன்மைகள் பற்றி எனக்கு தெரிவிக்கவும்.”