படம்

HDFC டேர்ம் இன்சூரன்ஸ் பிளான் - கிளிக் 2 புரொடெக்ட் 3D பிளஸ் பாலிசி

HDFC கிளிக் 2 புரொடக்ட் 3D பிளஸ்

மரணம், இயலாமை மற்றும் நோய்க்கு எதிராக வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பை வழங்கும் எளிமையான ஒரு விரிவான காப்பீட்டு திட்டம். HDFC கிளிக் 2 புரொடெக்ட் 3D பிளஸ் உடன், மாதத்திற்கு ரூ.521* மட்டும் செலுத்தி ரூ.1 கோடி வரையிலான ஆயுள் காப்பீடு பெறுங்கள்.

 • ஆயுள் காப்பீடு

  உங்கள் அன்பானவர்களுக்காக ஒரு விரிவான மற்றும் வாழ்நாள் முழுவதற்கான நிதி பாதுகாப்பைப் பெறுங்கள்.

 • மொத்த பாதுகாப்பு

  இறப்பு, விபத்து ஊனம், அல்லது அபாயகரமான நோய் இருப்பது கண்டறியப்படுவது போன்றவற்றிற்கு காப்பீடு பெறுங்கள்.

 • பிரீமியம் தள்ளுபடி

  ஒரு விபத்தினால் ஒரு நிரந்தர ஊனம் ஏற்பட்டால் அல்லது ஒரு அபாயகரமான நோய் இருப்பது கண்டறியப்பட்டால் (சில திட்டங்களின்கீழ்) உங்களுடைய எதிர்கால எல்லா பிரீமியங்களுக்கும் தள்ளுபடி பெறுங்கள்.

 • உறுதிப்படுத்திய தொகையை சரிபாருங்கள்

  முக்கிய காலக்கட்டங்களுக்காக எந்த வித மருத்துவ பரிசோதனைகளும் இல்லாமல் உங்களுடைய காப்பீட்டுத் தொகையை அதிகரியுங்கள்.

 • திட்டங்களின் தேர்வு

  9 வேறுபட்ட திட்டங்களிலிருந்து தேர்வுசெய்து, நாமினிகளுக்கு மாதாந்திர வருமானமளிப்பது அல்லது பிரீமியம் திரும்பப் பெறுவது போன்ற அம்சங்களைப் பெறுங்கள்.

 • வசதியான பணம் செலுத்தல்கள்

  பிரீமியம் செலுத்துவதில் உங்களுடைய வசதிக்கேற்ற ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம், ஒரே பிரீமியம், வழக்கமான பிரீமியம் அல்லது வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையில் தொகை செலுத்தும் வசதியைத் தேர்ந்தெடுக்கலாம்.

 • டாப்-அப் விருப்பம்

  ஒரு டாப் அப் வசதியுடன் ஒவ்வொரு ஆண்டும் உங்களுடைய காப்புறுதித் தொகையை அதிகரிக்கும் வாய்ப்பைப் பெறுங்கள்.

 • வேறுபாடுகள்

 • ஆயுள் கால விருப்பம்

  இறப்பின்போது ஒரு ஒட்டுமொத்த தொகை.
  விபத்து மொத்த நிரந்தர இயலாமையின் காரணமாக வருங்கால பிரீமியங்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன, ஆனால் பாலிசி தொடர்கிறது.

 • 3D ஆயுள் விருப்பம்

  இறப்பின்போது ஒரு ஒட்டுமொத்த தொகை கொடுக்கப்படுகிறது.
  வருங்கால பிரீமியங்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன மற்றும் விபத்து மொத்த நிரந்தர இயலாமை அல்லது ஒரு சிக்கலான நோயை கண்டறிதல் போன்றவற்றின் மீது பாலிசி தொடர்கிறது.

 • கூடுதல் ஆயுள் கால விருப்பம்

  இறப்பின்போது ஒரு ஒட்டுமொத்த தொகை கொடுக்கப்படுகிறது.
  ஒரு விபத்து காரணமாக மரணம் ஏற்பட்டால் ஒரு கூடுதல் மொத்த சலுகைத் தொகை வழங்கப்படும், அதற்குப் பிறகு பாலிசி முற்றுப்பெறும்.
  ஆனால் விபத்து ரீதியான நிரந்தர உடல் குறைபாடு ஏற்படும் பட்சத்தில், பிரீமியம்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு பாலிசி தொடரும்.
   

 • வருமான விருப்பம்

  காப்புறுதியளிக்கப்பட்ட தொகை இறப்பின்போது செலுத்தப்படுகிறது.
  பாலிசி முடிவதற்கு முன்னர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மாதாந்திர வருவாய் செலுத்தப்படுகிறது.
  விபத்தின் காரணமாக நிரந்தர மொத்த ஊனம் ஏற்பட்டால், எதிர்கால பிரீமியங்கள் தள்ளுபடி செய்யப்படும் ஆனால் பாலிசி தொடரும்.

 • கூடுதல் ஆயுள் வருமான விருப்பம்

  காப்புறுதியளிக்கப்பட்ட தொகை, இறப்பின்போது மொத்த தொகையாக செலுத்தப்படுகிறது.
  பாலிசி விதிகளின்படி நியமனதாரருக்கு மாதாந்திர வருவாய் செலுத்தப்படுகிறது.
  விபத்து காரணமாக ஏற்பட்ட இறப்பிற்கு கூடுதல் உறுதித் தொகை வழங்கப்படுகிறது.
  விபத்தின் காரணமாக நிரந்தர மொத்த ஊனம் ஏற்பட்டால், எதிர்கால பிரீமியங்கள் தள்ளுபடி செய்யப்படும்.

