அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
இஎம்ஐ என்பது சமமான மாதாந்திர தவணைகளை குறிக்கிறது. இது எந்தவொரு வகையான கடனையும் தேர்வு செய்யும்போது நீங்கள் செலுத்த வேண்டிய மாதாந்திர தொகையாகும். வட்டி பொறுப்புகளுடன் முழு கடன் தொகையும் சிறிய மாதாந்திர தொகைகளாக பிரிக்கப்படும். தவணைக்காலம், அசல் மற்றும் வட்டி விகிதம் ஆகியவை இஎம்ஐ கணக்கீட்டிற்கான முக்கிய அளவுருக்களாகும்.
இஎம்ஐ கணக்கீட்டிற்கான ஃபார்முலா பின்வருமாறு:
இஎம்ஐ = P x R x (1+R)^N / [(1+R)^N-1], P என்பது அசல், R என்பது வட்டி விகிதம், மற்றும் N என்பது தவணைக்காலம்.
செலுத்த வேண்டிய இஎம்ஐ-கள் மற்றும் செலுத்த வேண்டிய மொத்த வட்டியைக் கணக்கிட அசல், தவணைக்காலம் மற்றும் வட்டி விகிதத்தை உள்ளிடவும் மற்றும் விரிவான கடனளிப்பு அட்டவணையை பெறவும்.
ஒரு இஎம்ஐ கால்குலேட்டரைப் பயன்படுத்துவது எளிமையானது. நீங்கள் கடன் வாங்க விரும்பும் கடன் தொகை, திருப்பிச் செலுத்தும் காலம் மற்றும் கடன் வட்டி விகிதம் ஆகியவற்றை தேர்ந்தெடுக்க ஸ்லைடரை பயன்படுத்தவும். நீங்கள் இந்த மூன்று உள்ளீடுகளை தேர்ந்தெடுத்தவுடன், உங்கள் இஎம்ஐ திரையில் காண்பிக்கப்படும். இந்த கருவிகள் இலவசமாக கிடைக்கின்றன மற்றும் எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.