அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

இரு-சக்கர வாகன காப்பீட்டின் வகைகள் யாவை ?

இரண்டு வகையான இரு-சக்கர வாகன காப்பீடுகள் உள்ளன – விரிவான இரு-சக்கர வாகன காப்பீடு மற்றும் மூன்றாம் தரப்பினர் இரு சக்கர வாகன காப்பீடு. மூன்றாம் தரப்பினர் இரு-சக்கர வாகன காப்பீட்டை கொண்டிருப்பது சட்டப்படி கட்டாயமாகும். இருப்பினும், ஒரு விரிவான இரு-சக்கர வாகன காப்பீடு அதிகமாக பரிந்துரைக்கப்படுகிறது.

பொறுப்புத்துறப்பு - *நிபந்தனைகள் பொருந்தும். இந்த தயாரிப்பு பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் மாஸ்டர் பாலிசிதாரராக இருக்கும் குழு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. எங்கள் பங்குதாரர் காப்பீட்டு நிறுவனத்தால் காப்பீட்டு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் எந்தவித ஆபத்தையும் ஏற்காது. IRDAI கார்ப்பரேட் ஏஜென்சி பதிவு எண் CA0101 மேலே குறிப்பிட்டுள்ள நன்மைகள் மற்றும் பிரீமியம் தொகை காப்பீடு செய்யப்பட்டவரின் வயது, வாழ்க்கைமுறை பழக்கங்கள், சுகாதாரம் போன்ற பல்வேறு காரணிகளுக்கு உட்பட்டவை (பொருந்தினால்). விற்பனைக்கு பிறகு வழங்கல், தரம், சேவை செயல்பாடு, பராமரிப்பு மற்றும் எந்தவொரு கோரல்களுக்கும் BFL எந்தவித பொறுப்பையும் ஏற்காது. இந்த தயாரிப்பு காப்பீட்டு பாதுகாப்பை வழங்குகிறது. இந்த தயாரிப்பை வாங்குவது முற்றிலும் தன்னார்வமானது. எந்தவொரு மூன்றாம் தரப்பு தயாரிப்புகளையும் கட்டாயமாக வாங்க BFL அதன் வாடிக்கையாளர்களை கட்டாயப்படுத்தாது.

இரு-சக்கர வாகன காப்பீட்டின் கீழ் எது அடங்குகிறது?

காப்பீடு செய்யப்பட்ட இரு-சக்கர வாகனத்திற்கு ஏற்பட்ட சேதம் அல்லது இழப்பு, மூன்றாம்-நபருக்கான நிதி பொறுப்பு மற்றும் உரிமையாளர்/ஓட்டுநருக்கான விபத்து காப்பீடு போன்றவை ஒரு விரிவான இரு-சக்கர காப்பீட்டு பாலிசியின் கீழ் அடங்குகிறது.

பைக் காப்பீட்டை எவ்வாறு புதுப்பிப்பது?

பைக் காப்பீடு புதுப்பித்தல் இப்போது மிகவும் சுலபமானது. உங்கள் பாலிசி காலாவதி ஆகும் தேதி பற்றி உங்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படும். காப்பீட்டாளரின் இணையதளத்தில் உள்நுழைந்து பிரீமியம் தொகையை செலுத்துவதன் மூலம் நீங்கள் உங்கள் பைக் காப்பீட்டை எளிதாக புதுப்பிக்க முடியும் . நீங்கள் ஆஃப்லைனில் புதுப்பிக்க விரும்பினால்- நீங்கள் காப்பீட்டு நிறுவனத்தின் கிளையை அணுகலாம் அல்லது வாடிக்கையாளர் சேவை குழுவை தொடர்பு கொள்ளலாம்.

பைக் காப்பீட்டிற்கு ஆன்லைனில் எவ்வாறு பணம் செலுத்துவது?