 • வருமான ரீப்ளேஸ்மெண்ட் விருப்பம்

  செலுத்தப்பட்ட மாதாந்திர வருவாய் தொகை 12 அளவிற்கு அதிகரிக்கப்பட்டு இறப்பு அல்லது இறப்பிற்கான நோய் கண்டறிதலின் மீது ஒரு மொத்த தொகையாக செலுத்தப்படுகிறது.
  பாலிசி நாள் முடியும்வரை அதிகரிக்கும் மாதாந்திர வருவாயை செலுத்துங்கள்.
  விபத்து மொத்த நிரந்தர இயலாமையின் காரணமாக வருங்கால பிரீமியங்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

 • பிரீமியத்தை ரிட்டர்ன் பெறும் விருப்பம்

  இறப்பின்போது ஒரு ஒட்டுமொத்த தொகை கொடுக்கப்படுகிறது.
  இறப்புக்கு முன்பு பாலிசி முதிர்வடைகின்ற பட்சத்தில் மொத்த பிரீமியம்* திரும்பச் செலுத்தப்படும்.
  விபத்து மொத்த நிரந்தர இயலாமை ஏற்படும் பட்சத்தில் வருங்கால பிரீமியங்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

   

  * முழு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு தயாரிப்பின் கையேடை பார்க்கவும்.

 • வாழ்நாள் முழுவதுமான பாதுகாப்பு விருப்பம்

  பாலிசி காலகட்டம் முழு ஆயுட்காலத்துக்கும் இருக்கும்.
  இறப்பின்போது அல்லது உயிருக்கு ஆபத்தான நோயிருப்பது கண்டறியப்பட்டதும் ஒரு ஒட்டுமொத்த தொகையை நியமனதாரர் பெறுவார்.
  விபத்து மொத்த நிரந்தர இயலாமை காரணமாக எதிர்கால பிரீமியங்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

 • 3D வாழ்நாள்-முழுவதுமான பாதுகாப்பு விருப்பம்

  பாலிசி காலகட்டம் முழு ஆயுட்காலத்துக்கும் இருக்கும்.
  இறப்பின்போது அல்லது உயிருக்கு ஆபத்தான நோயிருப்பது கண்டறியப்பட்டதும் ஒரு ஒட்டுமொத்த தொகையை நியமனதாரர் பெறுவார்.
  விபத்து மொத்த நிரந்தர இயலாமை மற்றும் தீவிரமான நோய் கண்டறிதல் ஆகியவற்றின் மீது எதிர்கால பிரீமியங்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

தகுதி

இந்த திட்டத்திற்கு ஒப்புதல் கிடைக்க நீங்கள் பின்வரும் தகுதி வரம்பை பூர்த்தி செய்ய வேண்டும்:


• நீங்கள் வாழ்நாள் முழுவதுமான பாதுகாப்பு விருப்பத் தேர்வு மற்றும் 3D வாழ்நாள்-பாதுகாப்பு விருப்பத் தேர்வு இரண்டையும் பெறுவதற்கு 25 முதல் 65 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
• மற்ற திட்டங்களுக்கு, நீங்கள் 18 முதல் 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.
• ஆயுள்-முழுவதுமான பாதுகாப்பு விருப்பம் மற்றும் 3D ஆயுள்-முழுவதுமான பாதுகாப்பு விருப்பம் தவிர மற்ற அனைத்து திட்டங்களுக்கும் பாலிசி காலம் 5 முதல் 40 ஆண்டுகளுக்கு இடையே இருக்க வேண்டும் மற்றும் மெச்சூரிட்டி வயது 23 முதல் 75 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
• குறைந்தபட்ச உறுதியளித்த தொகை ரூ. 10 லட்சம் இருக்க வேண்டும்.

ரைடர்ஸ்

இந்த திட்டத்திற்கான கூடுதல் சிறப்பம்சங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:


1. வாழ்க்கை நிலை பாதுகாப்பு

குழந்தையின் பிறப்பு அல்லது திருமணம் போன்ற முக்கிய மைல்கற்கள் மீது ரூ.50 லட்சம் வரை உறுதியளிக்கப்பட்ட தொகையை அதிகரிக்கவும்.


2. டாப்-அப் விருப்பம்

பாலிசியின் முதல் ஆண்டிற்கு பிறகு முறையாக உங்களின் உறுதி செய்யப்பட்ட தொகை அதிகரிக்கும்.


எப்படி இது வேலை செய்கிறது

இந்தத் திட்டம் எப்படி வேலை செய்கிறது என இங்கே பாருங்கள்:

வழிமுறை 1 :

ஒரு திட்டம், உறுதிப்படுத்தப்பட்ட தொகை, பாலிசி காலவரையறை, கூடுதல் பாதுகாப்பு மற்றும் பிரீமியம் செலுத்துதல் விதிமுறைகள் ஆகியவற்றைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் காப்பீட்டைத் தனிப்பயனாக்குங்கள்.

வழிமுறை 2 :

உங்களுடைய வயது, பாலினம், புகைப்பிடிக்கும் பழக்கம் ஆகியவற்றை அளித்து பிரீமியத் தொகையை அறிந்து கொள்ளவும்.

வழிமுறை 3 :

உங்களுடைய தனிப்பட்ட, மருத்துவ, வேலை மற்றும் நியமன விவரங்களைக் கொடுக்கவும்.

வழிமுறை 4 :

பிரீமியத் தொகையைச் செலுத்தி உங்களுடைய பாலிசி ஆவணத்தைப் பெறுங்கள்.

வழிமுறை 5 :

ஒரு ஆன்லைன் கணக்கைக்கொண்டு உங்களுடைய பாலிசியை மேலாண்மை செய்யுங்கள்.

எங்கள் செய்திமடலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்

பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடன் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்