படிவம் 15G மற்றும் 15H இவைகளை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை அனைத்தும்

நிலையான வட்டி விகிதம் மற்றும் கவர்ச்சிகரமான வருவாய் கொண்ட நிலையான வைப்புத்தொகை பெரும்பாலான முதலீட்டாளர்களுக்கு மிகவும் விருப்பமான முதலீட்டு விருப்பங்களில் ஒன்றாகும். இருப்பினும், நிலையான வைப்புத்தொகையிலிருந்து நீங்கள் சம்பாதிக்கும் வட்டி முழுமையாக வரிக்கு உட்பட்டது. சமீபத்திய பட்ஜெட்டின் படி, வங்கிகள் மற்றும் தபால் அலுவலக வைப்புகளுக்கு TDS வரம்பு ரூ. 10,000 முதல் ரூ. 40,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் NBFC-கள் தொடர்ந்து ரூ. 5000 ஆக இருக்கும்

படிவம் 15G என்றால் என்ன?

பின்வரும் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால், வருமானத்தில் TDS விலக்கு தடுப்பதற்காக படிவம் 15G பயன்படுத்தப்படலாம்:

 • நீங்கள் ஒரு தனிநபர் (மற்றும் இந்திய குடியுரிமையாளர்) அல்லது HUF அல்லது அறக்கட்டளை அல்லது வேறு ஏதேனும் மதிப்பீட்டாளர் ஆனால் ஒரு நிறுவனம் அல்ல
 • நீங்கள் 60 வயதுக்கும் குறைவாக உள்ளீர்கள்
 • உங்கள் மொத்த வருமானத்தில் கணக்கிடப்பட்ட வரி பூஜ்ஜியம்
 • ஆண்டிற்கான உங்கள் மொத்த வட்டி வருமானம் அந்த ஆண்டின் அடிப்படை விலக்கு வரம்பை விட குறைவாக உள்ளது, இது 2020-21 நிதியாண்டிற்கான ரூ. 2.5 லட்சம் (AY 2021-22)

படிவம் 15H என்றால் என்ன?

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, பின்வரும் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் TDS கழித்தலை தடுப்பதற்கு படிவம் 15H வழங்கப்படலாம்:

 • நீங்கள் ஒரு தனிநபர் மற்றும் இந்திய குடியிருப்பாளர் ஆக இருக்க வேண்டும்
 • நீங்கள் குறைந்தபட்சம் 60 வயது உள்ளவராக இருக்க வேண்டும்
 • உங்கள் மொத்த வருமானத்தில் கணக்கிடப்பட்ட வரி பூஜ்ஜியம்

வெவ்வேறு தனிநபர்களுக்கான விலக்கு வரம்பின் விரைவான சுருக்கம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:

வாடிக்கையாளர் வகை விவரங்கள் படிவ வகை அடிப்படை விலக்கு வரம்பு
தனிநபர் 60 வயதிற்குட்பட்ட இந்திய குடியிருப்பாளர் படிவம் 15ஜி ரூ 2,50,000
மூத்தக் குடிமகன் 60 வயதிற்கு மேற்பட்ட ஆனால் 80 வயதுக்கும் குறைவான இந்திய குடியிருப்பாளர் படிவம் 15H ரூ. 5,00,000
சூப்பர் சீனியர் குடிமகன் 80 வயதிற்கு மேற்பட்ட இந்திய குடியிருப்பாளர் படிவம் 15H ரூ 5,00,000
தனிநபர்-அல்லாதவர்கள் டிரஸ்ட், சங்கம், கிளப், HUF மற்றும் சமூகம் படிவம் 15ஜி ரூ 2,50,000

படிவம் 15G அல்லது படிவம் 15H எவ்வாறு நிரப்ப வேண்டும்?

15G மற்றும் 15H படிவங்களை வழங்குவதற்கு தேவையான நிபந்தனைகளை நீங்கள் பூர்த்தி செய்தவுடன், அவற்றை நீங்கள் நிரப்ப தொடங்கலாம். நீங்கள் எடுக்க வேண்டிய படிநிலைகள் இங்கே:

 • படிவம் 15G மற்றும் படிவம் 15H ஆகியவற்றில் வெவ்வேறு ஃபீல்டுகளில் நிரப்பவும்
 • உங்கள் PAN நகலை அறிவிப்புடன் இணைக்கவும்
 • படிவங்களை உங்கள் கடன் வழங்குநரிடம் சமர்ப்பிக்கவும்.

நீண்ட வரிசைகள் மற்றும் கடினமான செயல்முறைகளை தவிர்க்க விரும்புபவர்களுக்கு, இந்த படிவங்களை ஆன்லைனில் தாக்கல் செய்வதை நீங்கள் கருத்தில் கொள்ளலாம்.

படிவங்கள் 15G மற்றும் 15H இரண்டும் 1 வருடத்திற்கு செல்லுபடியாகும், மற்றும் ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் நிதியாளரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். நீங்கள் படிவங்களை வழங்குவதற்கு முன்னர் உங்கள் நிதியாளர் வரியை கழிக்கவில்லை என்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும், ஏனெனில் வங்கி அதை ரீஃபண்ட் செய்ய முடியாது. உங்கள் பணத்தை திரும்ப பெற, நீங்கள் உங்கள் ITR-ஐ தாக்கல் செய்து உங்கள் TDS தொகையின் ரீஃபண்டை கோர வேண்டும்.

படிவம் 15G மற்றும் படிவம் 15H PDF எவ்வாறு பதிவிறக்கம் செய்வது?

படிவம் 15G அல்லது படிவம் 15H ஆகியவை பதிவிறக்கம் செய்வதற்கு, நீங்கள் செய்ய வேண்டியவை இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:

 • வருமான வரித்துறை இணையதளத்தை அணுகவும்
 • ‘அடிக்கடி பயன்படுத்தப்படும் படிவங்கள்’ என்பதன் கீழ், உங்கள் தேவையை பொறுத்து படிவம் 15G அல்லது படிவம் 15H -ஐ காணவும்.
 • அதற்கு அடுத்துள்ள PDF ஐகானை கிளிக் செய்து படிவத்தை பதிவிறக்கவும். நீங்கள் படிவத்தை பதிவிறக்கியவுடன், அதன் 3 நகல்களை பிரிண்ட் செய்யவும். உங்கள் நிதியாளரிடம் அச்சிடப்பட்ட ஆவணங்களை கையொப்பமிட்டு சமர்ப்பிக்கவும்.