நீங்கள் ஒரு வீட்டு கடனுக்காக விண்ணப்பிக்கும் போது கடன் பெறும் செயல்முறையை சுலபமாக்கும் பொருட்டு நீங்கள் சில சட்ட திட்டங்களை பின்பற்ற வேண்டும். இவையாவன:
1. உங்கள் வீட்டு கடன் பரிசீலனையிலிருக்கும் போது உங்கள் கிரெடிட் ஸ்கோரானது குறையும் வகையில் நடப்பு EMI-கள் அல்லது கிரெடிட் கார்டுகளுக்கான செலுத்துதல்களை தாமதிக்காதீர்கள். வீட்டு கடன்கள் மீதான மிக சிறந்த சலுகைகள் பொதுவாக நல்ல கிரெடிட் ஸ்கோர் கொண்ட விண்ணப்பதாரர்களுக்கே வழங்கப்படுகின்றன.
2. உங்களுக்கான மிக சிறந்த கடன் விருப்பத் தேர்வை தேர்ந்தெடுங்கள். எந்த வீட்டு கடன் வட்டி விகிதம் உங்களுக்கு பொருத்தமானது என ஒப்பிட்டு ஆராய்ந்து பாருங்கள். ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான பட்ஜெட்டை நீங்கள் பராமரிக்க விரும்பி நீங்கள் ஒரு நிலையான வட்டி விகிதத்தையும் தவணைக்காலத்தையும் தேர்ந்தெடுக்க விருப்பப்படலாம்.
3. வீட்டு கடன் தகுதி கால்குலேட்டரை பயன்படுத்தி நிறுவனத்திடமிருந்து எத்தனை கடன் தொகையை நீங்கள் பெறலாம் என சோதியுங்கள்.
4. வீட்டுக்கடனுக்கு தேவையான உங்கள் சுய மற்றும் நிதிசார் ஆவணங்களை தயாராக வைத்திருங்கள் ஏனெனில் கடனுக்காக விண்ணப்பிக்கும் போது அவை தேவைப்படும்.
5. முன்பணம் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அத்தனை நல்லது உங்களுக்கு. முதல்கட்ட முன்பணத்துக்காக நீங்கள் சேமிக்க தொடங்க வேண்டும் ஏனெனில் அது வாங்க போகும் வீட்டின் மொத்த விலையில் சுமார் 2.5% முதல் 25% வரை இருக்கலாம்.
6. உங்கள் கடன் நிறுவனத்துடன் ஒரு சுமூகமான உறவை வளர்த்து கொள்ளுங்கள். இது உங்கள் கடன் ஒப்புதலுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். இதற்காக உங்கள் கடன் நிறுவனத்தின் கேள்விகளுக்கு தக்க பதிலை உரிய நேரத்தில் கொடுப்பது ஒரு வழியாகும்.