படம்

கமர்ஷியல் வாகன காப்பீட்டை ஆன்லைனில் வாங்கவும்

கண்ணோட்டம்: கமர்ஷியல் கார் காப்பீடு

வணிக கார் காப்பீடு மேலும் அது டாக்ஸி காப்பீடு என்றும் அழைக்கப்படும், இது வணிக வாகனங்களுக்கான சேதம் அல்லது இழப்பீட்டிற்கு காப்பீடு அளிக்கும். உங்கள் தொழிலில் டாக்ஸி போன்ற வணிக வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் - நீங்கள் வணிக வாகனங்களுக்கான கார் காப்பீட்டை அவசியம் பெற வேண்டும். இந்த வகை மாதிரி கார் காப்பீடுஉங்கள் வணிக வாகனங்களுக்கு திருட்டு, இழப்பு அல்லது சேதம் எது ஏற்பட்டாலும் அது உங்கள் தொழிலை பாதிக்காது. உங்கள் சொந்த பணத்தின் மூலம் எந்தவொரு வணிக வாகனத்திற்கும் இழப்பு அல்லது சேதத்திற்கு பணம் செலுத்துவது உங்களுக்கு ஒரு பெரிய தொழில் செலவாக இருக்கலாம். இதனால், ஒவ்வொரு தொழில் உரிமையாளரும் ஒரு விரிவான டாக்ஸி கார் காப்பீட்டை விரும்புவார்கள்.

கமர்ஷியல் டாக்ஸி காப்பீடு ஒற்றை டாக்ஸி முதல் ஃப்ளீட் டாக்ஸி வரை எவற்றையும் கவர் செய்யும். ஒரே நிபந்தனை - வாகனங்கள் கமர்ஷியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட வேண்டும்.

எல்லாவற்றையும் போலவே, உங்கள் வீட்டில் அல்லது அலுவலகத்தில் இருந்து வசதியாக நீங்கள் கமர்ஷியல் வாகன காப்பீட்டை ஆன்லைனில் வாங்கலாம்.


வணிக கார் அல்லது டேக்ஸி காப்பீட்டின் வகைகள்

கமர்ஷியல் கார் காப்பீடு அல்லது டாக்ஸி காப்பீடு இரு வகைப்படும்:

1. மூன்றாம்-தரப்பினர் காப்பீட்டு கவர்

மூன்றாம் தரப்பினர் காப்பீட்டு கவர் என்பது பொறுப்பு கவர் எனவும் அழைக்கப்படும் மற்றும் மோட்டார் வாகன சட்டம் 1988 -யின் படி இது கட்டாயமானது.
ஒவ்வொரு வணிக வாகனம் அல்லது டாக்ஸி இதை வைத்திருக்க வேண்டும் மூன்றாம் தரப்பினர் காப்பீட்டு கவர் இது மூன்றாம் தரப்பினருக்கு காப்பீடு செய்யப்பட்ட வணிக வாகனத்தால் ஏற்படும் சேதங்களை உள்ளடக்கியது. மூன்றாம் தரப்பு வாகனம், சொத்து அல்லது நபருக்கு ஏற்படும் எந்த சேதமாக இருக்கலாம். ஒரு நபர் காப்பீடு செய்யப்பட்ட வணிக வாகனத்தில் இருந்து காயம் பெறப்பட்டிருந்தால் அல்லது மரணமடைந்தால் - இழப்புக்காக இந்த காப்பீடு ஈடு செய்கிறது.

2. விரிவான காப்பீட்டு கவர்

பெயர் குறிப்பிடுவது போல, விரிவான காப்பீட்டு கவர் பொறுப்பை விட அதிகமாக பாதுகாப்பை அளிக்கிறது. இது ஒரு விருப்ப காப்பீட்டு கவர் என்றாலும், அனைத்து கமர்ஷியல் வாகனங்களுக்கும் தேர்வு செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. பின்வருபவை இது கவர் செய்யும்:

• விபத்துக்கள், இயற்கை அல்லது மனிதரால் ஏற்படும் பேரழிவுகளின் காரணமாக காப்பீடு செய்யப்பட்ட டாக்ஸி அல்லது கமர்ஷியல் வாகனத்தின் இழப்பு, சேதம் அல்லது திருட்டு.
• காப்பீட்டு கமர்ஷியல் வாகனத்தின் உரிமையாளருக்கான தனிநபர் விபத்து காப்பீடு.
• பயணிகள் அல்லது பணம் செலுத்தும் டிரைவர்களுக்காக கூடுதல் காப்பீடு வாங்கி கொள்ளலாம்.
• எந்த மூன்றாம் தரப்பினருக்கும் தற்செயலான மரணம், காயம் அல்லது சொத்து சேதம்.
 

கமர்ஷியல் கார் அல்லது டாக்ஸி காப்பீட்டு பாலிசி வாங்குவதன் நன்மைகள்

 • 1. சட்டத்திற்குக் கட்டுப்படுகிறது

  இந்திய சாலைகள் ஓட்டும் அனைத்து கமர்ஷியல் வாகனத்திற்கும் கமர்ஷியல் வாகன காப்பீடு செய்ய வேண்டும் என்பது சட்டத்தின் படி கட்டாயமாகும். எனவே, நீங்கள் சட்டத்திற்கு கட்டுப்பட்டு குறைந்தபட்சம் மூன்றாம் தரப்பு கமர்ஷியல் வாகன காப்பீடு வாங்க வேண்டும்.

  2. விரிவான காப்பீடு

  நீங்கள் விரிவான கமர்ஷியல் காப்பீட்டுடன் உங்களின் கமர்ஷியல் வாகனத்திற்கு இழப்பு, திருட்டு அல்லது சேதம் போன்றவையை கவர் செய்யலாம். எந்தவொரு மூன்றாம் தரப்பு கடப்பாடுகளுக்கும் நீங்கள் கவரேஜ் பெறுவீர்கள் மற்றும் கமர்ஷியல் காரின் உரிமையாளர் விபத்து காப்பீட்டை பெறுவார், சில ஆட்-ஆன்-களுடன், நீங்கள் உங்களின் பணம் செலுத்தும் டிரைவர்கள் மற்றும் பயணிகளுக்கு கவரேஜ் வாங்கலாம்.

  3. வங்கியை பிரேக் செய்ய தவிர்க்கவும்

  ஒரு கமர்ஷியல் வாகனத்தை பழுது பார்ப்பது ஒரு பெரிய வணிக செலவாகும். உங்கள் வணிக வளர்ச்சியை பாதிக்கும் கமர்ஷியல் வாகனத்திற்கு எந்தவொரு சேதம் அல்லது இழப்பை ஏற்பட அனுமதிக்காதீர்கள். அதற்கு பதிலாக, காப்பீட்டு கவருடன் ஒரு விபத்து காரணமாக ஏற்படும் பழுது செலவுகள் மற்றும் நிதி கடமைகளை கவர் செய்யவும்.

  4. வங்கி கடன்களுக்கான காப்பீடு

  பெரும்பாலான கமர்ஷியல் வாகனங்கள் வங்கி கடன்களில் வாங்கப்படுகின்றன. ஒரு விரிவான கமர்ஷியல் கார் அல்லது டாக்ஸி காப்பீட்டுடன், உங்கள் வாகனம் மொத்த இழப்புக்குள்ளானால் அல்லது திருடப்பட்டால் உங்கள் கடனைப் பாதுகாக்க முடியும்.

  5. உங்கள் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை பாதுகாக்கவும்

  உங்கள் டாக்ஸி வணிகத்தை இயக்குவதற்காக ஊதியம் செலுத்தும் டிரைவர்கள் வேலைக்கு வைத்திருந்தால், அவரை பாதுகாப்பது உங்கள் பொறுப்பாகும். ஒரு விபத்து ஏற்பட்டால், ஒரு கமர்ஷியல் கார் காப்பீடு காயங்கள் அல்லது ஓட்டுநர் மற்றும் பயணிகளின் மரணத்தை கவர் செய்ய முடியும். இந்த கவரேஜ் ஆட்-ஆன் கவருடன் வாங்க முடியும்.