அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

EMI என்றால் என்ன?

EMI-யின் விரிவாக்கம் ஈக்வேடட் மன்த்லி இன்ஸ்டாஸ்மெண்ட்ஸ் என்பதாகும். நிலையான மாதாந்திர செலுத்துதல்களின் மூலம் கால நேரத்தில் உங்கள் கடனை எளிதாக திருப்பிச் செலுத்துதல் வசதியை EMI வழங்குகிறது. ஒவ்வொரு தவணையும் அசல் மற்றும் வட்டி கூறுகளை உள்ளடக்கியது. சில காட்சிகளில் தவணை ஏற்றத்தாழ்வாகவும் மற்றும் ஃப்ரீக்வென்சி காலாண்டுகளாகவும் இருக்கலாம்.

திருப்பிச் செலுத்துவதற்கான கால அட்டவணை என்றால் என்ன?

திருப்பிச் செலுத்தல் அட்டவணை என்பது உங்களின் கடனை திருப்பிச்செலுத்துவதற்கான அட்டவணை ஆகும். இது அசல் மற்றும் வட்டி கூறுகளுக்கு இடையில், ஒவ்வொரு தவணையின் தொகை, நிலுவைத்தொகை தேதிகள் மற்றும் விவரங்களை வழங்குகிறது. மேலும் இது தவணையின் ஒவ்வொரு கட்டத்திலும் இருப்பு அசலை வழங்குகிறது.

நான் எப்படி எனது நிலுவைத்தொகை, முன்கூட்டிய செலுத்தல் தொகையை(ஃபோர்குளோசர்) உடனடியாக சரிபார்ப்பது?

உங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து DUE அல்லது FC என்று டைப் செய்து எங்கள் SMS சேவை எண்ணான 9223192235 க்கு நீங்கள் ஒரு SMS செய்யலாம்.

NOC கோரிக்கையை உடனடியாக எழுப்புவதற்கு ஏதேனும் வழி இருக்கிறதா?

முடியும்! உங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து NOC என்று டைப் செய்து எங்கள் SMS சேவை எண்ணான 9223192235 க்கு நீங்கள் ஒரு SMS செய்யலாம். கடன் தவணைக்காலம் முடிந்தவுடன் மற்றும் அனைத்து நிலுவைத் தொகைகளும் பெறப்பட்டவுடன் மற்றும் உங்கள் வாகன RC எண் எங்களுடன் புதுப்பிக்கப்பட்டவுடன் NOC வழங்கப்படும். ஆன்லைன் பணம்செலுத்தல்களை மேற்கொள்ள தயவுசெய்து பாயிண்ட் 7-ஐ பார்க்கவும்.

நான் உடனடியாக எனது கணக்கு அறிக்கையை மின்னஞ்சல் வழியாக பெற முடியுமா?

முடியும்! உங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து SOA என்று டைப் செய்து எங்கள் SMS சேவை எண்ணான 9223192235 க்கு நீங்கள் ஒரு SMS செய்யலாம்.

இணையத்தளத்தில் எனது கணக்கு தகவலை நான் சரிபார்க்க முடியுமா?

முடியும்! பதிவுசெய்த மொபைல் எண், கடன் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதி போன்ற உள்நுழைவு சான்றுகளுடன் அல்லது உங்கள் பதிவுசெய்த மொபைல் எண்ணில் வந்துள்ள OTP மூலம் எங்களது இணையதளம் www.bajajautofinance.com ல் நீங்கள் உள்நுழைய வேண்டும். உள்நுழைவிற்கு பின்னர் உங்கள் கடன் கணக்கு தகவல் திரையில் காட்டப்படும்.

நான் எனது தவணை மற்றும் மற்ற நிலுவைத்தொகையை ஆன்லைனில் செலுத்த முடியுமா? முடியும் என்றால் எப்படி செய்ய வேண்டும்?

முடியும்! கடன் கணக்கில் உள்நுழைவதன் மூலமோ அல்லது விரைவான செலுத்தல் விருப்பத்தின் மூலமாகவோ உங்கள் தவணை மற்றும் பிற அபராத கட்டணங்களை நீங்கள் செலுத்தலாம். உள்நுழைவிற்கு பின்னர், எங்களின் பாதுகாக்கப்பட்ட பேமெண்ட் கேட்வே மூலம் 'பேமெண்ட் செய்யவும்' என்ற விருப்பத்தின் மீது கிளிக் செய்து உங்களின் நிலுவையிலுள்ள கட்டணத்தை செலுத்தவும்.

நான் பகுதியளவு பணம் செலுத்தல் அல்லது முன்கூட்டியே அடைத்தல் (ஃபோர்குளோசர்) தொகையை ஆன்லைனில் செலுத்த முடியுமா?

முடியும்! நீங்கள் இணையதளத்தில் உங்களது கடன் கணக்கில் உள்நுழைவு செய்வதன் மூலம் பகுதியளவு/பகுதியளவு முன்கூட்டிய (ஃபோர்குளோசர்) கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம். நீங்கள் எங்கள் இணையதளமான www.bajajautofinance.com -க்கு உள்நுழைவு ஆதாரங்களான பதிவுசெய்த மொபைல் எண், கடன் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதி அல்லது உங்களின் பதிவுசெய்த மொபைல் எண்ணின் OTP மூலம் உள்நுழைவு செய்ய வேண்டும். 'பகுதியளவு முன்கூட்டியே அடைத்தல்(ஃபோர்குளோசர்) என்பதை கிளிக் செய்து எங்களின் பாதுகாப்பான பேமெண்ட் கேட்வே மூலம் உங்களின் பகுதியளவு பணம்செலுத்தலை செலுத்துங்கள்.

நான் ஆன்லைனில் எனது கடன் சுருக்கம் மற்றும் செலுத்த வேண்டிய எதிர்கால தவணைகளை பார்க்க முடியுமா?

முடியும்! பதிவுசெய்த மொபைல் எண், கடன் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதி போன்ற உள்நுழைவு சான்றுகளுடன் அல்லது உங்கள் பதிவுசெய்த மொபைல் எண்ணில் வந்துள்ள OTP மூலம் எங்களது இணையதளம் www.bajajautofinance.com ல் நீங்கள் உள்நுழைய வேண்டும். உள்நுழைவிற்கு பின்னர் உங்கள் கடன் கணக்கு தகவல் திரையில் காட்டப்படும்.
மேலும் கேள்விகளுக்கு, தயவுசெய்து https://www.bajajautofinance.com ல் பார்க்கவும்

எங்கள் செய்திமடலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்

மக்களும் இதையே கருதுகின்றனர்

ஃப்ளெக்ஸி கடன்

உங்களுக்குத் தேவைப்படும்போது திரும்பப்பெறலாம், உங்களால் முடியும்போது முன்னரே செலுத்தலாம்

அறிய

கிரெடிட் கார்டு

ஒரு சூப்பர்கார்டு என்பது EMI கார்டுடன் கூடிய ஒரு கிரெடிட் கார்டின் நன்மைகளை ஒருங்கிணைக்கிறது

விண்ணப்பி

EMI நெட்வொர்க்

சுலப மற்றும் குறைவான EMI-களில் உங்களுக்குத் தேவையான அனைத்தையும் பெறுங்கள்

அறிய