பைக் காப்பீட்டிற்கு பணம் செலுத்த சில நிமிடங்கள் ஆகலாம். நீங்கள் உங்கள் பிரீமியம் தொகையை நெட் பேங்கிங், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு அல்லது ஒரு மொபைல் வாலெட் மூலமாகவும் ஆன்லைனில் செலுத்த முடியும்.

இரு-சக்கர வாகன காப்பீட்டிற்கான பிரீமியம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

ஒவ்வொரு பாலிசிதாரருக்கும் இரு-சக்கர வாகன காப்பீட்டிற்கான பிரீமியம் தொகை மாறுபடலாம். பைக் மாடல் மற்றும் மேக், தயாரிப்பு ஆண்டு, என்ஜின் திறன், புவியியல் அமைவிடம், பைக் உரிமையாளரின் வயது, ஆன்டி-டிவைஸ் இன்ஸ்டலேஷன், மற்றும் தானியங்கி விலக்கு போன்ற சில காரணிகள் பிரீமியம் தொகையை நிர்ணயிக்கின்றன.

கோரல் இல்லா போனஸ் என்றால் என்ன?

கோரல் இல்லா போனஸ் என்பது பாலிசி காலத்தின் போது கோரல் கேட்கப்படாமல் இருந்தால், அதற்காக காப்பீடு செய்யப்பட்டவருக்கு காப்பீட்டு நிறுவனத்தால் கொடுக்கப்படும் போனஸ் தொகை ஆகும்.

எனது பைக் காப்பீட்டு பாலிசி எண்ணை எவ்வாறு கண்டுபிடிப்பது?

உங்கள் பைக் காப்பீட்டு பாலிசி எண்ணை பாலிசி வாங்கும் போது நீங்கள் பெறும் காப்பீட்டிற்கான சான்றிதழில் காண முடியும். நீங்கள் மேலும் உங்கள் காப்பீட்டாளரிடமிருந்து உங்கள் பைக் பாலிசி எண் கொண்ட வழக்கமான தொடர்பு விவரங்களை இமெயில்கள் மற்றும் கடிதங்கள் மூலம் பெறுவீர்கள். நீங்கள் பைக் காப்பீட்டு ஆவணங்களை ஒருவேளை தொலைத்து விட்டால், நீங்கள் ஒரு FIR பதிவு செய்து ஒரு பைக் காப்பீட்டு பாலிசி ஆவண நகலுக்கு விண்ணப்பிக்கலாம்.

எனது நடைமுறையில் உள்ள பாலிசியில் ஒரு புதிய இரு-சக்கர வாகனத்தை நான் பதிவு செய்ய முடியுமா?

முடியும், உங்களின் நடைமுறையில் உள்ள இரு-சக்கர வாகன பாலிசியில் பழையதை ரீபிளேஸ் செய்வதன் மூலம் ஒரு புதிய இரு-சக்கர வாகனத்தை பதிவு செய்ய முடியும்.

தவணை காலத்தின் போது நான் இரு-சக்கர வாகன பாலிசியை இரத்து செய்ய முடியுமா?

முடியும், பாலிசி காலத்தின் போது ஒரு இரு-சக்கர வாகன காப்பீட்டு பாலிசியை இரத்து செய்ய முடியும். ஆனால், நீங்கள் மற்றொரு இரு-சக்கர வாகன காப்பீட்டு பாலிசி வாங்கியுள்ளதை நிரூபிக்க தேவையான ஆதரவு ஆவணங்களை நீங்கள் சமர்பிக்க வேண்டும் அல்லது உங்கள் இரு-சக்கர வாகன பதிவு RTO ஆல் இரத்து செய்யப்பட்டிருக்க வேண்டும்.

நான் ஒரு இரு-சக்கர வாகன காப்பீட்டை ஆய்வு இல்லாமல் பெற முடியுமா?

முடியும், நீங்கள் ஒரு இரு-சக்கர வாகன காப்பீட்டை ஆன்லைனில் வாங்கினால், ஆய்வு தேவையில்லை.